வெடிபொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெடி அல்லது வெடிபொருள் (explosive material) என்பது, வேதியியல் அல்லது வேறு வகையில், ஆற்றல் அடிப்படையில் உறுதியற்ற; அல்லது, பற்றவைக்கும்போது வெப்ப உருவாக்கத்துடனும், அதிக அழுத்த மாற்றங்களுடனும் சடுதியாக விரிவடைகின்ற ஒரு பொருளாகும். மேற்குறித்த செயற்பாடு வெடித்தல் எனப்படுகின்றது. இந்த பொருட்கள் வெடிக்கும்பொழுது அதிக அளவு வெப்பம், ஒலி, ஒளி, அழுத்தம் ஆகியவற்றை வெளியிடுகிறது.

வேதியியல் வெடிபொருட்கள்[தொகு]

வெடிபொருட்கள், தாழ் வெடிபொருட்கள், உயர் வெடிபொருட்கள் என அவற்றின் சிதைவு வீதத்தின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. தாழ் வெடிபொருட்கள் விரைவாக எரியக்கூடியவை. உயர் வெடிபொருட்கள் வெடிக்கக் கூடியவை. இந்த வரைவிலக்கணங்கள் தனித்துவமானவையாக இருப்பினும், விரைவான சிதைவைத் துல்லியமாக அளவிடுவது கடினமானது என்பதால் நடைமுறையில் வெடிபொருட்களை வகைப்பாடு செய்வது இலகுவானதல்ல.

வெடிபொருளொன்று சிதைவடைவதற்கு ஆண்டுக் கணக்கிலோ, நாள் கணக்கிலோ, மணிக் கணக்கிலோ அல்லது ஒரு செக்கனில் ஒரு பகுதி நேரமோ எடுக்கக்கூடும். வேகம் குறைந்த சிதைவு களஞ்சியப்படுத்தலின் போதே நடைபெறுவதுடன், இது வெடிபொருட்களின் உறுதிநிலை தொடர்பிலேயே முக்கியமானது. வெடிபொருட்கள் என்றவகையில் அவற்றின் முக்கியமான சிதைவு வடிவங்கள், சடுதியாக எரிதலும் (deflagration), வெடித்தலும் (Detonation) ஆகும்.

வெடிபொருட்கள் பொதுவாக பெட்ரோலியப் பொருட்களிலும் குறைவான அழுத்த ஆற்றல் கொண்டவை. ஆனால், அவற்றின் உயர்ந்த ஆற்றல் வெளிவிடும் வீதம் காரணமாக வெடிபொருட்கள் உயர்ந்த வெடிப்பு அழுத்தத்தை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. முந்நைத்திரோ தொலுயீன் (TNT)6,940 மீ/செ வெடிப்பு வேகம் கொண்டது. பென்டேன்-வளிக் கலவை 1,680 மீ/செக்கனும், பெட்ரோல் வளியில் எரியும் போதான சுவாலை வேகம் 0.34 மீ.செக்கனுமாக உள்ளன.

வெடிப்பு விசை வெடிபொருளின் மேற்பரப்புக்குச் செங்குத்துத் திசையில் வெளிப்படுகின்றது. மெற்பரப்பு வெட்டப்பட்டு அல்லது ஏதாவது குறிப்பிட்ட வடிவில் அமைக்கப்பட்டால், வெடிக்கும் விசையைக் குறித்த ஒரு இடத்தை நோக்கிக் குவிக்க முடியும். தாழ் வெடிபொருட்களில், சிதைவு சுவாலை முகப்பினால் கடத்தப்படுகின்றது. இது வெடிபொருளூடாக மிகவும் மெதுவாகவே நகர்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிபொருள்&oldid=2253010" இருந்து மீள்விக்கப்பட்டது