ஆஃகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Karte Aachen Stadtbezirke.png
ஆஃகன்நகரின் பரந்த தோற்றம்

ஆஃகன் அல்லது ஆஹன் (Aachen) ஜெர்மனியின் நகரங்களுள் ஒன்று. இது பிரெஞ்சு மொழியில் ஐக்ஸ்-லா-ஷாப்பெல் (Aix-la-Chapelle) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்ஃபாலியா மாநிலத்தில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக இது, சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் நீரூற்று நகரமாக இயங்கிவந்துள்ளது. ஜெர்மனியின் நகரங்களுள் மேற்கு எல்லையின் மிக அருகே அமைந்துள்ள நகரமிது. பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் எல்லைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆர். டபிள்யூ. டி. ஹெச். ஆஃகன் பல்கலைக்கழகம் இந்நகரில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aachen
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஃகன்&oldid=2742069" இருந்து மீள்விக்கப்பட்டது