உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Umashankar81

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Umashankar81, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- {{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:57, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

[தொகு]
விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

கவனிக்க

[தொகு]

வணக்கம். நீங்கள் வெளியிணைப்புகளையும் பகுப்பையும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தெய்வ நெறிக் கழகம் கட்டுரையில் நீக்கிவிட்டிருந்தீர்கள். அதை மீள்வித்திருக்கிறேன். அனைத்துக் கட்டுரைகளிலும் பயனர் அனைவரும் பங்களிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.--நந்தகுமார் (பேச்சு) 10:54, 26 செப்டம்பர் 2016 (UTC)

வணக்கம், தானியங்கிகளால் மொழிபெயர்க்கப்படும் கட்டுரைகள் உடனடியாக நீக்கப்படும். சிதறல் பார்வை என்ற உங்கள் கட்டுரை இக்காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் உருவாக்கிய ஏனைய கட்டுரைகளும் தானியங்கிகளால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன போல் தெரிகிறது. அவற்றைத் திருத்தி எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:19, 1 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

சான்றுகள்

[தொகு]

வணக்கம், நீங்கள் உருவாக்கும் புதிய கட்டுரைகளுக்கு அருள் கூர்ந்து சான்றுகள் தாருங்கள். அனேகமாக, நீங்கள் ஆங்கில விக்கிக் கட்டுரையையே மொழிபெயர்த்து வருகிறீர்கள். அங்கு கட்டாயம் சான்றுகளுடன் தான் எழுதியிருப்பார்கள். அவற்றை நீங்கள் இங்கும் தரலாம். சான்றுகள் இல்லாத கட்டுரைகள் நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 01:01, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்

[தொகு]

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:46, 2 மே 2017 (UTC)[பதிலளி]

மூலதனம் கட்டுரையை இங்கு சமர்ப்பிக்கலாம், போட்டிக்காக விரிவாக்கியதற்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் விரிவாக்கங்கள் நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:41, 2 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு

[தொகு]
  • 👌 - நீங்கள் விரிவாக்கிய மூலதனம் எனும் கட்டுரை போட்டிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளின் எண்ணிக்கை - 01

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:12, 2 மே 2017 (UTC)[பதிலளி]

முதலாளித்துவம் கட்டுரையை விரிவாக்கியதற்குப் பாராட்டுகள். இன்னும் 2,000 பைட்டுக்கள் சேர்ப்பதன் மூலம் உங்கள் கட்டுரை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும் தகுதியை இலகுவில் அடையலாம். ஏற்கனவே, தாண்டியிருப்பினும் அருள்கூர்ந்து இன்னும் கொஞ்சம் விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:15, 3 மே 2017 (UTC)[பதிலளி]
நன்றி, கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, தற்போது நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளின் எண்ணிக்கை - 02--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:04, 3 மே 2017 (UTC)[பதிலளி]
அமைதி கட்டுரையை விரிவாக்கி வருவதற்கு பாராட்டுகள், ஏற்கனவே விரிவாக்கிய கட்டுரைகளைப் போல 30,000 பைட்டு அளவை அடையும் வரை சிறப்பாக விரிவாக்க என் வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:54, 5 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள், நான்கு கட்டுரைகளை விரிவாக்கி மூன்றாவதாக முன்னணி வகிப்பதற்கு வாழ்த்துக்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:53, 5 மே 2017 (UTC)[பதிலளி]

26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:37, 6 மே 2017 (UTC)[பதிலளி]


  • கட்டுரைப்போட்டியில் சிறப்பாகப் பங்களித்து வருவதற்கு நன்றிகளும், பாராட்டுக்களும். மொழிபெயர்ப்புச் செய்யும்போது, சரியான அர்த்தத்துடன் வசனங்கள் அமைகிறதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள். மேலும் ஆங்கிலக் கட்டுரையில் இருக்கும் அனைத்து உள்ளிணைப்புகள் கொண்ட சொற்களுக்கும் நாமும் உள்ளிணைப்புக்கள் கொடுக்கத் தேவையில்லை. பொருத்தமான இடங்களில் மட்டும் கொடுக்கலாம். அத்துடன், கொடுக்கப்படும் உள்ளிணைப்புக்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
  • சில வரிகள் சரியான அர்த்தம் வராமலும், அவசியமற்ற உள்ளிணைப்புக்களுடனும் உள்ளன. எ.கா. அமைதி கட்டுரையில்:
  1. ஆங்கிலத்தில், சமாதான வார்த்தை அவ்வப்போது பிரியாவிடை பயன்படுத்தப்படுகிறது.
  2. பேகன் விசுவாசம் ("அமைதி") என்ற பெயரில் சமாதானம், பழங்காலத்தில் அமைக்கப்பட்டது. லத்தீன் மொழி பேசும் மொழிகளில் கிரேக்க மொழி பேசும் இடங்கள் மற்றும் பாக்ஸ் ("அமைதி"). அவரது விக்கிரகங்கள் ஒரு முழு வளர்ந்த பெண்ணை, வழக்கமாக ஒரு ஏராளமான மற்றும் செங்கோல் மற்றும் சில நேரங்களில் ஜோதி அல்லது ஆலிவ் இலைகள்] சித்தரிக்கிறது.
  • இவற்றை கீழ்க் காட்டப்பட்டவாறு எழுதலாம்.
  1. ஆங்கிலத்தில், அமைதி என்ற வார்த்தை அவ்வப்போது பிரியாவிடை என்பதுபோல் பயன்படுத்தப்படுகிறது.
  2. பாகன் விசுவாசம் அல்லது பல கடவுட் கொள்கையில், பண்டைய காலத்தில் மாந்தவுருவக வழிபாட்டில், கிரேக்க மொழி பேசும் இடங்களில் அமைதி என்ற அர்த்தம் தரும் ஐரின் என்ற பெண் கடவுளையும், இலத்தீன் மொழி பேசும் இடங்களில் அமைதி என்ற அர்த்தம் தரும் பக்சு என்ற கடவுளையும் வழிபட்டு வந்தனர். அந்த விக்கிரகங்கள் பூக்கள் நிரம்பிய பெரிய கொம்புடன் அல்லது ஒரு செங்கோலுடன் அல்லது ஜோதியுடன், அல்லது ஆலிவ் இலைகளுடன் இருக்கும் ஒரு முழு வளர்ந்த பெண்ணை வழக்கமாகச் சித்தரிக்கிறது.
  • உள்ளிணைப்புக்கள் எப்படி கொடுக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு மேலே கொடுக்கப்பட்ட பத்தியிலும், இங்கும் பார்த்து அறியுங்கள்.

--கலை (பேச்சு) 14:31, 7 மே 2017 (UTC)[பதிலளி]

கலை (பேச்சு) - உங்கள் ஆலோசனைகள்க்கு நன்றி! பிழைகள் இல்லாத மற்றும் நல்ல பொருள் நிறைந்த கட்டுரைகள் எழுத உங்கள் ஆலோசனைகள், உதாரணங்கள் பயன் உள்ளவை. மிக்க நன்றி!

எனது ஆலோசனையைப் புரிந்துகொண்டு ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி உமாசங்கர். தொடர்ந்து சிறப்புடன் கட்டுரைகளை விரிவாக்க வாழ்த்துக்கள். நன்றி.--கலை (பேச்சு) 18:18, 9 மே 2017 (UTC)[பதிலளி]

சில ஆலோசனைகள்

[தொகு]
வணக்கம் உமாசங்கர்! போட்டியில் மிகவும் ஆர்வத்துடன் பங்களிப்பதற்கு முதலில் வாழ்த்துக்கள். இது தொடர்பில் சில வழிகாட்டல்கள்:
  • ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிமாற்றம் செய்யும்போது, வாசித்துவிட்டு அதனை உங்கள் நடையில் எழுதலாம். அங்கிருப்பதை அப்படியே எழுத வேண்டும் என்பதில்லை. ஏனெனில் சிலசமயம் தவறான தகவலாக வந்துவிடுகிறது.
  • உள்ளிணைப்புக்கள் சரியாகக் கொடுக்கப்படாமல் இருப்பதனால், சிவப்பு இணைப்புக்கள் அதிகமாக உள்ளது. இணைப்புக்களைக் கொடுக்கும்போது, ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக தமிழ் விக்கிப்பீடியாவில் என்ன கட்டுரை உள்ளது எனப் பார்த்து உள்ளிணைப்பைக் கொடுங்கள். உங்களுக்கு த.வி. யிலுள்ள சரியான கட்டுரை தெரியாவிட்டால், ஆங்கிலக் கட்டுரைக்குப் போய், அந்தக் கட்டுரை த.வி. யில் எந்தக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது எனப் பார்த்துவிட்டு, அந்தக் கட்டுரைக்கு இணைப்பைக் கொடுங்கள். கீழே உள்ள எடுத்துக்காட்டில், செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்த்தீர்கள் என்றால் புரிந்துகொள்வீர்கள்.
  • எ.கா. நீங்கள் விரிவாக்கிய கட்டுரையில், இங்கு கீழ்வருமாறு அதிக சிவப்பு இணைப்புக்களுடன் இருந்தது.

டிசம்பர் 1948 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் உலகலாவிய பிரகடனம் 48 உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு, மற்றும் எட்டு [தொகுதிகள்] நாடுகள் , (சோவியத் யூனியன்) , உக்ரைனிய சோவியத் சோசலிச குடியரசு, பைலோரோஷியன் SSR, மக்கள் கூட்டாட்சி குடியரசு யூகோஸ்லாவியா, மக்கள் குடியரசு குடியரசு, போலந்து மக்கள் குடியரசு, தென் ஆப்பிரிக்க ஒன்றியம், செக்கோஸ்லோவாகியா, மற்றும் சவுதி அரேபியா இராச்சியம் எதிராக வாக்களித்தது.[12][13] ஹோண்டுராஸ் மற்றும் யேமன் - அந்த நேரத்தில் ஐ.நா. உறுப்பினர்கள் இருவரும் வாக்களிக்க தவறியது அல்லது வாக்களிக்கவில்லை.[14]தென்னாபிரிக்காவின் நிலைப்பாடு, தென்னாபிரிக்காவின் தென்னாப்பிரிக்காவில் உள்ள இனவெறி அதன் இனக்குழுவின் முறையைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே காணப்படுகிறது, இது பிரகடனத்தில் ஏராளமான கட்டுரைகளை தெளிவாக மீறுகிறது.

  • இதனை கீழ்வருமாறு மாற்றியுள்ளேன்.

10 டிசம்பர் 1948 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் உலகளாவிய பிரகடனத்திற்கு 48 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததுடன், எந்த நாடுகளும் எதிராக வாக்களிக்கவில்லை. சோவியத் ஒன்றியம், உக்ரைனிய சோவியத் சோசலிச குடியரசு, பெலரூசின் சோவியத் சோசலிச குடியரசு, மக்கள் கூட்டாட்சி குடியரசு யுகோசுலாவியா, போலந்து மக்கள் குடியரசு, தென்னாபிரிக்க ஒன்றியம், செக்கோசிலோவாக்கியா, மற்றும் சவூதி அரேபியா ஆகிய எட்டு நாடுகள் வாக்களிப்பைத் தவிர்த்திருந்தன. ஹோண்டுராஸ் மற்றும் யேமன் ஆகிய இரு நாடுகளும் வாக்களிக்கத் தவறின அல்லது வாக்களிப்பைத் தவிர்த்தன. தென்னாபிரிக்காவின் நிலைப்பாடு, தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முறையைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாகவே காணப்பட்டது. ஏனெனில் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் முறையானது இந்தப் பிரகடனத்தின் ஏராளமான கொள்கைகளை மீறுகிறது.

நன்றி.--கலை (பேச்சு) 21:04, 10 மே 2017 (UTC)[பதிலளி]

--கலை, தயவுகூர்ந்து எனது புதிய பங்களிப்பை இந்த நாடுகளின் பொதுநலவாயம் கட்டுரையை பார்க்கவும். தங்களின் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி. உமாசங்கர் 12:23 10 மே 2017

குறிப்பிடப்பட்ட ஆலோசனைகளை உடனடியாக ஏற்று, உங்கள் அடுத்த கட்டுரை விரிவாக்கத்தைச் செய்தமைக்கு மிகவும் நன்றி. கட்டுரை விரிவாக்கத்தின்போது, ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு செய்கிறீர்கள் என்றால், முக்கியமான விடயங்கள் சிறிது சிறிதாகவாவது, உங்கள் தமிழ்க் கட்டுரைக்குள் அடங்குமாறு பார்த்துக் கொண்டீர்களென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். பாராட்டுக்கள்.--கலை (பேச்சு) 15:32, 11 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு

[தொகு]

வணிகம், அரசியல், சட்டம் தொடர்பான கட்டுரைகளை விரிவாக்குவது மகிழ்ச்சி. நீங்கள் போட்டியில் காட்டும் வேகம் வாய் பிளக்க வைக்கிறது! தொடர்ந்து அதிரடியாகப் போட்டியில் பங்குபற்றி பற்பல கட்டுரைகளை நீங்கல் நிச்சயம் விரிவாக்குவீர்கள் என நம்புகின்றேன்! வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:17, 10 மே 2017 (UTC)[பதிலளி]

ஆம், கட்டுரைகளின் தரம், நீளத்தைக் கூட்டுவது தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நம்பகத்தன்மையைக் கூட்ட பெரிதும் உதவும். இந்த முக்கியமான பணியை ஈடுபாட்டுடன் மேற்கொண்டு வருவதற்கு என் நன்றியும் பாராட்டும். --இரவி (பேச்சு) 13:42, 15 மே 2017 (UTC)[பதிலளி]

படைத்துறை

[தொகு]

அருள்கூர்ந்து படைத்துறை கட்டுரையை இன்னும் சற்று விரிவாக்க வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:55, 13 மே 2017 (UTC)[பதிலளி]

நாமே விரிவாக்கியுள்ளோம், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:35, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:13, 21 மே 2017 (UTC)[பதிலளி]

போட்டிக் கட்டுரைகளில் மொழிபெயர்ப்பு

[தொகு]

வணக்கம் உமாசங்கர்! நீங்கள் போட்டிக்குச் சமர்ப்பித்த நாணயம் கட்டுரையில் மிக அதிகளவு உரைதிருத்தம் செய்யவேண்டி இருந்தது. நீங்கள் ஏதாவது மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்ப்புச் செய்கின்றீர்களா எனத் தெரியவில்லை. ஏனெனில் வசன அமைப்புக்கள் உட்பட பல தவறுகள் கட்டுரையில் இருந்தன. தயவுசெய்து மொழிபெயர்ப்புக் கருவி எதனையும் பயன்படுத்த வேண்டாம். அப்படியே பயன்படுத்தினால், அதனை சரியாக ஆங்கிலக் கட்டுரையுடன் ஒப்பிட்டுப் பார்த்து உரை திருத்திய பின்னரே, விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்யுங்கள். உங்கள் கட்டுரையில் Silver coins were used for midsized transactions, and as a unit of account for taxes, dues, contracts and fealty, while coins of copper, silver, or some mixture thereof (see debasement), were used for everyday transactions. என்பது, செப்பு, வெள்ளி, அல்லது சில கலவையின் நாணயங்கள் (தேவதூஷணத்தைப் பார்க்கவும்), தினசரி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டுரை முழுவதும் பல இடங்கள் அர்த்தமற்ற வசனங்களைக் கொண்டிருக்கிறது. தயவுசெய்து மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தின், உங்கள் மணல்தொட்டியில்` வைத்தும் திருத்தங்களை மேற்கொண்ட பின்னர் கட்டுரையில் இணையுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 12:38, 21 மே 2017 (UTC)[பதிலளி]

  • --கலை (பேச்சு)--தங்கள் ஆலோசனைக்கு நன்றி. இதுவரை விரிவாக்கி உள்ள அனைத்து கட்டுரைகளையும் திருததம் செய்ய உள்ளேன். இனி வரும் கட்டுரைகள் சிற்ப்பாக எழுத உறுதிபூனுகிறேன். -- உமாசங்கர் (பேச்சு) 6:42, 22 மே 2017 (UTC)
  • புரிந்துகொண்டு திருத்துவதற்கு நன்றி உமாசங்கர். மேலும் பல தரமான கட்டுரை விரிவாக்க வாழ்த்துகள்.

தொடர்பங்களிப்பாளர் போட்டியில் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி! ஆனாலும், நீங்கள் விரிவாக்கிய பல கட்டுரைகள் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியைக் கொண்டோ அல்லது வேறு ஏதோ கருவியைக் கொண்டோ விரிவாக்கம் செய்துள்ளீர்கள், வேண்டாம்! ஆவாறு செய்வதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. உங்கள் ஆர்வம் பிரமிக்க வைத்தாலும், அவ்வாறு செய்யாதீர்கள். இதைப் பார்த்தேன். உங்களுக்கே வாசித்தால் புரியும். அருள்கூர்ந்து, அவ்வாறு விரிவாக்கிய கட்டுரைகளை திருத்துங்கள். இதுபற்றி கலை ஏற்கனவே கூறினாலும், ஒரு சில கட்டுரைகளை மட்டும் சிறப்பாக விரிவாக்கியுள்ளீர்கள் போலுள்ளது. எதுஎப்படியாயினும் நீங்கள் விரிவாக்கியவற்றை நீங்களேதான் திருத்த வேண்டும். உடனடியாக அனைத்தையும் திருத்திக்கொள்ள வேண்டுகின்றேன். அருள்கூர்ந்து இவ்வாலோசனைகளை செவிமடுத்து மேலும் கட்டுரைகளை விரிவாக்காமல், ஏற்கனவே விரிவாக்கியவற்றை திருத்திவிட்டு மீண்டும் விரிவாக்க ஆரம்பியுங்கள். இக்கருத்தினை செவிமடுத்து செயற்பட வேண்டுகின்றதுடன் உங்கள் பதிலையும் எதிர்பார்க்கின்றேன் தொடர்ந்து செயற்பட்டு வெற்றி பெற வாழ்த்துகள்! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:46, 21 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன் (பேச்சு) --தங்கள் ஆலோசனைக்கு நன்றி. இதுவரை விரிவாக்கி உள்ள அனைத்து கட்டுரைகளையும் திருததம் செய்ய உள்ளேன். இனி வரும் கட்டுரைகள் சிற்ப்பாக எழுத உறுதிபூனுகிறேன். -- உமாசங்கர் (பேச்சு) 6:42, 22 மே 2017 (UTC)

மகிழ்ச்சி! விரைவில் கட்டுரைகளைத் திருத்திவிட்டு, வேறு கட்டுரைகளை விரிவாக்க ஆரம்பியுங்கள்! வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:15, 22 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:02, 31 மே 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் உமாசங்கர்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்த இரு கட்டுரைகளும் (துடுப்பாட்டம், டென்னிசு) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் இன்னும் ஒரு கட்டுரையை முற்பதிவு செய்து வைக்கலாம். இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், புதிதாக ஒன்றை முற்பதிவு செய்ய முடியும். நன்றி.--கலை (பேச்சு) 21:48, 31 மே 2017 (UTC)[பதிலளி]

உமாசங்கர்! நீங்கள் ஒரு நேரத்தில் 3 கட்டுரைகளை மட்டுமே பதிவு செய்ய முடியும். மேலே அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ளதே. பார்க்கவில்லையா? கட்டுரை முற்பதிவுப் பக்கத்தில், 04.06.17 இன் கீழ் உங்கள் முற்பதிவுகள் மாற்றப்படும். --கலை (பேச்சு) 07:39, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் (பேச்சு) 20:27, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:10, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:47, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:47, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--கலை (பேச்சு) 07:35, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

லியோ டால்ஸ்டாய்

[தொகு]

பயனர்:Umashankar8! லியோ டால்ஸ்டாய் கட்டுரையைத் தயவுசெய்து மீண்டும் ஒருதடவை வாசித்துத் திருத்துங்கள். பல சொற்றொடர்களின் அர்த்தம் புரியவில்லை. எ.கா. // அவரது உயர்குடி வாழ்க்கை முறையைத் துறந்து, அவர் இறுதியாக அவரது மனைவியிலிருந்து பிரிந்து, குளிர்காலத்தில் நடுப்பகுதியில் வீட்டிற்கு சென்றார், இரவில் இறந்திருந்தார்.// இது எதன் மொழிபெயர்ப்பு என்று பார்த்தால், Renouncing his aristocratic lifestyle, he had finally gathered the nerve to separate from his wife, and left home in the middle of winter, in the dead of night. மீண்டும் தானியங்கி மொழிபெயர்ப்பா? @Shriheeran and Sivakosaran: --கலை (பேச்சு) 11:07, 12 சூன் 2017 (UTC)[பதிலளி]

கலை இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டது "ஒரு குளிர்கால நடு இரவில் வீட்டிற்கு சென்றார், இறுதியாக அவரது மனைவியிடமிருந்து பிரிந்து வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு இரவில் இறந்திருந்தார்." கூடுமானவரை தவறுகளை திருத்த முயன்று வருகிறேன். நன்றி. --உமாசங்கர் (பேச்சு) 05:03, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]

அந்த சொற்றொடரை ஒரு எடுத்துக்காட்டாகவே கொடுத்தேன். பல சொற்றொடர்கள் ஆங்கிலத்தின் நேரடிச் சொற்களின் தமிழாக்கமாக இருப்பதால் புரியும்படியாக இல்லை. தயவுசெய்து முழுக்கட்டுரையிலும் நீங்கள் விரிவாக்கிய பகுதிகளை வாசித்து திருத்த முடியுமா? --கலை (பேச்சு) 06:00, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]
உமாசங்கர்! மேலும், இரு சொற்றொடர்களுக்கிடையில் இடைவெளி விடுதல், comma இற்குப் பின்னால் இடைவெளி விடுதல், மேற்கோள்கள் இணைத்தல் போன்றவற்றையும் தயவுசெய்து கவனியுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 21:46, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]

கலை, லியோ டால்ஸ்டாய் கட்டுரை முழுவதும் திருத்தம் செய்யப்பட்டுவிட்டது. தயவுசெய்து கட்டுரையை ஒரு முறைப் பார்க்கவும். நன்றி. --உமாசங்கர் (பேச்சு) 10:44, 14 சூன் 2017 (UTC)[பதிலளி]

கோபுரம் கட்டுரை

[தொகு]

வணக்கம் உமாசங்கர்! கோபுரம் கட்டுரையைச் சிறப்பாக விரிவாக்கம் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். உங்களால் சேர்க்கப்பட்ட புதிய தகவல்கள் அனைத்திற்கும் மேற்கோள்களையும் சேர்த்தீர்களானால் கட்டுரையின் தரம் மேலும் உயரும். --கலை (பேச்சு) 20:42, 12 சூலை 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் கலை!, தங்களின் விருப்பமாக கோபுரம் கட்டுரைக்குத் தேவையான அளவுக்கு மேற்கோள்கள் சேர்த்தாயிற்று. --உமாசங்கர் (பேச்சு) 02:14, 26 சூலை 2017 (UTC)[பதிலளி]

உலகக் கோப்பை

[தொகு]
2017 பிஃபா 17 உலகக்கோப்பை அணிகள் போன்ற பட்டியல் கட்டுரைகள் தேவையற்றவை.--Kanags (பேச்சு) 08:59, 15 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் Kanags அவர்களே, இந்தப் பட்டியல் கட்டுரையை 2017 பிஃபா 17 உலகக்கோப்பை அணிகள் கால்பந்து உலகக் கோப்பை பற்றி தொடர்பான கட்டுரை எழுதும் போது தேவைப்படும் ஒன்று என்ற எண்ணத்தில் ஆரம்பித்தேன். தேவையில்லை என்று நீங்கள் கருதினால் பக்கத்தை நீக்கிவிடவும். நன்றி ! --உமாசங்கர் (பேச்சு) 04:53, 16 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
இப்பட்டியல் தேவை எனக் கருதுகிறீர்களா? இப்பட்டியல் கட்டுரையை விரிவு படுத்துவீர்களா? தற்போது இக்கட்டுரையில் 90% சிவப்பு இணைப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன. இதனை எப்போது மொழிபெயர்த்து முடிப்பீர்கள்? மூலக் கட்டுரையில் சில பகுதிகள் மொழிபெயர்க்கப்படாமலும், முழுமையாக்கப்படாமலும் உள்ளன.--Kanags (பேச்சு) 06:15, 16 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் Kanags அவர்களே, ஆம், இந்த பட்டியல் கட்டுரை அவசியமாகும் ஏனெனில் 2017 பிஃபா உலகக்கோப்பையில் விளையாடும் அனைத்து அணிகளிலும் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியல் இங்கு தான் கொடுக்கப்படவுள்ளது. இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் உலகக்கோப்பை சம்பந்தமான அனைத்துக் கட்டுரைகளும் விரிவு செய்ய உத்தேசித்துள்ளேன். நன்றி ! --உமாசங்கர் (பேச்சு) 07:27, 16 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

இலக்கணம்

[தொகு]

கட்டுரைகளில் பிழையான இலக்கணத்தைத் தவிருங்கள். குறிப்பாக மெய்யெழுத்து மொழிக்கு முதலில் வராது. நன்றி. --AntanO (பேச்சு) 02:43, 12 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

@AntanO (பேச்சு) வணக்கம்!, தங்கள் அறிவுரைக்கு நன்றி! ஆனால் அந்தக் கட்டுரைகளை ஆசிய மாத போட்டிக் கட்டுரையாக சமர்பித்திருந்தேன். நீங்கள் ஏன் எந்த வழிமாற்றும் செய்யாமல் எனது பதிவை நகர்த்தியுள்ளீர்கள்?. இது குழப்பத்தை ஏற்படுத்துமல்லவா? --உமாசங்கர் (பேச்சு) 03:47, 12 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]
பிழையான சொற்கள் வழிமாற்றுடன் நகர்த்தப்படுவதில்லை. பகோடா என்பது ஒலிபெயர்ப்பு, மேலும் அது ஒர் உணவையும் குறிப்பிடும். சரியான தலைப்பிடல் குழப்பத்தை ஏற்படுத்தாது. நீங்கள் சமர்ப்பித்த இணைப்புகளைத் திருத்திவிடுங்கள். --AntanO (பேச்சு) 03:52, 12 நவம்பர் 2017 (UTC)ளும்[பதிலளி]
@AntanO (பேச்சு) வணக்கம்!, தங்கள் அறிவுரைக்கு நன்றி! எல்லா இணைப்புகளும் திருத்தப்பட்டுவிட்டது. --உமாசங்கர் (பேச்சு) 05:23, 15 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2017

[தொகு]

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:17, 14 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

[தொகு]

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  2. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  3. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:09, 25 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க

[தொகு]

பாகன் (மியான்மார்) கட்டுரைக்கு இங்கு பார்க்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 12:31, 28 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

@நந்தகுமார் (பேச்சு), குறித்துக்கொள்ளப்பட்டது. உங்கள உதவிக்கு நன்றி! ----உமாசங்கர் (பேச்சு) 12:41, 28 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

WAM Address Collection

[தொகு]

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.

Best, Erick Guan (talk)

WAM Address Collection - 1st reminder

[தொகு]

Hi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik

Confusion in the previous message- WAM

[தொகு]

Hello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik

விக்கிப்பீடியாவின் ஆசிய மாத போட்டியில் பங்கேற்றமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.. இங்கு தங்களது விவரங்களை பதிவு செய்யவும். நன்றி. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 01:57, 26 சனவரி 2018 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

[தொகு]

அன்புள்ள உமாசங்கர்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 19:07, 18 மார்ச் 2018 (UTC)

அன்புள்ள இரவி அவர்களுக்கு, உங்களுடைய மடல் படித்தேன். உங்களின் அழைப்பிற்ற்கு மிக்க நன்றி! வேங்கைத் திட்டத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன். மீண்டும் நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 07:01, 19 மார்ச் 2018 (UTC)
மிக்க மகிழ்ச்சி, நன்றி. --இரவி (பேச்சு) 14:11, 19 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்!

[தொகு]

வணக்கம், உமாசங்கர். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இப்போட்டி 45 நாட்களைக் கடந்து பாதி நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்தைச் சேர்ந்த 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நேற்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம்.

குறிப்பாக,

எனவே, தொடர்ந்து உற்சாகத்துடன் போட்டியில் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:13, 16 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்

[தொகு]

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)[பதிலளி]


Thank you for keeping Wikipedia thriving in India

[தொகு]

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder 18:18, 1 மே 2018 (UTC)

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

[தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது

[தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

[தொகு]

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

[தொகு]

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

அன்புள்ள இரவி அவர்களுக்கு, தகவலுக்கு நன்றி! ஒரு வேண்டுகோள், வாட்சாப்பு மற்றும் முகநூல் தமிழ் விக்கி குழுவில் எனது பெயரையும் உறுப்பினராக சேருங்கள். இதுவரையில் விக்கி கணக்கை தவிர எந்தவொரு குழுவிலும் நான் இல்லை.--உமாசங்கர் (பேச்சு) 02:43, 31 மே 2018 (UTC)[பதிலளி]
உங்கள் முகநூல் பக்க முகவரி, வாட்சாப்பு எண்ணை எனக்கு மடலில் அனுப்பவும். ravidreams at gmail dot com --இரவி (பேச்சு) 07:21, 31 மே 2018 (UTC)[பதிலளி]
அன்புள்ள இரவி அவர்களுக்கு, எனது முகநூல் மற்றும் வாட்சாப்பு எண்னை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பட்டுள்ளது. நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 05:53, 5 சூன் 2018 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

உங்களுக்குத் தெரியுமா திட்ட அறிவிப்பு

[தொகு]


பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

[தொகு]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:57, 2 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

பரிசினைப் பெற்றுக் கொள்க

[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவில் நடந்த தொடர் பங்களிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு அமேசானின் மின்பரிசுச் சீட்டின் அனுப்பவுள்ளோம். இது தொடர்பாக தங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் வரவில்லை. தங்களின் தபால் முகவரியும், அஞ்சல் முகவரியினையும் தர இயலுமா? எனது மின்னஞ்சல் அல்லது இதர வழிகளிலும் தொடர்பு கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:32, 24 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

நீச்சல்காரன், ஐயா, தங்களின் கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி!. ஆனால் நான் எந்த ஒரு பரிசுக்காகவும் போட்டியில் கலந்துகொள்ளவில்லை மாறாக தமிழ்மொழ் மேல் கொண்ட ஈர்ப்பால், பாசத்தால் ஒரு சேவையாகவும் கடமையாகவும் எண்ணிச் செய்கிறேன் என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குப் பரிசுகள் தேவையில்லை. அந்தப் பரிசினை நமது தமிழ் விக்கியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்க என்று வேண்டுகிறேன்.--உமாசங்கர் (பேச்சு) 13:54, 24 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். தங்களின் நன்னோக்கிற்கும், கொடைக்கும் பாராட்டுக்கள். விரும்பினால் நீங்களே பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு வழங்கலாம் அல்லாதபோது பரிசுப் பணம் பொதுச் செலவிற்கு மாற்றப்பட்டு, பயன்படுத்தப்படும். நன்றி -நீச்சல்காரன் (பேச்சு) 08:35, 30 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
நீச்சல்காரன்,ஐயா, தங்களின் பதில் கடிதத்திற்கு நன்றி!! சமிபகாலமாக எனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் எனது விக்கித்தமிழின் பங்களிப்பு குறைந்துவிட்டது அல்லது என்னால் முன்பு போல பங்களிக்க முடியவில்லை என்பதனை வருத்தத்தோடு தெறிவித்துக்கொள்கிறன்.--உமாசங்கர் (பேச்சு) 10:05, 30 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2019

[தொகு]

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:12, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!

[தொகு]
குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

[தொகு]

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:38, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

[தொகு]
tiger face
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

வேங்கைத்திட்டப் பயிற்சி 2022

[தொகு]

வணக்கம்.

இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --உழவன் (உரை) 11:15, 9 சூன் 2022 (UTC)[பதிலளி]

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

[தொகு]
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Umashankar81&oldid=3605395" இலிருந்து மீள்விக்கப்பட்டது