தேவகன்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவகன்யா
இயக்கம்ஆர். பத்மனாபன்
கதைஆர்.பத்மனாபன்
இசைஎஸ். ஜி. செல்லப்பா அய்யர்
நடிப்புஹொன்னப்ப பாகவதர்
யூ. ஆர். ஜீவரத்தினம்
வி. என். ஜானகி
டி. ஆர். ராமச்சந்திரன்
எம். ஆர். சாமிநாதன்
எம். எஸ். முருகேசன்
டி. வி. சேதுராமன்
ஈ. ஆர். சகாதேவன்
ஜோக்கர் ராமுடு
வி. பி. எஸ். மணி
எம். ஏ. கணபதிபட்
டி. எஸ். ஜெயா
கே. எஸ். அங்கமுத்து
கே. பி. ஜெயராமன்
எஸ். ஏ. பத்மனாபன்
P. B. ஸ்ரீநிவாசன்
சக்ரபாணி அய்யங்கார்
விநியோகம்த சௌத் இந்தியா பிக்சர்ஸ், காரைக்குடி
வெளியீடு1943
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேவகன்யா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஆர். பத்மனாபனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பல மாயாஜாலக் காட்சிகளைக் கொண்டது. ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், வி. என். ஜானகி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அடையாறு பிரக்ஜோதி ஸ்டூடியோவில் சென்னை பத்மா பிக்சர்சாரினால் தயாரிக்கப்பட்டது.[1]

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்[தொகு]

எஸ். ஜி. செல்லப்பா ஐயர் இயற்றிய பாடல்களுக்கு பலவான்குடி வி. சாமா ஐயர் இசையமைத்திருக்கிறார். மொத்தம் 16 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

  1. சங்கீதமே சர்வஜீவநாத சுவரராக பாவ லயமே (ராகம்: வாசஸ்பதி, ஆதி தாளம், பாடியவர்: சி. ஹொன்னப்ப பாகவதர்)
  2. எல்லோரும் உணவு கொள்வீரே (சுத்த சாவேரி, ஆதி, வி. என். ஜானகி)
  3. வசந்த காலமிது நலமே (கமாஸ், ரூபகம், வி. என். ஜானகி)
  4. இன்று உனது எழில்காணக் கிடைத்தது (காம்போதி, ஆதி, வி. என். ஜானகி)
  5. ஆகா இதே ஆன்ந்தம் (ஹிந்தோளம், ஆதி, யூ. ஆர். ஜீவரத்தினம்)
  6. உலகினையார் வகுத்தாரே முதலி (செஞ்சுருட்டி, ஆதி, ஹொன்னப்ப பாகவதர்)
  7. என் மனம் கொள்ளை கொண்டாய் நீயே (ஆபோகி, ஆதி, ஹொன்னப்ப பாகவதர்)
  8. எனதருமை சிங்காரா வா வா (யமுனாகல்யாணி, திச்ர லகு, ஜீவரத்தினம்)
  9. மாசிலா மணியே மதனரதி யே (குந்தவராளி, ஆதி, ஹொன்னப்ப பாகவதர்)
  10. புவன மாதி அண்ட சராசரம் நடுங்க (மோகனம், ஆதி, டி. ஆர். ராமச்சந்திரன்)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவகன்யா&oldid=2134739" இருந்து மீள்விக்கப்பட்டது