ஜாஸ்
Jump to navigation
Jump to search
ஜாஸ், தெற்கு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கச் சமூகத்தினரிடையே, 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் உருவான ஒரு அமெரிக்க இசை வடிவம் ஆகும். இது ஆப்பிரிக்க இசை மரபுகளினதும், ஐரோப்பிய இசை மரபுகளினதும் கலப்பில் உருவானது. இவ்விசையின் இயல்புகள் பல இதன் மேற்கு ஆபிரிக்க மரபுவழியைச் சுட்டி நிற்கின்றன.
தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை ஜாஸ் இசையின் வளர்ச்சியில் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளின் அமெரிக்க மக்கள் இசையின் தாக்கங்களும் காணப்படுகின்றன. ஜாஸ் என்னும் சொல் மேற்குக் கரையோரப்பகுதியில் கொச்சைச் சொல்லாக உருவாகியது. இதன் மூலம் தெரியவில்லை. 1915 ஆம் ஆண்டளவில் சிக்காகோவில் இச்சொல் இசையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.