பயனர் பேச்சு:Arunankapilan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், Arunankapilan! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Arunankapilan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

 • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

 • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:20, 19 ஏப்ரல் 2011 (UTC)

நல்வரவு![தொகு]

அருணன் கபிலன்! உங்களை வரவேற்கிறோம். ஃபேஸ்புக்கில் காந்தியின் படத்தைப் பயனர் படமாய்த் தந்திருப்பது நீங்கள் தானா? ஆரம்பத்தில் கலைக்களஞ்சிய நடையில் கட்டுரை எழுதுவது கடினமாய்த்தான் இருக்கும். கூடிய விரைவில் நீங்கள் இதைக் கற்றுத் தேர்வீர்கள் என நம்புகிறேன். காந்தீய சிந்தனை குறித்த பல கட்டுரைகள் இன்னும் எழுதப்படவில்லை.

ஆதாரக் கல்வி

சர்வோதயம்

நிர்மாணத் திட்டங்கள்

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 14:47, 19 ஏப்ரல் 2011 (UTC)

ஒரு வேண்டுகோள்![தொகு]

அருணன்கபிலன் ... பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய தகவல்களைத் தாருங்கள். உங்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள இது உதவும். --பயனர்:செல்வசிவகுருநாதன் எம்உரையாடுக


அருணன்கபிலன் ...நீங்கள் இங்கு எழுதிய உங்களைப் பற்றியத் தகவல்களை அப்படியே 'copy' செய்து பயனர்:Arunankapilan எனும் பக்கத்தில் 'paste' செய்துவிடுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். --பயனர்:செல்வசிவகுருநாதன் எம்உரையாடுக

வாழ்த்துக்கள்[தொகு]

TWMC Winner Barnstar.png தமிழ் விக்கி ஊடகப் போட்டி பரிசு
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் நீங்கள் தொடர் பங்களிப்பாளர் பரிசு பெற்றுள்ளீர்கள்.

பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை உங்களுக்கு அனுப்பி வைக்கப் பின்வரும் விவரங்களை tamil.wikipedia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்:

1) சான்றிதழில் இடம் பெற வேண்டிய பெயர் (தமிழில்)

2) முழு அஞ்சல் முகவரி

3) வசிக்கும் நாடு

--சோடாபாட்டில்உரையாடுக 20:32, 29 மார்ச் 2012 (UTC)

தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் முனைப்புடன் தொடர்ந்து பங்களித்து பல அரிய படங்களை தரவேற்றியதற்கு நன்றியையும் தொடர்பங்களிப்பாளராக பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.--மணியன் (பேச்சு) 13:22, 30 மார்ச் 2012 (UTC)
வணக்கம் அருணன் கபிலன். தங்கள் படைப்புகள் சிறப்பாக உள்ளன. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:08, 30 மார்ச் 2012 (UTC)
வணக்கம்
போட்டியில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்கள் --Iramuthusamy (பேச்சு) 15:00, 30 மார்ச் 2012 (UTC)
ஊடகப்போட்டியில் தொடர் பங்களிப்பாளர் பரிசைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் பங்களிப்புக்கள் தொடரட்டும்.--கலை (பேச்சு) 22:39, 30 மார்ச் 2012 (UTC)

உங்களுக்கு தெரியுமா அறிவிப்பு[தொகு]


முதற்பக்கப் படிமம் அறிவிப்பு[தொகு]


நன்றிகள்[தொகு]

முல்லைக்குத் தேரீந்தவன் பாரி.

பாரியை பாடியவன் கபிலன்.

பாரியை விக்கிமீடியாவுக்கு தந்தவர் அருணன் கபிலன்.

பாரிதான் கொடை தருவாரா கபிலரும் தருவார் போலிருக்கிறதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:03, 14 சனவரி 2013 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி[தொகு]

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Arunankapilan!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 13:39, 3 பெப்ரவரி 2013 (UTC)

அன்பிற்கினிய தோழர் இரவி அவர்களுக்கு, தங்களின் பாராட்டு இன்னும் என்னை உற்சாகப்படுத்துகிறது. விக்கிபீடியாவிற்கு ஒரு பகுதிகூட இன்னும் முழுமையாகச் செய்து முடிக்காத வருத்தத்தில் உள்ளேன். எனது மாணவர்களுக்கும்,நண்பர்களுக்கும் விக்கிபீடியாவை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். எனது கனவெல்லாம் தமிழ் இலக்கியத்தின், தமிழ்மொழியின் எந்த ஒன்றையும் விக்கிபீடியா துல்லியமாக அடையாளம் காட்ட வேண்டும் என்பதே. ஆராய்ச்சிக்காகவும், பயிற்சிக்காகவும் தேடுகிற ஒவ்வொரு தேடலின் நுனியிலும் விக்கிபீடியாவின் தகவல்கள் முன்னின்று உதவவேண்டும். அத்தகைய எனது கனவு பலிக்கும் வண்ணம் தாங்கள் கூறியவாறே பல்துறை அறிஞர்களான விக்கிபீடியர்கள் உழைத்து வருகிறார்கள். தன்னலம் கடந்த அவர்களின் பொதுத்தொண்டுக்கும், மொழித்தொண்டுக்கும் உதவி செய்வதே பெரும்பேறு. தமிழுக்குத் தொண்டு செய்வோர் தரணியில் நிலைபெறுவார் என்னும் கூற்றுக்கேற்ப விக்கிபீடியா கணினி யுகத்தில் தமிழ் வளர்க்கும் சங்கமாகத் திகழுகிறது என்பதே பெருமை. தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டு வருகிறேன். விரைவில் தங்களை அணுகுகிறேன். மீண்டும் ஒருமுறை தங்களின் தூய அன்புக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். விக்கிபீடியனாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன்.

                                              தங்கள் அன்புள்ள
                                                தோழன்,
                                           அருணன்கபிலன்--"அருணன் கபிலன்"            01:58, 5 பெப்ரவரி 2013 (UTC)
வணக்கம், அருணன்கபிலன். நீங்கள் பெருமிதமாக உணர்வது கண்டும் உங்கள் திட்டங்கள் குறித்தும் மகிழ்கிறேன். மேலும் பல பயனர்கள் இணைந்து பங்களிக்கும் போது, ஏற்கனவே உள்ளவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும். உங்கள் தொடர் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்--இரவி (பேச்சு) 06:00, 5 பெப்ரவரி 2013 (UTC)

சென்னை விக்கியர் சந்திப்பு[தொகு]

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:09, 5 மார்ச் 2013 (UTC)

தெளிவை நாடி[தொகு]

தங்கள் ஊர் பறம்புமலைக்கு அருகில் உள்ளதாகக் குறித்துள்ளீர்கள். பறம்பு மலை எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. தங்கள் இருப்பிடத்தைத் தெளிவாக்கினால் பயன் பெறுவேன். என் எண்ணங்களை உறுதி செய்துகொள்வேன். அல்லது மாற்றிக்கொள்வேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 21:16, 9 ஏப்ரல் 2013 (UTC)

 • அன்புள்ள அருணன், இப்போது பறம்புமலை கட்டுரையைப் பாருங்கள். அங்குள்ள பேச்சுப் பகுதியில் கல்வெட்டு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள கருத்தினைத் தெளிவாக்குங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:57, 14 ஏப்ரல் 2013 (UTC)

தங்கள் படங்கள்[தொகு]

தாங்கள் பதிவேற்றிய படங்கள் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளதை இப்போதே பார்த்தேன். உங்கள் படங்களின் ரசிகனாகி விட்டேன். துல்லியமான படவணுக்கள் என்னை ஈர்க்கின்றன. நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:44, 14 ஏப்ரல் 2013 (UTC)

என்ன செய்யலாம்[தொகு]

விக்கி ஆதாரம் அற்றதா--Sengai Podhuvan (பேச்சு) 18:54, 23 மே 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

அன்பிற்கினிய திரு.இரவி அவர்களுக்கு, வணக்கம். தங்களின் இனிய அழைப்பைப் பெற்று மகிழ்ச்சியடைந்தேன். இதில் கலந்து கொள்வதில் நான் பெருமையும் பயனும் அடைவேன். நான் புதுவையிலிருந்து வருவதால் எனக்கு தங்குமிட வசதி செய்து தந்தால் இன்னும் உதவியாக இருக்கும் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கு சந்திக்க வேண்டும், எந்த நேரத்தில் கூடுகிறோம் என்னும் விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் விழைகிறேன். இனிய வணக்கங்களுடன் அருணன்கபிலன்.

இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை[தொகு]

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 20:01, 1 அக்டோபர் 2013 (UTC)

விக்கித்திட்டம் சைவத்தில் இணைந்தமைக்கு நன்றி[தொகு]

வணக்கம் நண்பரே, தாங்கள் விக்கித்திட்டம் சைவத்தில் இணைந்திருப்பது கண்டேன். ஓவியர், புகைப்பட கலைஞர், சமய ஆர்வலர், பதிப்பக இயக்குனர் என்று பல முகங்களை கொண்ட தாங்கள் இணைந்திருப்பது வருங்காலத்தில் சைவத்தின் கட்டுரைகளை மேலும் செம்மையுற செய்யும் என்பதற்கு ஐயமில்லை. சிறப்புற பங்களிக்க என்னுடைய வாழ்த்துகள். நன்றி--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:07, 6 அக்டோபர் 2013 (UTC)


சைவம் திட்டத்திற்கான வரையறையும் வரைமுறையும்[தொகு]

 • சைவம்
 • சைவம் பெயர்க்காரணம்
 • இந்தியாவும் சைவமும்
 • அகழ்வாய்வுகளில் சைவப் பதிவுகள்
 • வரலாற்று நோக்கில் சைவம்
 • சைவம் தோற்றம்
 • சைவமும் தமிழும்
 • சைவம் என்பது குறியீடு
 • சைவம் என்னும் வாழ்வியல்
 • சைவ தத்துவம்
 • திருமூலரும் சைவமும்
 • திருமூலர் என்னும் சைவர்
 • சைவம் என்னும் சமயம்
 • சைவமும் சிவனும்
 • சைவ வழிபாட்டு முறைகள்
 • சைவ சமயப் பிரிவுகள்
 • ஆதிசைவம்
 • வீரசைவம்
 • அதிவீர சைவம்
 • காசுமீர சைவம்
 • லிங்காயத்துகள்
 • தொண்டை மண்டலச் சைவம்
 • பாண்டி நாட்டுச் சைவம்
 • திருநெல்வேலி சைவம்
 • சோழநாட்டுச் சைவம்
 • தமிழ்நாட்டில் சைவம்
 • சைவமும் சிவாலயங்களும்
 • சங்க இலக்கியத்தில் சைவம்
 • புராணங்களில் சைவம்
 • சங்க இலக்கியப் புலவர்களில் சைவர்கள்
 • சங்ககாலச் சைவ மன்னர்கள்
 • களப்பிரர் காலத்தில் சைவம்
 • சைவமும் பௌத்தமும்
 • சைவமும் சமணமும்
 • திருக்குறளில் சைவம்
 • திருவள்ளுவர் சைவர்
 • அற இலக்கியங்களில் சைவ சமயத் தாக்கம்
 • காப்பியங்களில் சைவ சமயம்
 • தமிழ்நாட்டில் சைவ மறுமலர்ச்சி
 • சைவ சமயக் குரவர்கள்
 • திருஞானசம்பந்தரின் சைவப் பணிகள்
 • திருநாவுக்கரசரின் சைவப் பணிகள்
 • சுந்தரரின் சைவப் பணிகள்
 • மாணிக்கவாசகரின் சைவப் பணிகள்
 • சைவ சமய அடியார்கள்
 • 7ஆம் நூற்றாண்டில் சைவம்
 • சைவம் சந்தித்த சோதனைகள்
 • சைவத்தை எதிர்த்த மன்னர்கள்
 • சைவத்தை எதிர்த்த பிற சமயங்கள்
 • சைவத்துடனான சமயப் போர்கள்
 • அறுபத்து மூன்று நாயன்மார்கள்
 • பன்னிரு திருமுறைகள்
 • தொகையடியார்கள்
 • பெண்பாற் சைவ அடியார்கள்
 • சைவ ஔவையார்
 • சைவத்தின் பொற்காலம்
 • சைவ சமயத்தின் எழுச்சி
 • சைவமும் சிவாலயங்களும்
 • சைவத்தைப் போற்றிய சேரர்கள்
 • சைவத்தைப் போற்றிய சோழர்கள்
 • சைவத்தைப் போற்றிய பாண்டியர்கள்
 • சைவர்களும் பல்லவர்களும்
 • தனிப்பாடல் திரட்டில் சைவம்
 • சைவ சமயப் பரப்பு
 • சைவ சமயக் கொள்கைகள்
 • பிற்காலச் சோழர்களும் சைவமும்
 • சைவமும் சைவ ஆலயங்களும்
 • சேக்கிழார்
 • பெரியபுராணம்
 • தஞ்சைப் பெரிய கோயில் சைவத்தின் குறியீடு
 • தலபுராணங்கள்
 • பதிகங்களில் சைவம்
 • தமிழர்தம் வாழ்வியலில் சைவ சமயத் தாக்கம்
 • அயல்நாட்டார் பதிவுகளில் சைவம்
 • ஜி.யு.போப்பும் சைவமும்
 • பிற சமயப் பதிவுகளில் சைவம்
 • சிற்றிலக்கியங்களில் சைவ சமயப் பதிவுகள்
 • சித்தர்களும் சைவமும்
 • ஆழ்வார்களும் சைவமும்
 • சைவத்தை ஆதரித்த வள்ளல்கள்
 • சைவத்தைப் போற்றிய புரவலர்கள்
 • சைவ ஆதீனங்களின் தோற்றம்
 • சைவ சமய ஆதீன கர்த்தர்கள்
 • சைவ சமய ஆதீனங்கள்
 • சைவ சமய ஆதீனங்களும் அதன் பணிகளும்
 • 8ஆம் நூற்றாண்டில் சைவம்
 • 9ஆம் நூற்றாண்டில் சைவம்
 • 10ஆம் நூற்றாண்டில் சைவம்
 • 11ஆம் நூற்றாண்டில் சைவம்
 • 12ஆம் நூற்றாண்டில் சைவம்
 • 13ஆம் நூற்றாண்டில் சைவம்
 • 14ஆம் நூற்றாண்டில் சைவம்
 • 15ஆம் நூற்றாண்டில் சைவம்
 • 16ஆம் நூற்றாண்டில் சைவம்
 • 17ஆம் நூற்றாண்டில் சைவம்
 • 18ஆம் நூற்றாண்டில் சைவம்
 • முகலாயர் ஆட்சியில் சைவம்
 • பிறநாட்டார் படையெடுப்புகளும் சைவமும்
 • ஆங்கிலேயர் காலத்தில் சைவம்
 • உலக சமயங்களும் சைவமும்
 • இந்துத்துவமும் சைவமும்
 • விடுதலைப் போராட்ட காலத்தில் சைவத்தின் பங்கு
 • விடுதலைப் போராட்ட வீரர்களில் சைவர்கள்
 • சைவமும் குடும்ப அமைப்பும்
 • சைவமும் சமுதாய அமைப்பும்
 • சைவ சமயத்தில் ஆண்கள்
 • சைவ சமயத்தில் பெண்கள்
 • சைவ சமயத்தில் குழந்தைகள்
 • சைவ சமயத் திருமண முறைகள்
 • சைவ சமயப் பழக்கவழக்கங்கள்
 • சைவ சமய நம்பிக்கைகள்
 • சைவ சமயப் பொன்மொழிகள்
 • சைவ சமயப் பழமொழிகள்
 • சைவ சமய ஆன்றோர்கள்
 • விடுதலைக்குப் பின் சைவம்
 • தற்காலத்தில் சைவம்
 • உரைநடையில் சைவ இலக்கியங்கள்
 • புதுக்கவிதையில் சைவப் பதிவுகள்
 • சிறுகதைகளில் சைவப் பதிவுகள்
 • திரைப்படங்களில் சைவப் பதிவுகள்
 • சைவ சமயப் பத்திரிகைகள்
 • சைவ சமய மாநாடுகள்
 • இலங்கையில் சைவம்
 • சீனாவில் சைவம்
 • பர்மாவில் சைவம்
 • மலேசியாவில் சைவம்
 • சிங்கப்பூரில் சைவம்
 • தாய்லாந்தில் சைவம்
 • மொரிஷீயஸில் சைவம்
 • தென்னாப்பிரிக்காவில் சைவம்
 • ஐரோப்பிய நாடுகளில் சைவம்
 • அமெரிக்காவில் சைவம்
 • உலக சைவ சமய இலக்கியங்கள்
 • உலக சைவ சமய இயக்கங்கள்
 • இணையப் பக்கங்களில் சைவம்

அன்புடையீர், சைவமும் தமிழும் தழைத்தினிது ஓங்க வேண்டும் என்பதே ஆதிகாலத்திலிருந்து நாம் கொண்டிருக்கும் கொள்கை. ஏனெனில் உலகத்தை வாழ்விக்கும் உயர்ந்த கருத்துகள் தமிழிலும் சைவத்திலும் மிகுந்திருக்கின்றன. அல்லவை நீக்கி நல்லவை பேணும் அதன் வளமையான பதிவுகள் விக்கியின் மூலமாக உலகை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு நண்பர் ஜெகதீசன் அவர்களின் நெறிகாட்டுதலின் படியும் தலைமையின்கீழும் இத்தலைப்புகள் வரைமுறையாகவும், வரையறையாகவும் தங்களின் கருத்துகளுக்காகப் பதியப் பெறுகின்றன. மேலும் செழுமைப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு...

அன்பு வணக்கங்களுடன் == அருணன் கபிலன் ==

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே! விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். மாதா மாதம் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:33, 27 அக்டோபர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:51, 27 அக்டோபர் 2013 (UTC)

வசைமொழியா?[தொகு]

பாரதி "தமிழ் இனி மெல்லச் சாகும்" எனக்கூறியது வசைமொழி போல் தெரியலயே. அப்படியாவது தமிழ் பற்று இன்னும் அதிகமாகட்டும் என்று நினைத்து கூறிய உசுப்பேற்று மொழியாகவே தெரிகிறது.--நக்கீரன் (பேச்சு) 11:07, 12 நவம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:34, 12 நவம்பர் 2013 (UTC)

ஆமா. இவரு பெரிய நக்கீரர் பரம்பரை. சொற்குற்றம் பொருட்குற்றம் கண்டுபிடிச்சுட்டு. உன்னை எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குள்ள கூப்பிட்டு வந்ததே தப்பு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:19, 7 திசம்பர் 2013 (UTC)

சரி. விடு. நம்ம பாரதி தானேன்னு எதோ தெரியாம கேட்டுட்டேன்பா.--நக்கீரன் (பேச்சு) 14:25, 5 சனவரி 2014 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

வணக்கம் அருணன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/அருணன் கபிலன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:36, 7 மே 2014 (UTC)

நன்றி, அருணன். உங்கள் அறிமுகத்தைச் சற்று உரை திருத்தி விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்துள்ளேன். சூலை மாதம் முதல் வாரத்தில் முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் இடம்பெறும்,--இரவி (பேச்சு) 13:18, 11 மே 2014 (UTC)
வணக்கம் அருணன். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தாமதத்துக்கு வருந்துகிறேன்.--இரவி (பேச்சு) 06:29, 20 நவம்பர் 2014 (UTC)
வாழ்த்துகள் அருணன் !--மணியன் (பேச்சு) 09:17, 20 நவம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்---நந்தகுமார் (பேச்சு) 09:23, 20 நவம்பர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக

வணக்கம் Arunankapilan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:43, 30 திசம்பர் 2014 (UTC)
அருணன், நீங்கள் இதற்கான தயாரிப்பு வேலைகளில் பின்னணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்து இருந்தாலும், ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். --இரவி (பேச்சு) 07:58, 16 சனவரி 2015 (UTC)
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:48, 30 சனவரி 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:36, 8 சூலை 2015 (UTC)

கபிலன் பதிப்பகம்[தொகு]

வணக்கம். பொதுவாக விக்கியில் ஒருவர் அவர் குறித்து அல்லது அவர் நடத்தும் நிறுவனம் / அமைப்பு குறித்து எழுதுவதை வரவேற்பதில்லை. ஏனெனில் விளம்பரப்படுத்தல் தவிர்க்க இயலாததாக இருக்கும். நீங்கள் எழுதிவிட்டீர்கள். இப்போது கட்டுரையை கலைக்களஞ்சியத்திற்கு தக்கதாக மாற்றியாயிற்று. எனினும் இக்கட்டுரையில் உள்ள தகவல்களுக்கு சான்று இணைக்க வேண்டும். கபிலன் பதிப்பகத்தின் இணையத்தளத்தை மேற்கோளாக காட்ட இயலாது. நீங்கள் தற்போது இணைத்துள்ள பாராட்டுச் சான்றிதழ்களின் ஒளிப்படங்களை ஆதாரமாகக் கொள்ள இயலாது; விளம்பரப்படுத்தல் போன்றுதான் தோற்றமளிக்கும். எனவே பத்திரிகைகள், வலைப்பூக்கள் அல்லாத இணையத்தளங்களை ஆதாரமாக காட்டுங்கள்.

விக்கியில் தொகுப்புகள் செய்வது தன்னார்வப் பணி என்றபோதிலும், இந்தக் கட்டுரையில் மட்டும் நீங்கள் தொகுப்புகளை மேற்கொள்வது ஐயத்திற்கு இடமாகிவிட்டது. ஒரு பொறுப்பான எழுத்தாளர் என்ற முறையில் விக்கியை விளம்பரத்தளமாக பயன்படுத்த நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:45, 8 திசம்பர் 2016 (UTC)

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா.... மனமார ஏற்கிறேன். ஆனால் நான் நடத்தும் நிறுவனம் என்பதற்காக அந்தக் கட்டுரை எழுதப்படவில்லை என்பதையும் கூறிக் கொள்கிறேன். (பாராட்டுச் சான்றுகளை ஒளிப்படங்களாக இணைக்க இயலாது என்று குறிப்பிட்டிருப்பது மறுபடியும் நம்பகத்தன்மையைச் சோதிப்பதாக அமைகிறது) சரி இத்தோடு விடலாம். ஆனால் இந்தப் பக்கத்தை மட்டும் திருத்தம் மேற்கொள்கிறேன் என்பது பொருத்தமுடையதன்று... தொடர்ந்து விக்கிக்கு என்னாலாகிய பணிகளைச் செய்து வருகிறேன்... இதன்மூலம் அது இன்னும் கூடுமே தவிரக் குறைவதற்கு வாய்ப்பில்லை... ஏனெனில் விக்கியை அவ்வளவு நேசிக்கிறேன்... (ஆனால் ஓர் ஐயம் பறம்புமலை மற்றும் நான் எழுதிய கட்டுரைகள் எல்லாமே நான் சார்ந்தவையே - ஒருவேளை அதுவும் எனது ஊர் சார்ந்த கட்டுரை என்று விலக்கிவிடுவீர்களா? உண்மையைப் பதிவிடுவதற்கு நான் சார்ந்த நான் உணர்ந்த விடயங்கள் முக்கியம் இல்லையா? இது எப்படி விளம்பரமாக அமையும் என்பதுதான் என்கேள்வி... (இதில் கபிலன் பதிப்பகம் ஒரு பொருட்டே அன்று) விளம்பரப்படுத்துவதற்கு வேறு நிறைய வாயில்கள் உள்ளன. அறிவுடையோரைச் சென்றடையும் ஒருவழி விக்கி என்பதனால் நான் அறிந்ததையெல்லாம் தருகிறேன்... தங்கள் பதிலுக்கு நன்றி ஐயா... விக்கிக்கு என்றும் என் வந்தனங்கள்.....--"அருணன் கபிலன்" 06:33, 8 திசம்பர் 2016 (UTC)(அருணன் கபிலன்)--"அருணன் கபிலன்" 06:33, 8 திசம்பர் 2016 (UTC)

தங்களின் பொறுமையான பதிலுக்கு நன்றி.

 • கபிலன் பதிப்பகம் கட்டுரையை தாங்கள் ஆரம்பித்ததை தவறு என்று நான் எழுதவில்லை. கட்டுரையாளர் அந்த நிறுவனத்தின் சொந்தக்காரராக இருக்கும்பட்சத்தில், உரைநடையும் கட்டுரையின் வடிவமைப்பும் விளம்பரம் போன்று அமைந்துவிடுவதே உண்மைநிலை எனக் குறிப்பிட்டேன். ஒருவர் தன்னைப் பற்றி / தனக்குச் சொந்தமான நிறுவனம் பற்றி இங்கு கட்டுரை எழுதுவதற்கும், தான் பிறந்த ஊர்/ தான் வாழ்ந்த ஊர் / தான் படித்த பள்ளி / தான் படித்த கல்லூரி / தனக்குப் பிடித்த ஆளுமை / தனக்குத் தெரிந்த துறை குறித்து கட்டுரை எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதனை தாங்கள் புரிந்துகொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
 • தங்களின் அண்மைக்காலத்து பங்களிப்பு குறித்து நான் தவறான கணிப்புடன் எழுதியிருந்தால், அதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
 • நடுநிலைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, விக்கிக் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல இக்கட்டுரை மாற்றுவதற்கு உரிய முயற்சியை முதலில் மேற்கோண்டேன். முடிந்தளவு கட்டுரைகளைக் காத்திட என்னால் இயன்றதை செய்கிறேன். புரிதலுக்கு மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:07, 8 திசம்பர் 2016 (UTC)

பேச்சு:சித்தர் சிவவாக்கியர் (நூல்) எனும் உரையாடல் பக்கத்தைப் பாருங்கள். நடுநிலைக் கண்ணோட்டத்துடன் கருத்திடுபவர்களின் கருத்தினை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் நிறையக் கற்றவர், எழுத்துத் துறையில் நேரடியாகப் பங்களிப்பவர், எனது கருத்துகளை தெளிவாக புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:26, 8 திசம்பர் 2016 (UTC)

பேரன்பு ஐயா, நான் விக்கியில் மிகவும் இளையவன். நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. திருத்துங்கள்... புரிந்து கொள்கிறேன்.. சுயசார்பு எனும்போதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது. அப்பழி நீக்கவும் தொடர்ந்து முயல்வேன்.... தங்களின் வழிகாட்டுதலையும் விக்கியின் அரவணைப்பையும் என்றும் வேண்டுகிறேன். அன்புடன் --"அருணன் கபிலன்" 07:35, 8 திசம்பர் 2016 (UTC)அருணன் கபிலன்

சில உதாரணங்கள் - தகவலுக்காக மட்டும்...[தொகு]

இ. மயூரநாதன், எஸ். ராஜா ராமன் ஆகியோர் விக்கியுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள்; விக்கிக்கு வெளியே தமிழுக்காக குறிப்பிடத்தக்கன செய்தவர்கள், செய்து வருபவர்கள். இவர்கள் குறித்து மற்ற பயனர்கள் கட்டுரை எழுதினர். இக்கட்டுரைகளில் இவ்விருவரும் ஒரு சிறு தொகுப்பினைக் கூட செய்யவில்லை.

விக்கியுடன் தொடர்புடைய சில எழுத்தாளர்கள் அவர்களைப் பற்றிய கட்டுரைகளில் தொகுப்புகளை செய்தபோது கேள்விகள் எழுந்தன. விக்கிக் கொள்கையின் அடிப்படையில் அக்கேள்விகள் எழுப்பப்பட்டன. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:37, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:34, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1[தொகு]

2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:55, 9 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்[தொகு]

2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:43, 11 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி[தொகு]

 LED digit 5.pngLED colon.pngLED digit 0.pngLED digit 4.pngLED am.png
இன்று சூன் 23, 2021
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:44, 31 திசம்பர் 2016 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:55, 13 மே 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை[தொகு]

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:50, 25 சூன் 2017 (UTC)

விக்கிப்பீடியா கருத்தரங்கம் நடத்த இசைவு வேண்டி[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் விதமாகவும், கல்லூரி மாணவ மாணவியரிடம் அதன் பயன்பாடுகள் குறித்தும், அதன் செயற்பாடுகள் குறித்தும் விளக்கி அவர்களையும் இளம் விக்கிப்பீடியர்களாக அறிகமுப்படுத்ததற்கும் புதுவையைச் சுற்றியுள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் கருத்தரங்குகள் நிகழ்த்த விரும்புகிறேன். எனக்குரிய வழிமுறைகளையும், ஆதரவினையும் தந்துதவ வேண்டுகிறேன்.--அருணன் கபிலன் (பேச்சு) வணக்கம்

@Ravidreams: கவனிக்க.--Kanags (பேச்சு) 05:04, 28 திசம்பர் 2017 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்![தொகு]

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arunankapilan&oldid=2845360" இருந்து மீள்விக்கப்பட்டது