சார்லமேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரிய சார்லமேன்
'KAROLVS IMP AVG (Karolus Imperator ஆகஸ்ட்us) என்ற பொறிப்புடன் கூடிய சார்லமேன் காலத்து நாணயம்
புனித உரோமை பேரரசர்
ஆட்சிக்காலம் டிசம்பர் 25, 800 – ஜனவரி 28, 814
முடிசூடல் டிசம்பர் 25, 800
பழைய புனித பேதுரு பேராலயம், உரோமை நகரம்
முன்னையவர் பதவி உறுவாக்கப்பட்டது
பின்னையவர் முதலாம் லூயிஸ்
இலம்பார்டியர்களின் அரசர்
ஆட்சிக்காலம் ஜூலை 10, 774 – ஜனவரி 28, 814
முடிசூடல் ஜூலை 10, 774
Pavia
முன்னையவர் Desiderius
பின்னையவர் முதலாம் லூயிஸ்
King of the Franks
ஆட்சிக்காலம் அக்டோபர் 9, 768 – ஜனவரி 28, 814
முடிசூடல் அக்டோபர் 9, 768
Noyon
முன்னையவர் பேபின்
பின்னையவர் முதலாம் லூயிஸ்
மறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்
{{{posthumous name}}}
மரபு Carolingian
தந்தை பேபின்
தாய் பேராதா
அடக்கம் Aachen Cathedral
சமயம் கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் சார்லஸ் அகஸ்டுஸ்
சார்லமேன்
அரு. சார்லஸ் அகஸ்டுஸின் திருப்பண்டம்
ஏற்கும் சபை/சமயம் கத்தோலிக்க திருச்சபை (செருமனி and பிரான்சு)
அருளாளர் பட்டம் மறைமாநில ஆயரால், பின்னாட்களில் திருத்தந்தை பதினான்காம் பெனடிக்டினால் இது உறுதிசெய்யப்பட்டது.[1]-ஆல் 814, ஆஃகன்
புனிதர் பட்டம் எதிர்-திருத்தந்தை மூன்றாம் பாஸ்கால்[1] (இவர் எதிர்-திருத்தந்தை, ஆதலால் சார்லமேன் புனிதர் என ஏற்கப்படுவதில்லை)-ஆல் 1166
முக்கிய திருத்தலங்கள் Aachen Cathedral
திருவிழா ஜனவரி 28 (ஆஃகன் and Osnabrück)
சித்தரிக்கப்படும் வகை லில்லி மலர்
பாதுகாவல் காதலர்கள், பள்ளி குழந்தைகள், பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றின் மன்னர்கள், சிலுவைப் போர்கள்


சார்லமேன் (Charlemagne - 742 – 28 ஜனவரி 814) பிராங்குகளின் அரசராவார். இவர் கிபி 768 முதல் 814ல் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். இவர் பிராங்கு அரசுகளை, மேற்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா ஆகியவற்றில் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பிராங்கியப் பேரரசு ஆக்கினார். இவரது ஆட்சிக் காலத்தில் இத்தாலியைக் கைப்பற்றிய இவர், கிபி 800 டிசம்பர் 25 ஆம் நாள் பேரரசர் அகஸ்டஸ் என்னும் பெயருடன், திருத்தந்தை மூன்றாம் லியோவினால் முடிசூட்டப்பட்டார். இவர் கான்ஸ்டன்டினோப்பிளில் அமைந்திருந்த பைசன்டைன் பேரரசருக்குப் போட்டியாக விளங்கினார். கத்தோலிக்கத் திருச்சபை ஊடாக கலை, மதம், பண்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட கரோலிங்கிய மறுமலர்ச்சிக்கும் இவரது ஆட்சி காரணமாக அமைந்தது. இவரது வெளிநாட்டுக் கைப்பற்றல்களும், உள்நாட்டில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களும், மேற்கு ஐரோப்பாவிற்கும், மத்திய காலத்துக்கும் ஒரு வரைவிலக்கணத்தைக் கொடுத்தன. பிரான்ஸ், ஜேர்மனி, புனித ரோமப் பேரரசு ஆகியவற்றின் அரசர்கள் பட்டியலில் இவர் முதலாம் சார்ல்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர், குட்டைப் பிப்பின் என அழைக்கப்பட்ட பிராங்குகளின் அரசனுக்கும், லாவோனின் பெட்ராடா என்னும் அவரது மனைவிக்கும் மகனாகப் பிறந்தார். தந்தைக்குப் பின் தனது உடன்பிறந்தானான முதலாம் கார்லோமன்னுடன் கூட்டாக ஆட்சி நடத்தி வந்தார். பின்னர் சார்லமேனுக்கும், கார்லோமனுக்கும் இடையில் போர் ஏற்படுமளவுக்குப் பிணக்கு ஏற்பட்டதாயினும், 771ல் கார்லோமன் இறந்துவிட்டதனால் போர் தவிர்க்கப்பட்டது. சார்லமேன் கத்தோலிக்கத் திருச்சபை குறித்துத் தனது தந்தையின் கொள்கைகளையே கடைப்பிடித்து வந்ததுடன் அதன் காவலனாகவும் இருந்தார். இதற்காக இத்தாலியில் ஆட்சியிலிருந்த லொம்பார்டுகளை ஆட்சியில் இருந்து அகற்றியதுடன், ஸ்பெயினில் இருந்து இவரது ஆட்சிக்குத் தொல்லை கொடுத்துவந்த சரசென்களுடனும் போராடினார். இப் போர்களில் ஒன்றிலேயே இவர் தனது வாழ்நாளின் பெரும் தோல்விகளுள் ஒன்றைச் சந்தித்தார். ரான்செஸ்வயஸ் சண்டை (Battle of Roncesvalles) என அழைக்கப்பட்ட இப் போர் ரோலண்டின் பாடலில் நினைவு கூரப்பட்டுள்ளது. இவர் கிழக்குப் பகுதிகளிலிருந்த மக்களுக்கு, சிறப்பாக சக்சன்களுக்கு எதிராகவும் படையெடுப்புக்களை மேற்கொண்டு, நீண்டகாலப் போருக்குப் பின் அவர்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டுவந்தார். கட்டாயப்படுத்திக் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றியதன் மூலம் அவர்களைத் தனது ஆட்சிக்குள் ஒன்றிணைத்தார்.

இன்று இவர் பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றின் முடியாட்சிகளின் தந்தையாக மட்டுமன்றி, ஐரோப்பாவின் தந்தையாகவும் கருதப்படுகிறார். ரோமர்களுக்குப் பின்னர் இவரது பேரரசே பெரும்பாலான மேற்கு ஐரோப்பியப் பகுதிகளை ஒன்றிணைத்தது. அத்துடன் கரோலிங்கன் மறுமலர்ச்சி மூலம் ஐரோப்பாவுக்கு ஒரு பொது அடையாளம் ஏற்படுவதற்கும் வழி வகுத்தது.

பிறப்பு[தொகு]

சார்லமேனின் பிறந்த தேதி பல்வேறு மூலங்களில் இருந்து கணிக்கப்பட்டவை. இவரின் பிறந்த ஆண்டு கி.பி. 742ஆம் ஆண்டு என கணிக்கப்பட்டது. இவர் ஜனவரி 814ஆம் ஆண்டில் தனக்கு 72 அகவையாகும் போது இறந்தார் என்பதால் இவரின் பிறப்பாண்டு கி.பி. 742ஆம் ஆண்டு என கணிக்கப்பட்டது. ஆனால் இம்முறையின் படி இவர் தன் பெற்றோர்களுக்கு திருமணமான கி.பி. 744ஆம் ஆண்டுக்கு இரண்டு ஆண்டுகள் முன் பிறந்தவாகிறார். அயனாட் என்பவர் இவரின் பிறந்த ஆண்டு கி.பி. 747 எனக் கணித்தார். ஆனால் இம்முறையிலும் சில குழப்பங்கள் உண்டு. மேலும் இலார்சு அபெய் என்பவர் ஏப்ரல் மாதம் இரண்டாம் நாள் இவர் பிறந்ததாக கணித்தார்.[2]

இவர் பிறந்த இடத்திலும் பிறந்த தேதி போலவே குழப்பங்கள் உள்ளன. சிலர் இவர் பெல்ஜியம் நாட்டின் இலெய்கு நகரில் பிறந்தார் எனக் கூறுகின்றனர்.[3] இவர் பிறந்ததாக ஆச்சென், துரென், காட்டிங்கு, முர்லென்பாச்சு போன்ற இடங்களும் கூறப்படுகின்றன.[4]

இறப்பு[தொகு]

கி. பி. 813ஆம் ஆண்டு தன் மகனும் அகுவடெயினின் மன்னனுமான இலூயிசு தி பியோசுக்கு தன் அரண்மனைக்கு வருமாறு சார்லமேன் அழைத்தார். அவனுக்கு மகுடம் சூட்டுவித்து தன் இணை அரசன் என அறிவித்து அகுவடெயினுக்கு அனுப்பி வைத்தார். தன் பொழுதைக் கழிப்பதற்காக வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்தார். சில நாட்களில் நோய்வாய்பட்டு ஜனவரி 21 அன்று படுக்கையில் விழுந்தார்.[5] ஒரு வாரமாக உயிருக்குப் போராடி ஜனாரி 28 அன்று உயிர்நீத்தார். இறந்த நாளன்றே அச்சென் கதெட்ரல் புனித ஆலயத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.[6] இவர் அடக்கம் செய்யப்பட்ட காலத்தால் மறைந்து போனது. இவரின் கல்லறை புனித உரோமப் பேரரசின் மன்னனான மூன்றாம் ஓட்டோவால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இவர் அந்த கல்லறைக்கு மேலேயே தன் ஆசனத்தை அமைத்திருந்தார். கி. பி. 1165ஆம் ஆண்டு புனித உரோமப் பேரரசின் மன்னனான முதலாம் பெட்ரிக்கால் இவரின் சவப்பெட்டி கதெட்ரலின் தரைக்கு அடியில் புதைக்கப்பட்டது.[7] இவரின் இறப்பு இவரைச் சார்ந்தவைகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.[8] சார்லமேனுக்கு பின்னர் அவரது மகனான இலூயிசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவருக்கு பின் வந்த தலைமுறையோடு சார்லமேன் வழிவந்தவர்களின் ஆட்சி சிதறியது. இலூயிசின் மகன்கள் தங்களுக்குள் ஆட்சிப் பகுதிகளை பிரித்துக் கொண்டு சில கட்டுப்பாடுகளையும் விதித்தனர். இவை ஜெர்மனி என்று ஒரு மாகாணம் உருவாகக் காரணமாய் அமைந்தது.[9]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. 1.0 1.1 Butler, Alban (1995). Thurston, Herbert J, S.J.; Atwater, Donald. eds. Butler's Lives of the Saints. Christian Classics. Vol. 1. Allen, Texas: Thomas Moore Publishers. பக். 188–189. ISBN 0-87061-045-7. 
  2. Baldwin, Stewart (2007-2009). "Charlemagne". The Henry Project.
  3. Boulger, Demetrius Charles de Kavanagh (1904). Belgian life in town and country. New York; London: G.P. Putnam's sons. பக். 186–188. 
  4. http://www.route-gottfried-von-bouillon.de/index.php?rid=1307&cid=5&area=content
  5. Einhard, Life, p. 59
  6. Peter Godman (1985), Latin Poetry of the Carolingian Renaissance (Norman: University of Oklahoma Press), 206–211.
  7. Chamberlin, Russell, The Emperor Charlemagne, pp. 222–224
  8. Dutton, PE, Carolingian Civilization: A Reader
  9. von Hellfeld, Matthias. "Die Geburt zweier Staaten – Die Straßburger Eide vom 14. Februar 842" (German). Deutsche Welle. பார்த்த நாள் October 22, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லமேன்&oldid=2221472" இருந்து மீள்விக்கப்பட்டது