விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விக்கிப்பீடியா:TIGER2 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search


இந்திய மொழிகளுடன், தமிழின் போட்டி நிலையை அறிய,இதனைச் சொடுக்கவும்
வேங்கைத் திட்டம் 2.0
போட்டி விதிகள் பரிசுகள் தலைப்புகள்
குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg

முதல் வேங்கைத்திட்டம் போல, 2019 ஆம் ஆண்டு, விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தரக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும்.

பங்கேற்கவும்

இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள்.

கட்டுரைகள் முன்பதிவு

பங்குகொள்ள விரும்பும் பயனர்கள் இந்தப் பக்கத்தில் ஒரு வாரத்திற்கான, தான் புதிதாக எழுதவிருக்கும் அல்லது விரிவாக்கவிருக்கும் ஐந்து கட்டுரைகளைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது ஒரே கட்டுரையை பலர் எழுதுவதைத் தவிர்த்து காலவிரயமாவதையும் தடுக்கும்.

விதிகள்

சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும், குறைந்தது300 சொற்களையும், 6000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும்.

 • இக்கட்டுரைப் போட்டி நடைபெறும் காலம்:

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 10 தேதி (நேரம்: 0:00) முதல்
2020 ஆம் ஆண்டு சனவரி 10 தேதி காலை 05:29:59 வரை நடைபெறும்.
இங்கு குறிப்பிடப்படும் காலம் இந்திய நேரம் ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில், கீழுள்ள விதிகளின் படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

 • ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டுரை எனில் அதில் போட்டியாளரால் கூடுதலாக 6,000 பைட்டுகள் அளவுள்ள 300 சொற்களைச் சேர்க்க வேண்டும். புதிதாக உருவாகும் கட்டுரைகளும் குறைந்தது இதே அளவு இருக்க வேண்டும். https://wordcounttools.com/ கருவி கொண்டு சொற்களின் எண்ணிக்கையை அறியலாம். (வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.) வார்த்தைகள், பைட்டுகளைச் சரிபார்க்க நீச்சல்காரனின் சுளகு கருவியினைப் பயன்படுத்தலாம்.
 • கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளை தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
 • கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டாது.
 • கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி எழுதப்பட வேண்டும்.
 • கட்டுரை தகவல் நிறைந்ததாக அமைய வேண்டும்.
 • கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரைகள் எழுத வேண்டும். இத்தலைப்புகள் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இணையத்தில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவை.
 • விக்கித்தரவுடன் இணைக்க வேண்டும்.
 • ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.
 • ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பதில், ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
பரிசுகள்

பரிசுகள்

 • ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இவை 3,000 INR, 2000 INR, மற்றும் 1,000 INR மதிப்புடையனவாக அமையும்.
 • மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் பரிசு அளிக்கப்படும். அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான மூன்று நாள் பயிற்சியாக இப்பரிசு அமையும். ஆங்கில விக்கிப்பீடியா சமூகம், இந்தச் சமூகப் பரிசுக்கான போட்டியில் இடம் பெறாது. தங்கள் சொந்த முயற்சியில் இந்தியாவுக்கான விசா பெற்று வர இயலும் எனில், அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும். போக்குவரத்து, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்.

முதல் மாதப் பரிசு[தொகு]

விரைவில்..


அடிக்கடி வினவப்படும் வினாக்கள்

1. இத்திட்டத்தில் கூகுள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளையிலன் பங்கு என்ன?

கூகுள் மற்றும் விக்கிப்பீடியா அறக்கட்டளை ஆகிய இரு நிறுவனங்களும் இணையத்தில் இந்திய மொழிகளில் தரமான உள்ளடக்கம் கூடுவதில் அக்கறை கொண்டுள்ளன. இந்தப் பொது நோக்கத்தை அடைவதற்கு இணைந்து செயற்பட விரும்புகின்றனர். கூகுள் இத்திட்டத்துக்கான நிதியை ஒரு நல்கை மூலம் வழங்கியுள்ளது. அத்தோடு, இணையத்தில் இந்திய மொழிகளில் எத்தகைய உள்ளடக்கம் விடுபட்டுள்ளது என்ற பயனுள்ள தகவலையும் தந்து உதவுகிறது.

2. இத்திட்டத்தில் இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் பொறுப்பு என்ன?

இப்போட்டியில் பங்கு கொள்ளும் இந்திய மொழி விக்கிப்பீடியா சமூகங்கள், விக்கிப்பீடியா ஆசிய மாதம், பஞ்சாப் மாதம், பெண்கள் மாதம் முதலிய பல்வேறு போட்டிகள், தொடர் தொகுப்புகளை ஒருங்கிணைத்தது போலவே இந்தப் போட்டியையும் ஒருங்கிணைக்கும்.

CIS போட்டிகளுக்கான பரிசுகளை வழங்குவதிலும் வெல்லும் சமூகத்துக்கான திறனளி பயிற்சிகளை ஒருங்கிணைக்கவும் உதவும்.

விக்கிமீடியா இந்தியாவும் பயனர் குழுக்களும் போட்டி தொடர்பான பரப்புரைகளில் பங்கு கொள்வார்கள்.

3. இப்போட்டியில் பங்கு கொள்வது கட்டாயமா?

இல்லை. அனைத்துப் போட்டிகளைப் போலவே, இதுவும் நீங்கள் விரும்பினால் பங்கு பெறலாம். இணையம், கணினி உதவி பெறுவோர் வழமை போல் தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்புகளில் ஈடுபடலாம். அவர்களின் நெடுங்கால, வழமையான பங்களிப்புகளுக்கு உறுதுணையாகவே அவ்வுதவிகள் வழங்கப்படுகின்றன.

4. எனக்கு ஆர்வமுள்ள தலைப்புகளில் கட்டுரைகளை உருவாக்கலாமா?

இந்தியாவின் இணையப் பயனர்கள் இணையத்தில் தேடும் போது ஆங்கிலத்தில் கண்டடைய முடிகிற ஆனால் தமிழில் இல்லாத உள்ளடக்கத்தை உருவாக்கும் நோக்கத்துடனே இப்போட்டி நடத்தப்படுகிறது. இதன் மூலம், இயன்ற அளவு கூடுதலான பயனர்களுக்குக் கட்டற்ற அறிவைக் கொண்டு சேர்க்க முனைகிறோம். எனவே, கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டும் கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம். எனினும், தங்களுக்கு விருப்பமான துறைகளின் கீழ் கூடுதல் தலைப்புகள் தேவைப்பட்டால் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். இயன்ற அளவு, கூடுதல் தலைப்புகளைப் பெற்றுத் தர முனைவோம்.

5. ஏன் இதனை வேங்கைத் திட்டம் என்று அழைக்கிறீர்கள்?

இந்தியாவில் புலிகளைக் காப்பதற்காகச் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் உந்துலில் இப்பெயரிடப்பட்டுள்ளது. அத்திட்டத்தைப் போலவே, இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளடக்கம் உருவாகும் சுற்றுச்சூழலைக் கருத்திற் கொண்டு இந்த வேங்கைத் திட்டம் செயற்பட முனைகிறது.

ஒருங்கிணைப்பாளர்

இப்போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம்.

 • கட்டுரைகளின் நடுவர்
 1. Sridhar G 16:21, 6 அக்டோபர் 2019
 2. .-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:26, 6 அக்டோபர் 2019 (UTC)
 3. . கி.மூர்த்தி12:23, 7 அக்டோபர் 2019
 4. --உழவன் (உரை) 00:54, 16 அக்டோபர் 2019 (UTC)
 5. பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:10, 22 அக்டோபர் 2019‎
 • அடித்தளங்கள்
 1. நீச்சல்காரன்(தொழினுட்ப உதவிகள்)10:10, 7 அக்டோபர் 2019
 2. (சமூக ஊடகப் பரப்புரை)
 3. --உழவன் (உரை) 02:25, 21 செப்டம்பர் 2019 (UTC) (இத்திட்டத்திற்கான அனைத்து விக்கிப் பக்கங்களையும் ஒருங்கிணைத்தல்)
 4. பயனர்களுக்கான உதவிகள் வழங்குதல், இன்னபிற ஒருங்கிணைப்புப் பணிகளில் உதவ விருப்பம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:26, 6 அக்டோபர் 2019 (UTC)அவசரக் குறிப்புகள்[தொகு]