விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டப் பயிற்சி 2023
இது விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 வெற்றிக்கான மூன்று நாள் பயிற்சி நிகழ்வு குறித்தானதாகும்.
2019 ஆம் ஆண்டு, விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா வெற்றி பெற்றது. அதன் பொருட்டு மூன்று நாள் திறன்மேம்பாட்டுப் பயிற்சியினைத் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வழங்கவுள்ளனர். அது தொடர்பான திட்டப்பக்கம் இதுவாகும். உரையாடல்களைப் பேச்சுப் பக்கத்தில் தொடரலாம்.
நாள்
[தொகு]சனவரி 26,2023 முதல் சனவரி 28,2023 வரை (3 நாட்கள்) கோவை, தமிழ்நாடு.
முன்பதிவு
[தொகு]தமிழ் விக்கிப்பீடியப் பயனர்கள்(இலங்கைப் பயனர் உட்பட) அனைவரும் விண்ணப்பிக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களே இதில் கலந்து கொள்ளமுடியும். நிதிநல்கைக்கான படிவம் நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை திறக்கப்படுகிறது.
பங்கேற்பாளர்கள்
[தொகு]- Arularasan. G
- Sridhar G
- TNSE Mahalingam VNR
- கி.மூர்த்தி
- Balu1967
- Vasantha Lakshmi V
Deepa arul- Balurbala
- Parvathisri
- பா.ஜம்புலிங்கம்
- balajijagadesh
- info-farmer
- Rukmani Purushothaman
- பிரயாணி
திவ்யாகுணசேகரன்- காந்திமதி
- Booradleyp1
செல்வா- சத்திரத்தான்
D Neethidossஅபிராமி நாராயணன்- Neechalkaran
- எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
- Stymyrat
- அனிதா
- சா அருணாசலம்
- Thiyagu Ganesh
- Vishnu Venkatesan
ezhilarasi
(அடிக்கப்பட்டவை கடைசி நேரத்தில் வர இயலாதவர்கள்)
இரண்டாம் கட்டப்பட்டியல்:
ஒருங்கிணைப்புக் குழுக்கள்
[தொகு]உள்ளூர் ஏற்பாட்டுக் குழு
[தொகு]பயிற்சி திட்டமிடல் குழு
[தொகு]நிதி நல்கைக் குழு
[தொகு]பரப்புரைக் குழு
[தொகு]அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
[தொகு]அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- இந்தப் பயிற்சியினை யார் வழங்குவது? நோக்கம் என்ன?
கூகிளின் நிதி உதவியுடன் சிஐஎஸ்-ஏ2கே என்ற அமைப்பு நடத்திய வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக, வெற்றி பெறும் மொழியினருக்குத் தங்களது திறன்களை மேம்படுத்தும் விதமாக வழங்கப்படுகிறது. பங்கேற்பாளர், பயிற்சியாளர், பயிற்சி வடிவம் அனைத்தையும் அனைத்தையும் வெற்றி பெற்ற மொழியினரே முடிவெடுப்பார்கள். இது தொடர்பான நீண்ட உரையாடல்களைத் திட்டப் பக்கத்தில் காணலாம்.
- மொத்தப் பங்கேற்பாளர்கள் தேர்வு எவ்வாறு நடைபெறும்?
பிற மொழியினரைப் பொறுத்தமட்டில் அந்தந்த சமூகத்தினரே தேர்வு செய்து பெயர்களை வழங்குவர் (பஞ்சாபி -6, பெங்காலி-4). தமிழில் விண்ணப்பப் படிவம் உள்ளது. விக்கிப்பீடியாவில் பங்களிக்க விருப்பமுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். இரண்டு வேங்கைத் திட்டங்களில் பங்களித்தவர்களுக்கு முன்னுரிமை, முனைப்பான பங்களிப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இது மேம்பட்ட பயிற்சி என்பதால் முற்றிலும் புதுப் பயனர்களைத் தேர்வு செய்ய இயலாது.
- பயிற்சி எந்த மொழியில் இருக்கும்?
பெரும்பாலான பயிற்சிகள் ஆங்கிலம்/தமிழில் இருக்கும். ஆனால் நான்கு மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், பஞ்சாபி, பெங்காலி) திறன் வாய்ந்தவர்கள் பயிற்சியாளர்களாக வருகிறார்கள். தமிழ் மொழிக்கான பயிற்சிகளின் போது இரண்டு அமர்வுகளாகப் பிரித்துக் கொள்ளப் படும்.
- பயிற்சிக்கான வரைவு எப்படி உருவாக்கப்பட்டது?
தமிழ்ப் பயனர்களிடம் கருத்து கேட்டு அதனடிப்படையில் வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பரிந்துரைகளை முன்வைக்கலாம். பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழியினரிடமும் கருத்து கேட்டு வாய்ப்புள்ளவற்றை இணைத்துக் கொள்வோம். தொழில்நுட்பம் தொடர்பான அமர்வானது அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகவே இருக்கும். கடினமான நிரலாக்கம் குழப்பமான செயல்முறைகள் தவிர்க்கப்படும். அனைத்துப் பயிற்சியும் அனைவருக்கும் இன்றே பயனளிக்காவிட்டாலும் எதிர்காலத்தில் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.