உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போட்டி உரையாடல் புள்ளிவிபரம் விதிகள் பரிசுகள் முற்பதிவு தலைப்புகள்

இப்போட்டி பற்றிய உங்கள் சந்தேகங்கள், கேள்விகள், கருத்துகள், பரிந்துரைகள், வேண்டுகோள்கள் என்பவற்றை இங்கு அருள்கூர்ந்து இட வேண்டுகின்றோம்


பைட்டு அளவு & கட்டுரை முற்பதிவு[தொகு]

ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே கட்டுரையை தொகுப்பதை தடுக்க எந்த கட்டுரையை விரிவாக போகிறிர்களோ அதை தெரிவிக்கலாம். மற்றவர் விரிவாக்குவதை தடுக்க முடியாது ஆனால் இது அவர் அக்கட்டுரையில் வேலை செய்கிறார் என மற்றவர் அறிய உதவும், முன்பு கட்டுரைப் போட்டியில் இந்த தெரிவு இருந்தது--குறும்பன் (பேச்சு) 17:47, 5 மார்ச் 2017 (UTC)

குறும்பன் ஐயா, விதிகளினை அவதானியுங்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:36, 6 மார்ச் 2017 (UTC)

ஸ்ரீஹீரன் விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள். என்பதை

 • விரிவாக்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள் என்று சொல்லலாமா? விரிவாக்கிய என்றால் விரிவாக்கி முடித்த என்று பொருள் மயக்கம் தோன்றுகிறது.--குறும்பன் (பேச்சு) 19:36, 15 மார்ச் 2017 (UTC)
குறும்பன் அவர்களே, விரிவாக்கிய என்பது 'முடிந்தவரை ஒருவரால் விரிவாக்கப்பட்டது' என்பதையும் விரிவாக்கும் என்பது 'விரிவாக்கிக்கொண்டு இருப்பதையும்' குறிக்கின்றது. விரிவாக்கும் கட்டுரைகளை முற்பதிவுப்பக்கத்திலும், விரிவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் பக்கத்திலும் இடலாம் அல்லவா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:03, 16 மார்ச் 2017 (UTC)

6000 பைட் என்பது மேற்கோள்களையும் தவிர்த்து கணக்கிடப்படுமா? நான் அறிந்த வரை மேற்கோள்கள் சில ஆயிரம் பைட்டுகளை தின்னக்கூடும். --குறும்பன் (பேச்சு) 17:54, 5 மார்ச் 2017 (UTC)

ஆம், உரைப்பகுதியுடன் மேற்கோள்களை வேறுபடுத்தி பைட்டளவை கணக்கிடுவது நடுவர்களுக்குக் கடினம்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:36, 6 மார்ச் 2017 (UTC)

ஒரே நேரத்தில் இருவர் கட்டுரை விரிவாக்கல்[தொகு]

ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு குறிப்பிட்ட கட்டுரையை விரிவுபடுத்தினாலும், ஒவ்வொருவரும் 6000 பைட்டுக்கு மேல் தமது விரிவாக்கத்தை குறிப்பிட்ட கட்டுரையில் மேற்கொள்ளலாம்தானே. ஆயின், ஒருவர் முற்பதிவு செய்யும் ஒரு கட்டுரையை இன்னொருவரும் விரிவாக்கம் செய்வதில் பிரச்சனை அல்லது தடை உண்டா? --கலை (பேச்சு) 19:07, 6 மார்ச் 2017 (UTC)
கலை, No obstacle there. And the person who adds 26000 th byte on the article will be the expander of that perticular article. Later I will add this in the rules and Thankyou for your question. Sorry for replying you In English--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:01, 7 மார்ச் 2017 (UTC)
கலை அம்மையாரே, தங்கள் கேள்விக்கான பதிலை தற்போது விதகள் பகுதியில் அவதானிக்கலாம். போட்டியில் தாங்களும் கலந்துகொள்ள விருப்பம். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:48, 7 மார்ச் 2017 (UTC)
விளக்கத்திற்கு நன்றி ஸ்ரீஹீரன். 26000 பைட்டைச் சேர்ப்பவர் பெயரில் கட்டுரை பதிவாகும் என்பதை முதலில் நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அப்படியாயின், ஒருவர் விரிவாக்கத்தில் மிக அதிகளவு பங்களிப்புச் செய்தாலும் (எ.கா: 10000 பைட்டைச் சேர்த்தார் என்று வைத்தால்), எவர் 6000 பைட்டுகளையும் சேர்த்து, 26000 பைட்டைத் தாண்டுகிறாரோ, அவர் பெயரில் கட்டுரை பதிவு செய்யப்படும். சரிதானே? அப்படியானால், ஒருவரே அக்கட்டுரையை விரிவாக்கம் செய்வதே போட்டியாளர்களுக்கு உதவியாக இருக்குமென நினைக்கிறேன். மேலே குறும்பன் கூறியிருப்பதுபோல், யார் அந்தக் கட்டுரையை விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியப்படுத்துவது நல்லதுதான். கட்டுரைகளை விரிவாக்கம் செய்வதில் ஆர்வம் உள்ளதுதான். நான் தொடங்கிய பல கட்டுரைகளை விரிவாக்கம் செய்ய எண்ணி இருந்தாலும், சில தடைகளால் முடியாமல் இருக்கிறது. மே மாதம்தானே போட்டி ஆரம்பிக்கிறது. அப்போது என்னால் முடிந்தால் பங்கு கொள்கின்றேன். நன்றி. --கலை (பேச்சு) 18:52, 7 மார்ச் 2017 (UTC)
பங்குபற்றி வெற்றிபெற முற்கூட்டிய வாழ்த்துக்கள்! மேலும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மையாரே--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:33, 8 மார்ச் 2017 (UTC)

பைட்டு அளவை 26,000 என்பதில் இருந்து 35,000 ஆக உயர்த்தல்[தொகு]

@Shriheeran:, மிகவும் தாமதமாகவே இதனைக் கவனிக்க நேர்ந்தது. 26,000 பைட்டு அளவை வெற்றி இலக்காக வைத்ததற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா? ஏன் எனில், மேல் விக்கி தரவரிசைப் பட்டியலில் 30,000 பைட்டுகளுக்கு மேல் உள்ள கட்டுரைகளுக்குக் கூடுதல் புள்ளிகள் தருகிறார்கள். நமது வெற்றி இலக்கை 35,000 ஆக மாற்றினால், பிற்காலத்தில் துப்புரவு காரணமாக சில பைட்டுகளை நீக்கினாலும் நமது புள்ளிகள் குறையாமல் இருக்கும். இது மிகவும் அதிகம் என்றால் 32,000 பைட்டு அளவாவது முயலலாம். --இரவி (பேச்சு) 05:04, 2 மே 2017 (UTC)[பதிலளி]

👍 விருப்பம், போட்டி ஆரம்பித்து விட்டது என்பதனால் உடனடியாக இதனை இற்றை செய்ய்ய வேண்டியுள்ளது. மேல்விக்கித் தரவரிசையினை அவதானித்து, இங்கு முக்கியமான கட்டுரைகளில் 7 இல் போட்டி தொடங்க முன்னர் கொஞ்ச உள்ளடக்கம் சேர்த்தேன் 7 இல் நான்கு கட்டுரைகள் 25,000இற்கும் அதிகமாக இருந்தன. அதேபோல் தரவரிசையிலும் குறுங்கட்டுரை எண்ணிக்கை நான்கால் குறைந்தது. அதுவே நான் இதனைச் செய்வதற்கான காரணம், 30,000 சிறப்பு. User:Yerpo எனக்காக உருவாக்கித்தந்த குறுங்கட்டுரை பட்டியலைத் தான் த.வியில் சேர்த்தேன் ஆயினும் அக்கட்டுரைகளில் 8 கட்டுரைகள் ஏற்கனவே 26,000 பைட்டை விட அதிகம் உள்ளன. இவை 27,000 விட அதிகமாகவும் 28,000 விடக் குறைவாகவும் உள்ளன. இது பற்றி விக்கித்தரவில் ய்யெர்பொவின் பேச்சுப்பக்கத்தில் (https://www.wikidata.org/wiki/User_talk:Yerpo#Help) இவையே அவை புரதம், நைதரசன் ஆபிரகாம் மூச்சுத் தொகுதி வெப்ப இயக்கவியல் செவி ஹிப்போவின்_அகஸ்டீன் தற்போது 26,000 என்பதை 3,000 பைட்டு உயர்த்தி 29,000 பைட்டாக மாற்றலாம் 35,000/32,000 எல்லாம் பயனர்களிடையே ஏக்கத்தை ஏற்படுத்திவிடும். எட்டாக்கனியாக ஆகி பின் எல்லாம் சொதப்பி யாரும் பங்குபெற முன்வராமல் போய்விடலாம், தாமதம் காக்காமல் பதில் தாருங்கள்! இணக்கமேற்படின் உடனடியாகச் செய்து சகல பயனர்களுக்கும் பேச்சுப்பக்கத்தில் Massmessage மூலம் அறிவிக்க வேண்டும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:05, 2 மே 2017 (UTC)[பதிலளி]
@Kalaiarasy and Sivakosaran:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:10, 4 மே 2017 (UTC)[பதிலளி]
பைட்டு அளவை உயர்த்துதல் நல்லதுதான். ஆயினும், போட்டி தொடங்கிய பின்னர் அவ்வாறு மாற்றம் செய்வது சரியா என்பதுதான் தெரியவில்லை. அவ்வாறு மாற்றம் செய்வதைப் போட்டிக்குப் பதிவு செய்தவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதும் தெரியவில்லை. பழைய பயனர்கள் பிரச்சனை இருக்காது. ஆனால் அண்மையில் வந்த பயனர்கள் எப்படி எடுப்பார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் ஒன்றிரண்டைத் தவிர ஏனையவை 30000 பைட்டுக்களைத் தாண்டியே இருக்கின்றன. எனவே விதியில் மாற்றம் செய்யாமல், அதனை ஒரு ஆலோசனையாகக் கொடுக்கலாமோ?--கலை (பேச்சு) 17:08, 4 மே 2017 (UTC)[பதிலளி]
சிறப்பு அவ்வாறே செய்வோம்! அத்துடன் எத்தனை பைட்டு என்பதை இன்று அல்லது நாளை அறுதியாககலாம், ஏனெனில் இது அப்டேட் ஆகவுள்ளது. அவ்வப்டேட்டில் எத்தனைக் கட்டுரைகள் வேறுபடுகின்றன என்பதை வைத்து கண்டுபிடிக்கலாம்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:07, 5 மே 2017 (UTC)[பதிலளி]
@Kalaiarasy, Ravidreams, and Sivakosaran: அத்துடன் போட்டிப் பங்கேற்பாளர்கள் விதியை மாற்றினால் ஏற்றுக்கொள்ளவே வேண்டும், புதியவர்கள் ஏற்று நடந்திருக்கிறார்கள், தியாகு கணேஷ், உமாசங்கர் போன்றோர் ஆலோசனைக்கு ஏற்ப பங்களித்திருக்கின்றார்கள், அனைவருக்கும் ஆலோசனை கொடுத்துக்கொண்டு இருக்கமுடியாது ஆகவே, அறுதியான விதி வேண்டும். ஆலோசனை வழங்கும் போது, விதி இவ்வாறு தானே இருக்கிறது பின்னர் என்ன? என எம்மைத் திரும்பிக்கேட்டால் என்ன செய்வது. அதனால் பயனர்கள் வாயைப் பிளக்காத ஓரளவான பைட்டு அளவை விதியாக்குவோம். நாம் ஆக்கும் விதியை அனைவருக்கும் Massmessage மூலம் தெரியப்படுத்துவோம். பைட்டு அளவை இன்றிரவு முடிவு செய்யலாம். ரவி பதிலளிக்காவிடினும் இற்றை செய்யவேண்டிய அவசரமும் அவசியமும் உண்டு. 30,000 என இலக்கை வைக்கலாம். அத்துடன் 30,000 என்றாலும் பயனர்கள் 32,000 /33,000 என்ற அடிப்படையிலேயே விரிவாக்குவார்கள்! இரவி கூறியது போல் துப்புரவு செய்யவேண்டிய அவசியம் வராது. ஏனெனில் விரிவாக்குவதோ தொடர்பங்களிப்பாளர்கள். புதுப்பயனர்களினது கட்டுரைகள் விசேட கவனத்திற்கு உட்படலாம்.

https://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias_by_sample_of_articles இங்கு மதியம் Update இடம்பெறவுள்ளது. அதன்படி, குறுங்கட்டுரை எண்ணிக்கை எத்தனையால் குறைந்துள்ளது எனப்பார்த்து இலகுவில் பைட்டு அளவைத் தீர்மானிக்கலாம். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:59, 5 மே 2017 (UTC)[பதிலளி]

புரதம், மூச்சுத் தொகுதி, ஹிப்போவின்_அகஸ்டீன் இம்மூன்றையும் விரிவாக்க வேண்டியுள்ளது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:16, 5 மே 2017 (UTC)[பதிலளி]
35,000 வரை கொண்டுவருபவருக்கு மேலதிகமான புள்ளிகள் வழங்கப்படும் வசதி இருந்தால் அவ்வாறு செயற்படுத்தலாம் என்பது எனது கருத்து.--சி.செந்தி (உரையாடுக) 15:25, 5 மே 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீசெந்தில், புள்ளிகள் இடுவது நடுவர்களின் வேலைப்பலுவைக் கூட்டும், புதிய புதிய விதிகளினை அமுல்ப்படுத்தினால் பயனர்கள் குழம்பிவிடலாம். ஆகையால் நீங்கள் தந்த யோசனையை புதுப்பயனர்போட்டியில் செயற்படுத்தாலாம் என்பது என் எண்ணம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:29, 5 மே 2017 (UTC)[பதிலளி]
மே 5 17:04 வரை விரிவாக்கப்பட்ட கட்டுரைகளின் பட்டியல் இங்கு உள்ளது. அரம்பத்தில் 289 என இருந்த குறும்கட்டுரைகளின் எண்ணிக்கை 263 ஆக குறைந்துள்ளது. அனைத்துக் கட்டுரைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் 26 கட்டுரைகளிலும் குறைவாக எது பைட்டளவில் இருக்கிறதோ அதனை விட ஓர் 500 பைட் அதிகமாக விதியை வைக்கலாம். அந்தவைகையில் சமிபாடு கட்டுரையில் 28,441 பைட் இருந்திருக்கிறது. அதனை விட 500க்கும் அதிக பைட்டைக் கூட்டி 29,000 மிகப்பொருத்தம். உங்கள் கருத்தின் பின்னர் விதிகள் உடன் இற்றை செய்யவேண்டிய தேவை உள்ளது. இன்னும் 12 மணித்தியாலங்கஊல் புதுவிதி! மகிழ்ச்சி! @Kalaiarasy, Ravidreams, and Sivakosaran:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:30, 5 மே 2017 (UTC)[பதிலளி]

//30,000 பைட்டுகளுக்கு மேல் உள்ள கட்டுரைகளுக்குக் கூடுதல் புள்ளிகள் தருகிறார்கள்// இரவி கூறியதுபோல 30,000 பைட்டுகளுக்கு மேல் கட்டுரைகள் வந்தால்தான் மேல்விக்கியின் சமன்பாட்டுப்படி இன்னும் முன்னேற வாய்ப்புண்டு. எனவே 29,000 என்பதை 30,500 என்று மாற்றினால் எமக்கு மேலும் புள்ளிகள் கிடைக்கும். 29,000க்கும் 30,500க்கும் இடையில் இருப்பது மிகச்சொற்ப இடைவெளிதான். இதனை விதியாக எடுத்துக் கொள்ளாவிடின் நடுவர்களும் ஏனைய பயனர்களும் 30,500 வரை விரிவாக்குவது நல்லது.

rawscore = stubs + articles*4 + long.articles*9 

இங்கு "long articles" (நீண்ட கட்டுரைகள் > 30,000), stubs (குறுங்கட்டுரைகள் < 10,000), articles (சாதாரண கட்டுரைகள் 10,000 - 30,000) என்பதைக் கவனிக்க. இதன்படி குறுங்கட்டுரைகள் விரிவாக்கம் அடைவதனால் பெறப்படும் புள்ளிகளையே (articles*4) நாம் பெறப்போகின்றோம். போட்டியின் இலக்கு //போட்டியினூடாக குறைந்தது 200 குறுங்கட்டுகளை விரிவாக்குதல் இப்போட்டியின் இலக்காகும். // என்றாலும் இலக்கையும் மீறுவது இன்னும் சிறப்பல்லவா.

ஒரு கணிப்புக்கு:

தற்போதைய நிலை:
rawscore= 663 + 263*4 + 74*9 = 663 + 1052 + 666 = 2381
score = 2381 / 9000 * 100 = 26.46 ===> 48வது இடம்
அனைத்துக் குறுங்கட்டுரைகளும் விரிவாக்கப்பட்டால்:
rawscore = 0 + 926*4 + 74*9 = 3704 + 666 = 4370
score = 4370/9000 * 100 = 48.5 ===> 20வது இடம்.
அனைத்தும் நீண்ட கட்டுரைகள் (> 30,000) எனின்:
rawscore = 0 + 926*9 + 74*9 = 8334 + 666 = 9000
score = 100 ===> முதலாவது இடம்
போட்டியின் இலக்கு:
rawscore = 489 + 440*4 + 71*9 = 489 + 1760 + 639 = 2888
score = 32.08 ===> 39வது இடம்.
போட்டியின் இலக்குக் கட்டுரைகள் 30,000 தாண்டினால்
rawscore = 489 + 511 * 9 = 5088
score = 5088 / 9000 * 100 = 56.5 ===> 15வது இடம்

குறிப்பு: 26,000 இலிருந்து 29,000க்கு பைட் கூட்டப்படுவதால் மேற்கூறிய கணக்கில் மாற்றம் ஏற்படாது. --சி.செந்தி (உரையாடுக) 18:49, 5 மே 2017 (UTC)[பதிலளி]

சி.செந்தி, //200 கட்டுரைகள்// இலக்கு அல்ல குறைந்தது 200 கட்டுரைகள், என்பதே இலக்கு. 30,500 பைட்டும் பரவாயில்லை. ஆனால் 30,000 என நீங்கள் குறிப்பிடுவது எது?
போட்டியின் இலக்குக் கட்டுரைகள் 30,000 தாண்டினால்
rawscore = 489 + 511 * 9 = 5088
score = 5088 / 9000 * 100 = 56.5 ===> 15வது இடம்

இங்கு 30,000 என்பது பைட்டு அல்ல, Characters. தவறான புரிதலென எண்கின்றேன். 30,000 பைட்டின் மேல் விரிவாக்க வேண்டும் என எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா. என் கணிப்புப்படி 30,000 என சராசரியாக வைக்கலாம். விளக்கமும் பதிலும் வேண்டும் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:17, 6 மே 2017 (UTC)[பதிலளி]

28,541 பைட்டிலிருந்தகட்டுரையும் குறுங்கட்டுரையிலிருந்து கட்டுரைத்தரத்தை எட்டியது என்றால் 30,000 பைட்டுள்ளதுதான் எட்டும் எனபது எவ்வாறு?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:25, 6 மே 2017 (UTC)[பதிலளி]
எனது தவறான புரிதல்தான். நான் இரவி கூறியதை வைத்துக்கொண்டு இதனைக் கூறினேன். அங்கு //and the number of characters is calculated // என்று குறிப்பிட்டதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். :) --சி.செந்தி (உரையாடுக) 01:40, 6 மே 2017 (UTC)[பதிலளி]
@Kalaiarasy, Drsrisenthil, Ravidreams, and Sivakosaran:பதிலுக்கு நன்றி, கலை, இரவியின் பதிலுக்காக காத்திருக்கின்றேன். அத்துடன் கலை Active ஆக இருப்பதால் அவரின் பதிலையும் அனுசரித்து விதியை வைக்கலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:49, 6 மே 2017 (UTC)[பதிலளி]

வரியுருக்களின் எண்ணிக்கை (Characters count)[தொகு]

மேலே குறிப்பிட்ட சமன்பாடுகளின் படி தரவரிசையை நிர்ணயிப்பது வரியுருக்களின் எண்ணிக்கை என்பது தெரியவந்துள்ளது. அங்கு அதைக் கணக்கிடும் முறையை இங்கு ஒவ்வொரு கட்டுரைகளிலும் காணக்கூடியவாறு செய்துள்ளேன். இது போட்டியிடுபவர்களுக்கு உபயோகப்படும். இதற்கு உங்களின் யாவா கிறிட்டில் (எ.கா: பயனர்:Drsrisenthil/vector.js) பின்வரும் வரியை இடுங்கள்:

importScript('பயனர்:Drsrisenthil/Gadget-edittools-size.js');

இதன்மூலம் ஒரு பக்கத்தைத் தொகுக்கையில் அறிவிப்புப் பெட்டியின் கீழே "விக்கிப்பீடியா முக்கிய கட்டுரைகளுக்கான அளவு: 13311 வரியுருக்களின் எண்ணிக்கை: 14790" என்று தோன்றும். இங்கு விக்கிப்பீடியா முக்கிய கட்டுரைகளுக்கான அளவை "long articles" (நீண்ட கட்டுரைகள் > 30,000), stubs (குறுங்கட்டுரைகள் < 10,000), articles (சாதாரண கட்டுரைகள் 10,000 - 30,000) என்பவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். மேலே உள்ள தரவு நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் கட்டுரையில் (31,907 பைட்டுகள்) இருந்து எடுக்கப்பட்டது. அதன்படி அதன் அளவு:13311 எனவே அக்கட்டுரை குறுங்கட்டுரை அல்ல, நீண்ட கட்டுரையும் அல்ல.--சி.செந்தி (உரையாடுக) 04:16, 6 மே 2017 (UTC)[பதிலளி]

சி.செந்தி, ஆகா! சிறப்பு, இதையே பின்பற்றலாம், ஆனால் இதனை எப்படி விதிகள் பகுதியில் இற்றை செய்வது. அதாவது அதற்கான வசனம் தான் என்ன? நன்றிகள் ஏராளம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:00, 6 மே 2017 (UTC)[பதிலளி]
ஐயா, ஹிப்போவின்_அகஸ்டீன், புரதம் என்பவை குறுங்கட்டுரைகள். ஆனால் அவை 10,000 வரியுருக்களுக்கும் அதிகமாக இருந்தும் கட்டுரையாகவில்லை. எப்ப்டியென்றால், நாம் 5 நாட்களில் விரிவாக்கிய 26 கட்டுரைகளும் மேல்விக்கிப்பட்டியலில் கட்டுரைத் தரத்திற்கு உயர்ந்துள்ளன. அவையும் 10,000 வரியுருக்கும் அதிகமானவை. ஆனால், இவ்விருகட்டுரையும் ஏன் அவ்வாறு உயரவில்லை, அனௌத்திலும் வரியுரு குறைந்த கட்டுரையான சமிபாடு 11.263 வரியுரு கொண்டது. ஆனால் புரதம் இதை விட அதிக வரியுருகொண்டது இதற்கான காரணம் தான் என்ன?, சமிபாடு கட்டுரை 28,000 அதிகமான பைட்டு கொண்டது, ஆனால் புரதம் 27,305 பைட்தான் ஆகையால் பைட்டை இங்கு கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே பைட்டையே முன்னிறுத்தாலாம். வரியுரு எண்ணிக்கை காட்டுவானை உதவியாகக் கொள்ளலாம். ஆகவே, 28,4XX பைட்டை விட அதிகமாக் 29,000/30,000பைட்டு இப்போதும் பொருந்துகிறது. பதில் வேண்டும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:18, 6 மே 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன்,
போட்டி தொடங்கமுன்னர் என்றால் விதிகளில் இதனை இணைக்கலாம் (விக்கிப்பீடியா முக்கிய கட்டுரைகளுக்கான அளவு). மேலும், அனைத்துப் போட்டியாளர்களுக்கும் யாவா கிறிட்டில் வரி நிரல் இடப்படல் வேண்டும். இது சரியென்றால் பைட்டில் இருந்து language weightக்கு (விக்கிப்பீடியா முக்கிய கட்டுரைகளுக்கான அளவு) மாறலாம். இவையெல்லாம் சிக்கல். எனவே உங்கள் கூற்றுப்படி பைட்டையே முன்னிறுத்தாலாம். language weight (மொழி அளவுகள்?) - இதற்குரிய சரியான தமிழ்ப் பதம் தெரியவில்லை. நான் இதை இங்கு இட்டது போட்டியின்போது நடுவர்கள் அல்லது உதவியாளர்கள் கட்டுரைகளைத் தரம் உயர்த்துவதற்கு இது உதவும் என்பதற்காகவே.. 28,000 மொழி அளவுகள் உள்ளவற்றை 30,001 வரை உயர்த்துதல் மூலம் நீண்ட கட்டுரைகளைப் பெறலாம்.
1 Tamil character = 3 bytes என்பதை மனதில் நிறுத்தியும் இதனைப் பார்க்கலாம், எனினும் இது சரியான அளவைத் தாராது. ஏனென்றால் வரியுருக்களின் எண்ணிக்கையை வைத்துகொண்டு language weight (மொழி அளவுகள்?)தான் பார்க்கப்படுகின்றது. அதன்படி ஹிப்போவின்_அகஸ்டீன் கட்டுரையின் விக்கிப்பீடியா முக்கிய கட்டுரைகளுக்கான அளவு: 9999 (இரண்டு குறைவு!!). எங்கே புரதம் குறுங்கட்டுரை என்று தரவு உள்ளது என்று அறியத்தாருங்கள். --சி.செந்தி (உரையாடுக) 05:54, 6 மே 2017 (UTC)[பதிலளி]
ஐயா, புரதம் குறுங்கட்டுரை அல்ல, இங்கு வினவியதன் படி. ##28,000 மொழி அளவுகள் உள்ளவற்றை 30,001 வரை உயர்த்துதல் மூலம் நீண்ட கட்டுரைகளைப் பெறலாம்.## விளக்க முடியுமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:57, 6 மே 2017 (UTC)[பதிலளி]
Yerpo அங்கு குறிப்பிட்டதைத்தான் (ta:ஹிப்போவின் அகஸ்டீன் is a stub, yes, it's only two characters below 10.000.) நான் ஏற்கனவே இங்கு கூறியுள்ளேன். :)
//28,000 மொழி அளவுகள் உள்ளவற்றை 30,001 வரை உயர்த்துதல் மூலம் நீண்ட கட்டுரைகளைப் பெறலாம்.// வரியுருக்களின் எண்ணிக்கையைப் பார்க்காமல் "விக்கிப்பீடியா முக்கிய கட்டுரைகளுக்கான அளவு" என்பதன் இலக்கத்தைப் பார்த்து அது 30,000க்கும் அதிகமாக இருந்தால் அது "நீண்ட கட்டுரையைச் சேரும்"!!. குறுங்கட்டுரை, கட்டுரை, நீண்ட கட்டுரை ஒழுங்குபடுத்துவதாயின், நேரம் கிடைக்கையில் பயனர்:Drsrisenthil/தொபர்போ-பட்டியல் சென்று இற்றைப்படுத்தலாம். அந்தப்பக்கத்தை வேண்டுமென்றால் இங்கு நகர்த்துங்கள். Yerpo இலகுவான வழி கூறினால் நல்லது அல்லது python bot பயன்படுத்தி இவற்றை ஒழுங்குபடுத்தமுடியும். அதற்குரியவரிடம் இங்கு அணுகிப்பாருங்கள். --சி.செந்தி (உரையாடுக) 06:24, 6 மே 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன்! போட்டிக்கான விதிகள் உறுதிசெய்து போட்டியும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் விதியினை மாற்றுவது சரியா, அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது தவிர, எனக்கு இதில் வேறுபட்ட கருத்து எதுவும் இல்லை. எனவே அவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் எனில், சரியான பைட்டுக்களின் அளவை நிர்ணயித்து மாற்றுவதில் பிரச்சனையில்லை என்றே நினைக்கிறேன். கட்டுரை விரிவாக்கத்தில் என்னால் எவ்வளவு தூரம் உதவ முடியும் எனத் தெரியாது. ஏற்கனவே கூறியதுபோல், என்னால் முடிந்தளவு மட்டுமே செய்ய முடியும். ஆனால் அது எவ்வளவு தூரம் உதவியாக இருக்கும் என்பது தெரியவில்லை.--கலை (பேச்சு) 09:08, 6 மே 2017 (UTC)[பதிலளி]

கலை, விதி அவ்வாறே இருக்கட்டும், செந்தில் வேல் கூறிய கருவியை நீங்கலும் Install செய்யுங்கள், ஒருவர் விரிவாக்கிய கட்டுரை 10,000 அளவிலும் பார்க்கக் கூடுதலாக இருந்தால் போட்டிக்காக ஏற்றுக்கொள்வோம். கிட்டுமுட்டாக இருந்தால் ஆலோசனை செய்வோம், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:12, 6 மே 2017 (UTC)[பதிலளி]


சில கேள்விகள்[தொகு]

மேலுள்ள உரையாடலின் அடிப்படையில் சில கேள்விகள் எழுந்தன.
தற்போதுவரை சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் பார்வையிட்டேன். அவற்றில் கீழ் வரும் கட்டுரைகள் தவிர ஏனையவை அனைத்தும் 30000 பைட்டுக்களைத் தாண்டியுள்ளன. கீழேயுள்ள 30000 பைட்டுக்களுக்குக் குறைவான, ஆனால் 26000 பைட்டுக்களைவிடக் கூடிய கட்டுரைகளும் அந்த தொகுப்புப் பெட்டிக்கு மேல் தெரியும் அளவு 10000 ஐவிட அதிகமாக உள்ளன.

 1. காடு - அளவு: 11986.2 வரியுருக்களின் எண்ணிக்கை: 13318 | 29,230 பைட்டுகள் | Accepted by Shriheeran
 2. வியன்னா - அளவு: 15921.9 வரியுருக்களின் எண்ணிக்கை: 17691 | 29,450 பைட்டுகள் | Accepted by Kalaiarasy
 3. சிட்னி - அளவு: 15429.6 வரியுருக்களின் எண்ணிக்கை: 17144 | 29,476 பைட்டுகள் | Accepted by Kalaiarasy
 4. சூபித்துவம் - அளவு: 12918.6 வரியுருக்களின் எண்ணிக்கை: 14354 | 29,169 பைட்டுகள் | Accepted by Shriheeran
 5. சிறுகோள் - அளவு: 12097.8 வரியுருக்களின் எண்ணிக்கை: 13442 | 27,835 பைட்டுகள் | Accepted by Kalaiarasy and Shriheeran
 • 26000 பைட்டுக்களைவிட அதிகமாக ஒரு கட்டுரை விரிவாக்கப்பட்டும் (ஆனால் 30000 பைட்டுக்களை எட்டாமலும் இருந்து), அந்த தொகுப்புப் பெட்டிக்கு மேல் தெரியும் 10000 அளவை எட்ட முடிந்திருந்தால், ஏற்றுக்கொள்ளலாம்தானே?
 • 26000 பைட்டுக்களைவிட அதிகமாக ஒரு கட்டுரை விரிவாக்கப்பட்டும், அந்த தொகுப்புப் பெட்டிக்கு மேல் தெரியும் 10000 அளவை எட்ட முடியாவிட்டால், ஏற்றுக்கொள்வதா, இல்லையா?
 • இன்னுமொரு கேள்வி: வெப்ப இயக்கவியல், ஆபிரகாம் கட்டுரைகள், போட்டி ஆரம்பிக்க முன்னரே 26000 பைட்டுக்களுக்கு மேல் இருந்துள்ளன. எனவே இவற்றை போட்டியில் சேர்த்துக்கொள்ள முடியாதுதானே?

--கலை (பேச்சு) 11:52, 6 மே 2017 (UTC)[பதிலளி]

கலை,

 • 26000 பைட்டுக்களைவிட அதிகமாக ஒரு கட்டுரை விரிவாக்கப்பட்டும் (ஆனால் 30000 பைட்டுக்களை எட்டாமலும் இருந்து), அந்த தொகுப்புப் பெட்டிக்கு மேல் தெரியும் 10000 அளவை எட்ட முடிந்திருந்தால், ஏற்றுக்கொள்ளலாம்தானே?
ஆம், அங்கே அளவு எனபது 10,000த்தைவிட 10,500ஐத் தான்டினால் போதும், 10,400 என கிட்டுமுட்டாக இருந்தால் குறித்த பயனரை இன்னும் கொஞ்சம் விரிவாக்க ஆலோசனை கொடுங்கள்.
 • 26000 பைட்டுக்களைவிட அதிகமாக ஒரு கட்டுரை விரிவாக்கப்பட்டும், அந்த தொகுப்புப் பெட்டிக்கு மேல் தெரியும் 10000 அளவை எட்ட முடியாவிட்டால், ஏற்றுக்கொள்வதா, இல்லையா?
10,500ஐத் தாண்டினால் மட்டும் ஏற்றுக்கொள்க இல்லையெனில் ஆலோசனை வழங்குக.
 • இன்னுமொரு கேள்வி: வெப்ப இயக்கவியல், ஆபிரகாம் கட்டுரைகள், போட்டி ஆரம்பிக்க முன்னரே 26000 பைட்டுக்களுக்கு மேல் இருந்துள்ளன. எனவே இவற்றை போட்டியில் சேர்த்துக்கொள்ள முடியாதுதானே?
முடியாது, நான் தான் விர்வாக்கினேன், அதை இங்கு என் பெயரில் சமர்ப்பித்துள்ளேன். நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என Noவை அழுத்துங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:32, 6 மே 2017 (UTC)[பதிலளி]

முடிவு: 10,500 அளவைத் தான்டும் அனைத்துக்கட்டுரைகளும் போட்டிக்கு ஏற்புடையன. விதிகளில் மாற்றம் செய்து பயனர்களைக் குழப்பத் தேவையில்லை, தேவைப்படும் போது பயனர்களுக்கு ஆலோசனை வழங்கலாம். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:32, 6 மே 2017 (UTC)[பதிலளி]

 • ஒவ்வொருவராக ஆலோசனை வழங்குவதானால், இந்த அளவை எவ்வாறு குறிப்பிடுவது? விதிகளின்படி, 26000 பைட்டுக்களைத் தாண்டிய நிலையில் ஏன் மேலும் விரிவாக்கச் சொல்கிறோம் என்று சொல்ல வேண்டுமல்லவா? இந்த 10500 அளவுபற்றி, பொதிவில் எழுதிவிட்டால் (குறிப்பாக கட்டுரை சமர்ப்பிக்கும் பக்கத்தில் உள்ள பச்சை வரிகளில் சேர்த்துவிட்டால்) இலகுவாக இருக்குமென நினைக்கிறேன். --கலை (பேச்சு) 15:00, 6 மே 2017 (UTC)[பதிலளி]
செய்துவிடுங்கள் கலை --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:09, 6 மே 2017 (UTC)[பதிலளி]
அந்த அளவை எப்படிக் குறிப்பிடுவது என்று தெரியாததால்தானே உங்களிடம் கேட்கிறேன்.--கலை (பேச்சு) 15:22, 6 மே 2017 (UTC)[பதிலளி]
@Shriheeran and Drsrisenthil: அந்த தொகுப்புப் பெட்டிக்கு மேலே தெரியும் அளவீட்டை என்ன பெயர்கொண்டு அழைப்பது. அல்லது அதனை எவ்வாறு குறிப்பது? மேலும், அந்தக் கருவியை இணைக்காவிட்டால், போட்டியாளர்களால் அந்த அளவை அறிய முடியாதே. எவ்வாறு அவர்களுக்கு இதுபற்றிக் கூறலாம்? இதனை ஒரு சரியான முறையில் போட்டியாளர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் என்று விரும்புகிறேன். அதனை அவர்கள் கட்டுரை சமர்ப்பிக்கும் பக்கத்திலோ அல்லது அவர்கள் பேச்சுப் பக்கத்திலோ கொடுக்கலாம். எவ்வாறு எழுதுவது என்பதுதான் புரியவில்லை. செந்தி உதவ முடியுமா?--கலை (பேச்சு) 17:22, 6 மே 2017 (UTC)[பதிலளி]
 • ஏற்கனவே 26000 பைட்டுக்களைத் தாண்டியவை போட்டிக்கான கட்டுரைகளின் பட்டியலில் இருப்பின், அவை விரிவாக்கப்பட்டாலும் அவற்றை 'ஆயிற்று' என்று குறித்துவிட்டு, போட்டிக்கு சமர்ப்பிக்காது விடலாம். அத்துடன், அவ்வாறான கட்டுரைகளை அடையாளம் காண முடியுமாயின், போட்டிக் கட்டுரைகள் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். அல்லது போட்டியாளர்கள் போட்டிக்காகக் கட்டுரைகளைத் தெரிவு செய்ய முன்னர் அவை 26000 பைட்டுக்களுக்கு உட்பட்டவையா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி வழிகாட்டியில் கூறலாம். அல்லது 26000 பைட்டுக்களைத் தாண்டியவையாக இருந்தாலும், 6000 பைட்டுக்களை போட்டியாளர் சேர்ப்பாராயின், அவற்றைப் போட்டியில் இணைத்துக் கொள்ளலாம். --கலை (பேச்சு) 15:09, 6 மே 2017 (UTC)[பதிலளி]
கலை, இப்போது வேண்டாம்! நமக்குள்ளேயே இருக்கட்டும்! ஆலோசனையை மட்டும் வழங்குவோம், ஆலோசனை வழங்கும் போது திருப்பிக்கேட்டால் அப்பயனரின் பேச்சுப்பக்கத்தில் கூறுவோம். பொதுவெளியில் போட்டு பயனர்களை ஒன்றையொன்று குழப்புவது சரியெனத் தோன்றவில்லை!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:45, 7 மே 2017 (UTC)[பதிலளி]
செய்துவிடுங்கள் கலை --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:11, 6 மே 2017 (UTC)[பதிலளி]
இதில் எவற்றைச் செய்வது?--கலை (பேச்சு) 15:22, 6 மே 2017 (UTC)[பதிலளி]
உங்களுக்கு சரியெனத் தோன்றுவதை, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, கலை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:37, 6 மே 2017 (UTC)[பதிலளி]
போட்டி ஆரம்பிக்கப்பட்டு விட்டதால், விதிகளை மாற்றாமல் ஆலோசனையாக வழங்குவதே பொருத்தமானது. போட்டியாளர்களால் மேலும் உள்ளடக்கம் சேர்க்க இயலாதவிடத்து நடுவர்கள்/முடிந்தவர்கள் விரிவாக்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 00:14, 7 மே 2017 (UTC)[பதிலளி]
நிச்சயமாக!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:05, 7 மே 2017 (UTC)[பதிலளி]
//செந்தி உதவ முடியுமா?// இதனை weighted size in characters என்று அழைகின்றார்கள். வரியுருக்கள் எண்ணிக்கை (characters count) * 0.9 (Language weight for Tamil) = weighted size in characters (விக்கிப்பீடியா முக்கிய கட்டுரைகளுக்கான அளவு). இவற்றிற்கு சரியான தமிழ் தெரியாதுள்ளது. எனவே, மொழி வரியுருக்கள் அளவு என்ற பதத்தைப் பயன்படுத்தலாம். காட்டபப்டுவதில் இருந்து "வரியுருக்கள் எண்ணிக்கை"யை அகற்றிவிடுகின்றேன், எனவே மொழி வரியுருக்கள் அளவு மட்டுமே தென்படும். நிறுவும் முறை: மேலும் பயனருக்கு அளிக்கத் தேவையான விளக்கத்தை இன்னும் ஓரிரு மணி நேரங்களுக்குள் தருகின்றேன்.--சி.செந்தி (உரையாடுக) 01:58, 7 மே 2017 (UTC)[பதிலளி]
நன்றி செந்தி. நீங்கள் விளக்கத்தைத் தந்த பின்னர் போட்டியாளர்களுக்கு (பேச்சுப் பக்கங்களில்) அதனை அறிவித்துவிடலாம். அதனை ஒரு விதியாக/விதி மாற்றமாகக் கூறாமல், "மொழிவரியுருக்கள் அளவை 10000 க்கு மேல் இருப்பதாகப் பார்த்துக் கொண்டீர்களென்றால், நீங்கள் விரிவாக்கும் கட்டுரை மேல்விக்கியின் கணக்குப்படி முக்கிய கட்டுரைகளுக்கான அளவை எட்டிவிடும். எனவே அதனையும் பாருங்கள் என்று குறிப்பிடலாம். அனேகமாக 26000 பைட்டுக்களை எட்டுகையில், 10000 அளவை அண்மித்துவிடும்.--கலை (பேச்சு) 06:56, 7 மே 2017 (UTC)[பதிலளி]
ஆம், கலை, அவர்கள் கேட்டுக்கொண்டால் மட்டும் கூறலாம்! ஆலோசனை வழங்கும் போதுதான் அவர்கள் கேட்க நேரிடும், ஒரு சில புதியவர்களிடம் கூறும்போது புரிந்துகொள்ளமுடியாது போய்விடும் என்பதனால், தற்போது எதுவும் செய்யாதீர்கள்! தேவைப்படும் போது மேலே குறிப்பிட்ட செய்தியை குறித்த பயனரின் பேச்சுப்பக்கத்தில் இடலாம். நம்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:53, 7 மே 2017 (UTC)[பதிலளி]

கலை, 10,500 என்பதை 11,500 என மாற்றுவோம், எல்லாம் Safety க்காகத்தான்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:18, 7 மே 2017 (UTC)[பதிலளி]

 • @Shriheeran and Sivakosaran:
 • பேச்சுப் பக்கத்தில் கொடுக்காவிட்டாலும், இங்கே கொடுக்கலாம் என்பது எனது கருத்து. காரணம் போட்டியாளர்கள் இது தெரியாமல் 10000 மொழிவரியுருக்களைத் தாண்ட முதலே அந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கக்கூடும்.
 • அப்படி அறிவிப்பது போட்டியாளர்களைக் குழப்பும் எனக் கருதினால், சமர்ப்பிக்கப்படும் ஒரு கட்டுரை, எமது முன்னைய விதிகளுக்கு உட்பட்டிருந்து, மொழிவரிகள் 11500 ஐத் தாண்டாவிட்டால், நடுவர் கட்டுரையை ஏற்றுக்கொள்ள முன்னர், அந்தக் கட்டுரையின் மொழிவரியை 11500 க்கு மேல் கொண்டு வந்துவிட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளலாம். (அப்படியான சூழலில், ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பதை நடுவர் தவிர்க்க வேண்டும்.)
--கலை (பேச்சு) 08:56, 7 மே 2017 (UTC)[பதிலளி]
சரி, கலை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:56, 7 மே 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன்! //இதன் அளவு 11,500 க்கும் அதிகமாக இருந்தால் அக்கட்டுரை போட்டிக்கு ஏற்புடையது.// என்று குறிப்பிடுகையில் அது போட்டி விதிகளில் மாற்றம் செய்வது போன்ற தோற்றத்தையே தருகிறது. ஏன் அப்படி மாற்றினீர்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே, போட்டி ஆரம்பித்துவிட்டதால், விதிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டாம் என்பதுபற்றி உரையாடியுள்ளோம். அதனால்தான் அந்த வரிகளை மாற்றினேன். விதிகளின்படி, ஒருவர் தன்னால் 6000 பைட்டுக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டு, மொத்த கட்டுரை 26000 பைட்டுக்களைத் தாண்டும்போது, கட்டுரையைச் சமர்ப்பிக்கலாம். அது ஏற்புக்குரியதே. அவர் மொழிவரி பற்றி கட்டாயமாகக் கவனிக்க வேண்டிய தேவை இல்லை. எனவேதான் //மொழிவரிகள் 11500 ஐத் தாண்டாவிட்டால், நடுவர் கட்டுரையை ஏற்றுக்கொள்ள முன்னர், அந்தக் கட்டுரையின் மொழிவரியை 11500 க்கு மேல் கொண்டு வந்துவிட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளலாம். (அப்படியான சூழலில், ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பதை நடுவர் தவிர்க்க வேண்டும்.)// என்று கூறினேன். இவ்வாறு செய்வதாயின், போட்டியாளர்களைக் குழப்பாமல், எந்த மேலதிக ஆலோசனையும் வழங்காமலே பிரச்சனையை தீர்க்கலாம்.
அவர்களுக்கு அறிவிக்க வேண்டுமென்று விரும்பினால் இங்கு உள்ளதுபோல் வரிகளை மாற்றலாம். விதியில் இல்லாவிட்டாலும், விக்கிப்பீடியாவின் முக்கிய கட்டுரைகளுக்கான தரத்தை எட்டும் என்று கூறினால், அனைவரும் அதனைச் செய்யவே முயல்வர்.
@Shriheeran, Sivakosaran, and Drsrisenthil:--கலை (பேச்சு) 11:02, 7 மே 2017 (UTC)[பதிலளி]
சரி,கலை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:04, 7 மே 2017 (UTC)[பதிலளி]

பயனர்:Aswn இதற்கு 'ஈடிட்ட வரியுருக்களின் அளவு' அல்லது 'எடையிட்ட வரியுருக்களின் அளவு' என்று பரிந்துரைத்துள்ளார். அதன்படி 'ஈடிட்ட வரியுருக்களின் அளவு' மொழிபெயர்ப்பு சிறந்து அமைகின்றது.--சி.செந்தி (உரையாடுக) 19:22, 7 மே 2017 (UTC)[பதிலளி]

காற்று என்ற கட்டுரை என்னால் 9412 பைட்டுகள் சேர்க்கப்பட்டு தற்போது அந்தக் கட்டுரை 29,036 பைட்டுகள் என்ற அளவில் உள்ளது. இந்தக் கட்டுரையை தொடர்பங்களிப்பாளர் போட்டிப் பட்டியலில் இற்றைப்படுத்தமுடியவில்லை. ஏனெனில் 26000 பைட்டுகள் தாண்டாத நிலையில் வேரொருவர் ஏற்கனெவே இக்கட்டுரையை இற்றைப்படுத்தியுள்ளார். போட்டி விதிமுறைகள் படி இந்தக்கட்டுரையை போட்டிக்காக யார் இற்றைப்படுத்தமுடியும்.தெளிவாக்க வேண்டுகிறேன்- ThIyAGU 03:46, 17 மே 2017 (UTC)

@Shriheeran: இந்த இழையில் மிகவும் தாமதமாகவே பதில் அளிப்பதற்கு வருந்துகிறேன். நான் முன்வைத்த கருத்தை அடுத்து தேவையான மாற்றங்களைச் செயற்படுத்தியமைக்கு நன்றி. கடைசி மாதம் இருக்கும் தர வரிசையைக் கவனித்து ஒரு சில ஆயிரம் பைட்டுகள் மட்டுமே பின்தங்கியுள்ள கட்டுரைகளைக் கவனித்து நெடுங்கட்டுரைகளாக மாற்ற முன்னுரிமை தரலாம். --இரவி (பேச்சு) 12:39, 17 மே 2017 (UTC)[பதிலளி]

எழுதியவற்றையெல்லாம் விதியைக் கடந்து இற்றைப்படுத்த விழைவதும் முயல்வதும் போட்டியின்போது தவறு.நெகிழ்வுப் போக்கும் நோக்கும் போட்டியைப் பாதிக்கும்.துலாமுள் சொந்த விருப்பு வெறுப்புகளைத் தாண்டி சரியாக நிற்கப்படுதல் சாலச்சிறந்தது. அரிய கட்டுரைகளுக்காக பெருந்தவறுகள் புரிய முற்படுதல் நல்லதல்ல.பயனர்:மணி.கணேசன்

படிமுறை[தொகு]

படிமுறை
   
 1. இப்பக்கத்திற்கு செல்லுங்கள்.
 2. அங்கு பின்வரும் வரியை இடுங்கள்.
 3. importScript('பயனர்:Drsrisenthil/Gadget-edittools-size.js');
 4. அதன் பின்னர் சேமியுங்கள்.
 5. கட்டுரையின் "மூலத்தைத் தொகு" எனும் பக்கத்திற்கு செல்லுங்கள்.
 6. இப்போது கட்டுரை ஒன்றின் தொகுத்தற்பெட்டியின் மேலே பாருங்கள்.
 7. அங்கே "ஈடிட்ட வரியுருக்களின் அளவு: xxxxx.x" என்பதைக் காணலாம்.
 8. இது கட்டுரையில் உள்ள மொத்த எழுத்துகளின் எண்ணிக்கையை வைத்துப் பெறப்பட்ட அளவாகும்.
 9. இதன் அளவு 11,500 க்கும் அதிகமாக இருந்தால் அக்கட்டுரை போட்டிக்கு ஏற்புடையது.
 10. இறுதியாக, கீழுள்ள பொத்தானை அழுத்தி கட்டுரைகளை சமர்ப்பிகலாம்.

விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க


நன்றி! எனினும் இதனை வெளியிட்டு பயனர்களைக் குழப்ப விரும்பவில்லை, ஆகையால் அவர்கள் கேட்டால் மட்டும் படிமுறையைக் கொடுப்போம்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:23, 7 மே 2017 (UTC)[பதிலளி]

விதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லையா[தொகு]

--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:28, 7 மார்ச் 2017 (UTC)

செய்யப்படுள்ளன. அண்ணா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:22, 7 மார்ச் 2017 (UTC)

எங்கே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:23, 7 மார்ச் 2017 (UTC)

விதிகள் பற்றி உரையாடி எட்டப்பட்டுள்ள முடிவுகளே இங்கு இற்றைப்படுத்தப்படுள்ளன அண்ணா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:37, 7 மார்ச் 2017 (UTC)

//விதிகளுக்கு அமைய பரிசு வழங்கப்படும்//

என்று போட்டுருக்கு. எங்கே விதிகள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:42, 7 மார்ச் 2017 (UTC)

மேலே இருக்கிறது தான் விதிகள். அவற்றை மீறினா பரிசு கிடையாது. அத்துடன் அதில 15 கட்டுரை முப்பது கட்டுரை என இருக்கிறதைத் தான் அப்படி போட்டிருக்கேன் அண்ணா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 7 மார்ச் 2017 (UTC)

தொழில்நுட்ப பங்களிப்பாளர்களுக்கு சிறப்பு பரிசுகள்[தொகு]

இது பற்றிய மேலதிக உரையாடல்களை இங்கு உரையாடுக--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:54, 11 மார்ச் 2017 (UTC)

கட்டுரைத்தலைப்புகளின் தேர்வு மிகவும் சாய்வுடையதாக வுள்ளது[தொகு]

150 உக்கும் மேலான தனி மாந்தர்களில் வெறும் 6 பேர் தான் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இலங்கையர்களோ, தமிழர்களோ யாரும் இல்லை. இந்தியாவில் ஞானபீட விருது பெற்றவர்கள், சாகித்திய விருதுபெற்றவர்கள், நோபல்பரிசு பெற்ற இந்தியர்கள், இதழாளர் இலசந்த விக்கிரமதுங்கே போன்றவர்கள் இந்திய இலங்கையின் தலைமை அமைச்சர்கள், திருவள்ளுவர், இரமண மகரிசி, வள்ளலார் போன்றவர்கள் என யாருமே இப்பட்டியலில் இல்லாதது மிகவும் உறுத்தலாக உள்ளது. சீன, சப்பானிய மெய்யியலாளர்கள், ஓவியர்கள் நோபலியர்கள் கூட அதிகம் இல்லை. குறைந்தது பாதி பேராவது நமக்கு முதன்மையானதாகக் கருதுவதாக இருக்கவேண்டும் என்பது என் தனிக்கருத்து. இப்பட்டியல் எல்லா விக்கிகளிலும் இருக்கவேண்டியன என அறிவித்த பட்டியலில் இருந்து வருகின்றது என்பதை உணர்கின்றேன். இப்பட்டியலை நான் வரவேற்கின்றேன், ஆனால் அதில் பல நாடக நடிகர்களும், திரைப்பட நடிகர்களும் இருக்கின்றார்கள், ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தை, கிழக்காசியாவைச் சேர்ந்தவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.--செல்வா (பேச்சு) 22:38, 14 மார்ச் 2017 (UTC)

தாங்கள் குறிப்பிட்டது போல் அனைத்து விக்கிகளிலும் இருக்கவேண்டிய ஆயிரம் கட்டுரைகளில் இந்தியத் துணைக்கண்டத்தை சார்ந்த தலைப்புகள் குறைவாகவே உள்ளன. தாங்கள் கூறியது போல் தமிழினத்தைப் பிரதிபலுக்கும் முக்கிய கட்டுரைகலை ஓரிடத்தில் பட்டியல்படுத்தித்தர வேண்டுகின்றேன். அவற்றை புதுப்பயனர் போட்டி மூலம் விரிவாக்கச் செய்யலாம். தங்கள் கருத்துக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:31, 15 மார்ச் 2017 (UTC)
அப்படி ஒரு பட்டியல் உருவாக்கப்பட்டால், குறிப்பிட்ட முக்கியமானவர்களின் குறுங்கட்டுரைகள் தற்போது இருந்தால், அவற்றை நமது தற்போதைய போட்டிப் பட்டியலில் இணைத்து அவற்றையும் விரிவாக்கலாமே? புதுப்பயனர் போட்டிவரை காத்திருக்கத் தேவையில்லை என்று கருதுகிறேன். @ஸ்ரீஹீரன், @செல்வா--கலை (பேச்சு) 10:57, 15 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம், அத்தோடு புதுப்பயனர்கள் அக்கட்டுரைகளை சிறப்பாக விரிவாக்குவது இயலாத காரியம்.-- மாதவன்  ( பேச்சு ) 13:31, 15 மார்ச் 2017 (UTC)
@Kalaiarasy, Maathavan, and செல்வா: நிச்சயமாக, எனினும் இது பற்றி மேலும் உரையாடுவதற்கும், பட்டியல் தயாரிப்பதற்கும் காலம் தேவை. ஆகையால் இப்போட்டியின் தனித்துவமான இலக்கானது மாறுபட்டுவிடக்கூடாது என்பது என்கருத்து. தங்கள் நோக்கம் புரிகின்றது கலை. எனினும் அதற்கான போதியளவு காலம் தற்போது இல்லை என எண்கின்றேன். அத்துடன் மேல் விக்கியில் போட்டி பற்றி மின்மடல் மூலம் அறிவித்தாயிற்று. நிச்சயமாக தாங்கள் கருதும் எண்ணத்தை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம். அத்துடன் முதலில் புதுப்பயனர் போட்டி வரை காத்திருக்காது செயற்படுவதற்கு மதிப்பளித்து தாங்கள் கருதும் முக்கியமான தலைப்புகளை உடனடியாக பட்டியலிட வேண்டுகின்றேன். எனினும் விக்கிக்கோப்பை போன்று ஓர் குறும் மாத விக்கி-மரத்தானாக (EDIT-A -THON) முன்னெடுக்கலாம். இவ்விடயம் பற்றி 2013 தொடர்கட்டுரைப்போட்டியிலும் உரையாடியதாக ஞாபகம். அவ்வாறு அவசரம் இன்றி பொறுமையுடன் இது பற்றி உரையாட விருப்பம். இதனை விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15 இனுடைய உபதிட்டமாக முன்னெடுக்கலாம். அல்லது வருகின்ற விக்கிக்கோப்பையில் இவ்விடயத்தை கருத்திற்கொள்ளலாம். தங்கள் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:09, 15 மார்ச் 2017 (UTC)
//நிச்சயமாக, எனினும் இது பற்றி மேலும் உரையாடுவதற்கும், பட்டியல் தயாரிப்பதற்கும் காலம் தேவை. ஆகையால் இப்போட்டியின் தனித்துவமான இலக்கானது மாறுபட்டுவிடக்கூடாது என்பது என்கருத்து. தங்கள் நோக்கம் புரிகின்றது கலை. எனினும் அதற்கான போதியளவு காலம் தற்போது இல்லை என எண்கின்றேன். அத்துடன் மேல் விக்கியில் போட்டி பற்றி மின்மடல் மூலம் அறிவித்தாயிற்று.// அப்படியானால் சரி. பின்னர் இதனைச் செய்யலாம். குறுங்கட்டுரை விரிவாக்கம்தான் போட்டி என்றபடியால், செல்வா கூறியதன்படி முக்கியமான நபர்கள் தொடர்பான கட்டுரைகளையும் பட்டியலில் இணைக்கலாமே என்று நினைத்தே கூறினேன். அதனை வேறுவழியில் முன்னெடுப்பதாயின் சரி. எதற்கும் ஒரு பட்டியலைத் தயாரித்து வைத்தால் நல்லது. செல்வா! இதில் உதவ முடியுமா?--கலை (பேச்சு) 17:45, 15 மார்ச் 2017 (UTC)
@கலை: இயன்றளவு உதவுவேன். கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி.--செல்வா (பேச்சு) 18:25, 15 மார்ச் 2017 (UTC)

இலக்கு[தொகு]

மேல் விக்கி தர வரிசைப் பட்டியலில் தமிழின் இடம்:

 • மே 2, 2017 - 25.38 புள்ளிகள். 49ஆவது இடம்.

--இரவி (பேச்சு) 05:12, 2 மே 2017 (UTC)[பதிலளி]

போட்டியினூடாக குறைந்தது 200 குறுங்கட்டுகளை விரிவாக்குதல் இப்போட்டியின் இலக்காகும். 284 விக்கிப்பீடியாக்களுள் குறுங்கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா 259 ஆவதாக இருக்கின்றது. இப்போடியோடு த.வி 45 நிலை முன்னேறி 214 ஆவதாக வரமுடியும். மொத்த தரவரிசையினில் 25.38 எனத் தற்போது உள்ளதை போல போட்டியின் பின் 32.04 புள்ளிகளுடன் 38/39 ஆவது இத்திற்கு த.வி முன்னேறும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:28, 2 மே 2017 (UTC)[பதிலளி]
இரவி, போட்டிதொடன்பான புள்ளிவிபடங்களை உடனுக்குடன் அறியஇங்கு செல்லுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:43, 7 மே 2017 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

காற்று என்ற கட்டுரை என்னால் 9412 பைட்டுகள் சேர்க்கப்பட்டு தற்போது அந்தக் கட்டுரை 29,036 பைட்டுகள் என்ற அளவில் உள்ளது. இந்தக் கட்டுரையை தொடர்பங்களிப்பாளர் போட்டிப் பட்டியலில் இற்றைப்படுத்தமுடியவில்லை. ஏனெனில் 26000 பைட்டுகள் தாண்டாத நிலையில் வேரொருவர் ஏற்கனெவே இக்கட்டுரையை இற்றைப்படுத்தியுள்ளார். போட்டி விதிமுறைகள் படி இந்தக்கட்டுரையை போட்டிக்காக யார் இற்றைப்படுத்தமுடியும்.தெளிவாக்க வேண்டுகிறேன்- ThIyAGU 07:24, 17 மே 2017 (UTC)

இங்கு பதில் அளித்துள்ளேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு)

உதவி தேவை...[தொகு]

ஒரு கட்டுரையானது பயனர் ஒருவரால் விரிவாக்கப்பட்டு வருகிறது என்பதனைக் குறிப்பிடும் வார்ப்புரு இருப்பதாக அறிகிறேன். அது என்ன வார்ப்புரு என்பதனை தெரியப்படுத்தவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:03, 17 மே 2017 (UTC)[பதிலளி]

அப்படி ஒரு வார்ப்புருவும் உருவாக்கப்படவில்லை என்றே நினைக்கிறேன்.--கலை (பேச்சு) 08:49, 17 மே 2017 (UTC)[பதிலளி]
கலை, மா. செல்வசிவகுருநாதன், அவர்களே. வார்ப்புரு:தொகுக்கப்படுகின்றது, வார்ப்புரு:வேலை நடந்துகொண்டிருக்கிறது ஆகியவை பயன்படுத்தப்படலாம். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:12, 17 மே 2017 (UTC)[பதிலளி]
கலை, மா. செல்வசிவகுருநாதன், விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள்/பராமரிப்பு சென்று பாருங்கள் இது தொடர்பான அனைத்து வார்ப்புருக்களும் அங்கு பார்க்கலாம்.--சி.செந்தி (உரையாடுக) 17:26, 17 மே 2017 (UTC)[பதிலளி]

சில குழப்பங்களைத் தவிர்க்கவும், பயனர்களிடையே இறுக்கங்களைத் தவிர்க்கவும் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்கென தனியாக ஒரு வார்ப்புருவை உருவாக்க பரிந்துரைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:25, 17 மே 2017 (UTC)[பதிலளி]

விரைவில் செய்யலாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:15, 18 மே 2017 (UTC)[பதிலளி]
மா. செல்வசிவகுருநாதன் இங்கு பாருங்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:03, 21 மே 2017 (UTC)[பதிலளி]

எனது கட்டுரை எவ்வாறு பதிவது.. பதிவு செய்ய தெரியவில்லை யாரேனும் உதவிட இயலுமா Jeevitha arasi (பேச்சு) 13:54, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

போட்டிக் கட்டுரைத் தலைப்புக்களில் இல்லாத, ஆனால் முக்கியமான கட்டுரைகளை அந்தப் பட்டியலில் இணைத்தல்[தொகு]

சோடியம் ஐதராக்சைடு, வானவியல் நாள், வேதி வினைவேகவியல் போன்ற கட்டுரைகள் விரிவாக்கப்பட்டு, போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனாலும் அவை போட்டிக் கட்டுரைத் தலைப்புக்களில் இல்லை என்ற காரணத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே உள்ள தலைப்புக்கள் பட்டியலில் இல்லாவிட்டாலும் முக்கியமான கட்டுரைகளை பட்டியலில் இணைத்து, ஏனைய விதிகளை நிறைவு செய்யும்போது அவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏற்கனவே தமிழர் சூழலில் அவசியமான நபர்களையும் பட்டியலில் சேர்த்துக் கொள்வதுபற்றி செல்வா கூறியிருந்தார். சில பெயர்களையும் அனுப்பியிருந்தார். அவற்றையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் உலோ.செந்தமிழ்க்கோதை குறுங்கோள் கட்டுரையும் விரிவாக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார். நானும் அதனை ஏற்று ஒரு கருத்தை இங்கு இட்டிருந்தேன். ஆனால் எவரும் கருத்துக் கூறாமையால், அந்த உரையாடல் தொடரவில்லை. அப்படி தற்போது பட்டியலில் இல்லாதவற்றை இணைத்துக் கொள்வதாயின், என்ன அடிப்படையில் அவற்றைத் தேர்வு செய்யலாம்? தயவுசெய்து இதுபற்றிய கருத்துக்களைக் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
@Shriheeran, Sivakosaran, Kanags, Drsrisenthil, உலோ.செந்தமிழ்க்கோதை, செல்வா, Mayooranathan, and Maathavan: - --கலை (பேச்சு) 09:14, 17 மே 2017 (UTC)--மகாலிங்கம் (பேச்சு) 00:13, 18 மே 2017 (UTC)[பதிலளி]

அவற்றை போட்டிக்காக ஏற்றுக்கொள்வதையோ அல்லது, கட்டுரைகளின் பட்டியலில் இணைப்பதையோ முற்றிலும் மறுக்கின்றேன். போட்டிப் பக்கத்தில் தெளிவாக விதிகளில் குறிப்பிட்டிருந்தும் கவனிக்காமல் போனது பங்கேற்பாளர்கள் அல்லவா? அத்துடன் தொடர்பங்களிப்பாளர்கள் வேறு. புதுப்பயனராயின் அனுசரித்து உற்சாகம் ஊட்டும் வண்ணம் போட்டிக்காக ஏற்றுகொள்ளலாம். மகாலிங்கம் ஆசிரியர் விரிவாக்கிய இரு கட்டுரைகளையும் இப்போதைக்கு ஏற்றுக்கொள்கின்றேன். நன்றி --ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:06, 17 மே 2017 (UTC)[பதிலளி]
போட்டி நடக்கும் போது புதிய தலைப்புகளைச் சேர்க்க வேண்டாம். எது முக்கியமான கட்டுரை என்பதை இப்போது புறவயமாக உரையாடி முடிவெடுப்பது சிரமம். தவிர, உலகாளவிய 1000 கட்டுரைகள் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியா முன்னேறுவதிலும் குறி தவறலாம். போட்டியாளர்கள் தவறுதலாக பட்டியலில் இல்லாத தலைப்புகளை விரிவாக்கினால் வழமையான பங்களிப்பாக மகிழ்வுடன் கருதுமாறு எடுத்துரைக்கலாம். --இரவி (பேச்சு) 12:35, 17 மே 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:33, 17 மே 2017 (UTC)[பதிலளி]
இப்போட்டியின் முதன்மை நோக்கம் meta:List of Wikipedias by sample of articles பட்டியலில் தமிழ் விக்கி முன்னேறுவது என்பது என்றபடியாலும் போட்டியின் விதிகளில் இது ஒன்று என்பதாலும் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள 1000 கட்டுரைகளை மட்டுமே கருதுவது நன்று எனக் கருதுகின்றேன். --சி.செந்தி (உரையாடுக) 17:15, 17 மே 2017 (UTC)[பதிலளி]
 • //போட்டிப் பக்கத்தில் தெளிவாக விதிகளில் குறிப்பிட்டிருந்தும் கவனிக்காமல் போனது பங்கேற்பாளர்கள் அல்லவா? அத்துடன் தொடர்பங்களிப்பாளர்கள் வேறு. புதுப்பயனராயின் அனுசரித்து உற்சாகம் ஊட்டும் வண்ணம் போட்டிக்காக ஏற்றுகொள்ளலாம்.// உண்மையில் நான் சொன்னது போட்டியாளர்கள் கவனிக்காமல் செய்துவிட்டார்கள் என்பதனால் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்காக அல்ல. முக்கியமான கட்டுரைகளை விரிவாக்கினால் நல்லதுதானே என்பதனால்தான் அப்படிக் கருதினேன். பட்டியலில் தமிழ்விக்கி முன்னேறுவதுதான் குறிக்கோள் என்றால், புதிய தலைப்புக்களைச் சேர்த்துக்கொள்ளாமலே விடலாம். அப்படி யாராவது விரிவாக்கினால் எடுத்துச் சொல்லலாம், ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
 • //மகாலிங்கம் ஆசிரியர் விரிவாக்கிய இரு கட்டுரைகளையும் இப்போதைக்கு ஏற்றுக்கொள்கின்றேன்.// ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி நடுவர்பணியைச் செய்வது சரியல்ல. இங்கே உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. அப்போதே ஏன் அவசரப்பட்டு இவ்வாறு செய்கிறீர்கள் ஸ்ரீஹீரன்? போட்டிக்கட்டுரைகள் பட்டியலில் இல்லாத எந்த ஒரு கட்டுரையையும் நான் ஏற்றுக் கொண்டதாய்க் குறிக்கவில்லை. இந்த உரையாடலின் முடிவைப் பார்த்தே மாற்றங்கள் செய்யலாம் என நினைத்தேன். எனவே புதியவர்கள் அப்படி பட்டியலில் இல்லாத கட்டுரைகளை விரிவாக்கினால், அவர்களுக்கு எடுத்துச் சொல்வோம். நன்றி. --கலை

போட்டிக்கான தலைப்புகளில் இல்லாத கட்டுரைகளை உள்ளிட நான் இனி முயற்சியே செய்ய மாட்டேன். ஏற்கெனவே நான் இது குறித்து விளக்கமளித்திருந்தேன். மன்னிக்கவும். மீண்டும் இத்தவறை நான் செய்வதாய் இல்லை.--மகாலிங்கம் (பேச்சு) 00:04, 18 மே 2017 (UTC) உண்மையில் நான் ஸ்ரீகா்சன் அவா்கள் அளித்த பட்டியலில் உள்ள வேதியியல் சார்ந்த கட்டுரைகளை ஒவ்வொன்றாக உருவாக்கத்தான் முயற்சி மேற்கொண்டிருந்தேன். எனக்காக போட்டியின் பொதுவான விதிகளை மாற்றத்தேவையில்லை. ஏற்கெனவே குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளை இந்தப்போட்டிக்காக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது சரியான செயலாகவே இருக்கும். அதற்காக நான் வருத்தப்படப்போவதில்லை. ஏனெனில் இது குறித்து முன்னதாகவே எனக்குத் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. நானும் போட்டிக்கான தலைப்புகளைப் பார்வையிட்டுள்ளேன். --மகாலிங்கம் (பேச்சு) 00:13, 18 மே 2017 (UTC)[பதிலளி]

புரிந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி மகாலிங்கம் --கலை (பேச்சு) 05:22, 18 மே 2017 (UTC)[பதிலளி]
புரிதலுக்கு மிக்க நன்றி மகாலிங்கம் அவர்களே!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:40, 18 மே 2017 (UTC)[பதிலளி]

போட்டிக் கட்டுரைகளில் மொழிபெயர்ப்புக் கருவி[தொகு]

சில போட்டிக்காகச் சமர்பிக்கப்பட்ட கட்டுரைகள் போட்டி விதிகளை நிறைவு செய்திருந்தாலும், மிக அதிகமாக உரைதிருத்தம் செய்யப்பட வேண்டியவையாக உள்ளன. அவை ஏதாவது மொழிபெயர்ப்புக் கருவிகள் மூலம் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு, உரைதிருத்தம் செய்யப்படாமலேயே, நேரடியாகப் போடப்படுகின்றனவா என்ற சந்தேகத்தைத் தருகின்றது. நடுவர் பணியை மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு கட்டுரையையும் முழுமையாக வாசித்துப் பார்த்து, உரைதிருத்தம் செய்தல் கடினம். விதிகளின்படி உள்ளனவா என்று பார்த்துவிட்டு ஏற்றுக்கொண்டால், பல கட்டுரைகள் தரமானவையாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. சில கட்டுரைகளை உரைதிருத்தம் செய்யும்போது, பழைய கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை உரைதிருத்தம் செய்ததுபோல் உணர்ந்தேன். இதனை எப்படியாவது தவிர்த்தல் அவசியம். எனவே இதற்கு வேண்டிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுகிறேன். ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட சில (அல்லது பல) கட்டுரைகள் இவ்வாறு இருக்கலாமோ என்றும் அஞ்சுகிறேன். . நன்றி @Shriheeran and Sivakosaran:. - --கலை (பேச்சு) 11:51, 21 மே 2017 (UTC)[பதிலளி]

நான் அறிந்தவரையில் பெரும்பாலான கட்டுரைகள் மூர்த்தியாலும், உமாசங்கராலும், அருளரசனாலுமேயே விரிவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் இவ்வாறு செய்யமாட்டார்கள். பங்குபற்றுகின்ற புதுப்பயனரான மணிகணேசனே இவ்வாறு செய்துவருகின்றார். அத்துடன் ஏற்கனவே இதுபற்றி அவரின் பேச்சுப்பக்கத்தில் கூறப்பட்டிருந்தாலும், அவ்வாறு அவர் தொடர்ந்து பல கட்டுரைகளை செய்ய்யும் பயனர்களை போட்டியிலிருந்து விலக்குவதை விட வேறு வழியில்லை. அத்துடன் மொழிபெயர்ப்புத்தான் செய்தார்களா என்பதைக் கண்டுபிடிக்க, அவர்கள் ஒரே தடவையில் எத்தனை பைட்டுக்கலை இற்றை செய்துள்ளார் என்பதன் மூலம் கண்டுபிடிக்கலாம். பெரும்பாலும் 8,000 பைட்டுக்கு மேல் ஒரே தடவையில் சேர்த்தால் சந்தேகம் கொள்ளல் வேண்டும். அணமையமாற்றங்களை கூர்ந்து அவதானிப்போம். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:17, 21 மே 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன்! இங்கு போய், 09:51, 18 மே 2017 இல் நிலவும் திருத்தம் என்பதற்குக் கீழ் உள்ள உரையை முழுமையாக வாசித்துப் பாருங்கள். புரிந்துகொள்ள முடியாதபடியும், பல தவறுதலான அர்த்தங்களும் நிறைந்துள்ளன. இன்று நான் கட்டுரையை முழுமையாகத் திருத்தி அமைத்தேன். இந்தக் கட்டுரை உமாசங்கரால் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. உரைநடையை ஆங்கிலக் கட்டுரையுடன் ஒப்பிட்டபோது, முன்னைய கூகிள் கட்டுரைகளைப் பார்த்த நினைவுதான் வந்தது. --கலை (பேச்சு) 17:05, 21 மே 2017 (UTC)[பதிலளி]
ஏற்கனவே பார்த்திருந்தேன், கவலையில்லை, 24 கட்டுரைகள் தான், அவரைத் திருத்தச் சொல்லியிருந்தேன். பதில் அளித்ததும் அடுத்த கட்ட நடவடிக்கையைச் செய்வோம்! நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:54, 21 மே 2017 (UTC)[பதிலளி]
இரவியின் ஆலமரத்தடி அறிவிப்பையும் பாருங்கள்: விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)#கூகுள் மொழிபெயர்ப்பு மேம்பட்டு வருகிறது. இதன்படி சோதித்ததில் இது கூகிள் மொழிபெயர்ப்பு என்பது தெரிகின்றது. இங்கு அவதானிக்கலாம்: சொடுக்குக --சி.செந்தி (உரையாடுக) 00:19, 22 மே 2017 (UTC)[பதிலளி]
இத்தகையை கட்டுரைகளைத் தகுதி நீக்கம் செய்வதோடு பயனரையும் மூன்று அறிவுறுத்தல்களுக்குப் பிறகு போட்டியில் இருந்து விலக்கி வைக்கலாம். இக்கட்டுரைகளைத் திருத்துவது சிரமமான வேலை என்பதால் முன்பிருந்த நிலைக்கே மீளமைக்கலாம். இந்த மொழிபெயர்ப்புகளைக் கண்டு கொள்ள எளிய வழி: 1. பொருத்தமற்ற இடங்களில் காற்புள்ளிகள் இருத்தல். 2. ஓரிரு சொற்றொடர்கள் இயல்பாக இருக்கும். நாம் ஏமாறுவது இங்கு தான். மற்ற சொற்றொடர்கள் முன்பிருக்கும் நடைக்குப் பொருந்தாத வகையில் குழப்பும். முழக்க மனித உழைப்பில் இருக்கும் கட்டுரைகள் இப்படி குழப்பா. --இரவி (பேச்சு) 07:46, 22 மே 2017 (UTC)[பதிலளி]

மேலதிக நடுவர்கள் தேவை[தொகு]

கட்டுரைப்போட்டியில் விரிவாக்கப்படும் கட்டுரைகளில் சரியான மேற்கோள்களின்றி, அல்லது வலைப்பதிவுகளிலிருந்து பெறப்படும் மேற்கோள்கள், அல்லது விகடன் போன்ற சில இணையத்தளங்களில் சரியான மேற்கோள்கள்/ ஆய்வறிக்கை முடிவுகளின்றி எழுந்தமானமாக எழுதப்படும் தகவல்களை மேற்கோள்களாகக் காட்டி எழுதப்படும் கட்டுரைகளைச் சரி பார்க்க நேரம் அதிகமாகத் தேவைப்படுகிறது. பரிச்சயமற்ற தலைப்புகள் எனில் மேலும் கடினமாக உள்ளது. வேலைப்பளுவைக் குறைப்பதற்கு மேலும் சில நடுவர்களைச் சேர்த்தால் இலகுவாக இருக்குமென நினைக்கிறேன். @Shriheeran: --கலை (பேச்சு) 22:27, 13 சூலை 2017 (UTC)[பதிலளி]

நிச்சயம் தேவை, என்னால் தற்போது விக்கிக்கு வரமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. நிச்சயம் ஒரு நடுவர் தேவை. என்னால் மேறபார்வைப் பணிகள், புள்ளிவிபரம், லீ லோயுடனான தொடர்பு ஆகியவற்றை பேணிக்கொள்ள முடியும். உங்கள் வேலைப்பளு எனக்குப் புரிகின்றது. யாராவது உதவ வாருங்கள்!... ம@Ravidreams, Kanags, and Kalaiarasy:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:09, 15 சூலை 2017 (UTC)[பதிலளி]
@Mayooranathan, Booradleyp1, Drsrisenthil, Sundar, Nan, Sodabottle, and Rsmn:--கலை (பேச்சு) 10:28, 15 சூலை 2017 (UTC)[பதிலளி]
@மதனாஹரன், Dineshkumar Ponnusamy, Parvathisri, and கி.மூர்த்தி: - உதவ இயலுமா?--இரவி (பேச்சு) 05:04, 24 சூலை 2017 (UTC)[பதிலளி]
நான் உதவத்தயாராக இருக்கிறேன். கட்டுரை தலைப்புகள் அடங்கிய பட்டியல் உள்ளதா? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:37, 24 சூலை 2017 (UTC)[பதிலளி]
நன்றி தினேஷ்குமார் பொன்னுசாமி . @Shriheeran: தயவுசெய்து நடுவர் பணிக்கு இணைத்துவிடுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 00:35, 26 சூலை 2017 (UTC)[பதிலளி]

ஏற்றுக்கொள்ளப்படாத கட்டுரைகள்[தொகு]

போட்டிக் கட்டுரைத் தலைப்புக்கள் பட்டியலில் இருந்து, அதனை ஒருவர் விரிவாக்கிய பின்னர் சில காரணங்களால் (26000 பைட்டுக்களை எட்டாமை, தரமான கட்டுரையாக இல்லாமை, துப்புரவு தேவைப்படுபவை) ஏற்றுக்கொள்ளாமல் விடும்போது, அதனை குறிப்பிட்ட பயனர் விரிவாக்கவோ, திருத்தவோ செய்யாவிட்டால், இன்னொருவர் விரிவாக்கிச் சமர்ப்பிக்க இலகுவான வழி உள்ளதா? ஏனெனில் அவ்வாறு சில கட்டுரைகளின் நிலமை உள்ளது. @Shriheeran: --கலை (பேச்சு) 22:27, 13 சூலை 2017 (UTC)[பதிலளி]

கலை, அக்கட்டுரைகளைன் பட்டியலைக் கொடுத்தால் அவற்றை குறித்த பயனரின் கணக்கிலிருந்து நீக்கி விடலாம். பின்னர் யாரும் சரிசெய்து சமர்ப்பிக்கலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:06, 15 சூலை 2017 (UTC)[பதிலளி]
கூடிய விரைவில் அவற்றைத் தருகிறேன்.--கலை (பேச்சு) 10:24, 15 சூலை 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன்! மூக்கு, மனம் ஆகிய கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே அவற்றை ஏனையோர் விரிவாக்க உதவும் வகையில், அவை நீக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். மேலும் சிலுவைப் போர்கள், அமெரிக்க உள்நாட்டுப் போர், எகல் ஆகிய கட்டுரைகளும் சரிபார்க்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படாவிடின் மாற்றம் செய்யப்பட வேண்டும். அத்துடன் நீரிழிவு நோய் கட்டுரையும் உங்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனையும் பாருங்கள். நன்றி. --கலை (பேச்சு) 00:32, 26 சூலை 2017 (UTC)[பதிலளி]

வலிகுறை இடைவினை கட்டுரை ஆயிரம் பைட்டுகளுக்கு மேல் விரிவுபடத்தப்பட்டுவிட்டது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:33, 8 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

வாள் கட்டுரை கேட்டுகொண்டபடி, சிவப்பு இணைப்புகளை நீக்கி குறியீட்டு இலக்கை விட 5000 பைட்டுகள் கூடுதலாக உள்ளடக்க விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கட்டுரையை முழுமையாக ஏற்கவும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:44, 3 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

வெடிபொருள் கட்டுரையில் தேவையற்ற சிவப்பிணைப்புகள் நீக்கப்பட்டுவிட்டன. குறியீட்டு அளவுக்குக் கட்டுரை விரிவாக்கப்பட்டுள்ளது. கட்டுரையை முழுமையாக ஏற்கவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:13, 3 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

வெடிமருந்து கட்டுரையில் சிவப்பு இணைப்புகளை நீக்கி, கட்டுரையின் உள்ளடக்கம் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 11:44, 4 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

படிமுறைத் தீர்வு கட்டுரையில் சிவப்பு இணைப்புகளை நீக்கி மேலும் விரிவாக்கியுள்ளேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:55, 5 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

மையச் செயற்பகுதி கட்டுரை உரிய கேட்டுகொண்ட திருத்தங்கள் செய்து கட்டுரையும் 9000 பைட்டுகள் கூடுதலாக விரிவாக்கப்பட்டுள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:13, 6 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

மக்கள் ஊடகம் கட்டுரையில் சிவப்பு இணைப்புகள் நீக்கப்பட்டுவிட்டன. குறியீட்டளவுக்கு கட்டுரையும் விரிவாக்கப்பட்டுள்ளது. எனவே கட்டுரை முழுமையாக ஏற்கப்படலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:01, 6 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பீரங்கி வண்டி கட்டுரையில் சிவப்பு இணைப்புகள் நீக்கப்பட்டுவிட்டன.குறியீட்டளவுக்கு கட்டுரையும் விரிவாக்கப்பட்டுள்ளது. எனவே கட்டுரையை முழுமையாக ஏற்கலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:01, 6 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

தொலைபேசி கட்டுரையில் கேட்டுக்கொண்டபடி பத்தி எண்ணிக்கைகள் கூட்டப்பட்டுள்ளன. இதற்கு மேலும் பத்திகளைக் கூட்டுவது பத்திப் பொருளமைதியைக் குலைத்துவிடும்.எனவே இக்கட்டுரையை முழுமையாக ஏற்கவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு)

கலை மற்றும் ஸ்ரீஹீரன் !தொலைபேசி கட்டுரை 24 ஆயிரம் பைட்டுகளில் இருந்து 30 ஆயிரம் பைட்டுகள் வரை விரிவாக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுரையை முழுமையாக ஏற்கவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:28, 25 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கலை மற்றும் ஸ்ரீஹீரன் மேலுள்ள எட்டு கட்டுரைகளின் மதிப்பை உடனடியாக மீள்மதிப்பிட்டு முழுமையாக ஏற்க வேண்டுகிறேன். இது போட்டியில் தொடர ஊக்கமூட்டும். மேலும் போட்டியில் பரிசுக்கு என்பெயரைக் கருதவேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன். நான் போட்டிக்காக இக்கட்டுரைகளை விரிவாக்கவில்லை, விக்கியின் தர மேம்பாட்டுக்காகவே விரிவாக்குவேன். நன்றிகளுடன்.

கலை மற்றும் ஸ்ரீஹீரன், சிலுவைப் போர்கள் கட்டுரையை கடந்த சூன் மாதம் முற்பதிவு செய்து பின் வேறு காரணங்களால் என்னால் அதை விரிவாக்கம் செய்யமுடியாமல் போயிற்று. அதற்குப் பின் அதில் விரிவாக்க முயற்சிகள் இடம்பெற்று பின் விவாதத்துக்குள்ளானமையை காணமுடிகின்றது. இன்னும் அது 26,000 பைட்டை எட்டவில்லை. அக்கட்டுரையை நான் இப்போது விரிவாக்கலாமா? --5anan27 (பேச்சு) 08:49, 9 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
கலையிடமிருந்தான அதிலின் படி செயற்படுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:46, 9 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
5anan27! ஆம். அந்தக்கட்டுரையை நீங்கள் விரிவாக்கம் செய்யலாம். முற்பதிவைச் செய்துவிட்டு, அந்தக் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் உள்ள விடயங்களையும் கவனத்தில் இருத்தி விரிவாக்குங்கள். --கலை (பேச்சு) 11:57, 9 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
நன்றி. பதிவுசெய்கின்றேன்.--5anan27 (பேச்சு) 14:19, 9 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

முற்பதிவு தொடர்பாக விளக்கம் தேவை[தொகு]

@ஸ்ரீஹீரன் @கலை ஆகியோர்களுக்கு வணக்கம். போட்டிக்கான முற்பதிவு கட்டுரைகளின் எண்ணிக்கையில் (அதிக அளவாக 3 கட்டுரைகள்) மாற்றம் ஏதும் செய்யப்பட்டுள்ளதா? தகவல் அறிய வேண்டுகிறேன்.-- ThIyAGU 17:44, 20 ஆகத்து 2017 (UTC)

அப்படி எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை.--கலை (பேச்சு) 17:28, 20 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி @கலை ஆனால், அண்மைக் காலங்களில் இந்த விதி மீறப்படுகிறது. கவனித்தீர்களா? -- ThIyAGU 17:44, 20 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
ஆம், தற்போது கவனித்தேன். அவற்றினைக் களைந்து வருகின்றேன். தகவலுக்கு நன்றி. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:37, 21 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
நான் பொதுவாக முற்பதிவு செய்யப்படும்போது 3 கட்டுரைகள்தானா என்று சரி பார்க்கிறேன். நான் கணனிப் பக்கம் வர முடியாத நாட்கள் தவிர்த்து, பின்னர் வந்து சரிபார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.--கலை (பேச்சு) 16:35, 22 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

போட்டிக்காலம் நீடிப்பு[தொகு]

இப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்று வருவது மிக்க மகிழ்ச்சி. ஆரம்பத்தில் 690 கட்டுரைகள் விரிவுபடுத்த வேண்டியிருந்தன. அவற்றுள் ஐநூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் விரிவுபடுத்தப்பட்டு விட்டன. இன்னும் ஏறத்தாழ 170 கட்டுரைகள் எஞ்சியுள்ளன. போட்டி நிறைவடைய இன்னும் 38 நாட்கள் வரை உள்ளன. இதுவரையான போட்டிக்காலத்தில் சராசரியாக ஒருநாளுக்கு 3.7 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. இதே வேகத்தில் மீதமுள்ள கட்டுரைகளை விரிவாக்க இன்னும் ஏறத்தாழ 50 நாட்கள் வரை தேவைப்படலாம். போட்டி முடிவடையும் போது 30-40 கட்டுரைகள் விரிவாக்கப் படாமல் இருந்தால் அவை விரிவாக்கப்படாமலே விடப்பட வாய்ப்பு அதிகம். நாம் ஏற்கனவே போட்டி இலக்கைத் தாண்டிவிட்டிருந்தாலும், அனைத்துக் கட்டுரைகளையும் விரிவாக்கும் நோக்கில் போட்டிக்காலத்தை மேலும் ஒரு மாதம் அல்லது நவம்பர் 15 வரை நீடிப்பதற்கு முன்மொழிகிறேன். இறுதி நேரத்தில் போட்டிக்காலம் நீடிக்கப்பட்டால் போட்டியாளர்கள் விசனமடையக் கூடும். இப்போதே அறிவித்தால் ஏற்றுக்கொள்ளத் தயக்கமிருக்காது என நம்புகிறேன். ஏனைய பயனர்களின் கருத்தினை அறிந்து இம்மாத இறுதிக்குள் முடிவை அறிவிப்பது பொருத்தமாக இருக்கும். ஸ்ரீஹீரன், கலை, தினேஷ்குமார் - தங்களின் கருத்தறிய ஆவல். --சிவகோசரன் (பேச்சு) 09:15, 23 செப்டம்பர் 2017 (UTC)

சராசரியாக ஒரு நாளுக்கு 3.7 கட்டுரைகள் என்ற கணிப்பீட்டை அடிப்படையாக வைத்து, கால நீட்டிப்பைச் செய்தால் சரியாக இருக்குமா தெரியவில்லை. காரணம் ஆரம்பத்தில் கட்டுரைகள் அதிகளவில் விரிவாக்கம் செய்யப்பட்டன. இடையில் ஒரு நிலையில் என்னால் மட்டும் நடுவர்பணியை நிறைவேற்ற முடியாது என்று மேலதிகமாக ஆட்கள் தேவை என்றுகூடக் கேட்டிருந்தேன். ஆனால் தற்போது கட்டுரைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒரு சிலரே தொடர்ந்தும் விரிவாக்கம் செய்து வருகிறார்கள். நீங்கள் கூறியதுபோல், காலத்தை நீட்டித்தால் அவர்களும் சோர்வு அடைந்துவிடக் கூடுமோ என்று அஞ்சுகிறேன். மேலும், ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்டு, விதி முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளில், 17 கட்டுரைகள் 10000 வரியுருக்களுக்குக் குறைவாகவே உள்ளன. அதனால் அவை குறுங்கட்டுரைகள் பட்டியலிலேயே வரும் என நினைக்கிறேன். இதுபற்றிய கலந்துரையாடல் இந்தப் பக்கத்தில் ஏற்கனவே வந்துள்ளது. அவற்றைப் போட்டி முடிவடைந்த பின்னர், விரிவாக்கிய பயனர்களிடம் கேட்டு மேலும் சிறிது விரிவாக்கம் செய்யக் கோரலாம். அவ்வாறு அவர்கள் செய்யாவிட்டாலும், ஒரு பட்டியலிட்டு, அனைவரும் இணைந்து விரிவாக்கம் செய்யலாம். --கலை (பேச்சு) 09:56, 23 செப்டம்பர் 2017 (UTC)
சிவகோசரன், கலை, தினேஷ்குமார் அனைவருக்கும் வணக்கம்! போட்டியின் காலத்தை நீட்டிப்பது தொடர்பில் சிக்கல்கள் உள்ளன. கலை கூறியது போல போட்டியாளர்களுக்கு சலிப்பு ஏற்படும். இன்னும் எமது பாரிய இலக்கை நாம் எட்டவில்லை. போட்டிக்காலத்தின் அளவை நீட்டிப்பதற்கு விருப்பமில்லை. தங்கள் பணிகளுக்கும் ஆர்வத்திற்கும் நன்றிகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:25, 23 செப்டம்பர் 2017 (UTC)
ஸ்ரீஹீரன்! //இன்னும் எமது பாரிய இலக்கை நாம் எட்டவில்லை// என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?--கலை (பேச்சு) 10:38, 23 செப்டம்பர் 2017 (UTC)
ஆறு மாதம் என்பதே மிக நீண்ட காலம். விதிமுறைகள் வகுத்து போட்டி தொடங்கிய பின்னர் மீண்டும் மீண்டும் விதிகளை மாற்றிக் கொள்வது சோர்வை உண்டாக்கும். போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு மட்டுமே இதன் சிரமம் புரியும். நான் இந்த போட்டியில் கலந்து கொண்டிருப்பதால் கிடைக்கின்ற சிறிது நேரத்தில் என்னால் புதிய கட்டுரைகள் உருவாக்குவது முற்றிலும் நின்று போயுள்ளது என்பதைக் கவனிக்கவும். கால நீட்டிப்பில் எனக்கும் உடன்பாடில்லை.--கி.மூர்த்தி (பேச்சு) 11:01, 23 செப்டம்பர் 2017 (UTC)
👍 விருப்பம், கலை அவர்களே 500 கட்டுரைகள் இன்னமும் விரிவாக்கப்படவில்லை, 496 கட்டுரைகளே விரிவாக்கப்பட்டுள்ளன.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:48, 23 செப்டம்பர் 2017 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:18, 23 செப்டம்பர் 2017 (UTC)
//கலை அவர்களே 500 கட்டுரைகள் இன்னமும் விரிவாக்கப்படவில்லை, 496 கட்டுரைகளே விரிவாக்கப்பட்டுள்ளன.// ஓ, அதுவா? இன்னும் நான்கே நான்கு கட்டுரைகள்தானே. அதெல்லாம் போட்டியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனாலும். நான் மேலே கூறியதுபோல, ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளில் 17 கட்டுரைகள் 10000 வரியுருக்களைத் தாண்டவில்லை. அதுபற்றி அறிவிக்க நாம் தயாரித்த வார்ப்புருவையும் பொதுவாக இட வேண்டாம் என்று கருத்துத் தெரிவித்தமையால், நானும் அந்த வார்ப்புருவை இடவில்லை, எனவே அவை குறுங்கட்டுரைகளாகவே கருதப்படுமா என்று தெரியவில்லை. அவற்றின் பட்டியல் என்னிடம் உள்ளது. போட்டி முடிவடைந்த பின்னர், குறிப்பிட்ட கட்டுரைகளை விரிவாக்கிய பயனர்களிடம் கேட்கலாமா என்று யோசிக்கிறேன். ஆனால் போட்டி முடிவடைந்த பின்னர், எத்தனைபேர் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்பது தெரியாது.--கலை (பேச்சு) 12:38, 23 செப்டம்பர் 2017 (UTC)

போட்டி நடக்கும்போது போட்டி விதிமுறைகளை (நாட்களை நீட்டிப்பதும்) மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. பயனர்களை சோர்வடையச் செய்யும், போட்டி முடிந்த தொடர்ந்து பங்களிக்கும் ஆர்வத்தை குறைத்துவிடுமோ என்ற ஐயமும் வருகிறது. கலை கூறியது போல பல கட்டுரைகளில் நிறைய பிழைகளை சரி செய்ய வேண்டியவைத் தேவை இருக்கிறது. சில தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளையும் சரிபார்க்க வேண்டும். நிறைய கட்டுரைகளில் வெளி இணைப்புகளும், உசாத்துணைகள், மேற்கோள்களின் அளவு கட்டுரையை விட அதிகமாக உள்ளது. சிவப்பு இணைப்புகள் அதிகமாக சில கட்டுரைகளில் உள்ளது. எழுத்துப்பிழைகள் பல கட்டுரைகளில் உள்ளது, சில இடங்களில் மொழிபெயர்ப்பு முழுமையாக செய்யப்படவில்லை. இத்தகைய காரணங்களால் போட்டிக்காலத்தை நீட்டிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:59, 25 செப்டம்பர் 2017 (UTC)

அவ்வாறான குறைகள் கொண்ட கட்டுரைகளின் பட்டியல் யாரிடமாவது இருக்கிறதா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:58, 25 செப்டம்பர் 2017 (UTC)

மேலுள்ள கருத்துக்களின் அடிப்படையில் போட்டிக் காலத்தை நீடிப்பதைக் கைவிடுவோம். எஞ்சியுள்ள கட்டுரைகளை வேறொரு திட்டமாக நிறைவேற்றுவோம். கருத்திட்ட அனைவருக்கும் நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 09:23, 29 செப்டம்பர் 2017 (UTC)

புதுப்பயனர்கள் பங்கு[தொகு]

போட்டியில் விக்கிப்பீடியாவில் 50 தொகுப்புகளுக்கு அதிகமாகப் பங்களித்த எவரும் பங்குபெறலாம்.என கூறப்பட்டுள்ளது. ஆனால் பயனர்:Cyarenkatnikh போன்ற பயனர்கள் பங்கேற்பது விதிமீறல் அல்லவா ---ஹிபாயத்துல்லா 07:54, 28 செப்டம்பர் 2017 (UTC)

ஆம், இது விதிகளுக்கு முரணானது தான். அவரது கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பரிசு வழங்கும் போது இதனைக் கவனத்தில் எடுப்போம். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. --சிவகோசரன் 09:21, 29 செப்டம்பர் 2017 (UTC)
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஹிபாயத்துல்லா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:26, 30 செப்டம்பர் 2017 (UTC)

ஒக்டோபர் மாத நடுவர் பணி[தொகு]

@Shriheeran, Sivakosaran, and Dineshkumar Ponnusamy: நவம்பரில் ஒரு செயல்திட்டம் காரணமாக மலாவிக்குப் பயணம் செய்யவிருப்பதனால், அதற்கான முன்னேற்பாட்டு வேலைகளை ஒக்டோபரில் பார்க்க வேண்டியுள்ளது. எனவே எனது விக்கிச் செயற்பாடு குறைவாகவே இருக்கும். தற்போதும் ஒரு பயணத்தில் உள்ளேன். தயவுசெய்து மற்றவர்கள் கூடுதல் கவனம் எடுத்தால் நன்று. நானும் முடிந்த நேரங்களில் வந்து பார்ப்பேன். நன்றி. இந்தப் போட்டி நன்கு நடந்து முடிவை அண்மித்திருப்பதில் மகிழ்ச்சி. --கலை (பேச்சு) 21:38, 7 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றிகள். உங்கள் பணிக்கு பாராட்டுகளும் நன்றிகளும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:22, 8 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

சமர்ப்பித்து ஏற்றுக்கொள்ளப்படாத கட்டுரைகள்[தொகு]

ஸ்ரீஹீரன்! வெதுப்பி கட்டுரை Hibayathullah வால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதனை வேறொருவர் விரிவாக்கிச் சமர்ப்பிக்க இடமளிப்பதற்காக, அங்கிருந்து நீக்க வேண்டும். குருட்டுத்தன்மை கட்டுரை Subathravijayy ஆல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்கட்டுரை பார்வைக் குறைபாடு க்கு வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையும் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும். சில கட்டுரைகள் 26000 பைட்டுக்களுக்கு மேல் விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பினும் வேறு காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவற்றை வேறொருவர் விரிவாக்க முடியாதுதானே? எனவே அவை நீக்கப்படுவது அவசியமில்லை என நினைக்கிறேன். என்ன நினைக்கிறீர்கள்? --கலை (பேச்சு) 21:35, 11 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

லீ லோயிடன் தெரிவித்துவிட்டேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:05, 14 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பயனர் நிலை - புள்ளியிடும் முறை[தொகு]

இங்குள்ள புள்ளியிடல் முறையில் ஒரு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டு அது ஒரு நடுவரால் நிராகரிக்கப்பட்ட பின்னர் (புள்ளி - 0) அது செம்மைப்படுத்தப்பட்டு வேறு நடுவர் ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் (புள்ளி - 1), கட்டுரைக்கான புள்ளி 0.5 என வருகிறது. எனவே இப்பட்டியலில் உள்ள புள்ளிகள் இறுதியான புள்ளிகள் அல்ல என்பதைப் பயனர்கள் புரிந்துகொள்ள வேண்டும். போட்டி நிறைவடைய இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இப்பட்டியலை வைத்துப் போட்டியாளர்கள் தங்கள் நிலையை உத்தேசித்தால் பின்னர் சிக்கல்கள் எழக்கூடும். இதனால், இது குறித்துத் திட்டப்பக்கத்தில் குறிப்பிடலாம். அல்லது நடப்புப் பயனர் நிலை என 5 நாட்களுக்கொருமுறை இற்றை செய்து முதல் 10-15 பயனர்களை வரிசைப்படுத்தலாம். இதன்மூலம் போட்டி நிறைவடைந்த பின் ஏற்படக்கூடிய தவறான புரிதல்களைத் தவிர்க்கலாம். ஸ்ரீஹீரன், கலை, தினேஷ்குமார் - கவனிக்கவும். --சிவகோசரன் (பேச்சு) 17:04, 17 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

சிவகோசரன், சரி, இரண்டாவது தீர்வை விரும்புகின்றேன். ஒரு பக்கத்தில் ஒரு பட்டியலினைப் போட்டி ஒவ்வொரு நாளும் Update செய்யலாம். அதற்கு பயனர் நிலவரப் பக்கத்தையே பயன்படுத்தலாம் என எண்ணுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:10, 18 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
@Shriheeran, Sivakosaran, and Dineshkumar Ponnusamy: நடுவர்களின் முடிவுகளில் வேறுபாடுகள் உள்ள கட்டுரைகளுக்கு ஒரு பட்டியல் தயார் செய்துள்ளேன். அவற்றை நடுவர்கள் மீள்பார்வை செய்தால் நல்லது. நான் ஒரு மீள்பார்வை செய்து, முடிவுகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். ஏனையோரும் அவ்வாறு செய்தால் நன்று. முக்கியமாக அவ்வாறு வேறுபாடுள்ள கட்டுரைகளில், குறிப்பிட்ட போட்டியாளர் திருத்தங்களை மேற்கொண்டிருந்தாலோ, அல்லது கட்டுரை ஏற்கப்படாததற்கான காரணம் நிவர்த்திசெய்யப்பட்டு இருந்தாலோ, முடிவினை மாற்றியமைக்கலாம். கீழே அவ்வாறான கட்டுரைகளைப் பட்டியலிடுகிறேன். பாருங்கள்.
மேலும் பயனர் நிலையில் புள்ளிகள் எனக் குறிப்பிட்டுள்ளதால், அதனை மாற்றியுள்ளேன். நடுவர்கள் மீள்பார்வை செய்து, முடிவுகள் மாற்றப்பட்டதும், பயனர்நிலையில் மாற்றத்தைச் செய்யலாம். நன்றி. --கலை (பேச்சு) 23:59, 21 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

@கலை: ஒளிப்படவியல், அங்குல் எழுத்துமுறை, பீட்டில்ஸ், சார்லமேன், ராபியேல் சான்சியோ, படிமுறைத் தீர்வு, மையச் செயற்பகுதி, பீரங்கி வண்டி, மக்கள் ஊடகம், வாள், எல் நீனோ-தெற்கத்திய அலைவு கட்டுரைகளில் தேவையான மாற்றங்களை செய்திருந்ததால் ஏற்றுக்கொண்டேன். பழக்க அடிமைத்தனம் கட்டுரையில் என்னுடைய மதிப்பீட்டை மாற்றிவிட்டேன். தொலைபேசி கட்டுரையில் போதுமான உள்ளடக்கம் இல்லாததால் ஏற்கவில்லை. தேவயற்ற இணைப்புகளை நீக்கியுள்ளேன். வெடிமருந்து கட்டுரையை திருத்தி ஏற்றுக்கொண்டேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:32, 23 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

நன்றி தினேஷ்! எல் நீனோ-தெற்கத்திய அலைவு, தொலைபேசி கட்டுரைகள் போதிய உள்ளடக்கம் இல்லை என்பதை இப்போதுதான் அவதானித்தேன். எனவே எனது முடிவை மாற்றிவிட்டேன். நீங்கள் தவறுதலாக மேலே எல் நீனோ-தெற்கத்திய அலைவு கட்டுரையையும் சேர்த்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். ஆனால் நீங்களும் நடுவர் பக்கத்தில் அந்தக் கட்டுரையை ஏற்கவில்லை. எனவே சரியாகவே உள்ளது.--கலை (பேச்சு) 21:18, 23 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

போட்டி முடிவுகள்[தொகு]

ஸ்ரீஹீரன், கலை, தினேஷ்குமார் அனைவருக்கும் வணக்கம். இப்போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் பங்கேற்றவர்களுக்கு முடிவுகளைத் தாமதிக்காது அறிவிக்க வேண்டியது நடுவர்களாகிய எமது கடமையாகும். பயனர் ஹிபாயத்துல்லா, மணி.கணேசன் போட்டி ஆரம்பிக்க முன்னர் 50 தொகுப்புக்கள் செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனை யாராவது உறுதி செய்ய அல்லது மறுக்க முடியுமா. உறுதிசெய்யப்படின் போட்டி விதிகளின் படி அவர் பரிசு பெறத் தகுதியற்றவராகிறார். எனினும் அவர் ஒரு குறுங்காலப் பயனர் என்ற வகையில் இதனை நாம் ஆரம்பத்திலேயே அவருக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். இது சற்றுச் சிக்கலான நிலை. முதல் 11 இடங்களில் உள்ள வேறு எவரேனும் இவ்வாறான பிரச்சனையைக் கொண்டிருக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும். தங்களின் கருத்தை இங்கு இட்டு, நவம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் இறுதி முடிவுகளை அறிவிக்க எதிர்பார்க்கிறேன். மேல் விக்கியில் எமது நிலை நவம்பர் 5 இல் இற்றை செய்யப்படும். அதன் பின்னர் புள்ளிவிபரங்களை வெளியிடலாம். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 13:51, 2 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

சிவகோசரன், இது தொடர்பில் யானும் சிந்தித்தேன். போட்டியின் விதிமுறை மீறல் ஆயினும் அவர் பங்களித்த கட்டுரைகள், அவரின் பங்களிப்பு என்பவற்றின் தரம் பற்றி ஆராய்ந்து பார்க்கவேண்டும். அவ்வாறு நல்ல விதத்தில் இருக்கும் பட்டசம் விதிமுறைகளை அவர்களுக்காகத் தளர்த்திக்கொள்ளலாம் என எண்ணுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:19, 2 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஏற்கனவே போட்டியாளர்களிடம் சரியாக விளக்காத காரணத்தால், அவர்களையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளலாம் என்பது எனது தனிக் கருத்தாகும். ஆயினும், அனைவரும் எடுக்கும் முடிவுக்கு நானும் கட்டுப்படுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:31, 2 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]
எனக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகள் இருப்பதனால், அவர்களையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளலாம் என்றே தோன்றுகின்றது. அவ்வாறு இருக்குமாயின், ஆரம்பத்திலேயே நாம் அறியத் தந்திருக்க வேண்டும்தானே. --கலை (பேச்சு) 20:51, 2 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

முடிவு:-அவர்களுக்கு நாம் முன்னரேயே அறியத்தந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது நம் தவறு. ஆகையால் அவர்களையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளலாம். நடுவர்களில் பெரும்பான்மையோரின் கருத்துக்கு அமைய ஜனநாயக ரீதியாக அவர்கள் பொட்டியில் சேர்த்துக்கொள்ளபடுகிறார்கள் என்பதை அறிவிக்கிறேன். இதில் ஒருங்கிணைப்புக்குழுவினரிடையே ஆட்சேபனை இருபின் முடிவுகள் மாறப்படலாம். அவர்களையும் போட்டியில் சேர்த்துக்கொள்வோம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:04, 3 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

அனைவரதும் கருத்துகளுக்கு விருப்பம். நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 06:10, 3 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஸ்ரீஹீரன், கலை, தினேஷ்குமார்,சிவகோசரன் அனைவருக்கும் வணக்கம். ஒரு வேண்டுகோள்! - தொடர்ப் போட்டி முடிவுகளை எப்போது வெளியிடுவீர்கள்? முடிவுகளை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன். மேலும் ஒரு சிறு யோசனை. நாம் அனைவரும் இங்கு தமிழால் இணைந்திருக்கிறோம் ஆகவே போட்டிப் பரிசுத்தொகை நமது பங்களிப்பாக நாம் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்குவதற்க்கான் நன்கொடையாக கொடுக்களாமே? நன்றி! --உமாசங்கர் (பேச்சு) 07:31, 29 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

போட்டிக் கட்டுரைகள் - முக்கிய கட்டுரைகள் பட்டியலில்[தொகு]

போட்டியில் சமர்ப்பிக்கப்பட்டு, போட்டி விதிகளின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளில் சில 10000 ஈடிட்ட வரியுருக்களை அடையவில்லை. 10000 ஈடிட்ட வரிகளுக்குக் குறைவான கட்டுரைகளை மட்டும் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கிறேன் (10000 ஈடிட்ட வரியுருக்களை விட சில எண்களே கூடியிருந்தாலும், அவற்றைக் குறித்து வைக்காமையினால், அட்டவணையில் சேர்க்கவில்லை). நாம் ஏற்கனவே இங்கு உரையாடியபடி கட்டுரையானது 10000 வரியுருக்களைவிடக் குறைவாக இருப்பின், அவை குறுங்கட்டுரைகள் பட்டியலிலேயே சேர்க்கப்படும் என்பதனால், இந்தக் கட்டுரைகளை சிறிது விரிவாக்கம் செய்து, அவற்றையும் முன்னேற்றுவது நல்லது.

வரியுருக்களின் அளவைச் சரிபார்க்க, பின்வரும் படிமுறையைக் கையாளலாம். வரியுருக்களின் அளவைக் கூட்டி, கட்டுரையின் தரத்தை உயர்த்தலாம்.

படிமுறை
   
 1. உங்கள் கட்டுரையின் ஈடிட்ட வரியுருக்களின் அளவு 10000 ஐத் தாண்டினால், உங்கள் கட்டுரை விக்கியின் முக்கிய கட்டுரைகளில் ஒன்றாகும் என மேல்விக்கியில் கூறப்படுகிறது.
 2. ஈடிட்ட வரியுருக்களின் அளவு என்பது கட்டுரையில் உள்ள மொத்த எழுத்துகளின் எண்ணிக்கையை வைத்துப் பெறப்பட்ட அளவாகும்.
 3. இதனை சரிபார்க்க, இப்பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 4. அங்கு பின்வரும் வரியை இடுங்கள்.
 5. importScript('பயனர்:Drsrisenthil/Gadget-edittools-size.js');
 6. அதன் பின்னர் சேமியுங்கள்.
 7. பின்னர், நீங்கள் விரிவாக்கிய கட்டுரையின் "மூலத்தைத் தொகு" எனும் பக்கத்திற்கு செல்லுங்கள்.
 8. இப்போது கட்டுரை ஒன்றின் தொகுத்தற்பெட்டியின் மேலே பாருங்கள்.
 9. அங்கே "ஈடிட்ட வரியுருக்களின் அளவு: xxxxx.x" என்பதைக் காணலாம்.
 10. இதன் அளவு 10000 க்கும் அதிகமாக இருந்தால் அக்கட்டுரை விக்கியின் முக்கிய கட்டுரைகளில் ஒன்றாகக் கணக்கில் எடுக்கப்படும்.
 11. எனவே ஏற்படக்கூடிய சிறிய விலகலைக் கருத்தில் கொண்டு, உங்கள் கட்டுரையின் ஈடிட்ட வரியுருக்களின் அளவு 11,500 க்குமேல் கொண்டு வர முயற்சியுங்கள்

தொடர் இல. கட்டுரை விரிவாக்கிய போட்டியாளர் நிறைவுற்றது
1 சுற்றோட்டத் தொகுதி தியாகு கணேஷ் Y
2 இயந்திரத் துப்பாக்கி உலோ.செந்தமிழ்க்கோதை
3 பெண்ணியம் மணி.கணேசன்
4 இலியட் மணி.கணேசன்
5 பொருள்முதல் வாதம் மணி.கணேசன்
6 வெண்கலக் காலம் மணி.கணேசன்
7 எண்கணிதம் உமாசங்கர்
8 கோபுரம் உமாசங்கர்
9 முடியாட்சி Arulghsr
10 தேசியவாதம் Wiki tamil 100
11 அசை (ஒலியியல்) பயனர்:TNSE P.RAMESH KPM
12 வானொலி பயனர்:TNSE P.RAMESH KPM
13 ஒலியன் பயனர்:TNSE P.RAMESH KPM
14 பரப்புரை பயனர்:TNSE P.RAMESH KPM
16 பாக்கமன் பயனர்:Cyarenkatnikh
17 பயங்கரவாதம் பயனர்:Vickyavw

@Shriheeran:

பரிசளிப்பு[தொகு]

16 ஆவது தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு விழா நிகழ்வில் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. அதனடிப்படையில் பயனர்கள் தியாகு கணேஷ், கி.மூர்த்தி, உலோ.செந்தமிழ்க்கோதை, மணி.கணேசன், அருளரசன், அ. பஷீர் அகமது, மகாலிங்கம், ஞா.ஸ்ரீதர் ஆகியோருக்குப் பரிசுத் தொகை அமேசான் பரிசுச்சீட்டாக ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டது, இன்று பாராட்டுச் சான்றிதழையும் தபாலில் அனுப்பியுள்ளேன். பயனர் Umashankar81 பரிசினை விட்டுக்கொடுத்துள்ளார். பலமுறை பேச்சுப்பக்கத்தில் கோரியும் பயனர்கள் @Wiki tamil 100 and Saranbiotech20: ஆகியோர் தொடர்பு முகவரி கிடைக்காததால் பரிசு + சான்றிதழ் அனுப்ப இயலவில்லை. தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அனுப்பி வைக்கப்படும். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள், ஒருங்கிணைத்த மற்ற பயனர்களுக்கும் பரப்புரை செய்த விக்கிக்கு வெளியே உள்ள நண்பர்களுக்கும் நன்றி.-நீச்சல்காரன் (பேச்சு) 20:13, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

பயனர் @Saranbiotech20: தொடர்பு கொண்டதையடுத்து, அவருக்கான பரிசும் சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.-நீச்சல்காரன் (பேச்சு) 10:04, 28 சனவரி 2021 (UTC)[பதிலளி]

கிடைக்கப்பெற்றது, சரவணன் பெரியசாமி 11:49, 28 சனவரி 2021 (UTC)நன்றி சரவணன் பெ(பயனர்:saranbiotech20)

கிடைக்கவில்லை @Neechalkaran: --கிஷோர் (பேச்சு) 15:06, 13 மார்ச் 2021 (UTC)

பயனர் @J.R.Kishor: தொடர்பு கொண்டதையடுத்து, அவருக்கான பரிசும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. -நீச்சல்காரன் (பேச்சு) 18:18, 14 மார்ச் 2021 (UTC)