பயனர்:Kalaiarasy

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பயனர்:கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

விக்கியில் தொடர்பங்களிப்பைச் செய்ய எண்ணினாலும், பணிச்சுமை காரணமாக சில காலமாக அதனைச் செய்ய முடியாத நிலையே உள்ளது. இந்நிலை இன்னும் சில மாதங்களாவது நீடிக்கும். பணிச்சுமை குறைந்ததும், பங்களிக்கத் தொடங்குவேன். --கலை (பேச்சு) 05:32, 3 செப்டம்பர் 2019 (UTC)

பயனர்:Kalaiarasy
   
பயனர் பேச்சு:Kalaiarasy
   
Special:Emailuser/Kalaiarasy
   
பயனர்:Kalaiarasy/தொடங்கிய கட்டுரைகள்
   
பயனர்:Kalaiarasy/படிமம்
   
பயனர்:Kalaiarasy/பதக்கம்
   
பயனர்:Kalaiarasy/திட்டம்
   
பயனர்:Kalaiarasy/நூல்கள்/
   
பயனர்:Kalaiarasy/மணல்தொட்டி
   
முகப்பு
   
பேச்சு
   
மின்னஞ்சல்
   
கட்டுரைகள்
   
படிமம்
   
பதக்கம்
   
திட்டம்
   
சேமித்த நூல்கள்
   
மணல்தொட்டி
   


Nohat-logo-X-ta new.png தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்
17 ஆண்டுகள், மற்றும் 2 மாதங்கள் ஆகின்றன.
Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 12 ஆண்டுகள், 6 மாதங்கள்,  13 நாட்கள் ஆகின்றன.


விக்கி பங்களிப்புகள்[தொகு]


ஆர்வமுள்ள விக்கி இணைப்புக்கள்[தொகு]


எனது வலைப்பதிவுகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்களுடனான சந்திப்பு[தொகு]

கடந்த மாதம் (மார்ச், 2018) யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள தமிழ் விக்கிப்பீடியர்களைச் சந்திக்க விரும்பி அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர்களும் சம்மதம் தெரிவித்து, சந்திப்பை ஒழுங்கு செய்தார்கள். இந்தச் சந்திப்பு முறைசார் திட்டங்கள் எதுவுமில்லாமல், ஒரு சிறு சந்திப்பாக மட்டும் அமைந்தது. தமிழ் விக்கிப்பீடியாவின் தந்தை மயூரநாதனையும், சிவகோசரனையும், மற்றும் குட்டி Face-smile.svg விக்கிப்பீடியர்களான ஆதவன், மாதவன், ஸ்ரீஹீரன் ஆகியோரைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஸ்ரீகர்சனுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வகுப்புக்கள் இருந்ததனால், அவரைச் சந்திக்க முடியவில்லை. நமது சந்திப்பு முடிந்த பின்னர் ஆதவன், தனது வீடு அருகிலேயே இருந்ததனால், அனைவரையும் அன்புடன் அவரது இல்லத்திற்கு அழைத்தார். அவரது குடும்பத்தினரையும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியே. @Mayooranathan, Sivakosaran, Aathavan jaffna, Maathavan, மற்றும் Shriheeran: (ஸ்ரீஹீரனை அழைத்து வந்த அவரது அப்பாவும், ஆதவன் மற்றும் மாதவனுடைய அப்பாவும் படத்தில் இருக்கிறார்கள்.)

மலாவியில் ஒராண்டு வாழ்க்கை[தொகு]

நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கும், மலாவியில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குமிடையில் இருக்கும் ஒரு திட்டத்தில் ஓராண்டுக்கு அங்கே போய் வேலை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. குடும்பத்தினரையும் அழைத்துப் போகலாம். எனவே மலாவிப் பயணத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. ஆகஸ்ட்டில் அங்கே போகப் போகின்றோம். சில காலமாக வேலையில் சில பணிகளைச் செய்து முடிக்க வேண்டியிருந்ததால், விக்கிப் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. அடுத்த இரு மாதங்களுக்கு இலங்கைப் பயணம், அதன் பின்னர் மலாவிப் பயணம் என ஓடப் போகின்றது. மலாவி போய் ஓரளவு சூழலுக்குப் பழகிய பின்னர், விக்கிப் பங்களிப்பைக் கூட்டலாம் என நினைக்கின்றேன். இணையவசதிதான் எப்படி இருக்குமெனத் தெரியவில்லை. பார்க்கலாம். ஆப்பிரிக்காவில் இருந்து தமிழ் விக்கிக்கு பங்களிக்கப் போகும் முதற் பயனர் நான்தானோ? அனேகமாக எனது வலைப் பதிவில் மலாவி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன் என நினைக்கின்றேன். :) --கலை (பேச்சு) 21:41, 8 சூலை 2015 (UTC)

  • மகிழ்ச்சி.பொதுவகத்தில் குறைந்த நேரத்தில் சிறக்கப் பங்களிக்கலாம். ஒரு கோப்புரைக்குள் படங்களை இட்டு, உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல்லை இட்டால் அது தானாகவே பதிவேறி விடும். இணைய இணைப்பு சரியாக இருப்பின் கூறவும். ஒரு திரைநிகழ்பட வழிகாட்டியை செய்து அனுப்புகிறேன். அல்லது அவ்வப்போது படங்களை, ஒரு கோப்புரைக்குள் கோர்த்து வாருங்கள். வாய்ப்பு கிடைக்கும் போது, ஒட்டுமொத்தமாக நீங்கள் பதிவேற்றிவிடலாம். பயணத்தின் போது, நீங்கள் கண்டு மிகழ்ந்ததை, யாவரும் அடைய இதுவே வழி. வாய்ப்புவரின் தொடர்வோம். வணக்கம்]]-- தகவலுழவன் (உரை) 02:36, 9 சூலை 2015 (UTC)
நிச்சயமாகப் படங்களைப் பதிவேற்றுகின்றேன். இணைய வசதிதான் எப்படி இருக்குமென்பது தெரியவில்லை.--கலை (பேச்சு) 20:31, 10 சூலை 2015 (UTC)
தங்கள் மலாவி பணிவாய்ப்பு சிறப்பாக அமைய வாழ்த்துகள் ! சொந்த ஊர்ப்பயணமும் இனிதாக அமைந்திட வாழ்த்துகள் !! --மணியன் (பேச்சு) 05:34, 11 சூலை 2015 (UTC)
நன்றி மணியன். சொந்த ஊர்ப்பயணம் ஆரம்பித்து விட்டது :). ஊரில் விக்கிப்பீடியர்களை சந்திக்க ஆர்வமுண்டு. குறிப்பாக குட்டி விக்கிப்பீடியர்களைச் சந்திக்க விருப்பம் உண்டு. ஆனால் அவர்களுக்கு இது பரீட்சை நேரமானதால் சந்திப்பை ஏற்பாடு செய்வது கடினம் என நினைக்கிறேன். --கலை (பேச்சு) 09:52, 11 சூலை 2015 (UTC)

வணக்கம் த.உழவன்! "பொதுவகத்தில் குறைந்த நேரத்தில் சிறக்கப் பங்களிக்கலாம். ஒரு கோப்புரைக்குள் இட்டு, உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல்லை இட்டால் அது தானாகவே பதிவேறி விடும். இணைய இணைப்பு சரியாக இருப்பின் கூறவும். ஒரு திரைநிகழ்பட வழிகாட்டியை செய்து அனுப்புகிறேன்." என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை அனுப்பி வைத்தால், ஆப்பிரிக்காவில் எடுத்த படங்களைப் பதிவேற்றம் செய்ய உதவியாக இருக்கும். நன்றி. --கலை (பேச்சு) 19:00, 4 அக்டோபர் 2016 (UTC)

நீங்கள் எந்த இயக்குதளத்தை பயன்படுத்துகிறீர்கள்? உபுண்டு போன்ற இயக்குதளங்களில் இயக்க, மிக எளிமையான நிரல் உள்ளது. ஆன்ட்ராய்டு அலைப்பேசிக்கும், வின்டோசு இயக்குதளத்திற்கும் எளிமையான நடைமுறைகள் பொதுவகத்தில் உள்ளன. உங்களின் இணைய வேகத்தைப் பொறுத்து தேர்ந்தெடுக்கலாம். முதலில் இதுபோல ஒரு பகுப்பினை, உங்கள் பெயரில் பொதுவகத்தில் உருவாக்கவும். பிறகு நேரம் இருக்கும் போது, கோப்புக்கு ஏற்றவாறு பகுப்புகளை சேர்க்கலாம்.--உழவன் (உரை) 01:21, 5 அக்டோபர் 2016 (UTC)
நன்றி த.உழவன்! விண்டோசு இயங்குதளத்தையே பயன்படுத்துவேன். தற்போது நோர்வே திரும்பிவிட்டதால், இணைய இணைப்பு மிகவும் நன்றாகவே உள்ளது :). இருக்கும் படங்கள் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்த பின்னர் பதிவேற்றம் செய்ய முயல்கின்றேன். நன்றி.--கலை (பேச்சு) 22:14, 5 அக்டோபர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kalaiarasy&oldid=2797934" இருந்து மீள்விக்கப்பட்டது