உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தேவகன்யா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் தேவகன்யா எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தினேசுகுமார், ஒரு கர்ட்டுரைக்கு ஆதாரங்கள் எங்கிருந்து தரப்பட வேண்டும்? கட்டாயம் அது ஒரு அச்சு ஊடகத்திலேயோ அல்லது இணைய ஊடகத்திலேயோ மட்டுமே இருக்க வேண்டுமா? இக்கட்டுரையில் இப்படியானதொரு திரைப்படம் வெளிவந்ததற்கான ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளதே. அப்படியிருக்க நீங்கள் ஆதாரம் எதுவுமில்லை என வார்ப்புரு இட்டமைக்குக் காரணம் என்ன?--Kanags \உரையாடுக 07:48, 28 மே 2014 (UTC)[பதிலளி]

//இக்கட்டுரையில் இப்படியானதொரு திரைப்படம் வெளிவந்ததற்கான ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளதே// அட்டைப்படத்தைக் குறிக்கிறீர்களா Kanags?? கணடிப்பாக ஊடகம், நூல், இணையம் இப்படி ஏதாவதொரு இணைப்பு கண்டிப்பாக தேவை. அட்டைப்படம் எனக்குத்தெரிந்தவரையிலும் விக்கிப்பீடியாவில் ஆதாரமாக கருதப்படுவதில்லை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 28 மே 2014 (UTC)[பதிலளி]
அப்படியா, இவ்வாறான அட்டைப்படம் இணைப்பது வேஸ்டு என்கிறீர்கள். //ஊடகம், நூல், இணையம் இப்படி ஏதாவதொரு இணைப்பு கண்டிப்பாக தேவை// இது நீங்கள் உருவாக்கிய கண்டிப்பா?--Kanags \உரையாடுக 08:24, 28 மே 2014 (UTC)[பதிலளி]
தேவையற்றது என்பது எதுவுமில்லை. நான் உருவாக்கிய கண்டுபிடிப்பு அல்ல; விக்கிப்பீடியாவின் ஆதாரங்கள் குறித்த கட்டுரையில் அவ்வாறே கூறியுள்ளனர். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:50, 28 மே 2014 (UTC)[பதிலளி]
பரவாயில்லை, என்னிடம் 1943 இல் அச்சடித்த இத்திரைப்படத்தின் பாட்டுப் பு"ஸ்"தகம் உள்ளது. அதனை ஆதாரமாக இட முடியுமா என ஆராய்ந்து சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 08:28, 28 மே 2014 (UTC)[பதிலளி]
பாடல் புத்தகங்கள் நம்பத்தகுந்த ஆதாரமா? ஆலமரத்தடியில் உரையாடி முடிவெடுக்கலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்து எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இருப்பதற்கு அதுவாவது உதவும் :D --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:50, 28 மே 2014 (UTC)[பதிலளி]

நீங்கள் இருவரும், இந்த இணைப்பினை நான் தேடித் தந்ததற்காக... எனக்கு சிறப்புப் பதக்கம் தரவேண்டும் (சும்மா, நகைச்சுவைக்காக சொன்னேன்!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:06, 29 மே 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தேவகன்யா&oldid=1667004" இலிருந்து மீள்விக்கப்பட்டது