உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:நவம்பர் 13, 2010 பேர்கன் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சனவரி நவம்பர் 13, 2010 அன்று பேர்கன், நோர்வேயில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

பட்டறை பற்றிய விபரங்கள்

[தொகு]

பங்குபற்றியோர்

[தொகு]

வேறு சிலரும் வந்துவிட்டு, சில கூட்டங்கள் காரணமாகப் போய் விட்டார்கள்.

பயிற்சி அளிப்போர்

[தொகு]

நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்

[தொகு]

பயிற்சி

[தொகு]

பேர்கனில் குளிர்கால சூழ்நிலையால் பலரும் சுகவீனம் காரணமாகவும், வேறு சில கூட்டங்கள், நிகழ்வுகள் காரணமாகவும், எதிர்பார்த்தபடி நிகழ்வுக்கு பலர் வரவில்லை. பத்து பேர் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே கடந்த கிழமை நிகழ்ந்த பயிற்சிப் பட்டறையின் பின்னர் தனது பயனர் கணக்கை புதிதாகத் தொடங்கியிருந்த பயனர்:Mrkannan. அவரும் இன்று கலையுடன் இணைந்து பயிற்சிப் பட்டறையில் பயிற்சி அளிக்க உதவினார். ஏனையோரில், ஐந்துபேர் இன்று புதிதாக தமது பயனர் கணக்கை ஆரம்பித்தனர். அவர்களின் பயனர் விபரம் பங்குபற்றியோர் நிரலில் உள்ளது. பயனர் கணக்கை ஆரம்பித்தல், தமிழ் யூனிக்கோட்டில் எழுதுதல், தமிழ் விக்கியில் உலாவுதல், கட்டுரையை ஆரம்பித்து எழுதுதல், திருத்தங்கள் எவ்வாறு செய்தல், கோப்பைப் பதிவேற்றுதல் எவ்வாறு, விக்சனரியில் எவ்வாறு எழுதுதல் என்பன தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் என்ற கட்டுரை எழுதப்பட்டது. அதற்கான அன்னைபூபதி கலைக்கூடச் சின்னத்தின் படமும் தேடி எடுத்து பதிவேற்றப்பட்டது.

நகர்வு

[தொகு]

பங்குபற்றிய அனைவருமே, விக்கிப்பீடியாவுக்கு புதியவர்களாக இருந்தமையினால், ஆரம்பநிலையில் மிகவும் மெதுவாகவே கற்கும்நிலை அமைந்திருந்தது. அத்துடன் இணைய இணைப்பில் ஏற்பட்ட சில குளறுபடிகளும், பயிற்சிப் பட்டறை மெதுவாக நகரக் காரணமாயிற்று. ஆனாலும், தமது பயனர் கணக்கை ஆரம்பித்திருந்த அனைவரும், தமது பங்களிப்பை தொடர்ந்து செய்வதில் ஆர்வம் காட்டினர். அத்துடன் ஜெகதீஸ், சிவகுமாரும் அறிவியல் வகுப்பில் ஆசிரியர்களாக போக வேண்டி இருந்தமையாலும், அதன் பின்னர் நேரமின்மை காரணமாகவும் தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனபோதும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தமது பங்களிப்பை செய்யப் போவதாகச் சொல்லிச் சென்றனர்.

தொடரப்போகும் பங்களிப்பு

[தொகு]

இன்னும் சிலரும் நேரமின்மையைத் தெரிவித்தாலும், தமக்கு இதில் பங்களிப்பதில் உள்ள ஆர்வத்தை தெரிவித்ததுடன், வேறு சில நாட்களில் வந்து பயிற்சியை வழங்க முடியுமா எனக் கேட்டுச் சென்றனர். அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் பொறுப்பாளர் தயாளனும், ஆர்வமுள்ளவர்களுக்கு தொடர்ந்து அங்கே வந்து பயிற்சியையும், தேவையான உதவிகளையும் நல்குவதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களைப் பெறலாம் எனக் கருத்துத் தெரிவித்தார். அதன்படி முடிந்தளவில் தொடர்ந்து சில நாட்கள் அங்கே சென்று இவ்வாறான பயிற்சியை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நல்ல எடுத்துக்காட்டு

[தொகு]

கலை உங்களின் முயற்சிக்கள் எமக்கு நல்ல எடுத்துக்காட்டுக்களாக அமைகின்றன. சிறு மக்கள் தொகை கொண்ட நேர்வேயில், தமிழ் மொழி இத்தனை செழிப்புடன் இருப்பது கண்டு மகிழ்ச்சி. இதன் பிறகே இங்கு உள்ள அறிவகங்களோடு தொடர்புகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகிற்று. சிறு குழுவாக இருப்பது நேரடிப் பயிற்சிக்கு நல்லது. --Natkeeran 17:43, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நோர்வே பேர்கன் நகரில் இருக்கும், அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இணைந்து இப்படியொரு வலைப்பதிவை அமைத்து வருகின்றார்கள் என்று இன்று அறிந்தேன். நோர்வேயிலேயே பிறந்து வளர்ந்து வரும் பிள்ளைகள் இவ்வாறு தமிழில் ஆர்வத்துடன் செய்ற்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது.--கலை 23:34, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

படங்கள்

[தொகு]