ஆல்சைமர் நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆல்சைமர் நோய்
Classification and external resources
Alzheimer's disease brain comparison.jpg
சாதாரண வயது முதிர்ந்த ஒருவரின் மூளையினதும் (இடபக்கம்), ஆல்சைமர் நோயாளியின் மூளையினதும் (வலப்பக்கம்) ஒப்பீடு. வேறுபாடான இயல்புகள் குறித்துக் காட்டப்பட்டுள்ளன.
ICD-10 G30., F00.
ICD-9 331.0, 290.1
OMIM 104300
DiseasesDB 490
MedlinePlus 000760
eMedicine neuro/13 
MeSH D000544

ஆல்சைமர் நோய் (Alzheimer disease) அறிவாற்றல் இழப்பின் மிகப் பொதுவான வடிவம் ஆகும். திசுக்கள் அழிவினால் உருவாகும், குணப்படுத்த முடியாத இந் நோயை 1906 ஆம் ஆண்டில், செருமானிய மனநோய் மருத்துவரான ஆலோயிசு ஆல்சைமர் (Alois Alzheimer) என்பவர் முதன் முதலில் விளக்கினார். பொதுவாக இது 65 வயதுக்கு மேற்பட்டோரிடமே காணப்படுகிறது. எனினும் மிக அரிதாக இது மிகவும் முன்னதாகவே பீடிக்கக் கூடும். 2006 ஆம் ஆண்டில் உலகம் முழுதும் 26.6 மில்லியன் மக்கள் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டில் இது நான்கு மடங்காகக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இந் நோயால் பீடிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் இது தனித்துவமான முறையில் பாதிக்கின்றது எனினும் சில பொதுவான அறிகுறிகளும் காணப்படுகின்றன. தொடக்கத்தில் கவனிக்கப்படக்கூடிய அறிகுறிகள் முதுமையுடன் தொடர்புபட்டதாகவோ அல்லது, மன அழுத்தம் காரணமாக ஏற்படுவதாகவோ தவறாக எண்ணப்படலாம். தொடக்கத்தில் மிகவும் பொதுவாகக் கவனிக்கக் கூடிய அறிகுறி நினைவாற்றல் இழப்பு ஆகும். இந் நோய் இருப்பதாக ஐயம் எழும்போது இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நடத்தை மதிப்பீடுகளும், அறிதிறன் சோதனைகளும் செய்யப்படுகின்றன.

இந்த நோய் தீவிரமாகும்போது மனக்குழப்பம், எரிச்சலூட்டும் தன்மை, தன் முனைப்பு நடத்தை (aggression), மனநிலை மாற்றங்கள், நீண்டகால நினைவாற்றல் இழப்பு போன்ற அறிகுறிகளும் தோன்றுகின்றன. அத்துடன் புலன் உணர்வுகள் குறைவதால், பாதிக்கப்பட்டவரின் செயல்பாடுகள் குறையவும் தொடங்கும். படிப்படியாக உடற் செயற்பாடுகள் குறைந்து இறுதியில் இறப்பு ஏற்படும்.

ஆய்வுகள்[தொகு]

அல்சைமர் நோயினை தீர்க்கவல்ல முதல் வேதிப்பொருளை லைஸ்டர் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூளைத் திசுக்கள் உயிரிழக்கச் செய்யும் நோய்களான அல்சைமர், பார்க்கின்சன், ஹண்டிங்சன் போன்ற நோய்களை தீர்க்கும் மருந்தை தயாரிக்க இதுவே முதல் படியென்றும், இன்னும் பல வேலைகள் இருப்பதாகவும் கூறினர்.[1]

காட்சியகம்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  1. ஆல்சைமர் நோயை தழுவி புதிதாக வெளிவந்த திரைப்படம் ஒன்றின் விமர்சன பார்வை : Forget me Not

மேற்கோள்கள்[தொகு]

  1. [Alzheimer's breakthrough hailed as 'turning point' http://www.bbc.co.uk/news/health-24462699]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்சைமர்_நோய்&oldid=2213508" இருந்து மீள்விக்கப்பட்டது