ராக் இசை
Appearance
(ராக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராக் இசை என்பது இளக்கமாக வரையறுக்கப்பட்ட ஒரு மக்கள் இசை வகையாகும். இது 1960 களிலும், அதன் பின்னரும் வளர்ச்சியடைந்தது. இதன் மூலம் 1940களிலும், 50களிலும் பிரபலமாக இருந்த ராக் அண்ட் ரோல், ராக்கபிலிட்டி போன்ற இசை வகைகளில் உள்ளது. இவையும் இதற்கு முன்னிருந்த புளூஸ், நாட்டு இசை போன்றவற்றிலிருந்து வளர்ந்தவையே. எனவே ராக் இசைக்கான மூலம் இதற்கு முந்திய பல்வேறு இசைவகைகளில் காணப்படுவதுடன், நாட்டார் இசை, ஜாஸ், செந்நெறி இசை ஆகியவற்றின் செல்வாக்குக்கும் உட்பட்டுள்ளது.[1][2][3]
ராக் இசையின் ஒலி பொதுவாக மின் கிட்டார் அல்லது ஒலிப்பண்பியல் கிட்டார்களில் தங்கியுள்ளது. அத்துடன் இது பாஸ் கிட்டார், தோல் கருவிகள், விசைப்பலகை இசைக்கருவிகள் போன்ற கருவிகளினால் வழங்கப்படும் வலுவான தாள ஒலிகளையும் பயன்படுத்துகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Power Pop Guide: A Brief History of Power Pop". MasterClass. 4 March 2022. Archived from the original on 24 May 2022. பார்க்கப்பட்ட நாள் 23 May 2022.
- ↑ Azerrad, Michael (16 April 1992). "Grunge City: The Seattle Scene". Rolling Stone. Archived from the original on 20 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 November 2018.
- ↑ W. E. Studwell and D. F. Lonergan, The Classic Rock and Roll Reader: Rock Music from its Beginnings to the mid-1970s (Abingdon: Routledge, 1999), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7890-0151-9 p.xi