எல் நீனோ-தெற்கத்திய அலைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Average circulation in the south Pacific Ocean

எல் நீனோ-தெற்கத்திய அலைவு (El Niño-Southern Oscillation) ஒரு இணைப் பெருங்கடல் வளிமண்டலத் தோற்றப்பாடு ஆகும். எல் நினோ, லா நினா எனப்படும் இவை கிழக்குப் பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் இடம்பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றத்தாழ்வுகள். எல் நினோ என்பது எஸ்பானிய மொழியில் சிறுவன் என்னும் பொருள் கொண்டது. இப்பெயர் குழந்தை யேசுவைக் குறிப்பது. இத் தோற்றப்பாடு தென்னமெரிக்காவின் கரையோரப் பகுதிகளில் நத்தார் காலங்களில் ஏற்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. லா நினா என்னும் சொல் சிறுமி என்னும் பொருளுடையது. 1923 ஆம் ஆண்டில் சர். கில்பர்ட் தாமஸ் வாக்கர் என்பவர் இவற்றை முதன் முதலாக விளக்கினார்.

எல் நீனோ-தெற்கத்திய அலைவு, உலகின் பல பகுதிகளிலும் ஏற்படும் வெள்ளம், வறட்சி போன்ற பல இடையூறுகளுடன் தொடர்புள்ளது. இத் தாக்கங்களும், இதன் ஒழுங்கற்ற தன்மையும் இவற்றை எதிர்வு கூறுவது தொடர்பில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டீபன் செபியாக், மார்க் கேன் போன்றோர் இதனைஎதிர்வு கூறுவது தொடர்பில் பெரும் பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.

வரையரை[தொகு]

”எல் நீனோ” என்பது பசிபிக் பெருங்கடலின் கடல்பரப்பு வெப்பநிலையானது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்ககு [ஏழு முதல் 24 மாதங்கள் வரை] ,சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும் நிகழ்வு [அரை டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்]. இந்நிகழ்வு சராசரியாக ஒவ்வொரு ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் எதிர்பார்க்கப்படுகிறது. [2 முதல் 7 ஆண்டுகள் இடைவெளியும் உண்டு]

வெளி இணைப்புகள்[தொகு]