உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரொறன்ரோ, மார்ச் 2011

[தொகு]

பேர்கன், செப்டம்பர் 2010

[தொகு]

தமிழ் - தாய்மொழி மாநாடு 2010 - பேர்கன் இல் நோர்வேயில் வேற்று மொழியாகிய தமிழை கற்பிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய வளங்களில் ஒன்றாக தமிழ் விக்கிப்பீடியாவை பயன்படுத்துவதற்காக, தமிழ் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகமும் செய்யப்பட்டது.

Gdańsk, போலந்து: சூன் 2010

[தொகு]

பேர்கன், நோர்வே: மார்ச் 27, 2010: த.வி அறிமுகம்

[தொகு]

நேற்று 27.03.10 அன்று நோர்வேயில் பேர்கன் நகரிலுள்ள அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தில் ஆசிரியர்கள்/ பெற்றோர்களுக்கு தமிழ்விக்கிப்பீடியாபற்றி ஒரு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நோர்வே அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தின் பேர்கன் வளாகப் பொறுப்பாளர் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார். 25 பேர் இந்த அறிமுகக் கூட்டத்தில் ஆர்வத்துடன் வந்து பங்கெடுத்தனர். பலருக்கும் அப்படி த.வி ஒன்று இருப்பதே தெரியாமல் இருந்தாலும், அதைத் தெரிந்து கொண்டதும், தமிழில் இப்படியான முயற்சியை எண்ணி மகிழ்ந்ததுடன், தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க தமது விருப்பத்தையும் தெரிவித்தனர். தமிழ் விக்கியில் பங்களிப்புபற்றி ஆர்வத்துடன் கேட்டு அறிந்து கொண்டனர். முழுமையாக செய்முறையை நேற்று செய்து காட்ட முடியாமல் போனமையால், பிறிதொரு நாளில் அதை செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. அடுத்த கிழமை விடுமுறையானதால், அதைத் தொடர்ந்து வரும் ஒரு சனிக்கிழமையில் மீண்டும் அங்கே அவர்களுக்கு த.வி. யில் பங்களிக்கும் முறைபற்றி விளக்கிச் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

அன்னைபூபதி தமிழ் கலைக்கூடத்தின் பேர்கன் வளாகப் பொறுப்பாளர் செப்டம்பர் மாதத்தில் ஓரிரு நாட்கள் நோர்வேயின் பல பகுதிகளிலுமிருந்து இங்கே பேர்கனில் பலரும் கூடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும், அப்போதும் நாம் இதுபோன்றதொரு அறிமுகம் செய்ய முடியும் என்றும் கூறினார். --கலை 23:09, 28 மார்ச் 2010 (UTC)

மிகவும் மகிழ்ச்சியான செய்தி கலை! பாராட்டுகள்! தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி அறிமுகம் செய்ய பவர் பயிண்ட் (திரைக் குறிப்புகள்) வேண்டும் என்றால் நற்கீரனோ, ரவியோ தந்து உதவ முடியும். இவை பரத்தீடு (presentation) செய்ய உதவும். அடுத்த சனிக்கிழமைக்குப் பிறகு உங்கள் செய்திகளை இங்கு பதிவு செய்யுங்கள். நன்றி. --செல்வா 00:58, 29 மார்ச் 2010 (UTC)


நல்ல முயற்சி... தொடரட்டும் உங்கள் பணி.

-- மகிழ்நன் 03:03, 29 மார்ச் 2010 (UTC)

பாராட்டுக்களுக்கு நன்றி செல்வா, மகிழ்நன்.

செல்வா! நக்கீரன் ஏற்கனவே திரைக் குறிப்புக்கள் அனுப்பியிருந்தார். அதில் மேலும் சில மாற்றங்கள் செய்து, இற்றைப்படுத்திய பின்னர், Power Point Presentation கொண்டுதான் த.வி. அறிமுகத்தை அங்கே செய்திருந்தேன். அங்கே எடுக்கப்பட்ட படத்தை முடிந்தால் பின்னர் இங்கே இணைக்கிறேன். த.வி பற்றி, அதன் கொள்கைகள், அங்கே மற்றையோருக்கு அறிமுகம் செய்ய வேண்டிய, அங்கே பங்களிக்க வேண்டிய தேவை, அவசியம் பற்றி எடுத்துச் சொன்னேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தல் எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம்வரை அந்தக் கூட்டம் நீடித்தது. தமிழ் அகரமுதலி பற்றியும் ஆர்வமாகக் கேட்டு அறிந்தனர். அங்கே எப்படி சொற்களைத் தேடுவது என்று சில சொற்களைத் தேடியும் பார்த்தோம். மேலும் விக்கிமேற்கோள்களையும் எடுத்துப் பார்த்தோம்.

அவர்களுக்கு நேரடியாக ஒரு கட்டுரையை எப்படி ஆரம்பித்து எழுதுவது என்பதுபற்றியும் சொல்லிக் கொடுப்பதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். அதற்கு நேரம் போதாமல் இருந்ததால், அதை இன்னொருமுறை செய்வதாக முடிவெடுத்தோம். அதுபற்றி பின்னர் இங்கே அறியத் தருகின்றேன். நன்றி. --கலை 09:33, 29 மார்ச் 2010 (UTC)

நல்ல முயற்சி, கலை. புலம்பெயர் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் விக்கியை அறிமுகப்படுத்துவது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று பலரையும் ஒருங்கே சென்றடைவதற்குச் சிறந்த வழி. நோர்வே, அண்டை நாடுகள் முழுமைக்குமான தமிழர் அறிவுக் கூடல்களில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தாலும் நன்று--ரவி 13:51, 29 மார்ச் 2010 (UTC)

கலை, தமிழ் விக்கியின் பரப்புரை முயற்சிகளில் புதிய முனை ஒன்றைத் திறந்திருக்கிறீர்கள். உங்கள் முயற்சியைத் தொடருங்கள். எனது நல்வாழ்த்துக்கள். மயூரநாதன் 15:16, 29 மார்ச் 2010 (UTC)

வாழ்த்துக்களுக்கு நன்றி ரவி, மயூரநாதன். மாணவர்களுக்கும் அறிமுகம் செய்வதுபற்றி அன்றே யோசித்தோம். ஆனாலும், முதலில் ஆசிரியர்கள்/ பெற்றோர்களுக்கு இதனை செய்து பின்னர், நேரத்தைப் பொறுத்து மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யலாம் என்று எண்ணினோம்.--கலை 23:14, 29 மார்ச் 2010 (UTC)
அப்படியே விக்கிசெய்திகளையும் அறிமுகப்படுத்தி விடுங்கள். உள்ளூரில் செய்தி எழுத ஆர்வமாக இருப்பவர்களை அறிமுகப்படுத்துங்கள்.--Kanags \உரையாடு 01:41, 30 மார்ச் 2010 (UTC)
கலைக்கு மிக்க நன்றிகள். பல்வேறு பழுக்களுக்குள் மத்தியிலும் இவர் இதை செய்துள்ளார். ஒரு சில ஒளிப்படங்களை இணைத்தால் சிறப்பாக இருக்கும். --Natkeeran 01:40, 30 மார்ச் 2010 (UTC)
பாராட்டுகள் கலை. இந்நிகழ்வைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை வெளியுறவு விக்கியில் பதிந்து வைக்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 07:15, 30 மார்ச் 2010 (UTC)
Kanags, Natkeeran, சுந்தர் நன்றிகள். Kanags! அன்று விக்கிசெய்தி பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் விபரமாகப் பேசவில்லை. அடுத்த கூட்டத்தில், எப்படி எழுதுவது என்று சொல்லும்போது செய்திகளையும் பார்க்கிறோம். சுந்தர்! விரைவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பக்கத்தில், இதுபற்றிய சிறு குறிப்பை எழுதுகின்றேன். ஆனால் எங்கே சிறுகுறிப்பை இடுவது? நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதே முதல் பக்கத்திலா, அல்லது Event எனக் குறிப்பிட்டிருக்கும் பக்கத்திலா? என்ன தலைப்பில் கொடுப்பது என அறியத்தாருங்கள். Natkeeran! உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். நோர்வேயில் த.வி. அறிமுகம் செய்யும்படி என்னைத் தூண்டினீர்கள் :) கலை 11:08, 30 மார்ச் 2010 (UTC)
ஒளிப்படங்களை இங்கே மேலே இணைத்திருக்கிறேன்.--கலை 13:40, 30 மார்ச் 2010 (UTC)
மிக்க நன்றி. இதெல்லாம் அருமையான வரலாற்றுப் பதிவுகள் கலை! வந்து பங்குகொண்ட தமிழார்வலர்களையும் போற்றுகின்றேன். --செல்வா 15:16, 30 மார்ச் 2010 (UTC)

நோர்த் யோர்க், கனடா: மார்ச் 5, 2010 - யோர்க் பல்கலை

[தொகு]

கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 5, 2010) ரொறன்ரோ நேர்த்யோர்க்கில் அமைந்துள்ள யோர்க் பல்கலைக்கழக தமிழியல் மாணவர்களுக்கு தமிழ் கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, நூலகம் பற்றி அறிமுகப்படுத்துவதில் நானும், செல்வாவும் கலந்து கொண்டோம். இந்த வாய்ப்பை ஆசிரியை பார்வதி கந்தசாமி வழங்கியிருந்தார். இவரை கனடா தமிழ் சொற்கோவைக் குழுவின் ஊடாக அறிமுகம் ஆகியவர். 15 - 20 வரையான தமிழில் பேச, வாசிக்க, எழுத வல்ல இந்த மாணவர்கள் எமது அறிமுகத்தை ஆர்வத்துடன் கேட்டனர். சில கேள்விகளையும் முன்வைத்தனர். சுமார் இரண்டரை மணிநேரம் நாம் விரிவான ஒரு விளக்கத்தை தரக் கூடியதாக இருந்தது. நெடும்பயணம் செய்து வந்திருந்த செல்வாவுக்கு நன்றிகள். எமது நிகழ்த்தல் தயாரிப்பில் மு. இளங்கோவன் அனுப்பிய பிபிடி பயன்பட்டது, அவருக்கு நன்றிகள். --Natkeeran 02:32, 13 மார்ச் 2010 (UTC)

நல்ல செய்தி நற்கீரன். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பெருந் துணை புரியக்கூடியவை என்பதோடு. வெளிநாடுகளில் உள்ள தமிழ் மாணவர்களைத் தமிழ் முகம் கொடுக்கும் சமகாலப் பிரச்சினைகளுக்கு அறிமுகப் படுத்துவதிலும் பயன்படக்கூடியவை. நீங்களும் செல்வாவும் பெரு முயற்சியெடுத்து உங்கள் நேரத்தையும் செலவுசெய்து இவ்வாறான அரிய பணிகளை ஆற்றிவருவதற்குத் தமிழ் உலகம் நன்றியுடையதாக இருக்கும். மயூரநாதன் 04:37, 13 மார்ச் 2010 (UTC)
நக்கீரன் மிகவும் நல்ல செய்தி. குறிப்பாக வடஅமெரிக்க, ஐரோப்பா மற்றும் சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் பங்கு தவிக்கு இன்றியமையாதது. இங்கு கொலராடோ பல்கலைகழகத்தில் தமிழர் கலாச்சாரம் என்ற பாடம் மானிடவியல் துறையில் ஒரு பேராசிரியரால் வழங்கப்படுகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட அமெரிக்க மாணவர்கள் அதில் கலந்துகொள்கின்றனர். அவ்வகுப்பில் அடிப்படை தமிழ் குறித்தும் வகுப்புகள் நடக்கின்றன :) வரும் சூன் திங்கள் முழுவதும் நான் அட்டோவாவில் இருக்கிறேன், அப்போது அங்கு தவி பற்றி கூட்டம் நடத்த வாய்பிருந்தால் கூறவும், அதை நடத்த நான் மிகவும் விரும்புகிறேன்.--கார்த்திக் 08:09, 13 மார்ச் 2010 (UTC)

நல்ல செய்தி. தமிழர் மிகுந்து இருக்கும் சிங்கை, மலேசியா மற்ற பிற நாடுகளில் இருந்து அங்கேயே பிறந்து வளரும் தற்காலத் தலைமுறையினர் எவரும் த.விக்குப் பங்களிக்காமல் இருப்பது இந்நாடுகளில் தமிழின் எதிர்காலம் குறித்து கவலையளிக்கும் போக்காகவே உள்ளது. --ரவி 11:47, 13 மார்ச் 2010 (UTC)

நல்ல செய்தி. இது போன்ற நிகழ்வுகளை வெளியுறவு விக்கியிலும் பதிந்து வைத்தால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 10:22, 14 மார்ச் 2010 (UTC)

இசுக்கார்பரோ, கனடா: சனவரி 2010 சொற்கோவைக் குழு

[தொகு]

கனடா சொற்கோவைக் குழு கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்குகிறது. இதில் அனுபவம் மிக்க ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பேராசிரியர்கள், துறைசார் வல்லுனர்கள் உள்ளார்கள். இவர்கள் கலைச்சொற்களை தொகுப்பதில், உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, மற்றும் நூலகத் திட்டம் ஆகியவற்றைப் பற்றி அறிமுகம் ஒன்றை நேற்று வழங்கினேன். பலர் மிகுந்த ஈடுபாட்டோடு உசாவினார்கள்.

இவர்கள் விக்சனரித் திட்டத்தை மேலும் சிறப்பாக வளர்க்க உதவக் கூடியவர்கள். இவர்களுடைய மாணவர்களுக்கு நிகழ்த்துதல் செய்வதற்கும் ஒழுங்கு செய்து தருவதாக கூறினார்கள். இவை நல்ல வாய்ப்புக்கள். தமிழின் ஒரு கூரிய முனையான இவர்களைப் போன்றவர்கள் எமக்கு உதவியாக அமைவது சிறப்பு. --Natkeeran 03:23, 6 ஜனவரி 2010 (UTC)

கோவை: நவம்பர் 7, 2009: குமரகுரு கல்லூரி

[தொகு]

நவம்பர் 7, 2009 அன்று கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் கூடிய முதலாம் ஆண்டு MCA மாணவர்கள், வலைப்பதிவர்கள் ஆகியோருக்கு தமிழ் விக்கி உள்ளிட்ட தமிழ் இணைய அறிமுகம் செய்தேன். தமிழ் விக்கியில் எப்படி தொகுப்புகள் செய்யலாம் என்று 20 நிமிட நேரம் விளக்க முடிந்தது. தமிழ் விக்கி தமிழ் வழிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதைத் தமிழ் வழியம் மூலம் பயின்று வந்த மாணவர்கள் உணர்ந்து உள்வாங்கினார்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்கள், பங்கேற்பாளர்களுமே ஆங்கில விக்கி பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால், தமிழ் விக்கி என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கவில்லை. (மிகத் தாமதமான நிகழ்ச்சிக் குறிப்பு. நற்கீரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஒரு குறிப்புக்காக இடுகிறேன்)--ரவி 14:42, 16 ஜனவரி 2010 (UTC)

யேர்மனி - உத்தமம் இணையத் தமிழ் மாநாடு

[தொகு]

ரொறன்ரோ - தமிழ் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு

[தொகு]

சென்னை - தமிழ்ஸ்டுடியோ

[தொகு]

ரொறன்ரோ - தமிழில் தகவல் தொழில்நுட்பம் செயலமர்வு

[தொகு]

பெங்களூர்: சனவரி 16, 2009: விக்கிப்பீடியா சந்திப்பு

[தொகு]
தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் pdf
தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் pdf

இன்று (16 சனவரி 2009) பெங்களூரில் நடந்த விக்கிப்பீடியா நாள் சந்திப்பில், தமிழ் விக்கியை அறிமுகப்படுத்தி தொலைப்பேசி மூலம் ஓர் அறிக்கை அளித்தேன். (படிமம் காண்க). பொங்கல் வார இறுதியை முன்னிட்டு சுந்தர், கார்த்திக் போன்ற வழமையான பெங்களூர் பங்களிப்பாளர்களால் கலந்து கொள்ள இயலாத நிலை. அறிமுக உரைக்குப் பின் கேட்கப்பட்ட கேள்விகள்:

  • தரக் கண்காணிப்பை எப்படிச் செயற்படுத்துகிறீர்கள்?
  • தமிழக அரசு தமிழ் வளர்ச்சி, தமிழ்க் கணிமை வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கிறதே.. ஏன் தமிழ் விக்கிக்கு ஆதரவைப் பெற முடியவில்லை?
  • மதுரைத் திட்டம் போன்ற பிற திட்டங்களுடன் செயல்படும் வாய்ப்பு என்ன? (விக்கி மூலம் போன்ற இடங்களில்)--ரவி 14:22, 16 ஜனவரி 2010 (UTC)

இவற்றையும் பாக்க

[தொகு]