உள்ளடக்கத்துக்குச் செல்

செனான் ஆக்சி நான்மபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செனான் ஆக்சி நான்மபுளோரைடு
Ball-and-stick model of xenon oxytetrafluoride
Space-filling model of xenon oxytetrafluoride
இனங்காட்டிகள்
13774-85-1 N
ChemSpider 10326200 Y
InChI
  • InChI=1S/F4OXe/c1-6(2,3,4)5 Y
    Key: ONRYXFFHIXYZMZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/F4OXe/c1-6(2,3,4)5
    Key: ONRYXFFHIXYZMZ-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
  • F[Xe](F)(F)(F)=O
பண்புகள்
XeOF4
வாய்ப்பாட்டு எடை 223.23 g/mol
தோற்றம் நிறமற்ற திரவம்
அடர்த்தி 3.17 g/cm3, liquid
உருகுநிலை −46.2 °C (−51.2 °F; 227.0 K)
நீருடன் வினைபுரியும்
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு not listed
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

செனான் ஆக்சி நான்மபுளோரைடு (Xenon oxytetrafluoride ) என்பது XeOF4 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய [[கனிம வேதியியல்] சேர்மமாகும். மற்ற செனான் ஆக்சைடுகளைப் போலவே செனான் ஆக்சி நான்மபுளோரைடும் அதிகபட்ச வினைத்திறனும் நிலைப்புத்தன்மையும் இல்லாமல் காணப்படுகிறது நீருடன் சேர்ந்த நீராற்பகுப்பு வினையின் போது ஐதரசன் புளோரைடு போன்ற பேரிடர் விளைவிக்கும் அளவுக்கு அபாயமானதும் அரித்துக் கரைக்கும் பண்புடைய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.

இவற்றுடன் சிறிதளவு ஓசோன் மற்றும் புளோரின் போன்றவையும் வினையில் உருவாகின்றன. இவ்வினை மிகவும் ஆபத்தானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். செனான் ஆக்சி நான்மபுளோரை எல்லா சூழ்நிலைகளிலும் தண்ணீர் மற்றும் நீராவி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளாத வகையில் தனித்து வைத்திருக்க வேண்டும். வினைகள் XeOF4 தண்ணீருடன் கீழ்கண்ட படிநிலைகளில் செனான் ஆக்சி நான்மபுளோரைடு வினைபுரிகிறது.

அபாயகரமான வெடிபொருளான XeO3 செனான் மற்றும் ஆக்சிசனாக சிதைவடைகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]