பீட்டில்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த பீட்டில்ஸ்
Beatles ad 1965 just the beatles crop.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம் லிவர்பூல் - இங்கிலாந்து
இசை வடிவங்கள் ராக்/பாப் இசை
இசைத்துறையில் கி.பி. 1960–1970
உறுப்பினர்கள் ஜான் லெனன்
பௌல் மக்கார்டினி
ஜார்ஜ் ஹாரிஸன்
ரிங்கோ ஸ்டார்
முன்னாள் உறுப்பினர்கள் ஸ்டுவர்ட் ஸ்ட்கிளிப்
பீட் பெஸ்ட்

பீட்டில்ஸ் (The Beatles) இங்கிலாந்தின் லிவர்பூல் மாகாணத்தைச் சார்ந்த புகழ்பெற்ற ஒரு ராக் இசைக்குழுவாகும்.[1] 1960-ல் இக்குழு உருவானது. 1962 முதல் இந்த இசைக்குழுவில் ஜான் லெனன், பௌல் மக்கார்ட்டினி, ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ரிங்கோ ஸ்டார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இசைக்குழு வரலாற்றில் இவர்களுடைய காலத்தில் மட்டுமல்லாது எல்லாக் காலங்களிலுமே தனிப்பெருமை வாய்ந்த குழுவாக இருந்த பெருமை பீட்டில்ஸையே சாரும். மிகவும் புகழ் பெற்ற இசைக்குழுவாக இவர்கள் வளர்ந்தபோது, பீட்டில்மேனியா எனப்படும் அளவுக்கு இக்குழுவின்மீது ரசிகர்களிடையே மிகுந்த பற்று வளர்ந்தது. அவர்களின் பாட்டுக்களும் நாளாக நாளாக மிகவும் முன்னேற்றம் அடைந்தது. வளர்ச்சித் தத்துவங்களின் ஒளிவிளக்காய் திகழ்ந்த அவர்களின் பாட்டுக்கள் 1960-களில் சமூக மற்றும் கலாச்சார புரட்சிகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இசுக்கிபிள் இரக இசை, தாளயிசை மற்றும் 1950களில் பரவலாக இருந்த ராக் அண்டு ரோல் பாணிகளை அடிப்படையாகக் கொண்ட பீட்டில்சு பின்னர் பல இசை வகைகளிலும் பாடிவந்தனர். பரப்பிசை சந்தப் பாடல்கள், இந்திய இசை, சீக்கதேலிக்கு ராக் மற்றும் கடின ராக் வகைகளில் செந்நெறி கூறுகளை இணைத்துப் பாடினர். தங்கள் பாடல்களின் மூலம் 1960களின் எதிர்ப்பண்பாட்டு காலத்தின் முன்னோடிகளாக கருதப்பட்டனர்.

பீட்டில்சு 1960 முதல் மூன்றாண்டுகளாக லிவர்பூலிலும் ஹம்பர்கிலும் மனமகிழ் மன்றங்களில் பாடிப் பிரபலமாயினர். மேலாளர் பிரியன் எப்சுடீன் அவர்களை ஓர் தொழில்முறை பாடற்குழுவாக மாற்ற உதவினார். தயாரிப்பாளர் ஜார்ஜ் மார்ட்டின் அவர்களின் இசைத்திறன் வளர உதவினார். 1962ஆம் ஆண்டில் வெளியான, அவர்களது முதல் வெற்றிப்பாடலான, "லவ் மீ டொ"விற்குப் பிறகு பீட்டில்சின் புகழ் பரவத் தொடங்கியது. அடுத்த ஆண்டில் பீட்டில்மேனியா உருவானபின்னர் "சீர்மிகு நால்வர்" (Fab Four) என்றழைக்கப்பட்டனர். 1964ஆம் ஆண்டு துவக்கத்தில் பன்னாட்டளவில் புகழ் பெற்றனர். ஐக்கிய அமெரிக்காவில் "பிரித்தானியப் படையெடுப்பை" முன்னெடுத்தனர். 1965 முதல் பீட்டில்சு மிக அருமையான, புத்தாக்க, தாக்கமேற்படுத்தும் இசைத்தட்டுகளை வெளியிட்டனர். இரப்பர் சோல் (1965), ரிவால்வர் (1966), சார்ஜென்ட் பெப்பர்சு லோன்லி ஆர்ட்சு கிளப் பாண்டு (1967), தி பீட்டில்சு (இசைத்தொகுப்பு) (பொதுவாக வைட் ஆல்பம் எனப்படுகின்றது, 1968) மற்றும் அப்பெ ரோடு (1969) ஆகியன குறிப்பிடத் தக்கன. 1970ஆம் ஆண்டில் பிரிந்தபிறகு ஒவ்வொருவரும் தனித்தனியாக வெற்றிகரமான இசைவாழ்வைத் தொடர்ந்தனர். 1980ஆம் ஆண்டு திசம்பரில் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்; நவம்பர் 2001இல் ஆரிசன் நுரையீரல் புற்றுநோயால் இறந்தார். மீதமுள்ள மக்கார்ட்னியும் இசுட்டாரும் இன்னமும் இசையில் ஈடுபாட்டுடன் உள்ளனர்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Unterberger, Richie. ஆல்மியூசிக் தளத்தில் பீட்டில்ஸ் பக்கம் . பார்வையிடப்பட்டது 5 July 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டில்ஸ்&oldid=2132172" இருந்து மீள்விக்கப்பட்டது