உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Thiyagu Ganesh

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Thiyagu Ganesh, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மணியன் (பேச்சு) 09:00, 17 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

வணக்கம் தியாகு கணேஷ். கட்டுரைகள் எழுதத் தொடங்கியுள்ளமைக்கு நன்றி. திருவரங்குளம் கட்டுரையை இன்னும் விரிவு படுத்துங்கள். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:06, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம்

[தொகு]

வணக்கம், ஆசிய மாதம் திட்டத்தில் பங்கேற்க விரும்பினால், தனிக் கட்டுரையாகத் தொடங்குங்கள். கட்டுரையை எழுதி முடித்து விட்டு அக்கட்டுரைக்கான தொடுப்பை மட்டும் விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/பங்கேற்பாளர்கள் பக்கத்தில் தாருங்கள். இப்பக்கம் பட்டியல் பக்கம் மட்டுமே. கட்டுரையை முழுவதுமாக அங்கு தராதீர்கள். மேலும், மேகாங் ஆறு பற்றிய கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கியில் மேக்கொங் ஆறு என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் எழுதியவறை அக்கட்டுரையில் சேர்த்து விடுங்கள். உங்கள் உழைப்பு வீணாகப் போகக் கூடாது. ஆனால் அக்கட்டுரை போட்டிக்கு சேர்க்கப்பட மாட்டாது.--Kanags \உரையாடுக 00:26, 22 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நீங்கள் மணல்தொட்டியில் எழுதிய மேகாங் ஆறு பற்றிய முழுமையான கட்டுரையை மேகாங் என்ற தலைப்பில் எழுதுங்கள். இரண்டு கட்டுரைகளையும் பின்னர் இணைத்து விடலாம்.--Kanags \உரையாடுக 00:33, 22 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தகவலுக்கு மிக்க நன்றி மீண்டும் உதவி தேவை

[தொகு]

நான் தமிழ் விக்கிக்கு புதியவன். நான் முதன்முதலாக மணல் தொட்டியில் எழுதிய [மேகாங் ஆறு] என்ற கட்டுரை ஆசிய மாதம் போட்டியில் பங்குபெற இணைத்திருந்தேன். ஆனால் [மெகோங்] என்ற தலைப்பில் ஏற்கனவே வெளிவந்திருக்கும் செய்தியை தங்கள் மூலமாக அறிந்தேன். நான் [மெகோங் ஆற்றின் பல்லுயிர் பன்மயம்] என்ற தலைப்பில் கட்டுரை எழுதலாமா? அது ஆசிய மாதம் போட்டிக்கு தகுதியான தலைப்பாக இருக்குமா என்பதை தெரிவித்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன் ---Thiyagu Ganesh (பேச்சு) 04:21, 22 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

எழுதுங்கள். ஆனால் கட்டுரையில் மேற்கோள்கள் சேர்க்க வேண்டும். நீங்கள் மணல்தொட்டியில் எழுதிய மேகாங் கட்டுரையில் மேற்கோள்கள் எதுவும் இல்லை. ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்கும் போது, அங்குள்ள மேற்கோள்களையும் தவறாமல் இணையுங்கள். மணல்தொட்டியில் உள்ள கட்டுரையை மேகாங் என்ற தலைப்பில் cut&paste செய்யுங்கள்.--Kanags \உரையாடுக 05:19, 22 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

உங்கள் பார்வைக்கு

[தொகு]

வணக்கம், தியாகு கணேஷ். திருவரங்குளம் கட்டுரையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்கவும். திருவரங்குளம் என்பது ஒரு சிற்றூர், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்ற மூன்றையும் குறிக்கிறது. எனவே உங்கள் கட்டுரையை சிற்றூருக்கு உரியதாக மாற்றியிருக்கிறேன். திருவரங்குளம் ஊராட்சி கட்டுரை ஏற்கனவே உள்ளது.

கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள அரங்குளநாதர் திருக்கோவிலின் போட்டோ நீங்களே படம்பிடித்ததா? மாறாக ஏதாவது இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ததாக இருந்தால் அது பதிப்புரிமை மீறலாகும். கோயில் படிமங்களை நீங்களே கேமரா அல்லது கைபேசியில் எடுத்து பொதுவகத்தில் பதிவேற்றலாம்.

உங்களைப் பற்றிய பொதுத் தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் (உங்கள் பேச்சுப்பக்கத்தின் மேற்புற இடது மூலையில் சிவப்பிணைப்பாக பயனர் பக்கம் என்றுள்ளது. அதனைச் சொடுக்கி விவரங்களை இட்டு சேமிக்கவும்) தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:07, 22 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

அரங்குளநாதர் கோயில் படிமம் நீங்கள் எடுத்தது என்று அறிந்து மிகவும் மகிழ்ச்சி. படிமம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. உங்கள் பயனர் பக்கத்தை உருவாக்கியதற்கு நன்றி. கீழுள்ள பேச்சுப் பக்கங்களில் கையெழுத்திடும் விவரத்தையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:52, 22 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

கையொப்பம் இடுதல்

[தொகு]

Information icon வணக்கம்! விக்கிப்பீடியாவிற்கு உங்கள் வரவு நல்வரவாகுக!. பேச்சுப் பக்கங்களிலும் உரையாடல் நடைபெறும் பிற விக்கிப்பீடியா பக்கங்களிலும் நீங்கள் உள்ளிடும்போது , தயவுசெய்து நிச்சயமாக கையெழுத்திடுங்கள். இதனை இரு விதங்களில் செய்யலாம்.

  1. உங்கள் கருத்துக்கு முடிவில் நான்கு அலைக்குறிகளை இடவும். ( ~~~~ ); அல்லது
  2. உங்கள் கருத்துரையின் இறுதியில் திரைக்குறியை வைத்துக்கொண்டு, தொகுப்புப் பெட்டியின் மேலுள்ள கையெழுத்துப் பொத்தானை அழுத்தவும் ( அல்லது ).

இது தானியக்கமாக உங்கள் பயனர் பெயர் அல்லது இணைய நெறிமுறை முகவரி மற்றும் நேரக்குறிப்புடன் கையெழுத்தை உள்ளிடும். இதனால் மற்ற பயனர்கள் குறிப்பிட்டக் கருத்தை இட்டவரையும் இடப்பட்ட நேரத்தையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

கட்டுரைகளைத் தொகுக்கும்போது கண்டிப்பாகக் கையொப்பம் இடக்கூடாது.

மிக்க நன்றி.

நன்றி

[தொகு]

நன்றி நண்பரே! தங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து மகிழ்ந்தோம். தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி. --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 13:15, 22 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

சிறந்த கட்டுரைகளைத் தருவதற்கு நன்றிகள்

[தொகு]

சிறந்த கட்டுரைகளைத் தருவதற்கு நன்றிகள், :) நீளமான கட்டுரைகளை ஆசிய மாதத்தின் பொருட்டு எழுதி வருவதற்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். சில உதவிக் குறிப்புக்கள்

  • கட்டுரைகளின் ஆரம்பத்தில் தலைப்பிடத்தேவையில்லை. அதாவது கூடாது :). அனைத்து விடயங்களையும் தமிழில் எழுதுங்கள். தமிழுக்கு மாற்றிவிடுங்கள் :) (national institute இல் இருக்கிறது என்று எழுதாமல் தேசிய நிறுவகத்தில் இருக்கிறது என்று எழுதலாம்)
  • வெளி இணைப்புக்களை கட்டுரைகளில் இணைக்கவேண்டாம். முக்கியமான கட்டுரையுடன் சம்பந்தப்பட்ட இணைப்புக்களை மட்டும் கீழே வெளி இணைப்புக்கள் எனும் பகுதியை இட்டுத்தரலாம்.
  • [http://%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D வங்காளதேசத்தின்] இப்படியோ அல்லது [https://ta.wikipedia.org/s/b4 வங்காளதேசத்தின்] இப்படியோ தருவதில்லை. இலகுவாக + (| என்பதற்கு முன்னிற்பது- இணைப்புத்தரவேண்டிய கட்டுரை, பின்னிற்பது திரையில் தெரியவேண்டிய உரைச்சொல்) எனும் வகையில் தந்தீர்களானால் இணைப்பு வங்காளதேசத்தின் எனும் வகையில் கட்டுரையில் இடப்படும்.
இந்தக் குறிப்புக்கள் தங்களுக்கு உதவும் என நம்புகிறேன். ஏதும் சந்தேகம் எனில் எங்கும் கேக்கலாம். :) உதவக் காத்திருக்கிறோம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:26, 24 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

உதவிக்கும் ஆலோசனகளுக்கும் நன்றி

[தொகு]

திரு. ஆதவன் அவர்களுக்கு என் நன்றிகளை உரிதாக்தாகுகிறேன்.உதவிக்கும் ஆலோசனகளுக்கும் இதயம் நிறைந்த நன்றி தங்களின் நான் தமிழ் விக்கியில் இணைந்து 7 நாட்களே ஆகிறது. உங்களைப் போன்றோரின் ஆதரவையும் ஊறுதுணையையும் என்றும் ஏதிர்நோக்குகிறேன். நன்றி --Thiyagu Ganesh (பேச்சு) 16:48, 24 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

[தொகு]

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
பூங்கோதை (பேச்சு) 12:03, 29 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:22, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

இந்தப் பதக்கம் யாருக்கானது என்பதை அறிய விரும்புகிறேன் 😊--ThIyAGU 16:20, 1 திசம்பர் 2015 (UTC)

சந்தேகத்துக்கிடமின்றி உங்களுக்குத்தான் தியாகு கணேஷ். தமிழ் விக்கியின் புதுப்பயனரான உங்களது ஆர்வத்துக்கும் ஆக்கத்துக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக விக்கியன்புடன் அளிக்கப்பட்ட பதக்கம் இது. உங்களது விக்கிப் பங்களிப்புகள் மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்--Booradleyp1 (பேச்சு) 16:59, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வணக்கம் தியாகு கணேஷ்.. அசத்தி பதக்கம் வாங்கிவிட்டீர்கள்... தொடர்ந்து பங்களிப்பதற்கும் சிறப்பான கட்டுரைகளை ஆக்குவதற்கும் பாராட்டுகள். ஆசிய மாதம் கட்டுரைப் போட்டியில் பங்குபெற்றதற்கும் வாழ்த்துகள். தொடர்ந்து பங்களியுங்கள். தங்கள் ஐசிடி குழுவிலும் இதனைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இன்னும் புதுக்கோட்டையிலிருந்து சிறப்பாகப் பங்களித்துவரும் நமது ஆசிரியர்கள் யார் என்பதனை எனது பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தீர்களெனில் அவர்களுக்கு மற்ற விக்கிப்பீடியர்களும் இனைந்து வழிகாட்ட ஏதுவாக இருக்கும். மிக்க நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:06, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

Booradleyp1 பார்வதிஸ்ரீ இருவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.மிக்க மகிழ்ச்சி. உங்களின் நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்றுவேன் என உறுதியளிக்கிறேன் --தியாகு கணேஷ் (பேச்சு) 14:34, 10 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

[தொகு]
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - நிறைவு

[தொகு]

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

கிங் எட்வர்டு பாயின்ட்

[தொகு]

இக்கட்டுரையைத் துவக்கியதற்கு நன்றிகள் ! கட்டுரையாக்கம் சரியாக உள்ளது. விக்கி உள்ளிணைப்புகளைத் தருவதில் உங்களுக்குச் சிரமம் இருப்பதாக உணர்கிறேன். திறந்தநிலை உரல் (URL) முகவரிகளும் தவிர்க்கப்பட வேண்டும். இதில் நான் செய்துள்ள திருத்தங்களை உள்வாங்கிக்கொண்டால் விக்கியாக்கம் மேன்படும்.--மணியன் (பேச்சு) 04:29, 19 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், Thiyagu Ganesh!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

  • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
தங்களது கீரமங்கலம் சிவன் சிலை கட்டுரையைக் கண்டேன். அக்கட்டுரையை கீரமங்கள் கோயிலின் கட்டுரையாக மாற்றி அதில் சிவன் சிலையின் சிறப்பினை தர வேண்டும். சிலைக்கென தனிக்கட்டுரை என்றால் இன்னும் அதிகமாக சிவன் சிலைப்பற்றிய செய்திகளையும் இணைக்க வேண்டியிருக்கும். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். உடனே சக விக்கிப்பீடியர்கள் பதிலளிப்பார்கள்.நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:07, 4 பெப்ரவரி 2016 (UTC)

விக்கிக்கோப்பை

[தொகு]

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:34, 3 ஏப்ரல் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

[தொகு]
2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

[தொகு]
விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

[தொகு]

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

[தொகு]

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

[தொகு]
2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2017

[தொகு]
2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:48, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:12, 30 ஏப்ரல் 2017 (UTC)

May 2017

[தொகு]

Information icon Hello, Thiyagu Ganesh, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO 12:57, 3 மே 2017 (UTC)[பதிலளி]

அன்புள்ள AntanO அவர்களுக்கு வணக்கம். தங்களின் தகவலுக்கு நன்றி. சென்னையில் நடைபெறும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கி பயிற்சிக்காக இன்று ஒரு புதிய பயனர் கணக்கினை துவக்கினேன். அன்பு கூர்ந்து TNSE Thiyagu Ganesh PDK என்ற பயனர் கணக்கை நீக்கி விடவும்.எனது பழைய பயனர் கணக்கான Thiyagu Ganesh ல் தொடர விரும்புகிேறன் நன்றி - ThIyAGU

Y ஆயிற்று--AntanO 13:20, 3 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர் பங்களிப்பாளர் போட்டி: வழிகாட்டல்

[தொகு]

தாவரவியல் கட்டுரையைச் சிறப்பாக விரிவாக்கி வருகின்றீர்கள், இன்னும் ஒரு சில நாட்களில் போட்டி விதிகளில் மாற்றங்கள் இடம்பெறலாம், அம்மாற்றத்தை இங்கு உங்கள்ளுக்கு கூறுகின்றேன். அதாவது, 26,000 பைட்டுக்கள் எனும் எல்லை 29,000 அல்லது அதற்கு அதிகமாக உயர்த்தப்படலாம். உங்கள் நலன் கருதி அக்கட்டுரையை முற்கூட்டியே 29,000 பைட்டு வரை அருள்கூர்ந்து விரிவாக்குங்கள்! போட்டியில் வெற்றிபெறவாழ்த்துகள்! உதவிகள் தேவைப்படின் தயங்காது கேளுங்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:00, 4 மே 2017 (UTC)[பதிலளி]

கவனத்திற்கு

[தொகு]

நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளில் மேம்பாடு கருதி இணைக்கப்பட்டிருக்கும் வார்ப்புக்களைக் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுங்கள். blogspot, facebook, wordpress போன்றவை ஒருசில இடங்கள் தவிர்த்து நம்பகமான சான்றாகக் கொள்ளப்படுவதில்லை. எனவே அவற்றை இணைப்பதைத் தவிருங்கள். நன்றி. --AntanO 02:55, 9 மே 2017 (UTC)[பதிலளி]

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். --AntanO 05:49, 9 மே 2017 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக --AntanO இக்கட்டுரையை தொகுப்பதில் சில சிரமங்களை உணருகிறேன். தங்களின் உதவி தேவை. படக்கோப்பு வார்ப்புருவை பயன்படுத்தும் போது படிமம் பெரிய அளவில் தெரிய வாய்ப்பில்லையா.... ஒரே சீரான வரிசையில் அதே சமயம் பெரிய அளவில் (300px) தெரிய எவ்வாறு உள்ளீடுகளை இட வேண்டும்.--Thiyagu Ganesh (பேச்சு) 06:16, 9 மே 2017 (UTC)[பதிலளி]

மாற்றியுள்ளேன் கவனியுங்கள். ஆனால் இவ்வடிவமைப்பு சிறப்பானதல்ல. காண்க: Image galleries --AntanO 06:26, 9 மே 2017 (UTC)[பதிலளி]

படிமம் பெரிய அளவில்

[தொகு]

-இவ்வாறு வரவேண்டுமா?--சி.செந்தி (உரையாடுக) 06:24, 9 மே 2017 (UTC)[பதிலளி]

படக்கோப்பை மாற்றியமைத்தல் பற்றி உதவியதற்கு சி.செந்தி அவர்களுக்கு மிக்க நன்றி - ThIyAGU 11:08, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:பாராட்டு

[தொகு]

தாவரவியல் கட்டுரையை விரிவாக்கியமைக்கு வாழ்த்துகள்! தொடர்ந்து இது போல பல கட்டுரைகளையும் விரிவாக்கி போட்டியில் வெல்லுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:31, 13 மே 2017 (UTC)[பதிலளி]

நன்றி ஸ்ரீஹீரன்.... நிச்சயமாக ! பணிகளை தொடர்கிறேன்.....ThIyAGU 11:04, 13 மே 2017 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:07, 13 மே 2017 (UTC)[பதிலளி]

பரிந்துரை

[தொகு]

வணக்கம். இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்: மேற்கோள் சுட்டுதல். இவ்விதம் சுட்டினால், மேலும் சிறப்பு! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:01, 16 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : பதில்

[தொகு]

காற்று கட்டுரையை விரிவாக்கியிருப்பதையிட்டு மகிழ்ச்சி, ஆயினும் அதை இன்னொருவர் சமர்ப்பித்ததால் நீங்கள் அதனை அங்கு சமர்ப்பிக்க முடியாது. காற்று கட்டுரையினையும் சேர்த்து தற்போது 4 கட்டுரைகள விரிவாக்கியுள்ளீர்கள். இங்கு உங்கள் பிரச்சினை தொடர்பில் கூறியுள்ளேன். அது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கின்றேன். இதுபோல தேவைப்படும் உதவிகளைத் தயங்காமல் கேளுங்கள். தொடர்ந்து போட்டியில் பங்குபற்றி சிறப்பாகக் கட்டுரைகளை விரிவாக்கி வெற்றிபெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:32, 17 மே 2017 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை உங்கள் கணக்கிலேயே சேர்க்கப்படும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:34, 17 மே 2017 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கும், விளக்கத்திற்கும், உதவிக்கும் ஸ்ரீஹீரன் அவர்களுக்கு மிக்க நன்றி .-- ThIyAGU 10:39, 17 மே 2017 (UTC)[பதிலளி]

இப்போது உங்கள் கணக்கில் கார்று கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் நீங்கள் முற்பதிவு செய்த கங்கை ஆறு கட்டுரையை ஏற்கனவே அஞ்சனன் முற்பதிவு செய்திருந்தார். ஆகையால், அருள்கூர்ந்து அக்கட்டுரையை விரிவாக்காதீர்கள். தொடர்ந்து சிறப்பாகக் கட்டுரைகளை விரிவாக்கி வெற்றிபெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:45, 18 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கி பொதுவக படிமங்கள் குறித்து விளக்கம் தேவை

[தொகு]

விக்கி பொதுவகத்தில் உள்ள ஒரு படிமத்தை நாம் பதிவிறக்கம் செய்து சிறிது மாற்றங்கள் செய்து (தமிழ் விளக்கங்கள் கொடுத்து) புதிதாக பொதுவகத்தில் பதிவேற்றம் செய்ய இயலுமா? அப்படிமத்தை நம்முடைய கட்டுரைகளில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்தும் பதிப்புரிமைச் சிக்கல்கள் ஏதேனும் இதில் இருக்கிறதா என்பது குறித்தும் விளக்கம் தேவை-- ThIyAGU 17:53, 18 மே 2017 (UTC)

இயலும். மீண்டும் பதிவேற்றும் போது மூலப் படிமத்தின் இணைப்பை விவரிப்பில் குறிப்பிட Template:Derived from வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள். மூலப் படிமத்தின் அதே உரிமத்தில் பதிவேற்ற வேண்டும். மேலும் விளக்கங்களுக்கு ஒத்தாசைப் பக்கத்தில் உதவி கேளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 08:31, 19 மே 2017 (UTC)[பதிலளி]

விளக்கம் மற்றும் மேலதிக ஆலோசனைகள் வழங்கிய இரவி அவர்களுக்கு நன்றி -- ThIyAGU 09:26, 19 மே 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
சிறந்த உழைப்பாளர் பதக்கம்
ஒவ்வொரு நாளும் சளைக்காமல் பல கட்டுரைகளை விரிவாக்கி வருகிறீர்கள். அண்மைய மாற்றங்களில் உங்களைப் போன்றோரின் செயற்பாடுகளைக் காண்பதே எனக்கு உற்சாகமாக உள்ளது. கட்டுரைகளை விரிவாக்குவதுடன் விக்கி வழமைகளையும் பண்புகளையும் உள்வாங்கி மிளிர்கிறீர்கள். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 08:33, 19 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

சிறந்த உழைப்பாளர் பதக்கம் வழங்கிப் பாராட்டியமைக்கு --இரவி அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள். இது போன்ற பதக்கங்களும்,நம் விக்கிப்பீடிய நண்பர்களின் ஆலோசனை வழிகாட்டல்களும் என்னை மேன்மேலும் உற்சாகத்துடன் உழைத்திட தூண்டுகின்றன. தங்களைப் போன்றோரின் நம்பிக்கையைப் பாதுகாத்து இன்னும் சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன். அன்புடன் -- ThIyAGU 09:24, 19 மே 2017 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துகள்!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:19, 19 மே 2017 (UTC)[பதிலளி]

நன்றி ஸ்ரீகர்சன் --- ThIyAGU 09:45, 19 மே 2017 (UTC)[பதிலளி]

பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:08, 19 மே 2017 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:50, 20 மே 2017 (UTC)[பதிலளி]

கட்டுரை முற்பதிவு

[தொகு]

ஒரே நேரத்தில் போட்டிகாக 12 கட்டுரைகளை மட்டுமே முற்பதிவு செய்யலாம் என்பதால் நீங்கள் மேலதிகமாக முற்பதிவு செய்துள்ள கட்டுரைகளை நீக்கியுள்ளேன். முற்பதிவு செய்த கட்டுரைகளை விரிவாக்கினால், அவற்றை அங்கு நீக்கிவிட்டு வேறு ஒரு கட்டுரையை முற்பதிவு செய்யலாம்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:32, 20 மே 2017 (UTC) தகவலுக்கு நன்றி திரு.--ஸ்ரீஹீரன்--- ThIyAGU 09:04, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:12, 21 மே 2017 (UTC)[பதிலளி]

மிகவும் உதவிகரமான குறிப்பு. நன்றி திரு.--ஸ்ரீஹீரன் --- ThIyAGU 09:05, 21 மே 2017 (UTC)[பதிலளி]

ஐயகோ! யான் திரு. கிடையாது. 15 வயது தான் ஆகின்றது அண்ணா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:27, 21 மே 2017 (UTC)[பதிலளி]
ஓ.... அப்படியா..எனக்கு வியப்பாக இருக்கிறது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்களே அது போல உங்களின் செயல்பாடுகள் உள்ளது! மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி --ஸ்ரீஹீரன் !! :-) அந்தத் திரு. உங்கள் வயதுக்கானது அல்ல.. அனுபவத்திற்கானது... வாழ்க வளமுடன்.. நலம் அன்புடன்--- ThIyAGU 11:00, 21 மே 2017 (UTC)

மரம் (மூலப்பொருள்) கட்டுரையிற்கு இப்பக்கத்தை சான்றாகக் கொடுத்துள்ளீர்கள். நன்று. ஆனால், அங்கிருந்து ஏதாவது உள்ளடக்கத்தை (வசனங்களை) அப்படியே Copy செய்தால் அவற்றை நீக்கிவிடுங்கள். பதிப்புரிமை மீறல் கூடாது. பதில் வேண்டும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:03, 21 மே 2017 (UTC)[பதிலளி]

மரம் (மூலப்பொருள்) கட்டுரையில் தமிழ்நாடு அரசுப்பாடநூலில் இருந்து ஒரு சில வரிகளை சேர்த்திருந்தேன். தற்பொழுது அவற்றில் பலவற்றை நீக்கியும் சிலவற்றை விக்கிநடைக்கேற்ப மாற்றியும் அமைத்துள்ளேன். மாற்றத்தை சரிபார்த்து மேலும் மாற்றவேண்டுமெனில் ஆலோசனைகள் கூறவும். நன்றி--- ThIyAGU 11:51, 21 மே 2017 (UTC)

தியாகு கணேஷ்! நீங்கள் சமர்ப்பித்த பாலூட்டி கட்டுரை கட்டுரைப்போட்டிகள் பட்டியலில் இல்லையே.--கலை (பேச்சு) 19:28, 30 மே 2017 (UTC)[பதிலளி]

அறிவியல் துணைப்பிரிவில் 79 ஆவது தலைப்பாக பாலூட்டி என்ற கட்டுரை இருக்கிறது சகோதரி கலை--- ThIyAGU 19:34, 30 மே 2017 (UTC)[பதிலளி]


தியாகு கணேஷ்! தயவுசெய்து போட்டிக் கட்டுரை விரிவாக்கத்தின்போது எழுத்துப்பிழைகள், சொற்றொடரின் முடிவில் வரும் நிறுத்தற்புள்ளிக்கு அடுத்து இடைவெளிவிடுதல் போன்றவற்றையும் கவனித்துத் திருத்திவிடுங்கள். --கலை (பேச்சு) 07:27, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:00, 31 மே 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் தியாகு கணேஷ்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (மழை, கப்பல், உயிரினம்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள்

  1. சோயா அவரை
  2. செம்மறியாடு
  3. சுழல் காற்று
  4. பியர்
  5. ஒலி
  6. கிலோகிராம் ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். இதில் ஏதாவது மாற்றம் தேவையெனில், தயவுசெய்து கூறுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 21:05, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]

மாற்றங்கள் வேண்டாம் கலை.. தற்போதுள்ள தலைப்புகள் போதும். தகவலுக்கு நன்றி --- ThIyAGU 02:53, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]

Thiyagu Ganesh! கட்டுரை முற்பதிவின்போது, தயவுசெய்து சரியான நாளின் கீழ் முற்பதிவைச் செய்யுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 10:09, 10 செப்டம்பர் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு

[தொகு]
  • 👌 - தாவரவியல்கட்டுரை தொடக்கம் மெல்லுடலி வரைக்கும் சிறப்பாக 30 கட்டுரைகளை விரிவாக்கி, முதல் மூன்று பரிசுகளை வெல்வதற்கான தகுதியினை அடைந்துள்ளீர்கள்.
  • 👍 - ஆனாலும், 30 உடன் நின்றுவிடாது 60, 70, 80, 100 என தொடர்ந்து பல கட்டுரைகளையும் விரிவாக்குங்கள். அது உங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ளவும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. தொடர்ந்து அசத்தலாகப் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி!...

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:55, 1 சூன் 2017 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி --ஸ்ரீஹீரன் தாங்கள் கூறியது போல் தொடர்நது பயணித்து 100 ஐயும் தாண்டி விரிவாக்க முயற்சிக்கிறேன் நன்றி-- ThIyAGU 02:57, 2 சூன் 2017 (UTC)

பதக்கம்

[தொகு]
சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் (பேச்சு) 20:25, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

குறும்பன் அவர்களுக்கு வணக்கம். இது போன்ற ஊக்கப்படுத்தும் செயல்கள் எங்களைப் போன்றோர்க்கு உந்து சக்தியாகவும் மேலும் உழைக்க தூண்டுகோலாகவும் அமைகின்றன. மிக்க மகிழ்ச்சியும் இதயம் நிறைந்த நன்றியும். அன்புடன் -- ThIyAGU 20:58, 3 சூன் 2017 (UTC)
👍 விருப்பம்--கலை (பேச்சு) 22:05, 3 சூன் 2017 (UTC) 👍 விருப்பம் வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பணி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:05, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

👍 விருப்பம். வாழ்த்துகளும் பாராட்டுகளும் --Booradleyp1 (பேச்சு) 02:39, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துக்கள்!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:43, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கத்திற்கு விருப்பம் தெரிவித்த கலை, ஸ்ரீஹீரன், Booradleyp1,ஸ்ரீகர்சன், மா. செல்வசிவகுருநாதன் ஆகியோர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன் --- ThIyAGU 08:13, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு...

[தொகு]

வணக்கம்! உங்களின் அண்மைக் காலத்துக் கட்டுரைகளில் References என்று துணைப்பகுப்பின் தலைப்பை ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். தமிழில் மேற்கோள்கள் என இருப்பதுதானே சிறப்பு! இவற்றைக் கவனித்துத் திருத்த வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:47, 16 சூன் 2017 (UTC)[பதிலளி]

உடனடியாக கவனித்து, திருத்தியமைக்கு நன்றி. நானே செய்திருக்கலாம் என்றாலும், நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே தெரிவித்தேன். எதிர்காலத்தில் புதிய பயனர்களுக்கு நீங்களும் வழிகாட்ட வேண்டுமல்லவா?! இன்னொரு பரிந்துரை:- விக்கியில் எழுதப்படும் கட்டுரைகள் குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து வாக்கியங்களைக் கொண்டிருக்க வேண்டும் எனும் விதியினை நாம் கடைப்பிடிக்கிறோம். அப்போதே அக்கட்டுரையானது குறைந்தபட்சத் தகவல்களைக் கொண்டுள்ளதாக கருதுகிறோம். இதனையும் கருத்திற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:56, 16 சூன் 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் உங்கள் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி ஐயா...உடனடியாக பதிலளிக்க இயலாததற்கு வருந்துகிறேன். நீங்கள் குறிப்பிட்ட அந்த மூன்று கட்டுரைகளையும் நேற்றுதான் மொழிபெயர்த்தேன். தவறுதலாக reference ஐ கவனிக்க வில்லை. மேலும் ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே மொழிபெயர்ப்பு செய்தேன்.அதனால் தான் புதிதாக வேறு வாக்கியங்களை சேர்க்கவில்லை. தொடர்பங்களிப்பாளர் போட்டிக் கட்டுரைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கிடையே இதனைச் செய்ததால் கவனிக்க முடியாமல் போய்விட்டது. இனிமேல் எழுதும் கட்டுரைகளுக்கு உங்கள் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்கிறேன். நன்றி! -- ThIyAGU 05:25, 17 சூன் 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி

[தொகு]

வணக்கம். அடுத்து நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ள பயிற்சிகளில் கலந்துகொண்டு, நீங்களும் பயிற்றுவிப்பாளராக பங்காற்ற இருப்பது குறித்து மகிழ்ச்சி; பாராட்டுகள்! விக்கிப்பீடியா வழியாக உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்புகிறேன். அதற்கு பதிலளிக்கும்போது உங்களுடைய தொலைபேசி எண்ணை எனக்கு தெரிவிக்க இயலுமா? (சிரமமாக இருக்கும் எனக் கருதினால், தொலைபேசி எண் பகிர்தலை தவிர்க்கலாம்.) மே, சூன் மாதங்களில் துப்புரவுப் பணியினை செய்துவருபவர்களில் ஒருவன் என்ற முறையில் என்னிடம் சில பரிந்துரைகள் உள்ளன. அவற்றையும் கவனத்திற்கொண்டு நீங்கள் பயிற்றுவிப்பு செய்தால், அனைவருக்கும் நன்மையாக இருக்கும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:54, 19 சூன் 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் ஐயா வணக்கம். தங்களின் மகிழ்ச்சிக்கு நன்றி! தங்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் எங்களைப்போன்ற புதியவர்களுக்கு நிச்சயமாக தேவை. கண்டிப்பாக மின்னஞ்சலுக்கு பதில் அனுப்புகையில் என்னுடைய தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிவிக்கிறேன் நன்றி--- ThIyAGU 19:01, 19 சூன் 2017 (UTC)

மா. செல்வசிவகுருநாதன், உங்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்தால் பயிற்சி அளிக்கச் செல்லும் அனைவருக்கும் பயன்படும். ஏதேனும் காரணங்களுக்காகத் தனிப்பட பகிர விரும்பினால், என் எண்ணுக்கோ மின்னஞ்சலுக்கோ தெரிவிக்கலாம். நன்றி. --இரவி (பேச்சு) 19:27, 19 சூன் 2017 (UTC)[பதிலளி]

இரவி, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இணைப்பில் என் கருத்துகளை பதிவு செய்கிறேன். பயிற்றுவிப்பாளராக செல்லவிருக்கும் மற்ற பயனர்கள் நீண்ட நாள் பயனர்கள்; நிறைய தகவல்களை ஏற்கனவே அறிந்திருப்பர். தியாகு கணேஷ் அண்மைக் காலத்தில் சிறப்பான பங்களிப்பினை செய்துவருவதால், அவரிடம் பேசி எனக்குத் தோன்றியுள்ள சில பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என நினைத்தேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:52, 19 சூன் 2017 (UTC)[பதிலளி]

பயிற்சி குறித்த குறிப்பிடத்தக்க தகவல்களை விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 21 - 23 எனும் பக்கத்தில் இடலாம். உதாரணமாக -

  1. எத்தனை பேர் பங்களித்தனர்?
  2. எவ்வளவு நேரம் பயிற்சி தரப்பட்டது?
  3. எந்தெந்த தலைப்புகளில் பயிற்சி தரப்பட்டது?
  4. பயிற்சியின்போது ஏதேனும் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டால், இணைக்கலாம்.

வலியுறுத்தவில்லை; விரும்பினால் பதிவு செய்யலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:05, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் வணக்கம். இன்று நான் திருச்சி மாவட்டம் குமுளூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ள பயிற்சியில் கருத்தாளராக கலந்து கொள்கிறேன். பயிற்சி தொடர்பாக நீங்கள் கேட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் இன்னும் சில மணி நேரங்களில் அதற்குரிய தனி உரையாடல் பக்கத்தில் தருகிறேன்.நன்றி-- ThIyAGU 01:40, 21 சூன் 2017 (UTC)

நன்றி! இம்மாதிரியான ஆவணப் பதிவுகள் திட்டத்தின் வெற்றியை அளவிட உதவும் என நம்புகிறேன். எதிர்காலத் திட்டமிடலுக்கும் உதவிடும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:52, 21 சூன் 2017 (UTC)[பதிலளி]

மாங்காடு (புதுக்கோட்டை)

[தொகு]

வணக்கம்! வாய்ப்பு கிடைக்கும்போது, இக்கட்டுரையை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:20, 22 சூன் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மா. செல்வசிவகுருநாதன் ! நிச்சயம் எழுதுகிறேன். இக்கட்டுரையில் பல தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. எனது சொந்த ஊரான மாங்காடு (புதுக்கோட்டை) பற்றி விரிவான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளேன். விரைவில் தரமான கட்டுரையாக அது மேம்படுத்தப்படும். நன்றி -- ThIyAGU 09:09, 24 சூன் 2017 (UTC)

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

[தொகு]

வணக்கம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் குறித்து கட்டுரைகள் எழுதப்படுவது குறித்து மகிழ்ச்சி. எனினும் தலைப்புகள் சீர்மையாக இருப்பது அவசியம். கவனிக்கவும் -

  1. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், புதுக்கோட்டை
  2. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வானரமுட்டி
  3. குருக்கத்தி,மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:04, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]


கவனத்தில் கொள்கிறேன் மா. செல்வசிவகுருநாதன் நன்றி! -- ThIyAGU 09:10, 24 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களுக்கு நீங்கள் வழிகாட்டும் பாங்கு நன்று. விக்கிநெறிமுறைகளை விட்டுக் கொடுக்காமலும் அதே வேளை ஆசிரியர்கள் மனம் தளராதவாறு ஊக்கமூட்டியும் விக்கி வழமைகளை நீங்கள் சொல்லிக் கொடுப்பது சிறப்பு. வருங்காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்ல உங்கள் முன்னெடுப்பின் மூலம் தமிழகம் எங்கும் இருந்தும் பல விக்கிப்பீடியர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகள். நன்றி. --இரவி (பேச்சு) 13:46, 29 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

வணக்கம் --இரவி நீங்கள் என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு மிக்க நன்றி. நீங்கள் வழங்கும் பதக்கங்கள் மேலும் மேலும் தமிழ் விக்கியில் பணி செய்து கிடக்க உந்துதலைக் கொடுக்கின்றன.உங்கள் நம்பிக்கையை உறுதியுடன் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். மீண்டுமொருமுறை இதயம் நிறைந்த நன்றிகள்!! -- ThIyAGU 15:25, 29 சூன் 2017 (UTC)
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:48, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

பங்களிப்பு

[தொகு]

மேம் TNSE MANIKANDAN PDK (பேச்சு) 17:09, 29 சூன் 2017 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

[தொகு]

வணக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் நீங்கள் பயிற்சி அளித்து வருவதாக அறிகிறேன். ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளை என்னால் இயன்றளவு முன்னேற்றி வருகிறேன். தலைப்பினை நகர்த்தினால், கீழ்காணும் செயலைச் செய்வேன். இந்தத் தகவலை பயிற்சி பெறுவோரிடம் தெரிவிக்கவும்; நன்றி!

ஸ்ரீவில்லிப்புத்துர் இரயில் நிலையம் என எழுதப்பட்டிருந்ததை ஸ்ரீவில்லிப்புத்தூர் தொடருந்து நிலையம் என நகர்த்தினேன். அதன்பிறகு இந்த அறிவிப்பினை பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தேன். இப்படித் தெரிவித்தால் அவர், தான் எழுதிய கட்டுரையைத் தேடவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:50, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மா. செல்வசிவகுருநாதன் ! தகவலுக்கு நன்றி. பயிற்சி தளத்திலேயே நானும் பிழை தவறுகளை சுட்டிக்காட்டி அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அங்கேகேயே திருத்தம் செய்கிறேன். இருப்பினும் என்னால் கவனிக்கப்படாமல் ஓரிரு தலைப்புகள் இவ்வாறு இற்றை செய்யப்பட்டு விடுகின்றன. இருப்பினும் இனி இவ்வாறான தவறுகள் நிகழாமல் செயல்படுகிறோம். நன்றி -- ThIyAGU 02:00, 30 சூன் 2017 (UTC)

தவறினை நான் குறிப்பிடவில்லை; என்னைப் போன்றோர் செய்யும் சரிசெய்தல் பணிகளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்; குழம்பிவிடக் கூடாது என்பதற்காகவே உங்களுக்குத் தெரிவித்தேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:04, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

நிச்சயமாக தெரியப்படுத்துகிறேன் மா. செல்வசிவகுருநாதன்-- ThIyAGU 02:08, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

நன்றி! ஸ்ரீவில்லிப்புத்தூர்தான் எனது சொந்த ஊர். எனது தங்கை தனது குடும்பத்துடன் புதுக்கோட்டை நகரில் வசித்து வருகிறார்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:13, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு: விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:06, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தொடர்பங்களிப்பாளர் போட்டியில் 54 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கி தொடர்ந்து எழுதிவருவதால் களைப்படையா பங்களிப்பாளர் பதக்கத்தை தங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன் --!ப. இரமேஷ் 14:40, 7 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--இரவி (பேச்சு) 14:47, 7 சூலை 2017 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி ரமேஷ்.... தாங்கள் எனக்களித்த இந்தப்பபதக்கம் நிச்சயமாக என்னுள் உந்துதலை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். எனக்கு பதக்கம் வழங்கிய உங்களுக்கும் பதக்கத்திற்கான விருப்பம் தெரிவித்த சகோதரர் இரவி அவர்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகள் !-- ThIyAGU 17:42, 7 சூலை 2017 (UTC)

👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:49, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணி

[தொகு]

வணக்கம். மாவட்டத்தை பதிவுசெய்ய இங்கு பார்க்கவும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:52, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/கட்டுரைகளை மேம்படுத்துதல் என்பது ஒரு உதவிப் பக்கம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:39, 9 சூலை 2017 (UTC)[பதிலளி]

கவனிக்கவும்

[தொகு]

அரசு பொது அலுவலகம், புதுக்கோட்டை இங்கு உள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 07:21, 10 சூலை 2017 (UTC)[பதிலளி]

வார்ப்புரு...

[தொகு]

வார்ப்புரு:மத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்

உங்களுக்காக வார்ப்புரு உருவாக்கியுள்ளேன். மாவட்டவாரியாக ஒரு Word fileஇல் தொகுதிகளை பட்டியலிட்டு, அதனடிப்படையில் இந்த வார்ப்புருவை விரிவாக்கிக் கொள்ளுங்கள். உதவி தேவையெனில் கேட்கவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:13, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

கட்டுரையில் வார்ப்புரு இடும்போது, பகுப்பினைகூட நீக்கி விடலாம். வார்ப்புருவுடனே பகுப்பும் இணைந்துவிடும்! இங்கு காண்க! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:30, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் எனபதனை நண்பர்கள் வளர்த்தெடுத்தார்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:35, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மா. செல்வசிவகுருநாதன் கனிவான வழிகாட்டலுக்கு நன்றி... தாங்கள் உருவாக்கித் தந்த வார்ப்புருவை நான் எழுதிய மத்திய பிரதேச சட்டமன்றத் தொகுதிகள் கட்டுரைகளுக்கும் எழுதப்போகும் கட்டுரைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறேன்.ஏதேனும் உதவி தேவையெனில் தொடர்பு கொள்கிறேன். -- ThIyAGU 06:43, 11 சூலை 2017 (UTC)

தொடர்பு இழந்த மேற்கோள்கள்...

[தொகு]

வணக்கம். எஸ். காமராஜ் கட்டுரையில் மேற்கோள்களை திறந்து பாருங்கள். வேலை செய்யவில்லை.

இந்த உரையாடலைக் கவனித்து, ஆவன செய்யுங்கள். தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து வேறு கட்டுரைகளையும் நீங்கள் எழுதியிருந்தால், அவற்றிலெல்லாம் இந்தத் திருத்தத்தை மேற்கொள்ளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:45, 13 சூலை 2017 (UTC)[பதிலளி]

இக்கட்டுரைகளை கவனியுங்கள்...

[தொகு]

வணக்கம்.

  1. சித்திரக்கூடம் (சட்டமன்றத் தொகுதி)
  2. ஆலோட் (சட்டமன்றத் தொகுதி)
  3. அனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி)
  4. குன்னவுர் (சட்டமன்றத் தொகுதி)

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:23, 14 சூலை 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மா. செல்வசிவகுருநாதன் தாங்கள் சுட்டிக்காட்டிய கட்டுரைகளை கவனிக்கிறேன்... நன்றி -- ThIyAGU 01:48, 15 சூலை 2017 (UTC)[பதிலளி]
கனித்து திருத்தம் செய்து விட்டேன் மா. செல்வசிவகுருநாதன் ஏதாவது விடுபட்டிருந்தால் கூறுங்கள் திருத்தி விடுகிறேன்.நன்றி! -- ThIyAGU 02:05, 15 சூலை 2017 (UTC)[பதிலளி]

இந்தத் திருத்தங்களை நகர்பேசி மூலம் செய்கிறீர்களா?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:06, 15 சூலை 2017 (UTC)[பதிலளி]

இல்லை மடிக்கணினியில் தான் செய்கிறேன்.-- ThIyAGU 02:08, 15 சூலை 2017 (UTC)

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:09, 15 சூலை 2017 (UTC)[பதிலளி]

வணக்கம். பகுப்பு பேச்சு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பக்கத்தை கவனித்து வருமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்குத் தேவைப்படும் உதவிக் குறிப்புகளையும், புதுக்கோட்டை மாவட்டம் தொடர்பான துப்புரவுப் பணி குறித்த இற்றைகளையும் இங்கு இட்டு வருகிறேன். நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் இத்தகவல்கள் தங்களுக்கும், புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:01, 17 சூலை 2017 (UTC)[பதிலளி]

நன்றி மா. செல்வசிவகுருநாதன்... நிச்சயம் கவனித்து வருகிறேன்... -- ThIyAGU 04:31, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

ஊடகவியல் கட்டுரை

[தொகு]

வணக்கம் தியாகு கணேஷ்! ஊடகவியல் கட்டுரையை நன்றாக விரிவாக்கியுள்ளீர்கள். அகராதி விளக்கம், அறிஞர்கள் கருத்து ஆகிய துணைத் தலைப்புக்களின் கீழுள்ள தகவல்களுக்கு, அவற்றை எங்கிருந்து பெற்றீர்களோ, அவற்றை மேற்கோளாகக் கொடுத்தால் சிறப்பாக இருக்குமே? எழுதிக்கொண்டு போகும்போதே மேற்கோள்களையும் கொடுத்துவிட்டால், பின்னர் மறக்காமல் இருக்க உதவும். --கலை (பேச்சு) 21:03, 17 சூலை 2017 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி சகோதரி கலை ..! தங்களின் ஆலோசனையை கவனத்தில் கொண்டு நிச்சயம் செயல்படுத்துகிறேன் தொடர்ந்து தங்களின் வழிகாட்டுதல்களை வேண்டுகிறேன் -- ThIyAGU 04:34, 18 சூலை 2017 (UTC)

தொல்லியல் சார்ந்த கட்டுரைகள் குறித்து கேட்டிருந்தீர்கள். நீங்கள் குறிப்பிட்டபடியே, வலைப்பூ தகவல்களை ஆதாரமாக காட்டக் கூடாது. மங்கலநாடு அம்பலத்திடல் குறித்த கட்டுரைகள் ஆனந்த விகடன், தினகரன், டைம்சு ஆப் இந்தியா ஆகியவற்றில் வந்துள்ளன. 1) ஆனந்த விகடன் 2) தினகரன் 3) டைம்சு ஆப் இந்தியா - இவற்றை ஆதாரமாக குறிப்பிட பரிந்துரையுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:13, 17 சூலை 2017 (UTC)[பதிலளி]

நிச்சயம் சம்பந்தப்பட்ட பயனரிடம் தெரிவிக்கிறேன் மா. செல்வசிவகுருநாதன் -- ThIyAGU 04:36, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

திட்டமிடல்

[தொகு]

வணக்கம். ஒரு துறை சார்ந்த ஒரே மாதிரியான கட்டுரைகளை எழுதத் தீர்மானிக்கும்போது / அல்லது அவ்வகையான கட்டுரைகளை மேம்படுத்த நினைக்கும்போது திட்டமிடல் அவசியமாகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:35, 19 சூலை 2017 (UTC)[பதிலளி]

இதனையும் பாருங்கள். செய்திருக்கும் முன்னேற்றங்கள் நன்கு புரியும். ஏற்கனவே நகர்த்தப்பட்ட கட்டுரைகளை நான் திருத்திவிடுகிறேன்; சுற்றுக்காவல் முடிந்ததாக குறிக்கவும் எளிதாக இருக்கும். புதிய கட்டுரைகளை உருவாக்கும்போது செயற்படுத்துங்கள். அவற்றை நானும் கவனித்து வருகிறேன்.-தங்களின் உழைப்பிற்கு பாராட்டுகள்! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:41, 19 சூலை 2017 (UTC)[பதிலளி]

திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

[தொகு]

வணக்கம்! பகுப்பு பேச்சு:திருச்சி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் இதனை தொடர்ந்து கவனித்து வாருங்கள். இந்தப் பக்கத்தில் உரையாடுங்கள். நான் பார்வையிட்டு உதவுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:11, 19 சூலை 2017 (UTC)[பதிலளி]

நிச்சயமாக மா. செல்வசிவகுருநாதன். உதவி அல்லது வழிகாட்டுதல்கள் தேவையெனில் தொடர்பு கொள்கிறேன் நன்றி -- ThIyAGU 18:17, 19 சூலை 2017 (UTC)[பதிலளி]

வெட்டி ஒட்டல்

[தொகு]

போட்டிக்காக வேறு கட்டுரைகளில் இருந்து பிரதிசெய்து ஒட்டுகிறீர்கள். பொதுவாகவே இது தவிர்க்கப்படல் நன்று. எ.கா: copy and paste. @Shriheeran: கவனத்திற்குஈ பல கட்டுரைகள் இவ்வாறே உருவாக்கப்படுகின்றன. எ.கா: பிரதிசெய்து ஒட்டப்பட்டுள்ளது.--AntanO (பேச்சு) 19:33, 6 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

AntanO, அவர்களுக்கு நன்றி. தியாகு கணேஷ் அவர்களே, இவ்வாறான நடவடிக்கையில் நீங்கள் ஈடுபட்டதையிட்டு வருந்துகின்றேன். இவ்வாறு எந்த எந்த கட்டுரைகளில் வெட்டி ஒட்டினீர்கள் எனக் குறிப்பிடுங்கள். அருள்கூர்ந்து உங்கள் பதிலை எதிர்பார்த்து நிற்கின்றேன். கவனிக்க:கலை--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:53, 7 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
தவறுக்கு வருந்துகிறேன் ஸ்ரீஹீரன் கலை . அறியாமையாலும் ஆர்வமிகுதியாலும் அவ்வாறு செய்துவிட்டேன். என்னால் அவ்வாறு (வெட்டி ஒட்டல்) உருவாக்கப்பட்ட கட்டுரைகளை திரு. AntanO மீளமைத்துள்ளார். கூடிய விரைவில் அக்கட்டுரைகளை சரிசெய்துவிடுகிறேன். நன்றி --- ThIyAGU 06:13, 7 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
உங்களால் விரிவாக்கப்பட்ட பேரரசுவாதம், ஆன்மா, 26000 பைட்டுக்களை அடையவில்லை. எனவே மேலும் விரிவாக்கிவிட்டுக் கூறுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 19:30, 9 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் கலை . பேரரசுவாதம், ஆன்மா, ஆகிய கட்டுரைகளை 26000 பைட்டுகளுக்கு மேல் விரிவாக்கியுள்ளேன். கவனிக்கவும். நன்றி --- ThIyAGU 09:13, 11 அக்டோபர் 2017 (UTC)
பேரரசுவாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஆன்மா கட்டுரையில் மேற்கோள் வழு ஒன்று காட்டுகிறது. அதனைத் திருத்துவதற்காக ஆங்கிலக் கட்டுரையில் தேடினேன். கிடைக்கவில்லை. நீங்கள் வேறு இடத்திலிருந்து எழுதியிருக்கக்கூடும். அந்தச் சொற்றொடரும் தமிழாக்கம் செய்யப்படாமல் உள்ளது. திருத்திய பின்னர் சொல்லுங்கள். --கலை (பேச்சு) 21:12, 11 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
சரிசெய்துள்ளேன். கவனிக்கவும் -- ThIyAGU 03:29, 12 அக்டோபர் 2017 (UTC)
குறிப்பிட்ட பகுதியை நீக்கியுள்ளீர்கள் போலத் தெரிகிறது. நீக்காமல், நீங்கள் அந்தத் தகவலை எடுத்து பக்கத்தை மேற்கோள்காட்டி தமிழ்ப்படுத்தியிருக்கலாம். பரவாயில்லை. கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. --கலை (பேச்சு) 20:22, 12 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கியில் எந்த ஒரு கட்டுரையிலும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையை மேற்கோளாகக் காட்டாதீர்கள். ஆன்மா கட்டுரையில் அதனை நீக்கியுள்ளேன்.--Kanags (பேச்சு) 22:59, 12 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: இறுதிக்கட்டப் பரபரப்பு

[தொகு]
  • தற்போது தொடர்பங்களிப்பாளர் போட்டியில் இரண்டாம் நிலையில் நிற்கின்றீர்கள்! மகிழ்ச்சி! ஆயினும், இன்னும் சில பல கட்டுரைகளை விரிவாக்கினால் முதலாம் இடத்தை இலகுவில் பெற்றுவிடலாம் என்பது என் எண்ணம். அதுமட்டுமன்றி மூன்றாம் இடத்திலுள்ள பயனரும் கூட உங்களுக்கு போட்டியளிக்கும் வண்ணம் உள்ளார். உங்கள் நிலையை தக்கவைத்துக் கொள்ள, இன்னும் இருக்கும் ஒருசில நாட்களில் உங்களால் முடியுமான அளவு கட்டுரைகளை விரிவாக்கி வெற்றிவாய்ப்பை தக்கவைக்கலாம். வெற்றிபெற வாழ்த்துகள்!

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:54, 18 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

பரபரப்புடன் நினைவூட்டி ஊக்கம் கொடுப்பதற்கு மிக்க நன்றி ஸ்ரீஹீரன் -- ThIyAGU 17:13, 23 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் தியாகு கணேஷ்! கராத்தே கட்டுரையில், இரு மேற்கோள்கள் வழு காட்டின. நீங்கள் கவனிக்கவில்லையா? வழுவை நீக்கியுள்ளேன். எப்படி நீக்குவதென வரலாற்றில் பாருங்கள். ஒரே ref name ஐ இரு வேறு இடங்களில், வெவ்வேறு மேற்கோள்களுக்குக் கொடுத்திருந்ததால், அந்த வழு ஏற்பட்டது. எனவே வெவ்வேறு மேற்கோள்களாயின், வேறுபட்ட ref name ஐக் கொடுங்கள். அரசின்மை கட்டுரையில், மார்க்சிய எதிர்ப்பு துணைத்தலைப்பிற்குக் கீழே வரும் எந்தவொரு தகவலுக்கும் மேற்கோள்கள் கொடுக்கப்படவில்லை. தயவுசெய்து பொருத்தமான மேற்கோள்களைக் கொடுக்க முடியுமா? மேற்கோள்கள் இணைக்கப்பட்ட பின்னர் அறியத் தாருங்கள். நன்றி. --கலை (பேச்சு) 16:38, 23 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் சகோதரி கலை தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி. கராத்தே கட்டுரையின் திருத்த வரலாற்றைக் கவனித்து புரிந்து கொண்டேன். இனி அவ்வாறான தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறேன். அரசின்மை கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட மேற்கோள்கள் இடப்படாத பத்திகள் முன்னரே வேறு ஒருவரால் எழுதப்பட்டிருந்ததால் கவனிக்கவில்லை. தற்பொழுது அவற்றில் சிலவற்றுக்கு மேற்கோள்களை இணைத்துள்ளேன். கவனிக்கவும். நன்றி -- ThIyAGU 17:13, 23 அக்டோபர் 2017 (UTC)
புரிதலுக்கும், திருத்தங்களுக்கும் நன்றி. அரசின்மைக் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும், நீங்கள் ஒரு கட்டுரையை விரிவாக்கும்போது, ஏனையோர் அக்கட்டுரையில் எழுதியிருப்பவற்றையும் சரிபார்த்தால், கட்டுரை முழுமை பெறுமல்லவா? --கலை (பேச்சு) 19:05, 24 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் தியாகு கணேஷ்! தயவுசெய்து மேற்கோள்களை முறைப்படி கொடுங்கள். அதாவது மேற்கோள்கள் அனைத்தும் மேற்கோள்கள் என்னும் துணைத்தலைப்பின் கீழ் வருமாறு அமையுங்கள். நீங்கள் விரிவாக்கி சமர்ப்பித்த கட்டுரைகளில் இணைத்துள்ளேன். பாருங்கள். இறுதிக்கட்டப் பரபரப்பில் அதனை மறந்து விடுகின்றீர்களோ என்று தோன்றுகின்றது. --கலை (பேச்சு) 21:34, 31 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் கலை. போட்டி பரபரப்பில் அவ்வாறு சமர்ப்பித்துவிட்டேன். சிரமத்திற்கு வருந்துகிறேன். தற்போது நான் 4. முதலாம் கான்ஸ்டன்டைன் ‎ கட்டுரையை சமர்ப்பிக்க முயன்ற போது Error காட்டுகிறது. உதவ வேண்டுகிறேன். நன்றி-- ThIyAGU 22:23, 31 அக்டோபர் 2017 (UTC)


உதவி தேவை

[தொகு]
வணக்கம் கலை ஸ்ரீஹீரன் தினேஷ்குமார் பொன்னுசாமி தொடர்பங்களிப்பாளர் போட்டியில் முதலாம் கான்ஸ்டன்டைன்‎ என்ற கட்டுரையை சமர்ப்பிக்கும் போது “Network Error" என வழு காட்டுகிறது. ஆனால் மற்ற இணைய தளங்கள் வேலை செய்கின்றன. (https://tools.wmflabs.org/fountain/editathons/wiki-contest-2017-ta) மட்டுமே பிரச்சினை உள்ளது. உதவ வேண்டுகிறேன். நேரம் கடந்து கொண்டுள்ளதால் என்னால் சரியான நேரத்திற்துள் சமர்ப்பிக்க முடியுமா என்பதில் ஐயம் ஏற்ப்பட்டுள்ளது. -- ThIyAGU 23:24, 31 அக்டோபர் 2017 (UTC)
நீங்கள் உதவி கேட்டிருப்பதை தற்போதுதான் பார்க்கிறேன். நேற்று உங்கள் செய்தி இடப்படும் முன்னரே நான் படுக்கைக்குப் போய் விட்டேன். இன்று வேலை முடிந்து வந்து, இப்போதுதான் பார்க்கிறேன். நேற்றே பார்த்திருந்தாலும், வழுவை எவ்வாறு நீக்கிவது என்பதுபற்றி என்னால் உதவ முடியாமல் இருந்திருக்கும். ஆனால் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது போல உள்ளது. வாழ்த்துக்கள். --கலை (பேச்சு) 18:39, 1 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2017

[தொகு]

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:09, 14 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]


ஆசிய மாதம் - இறுதி வாரம்

[தொகு]

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  2. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  3. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:07, 25 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

WAM Address Collection

[தொகு]

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.

Best, Erick Guan (talk)

WAM Address Collection - 1st reminder

[தொகு]

Hi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik

Confusion in the previous message- WAM

[தொகு]

Hello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:46, 18 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

[தொகு]

அன்புள்ள தியாகு,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 19:08, 18 மார்ச் 2018 (UTC)

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

[தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

Organizing Wikipedia Asian Month 2018

[தொகு]

Hello, WAM friend!

Thanks for your outstanding contribution to Wikipedia Asian Month in last year, which is the only reason we achieved a huge success. We would like to invite you once again, to help organize the Wikipedia Asian Month on your home wiki in 2018 Edition, your participation is very important to the WAM.

Please let us know if you will continuously organizing or not, and feel free to tell us any thoughts or suggestions regarding the Wikipedia Asian Month.

Meanwhile, as a WAM organizer, we will put you on this mailing list (https://lists.wikimedia.org/mailman/listinfo/wam-announce) that exclusively for organizers. We will keep as less emails from the list as possible. But feel free to let us know if you wish to not be subscribed.

Finally, there is a survey that we would like you to take a few minutes to fill (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxUiT2RILnuOr3eacXzYwCgda6s2IcgRqSQZdYPy_GadWHxg/viewform?usp=sf_link ). This survey will make we be able to help you better. We are looking forward to see you at this year’s event.

Erick Guan (talk), on behalf of the Wikipedia Asian Month Team. 19:51, 2 சூலை 2018 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:49, 2 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2019

[தொகு]

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:15, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!

[தொகு]
குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வரவேற்கிறோம்

[தொகு]

சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தங்களை விக்கிப்பீடியாவில் காண்பது மட்டற்ற மகிழ்ச்சி. இணைந்து பங்களிப்போம். வாழ்த்துகள் ஸ்ரீ (✉) 17:47, 21 பெப்ரவரி 2020 (UTC)

நன்றி ஸ்ரீதர்-- ThIyAGU 10:28, 26 பெப்ரவரி 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது- முன்னிலை

[தொகு]

வணக்கம், விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா முதல் மாத முடிவில் 200 கட்டுரைகள் எனும் எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கிறது. மலையாளம் நம்மை விட 50 கட்டுரைகளே பின்தங்கி உள்ளது. எனவே வழக்கம்போல் இந்தப் போட்டியிலும் தமிழ் வெல்ல தங்களின் பங்களிப்பினை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி ஸ்ரீ (✉) 14:24, 1 மார்ச் 2020 (UTC)

வணக்கம் தியாகு, விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டிக்காக திரைப்பட நடிகைகள், அரசியலாளர்கள் போன்றவற்றைத் தவிர்க்கவும். நாட்டுப்புறவியலைக் கருப்பொருளாகக் கொண்ட தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். சில கட்டுரைகளை நீக்கியுள்ளேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:05, 15 மார்ச் 2020 (UTC)
வழிகாட்டுதல்களுக்கு நன்றி பார்வதிஸ்ரீ. இப்போட்டி ”தெற்காசிய பெண்கள் குறித்தான கட்டுரைகளை அதிகப்படுத்துதல்” என்ற நோக்கில் சில கட்டுரைகளை கருவியில் ஏற்றி இருந்தேன். இனி நாட்டுப்புறவியல் சார்ந்த கட்டுரைகளில் கவனம் செலுத்துகிறேன். நன்றி. -- ThIyAGU 18:45, 15 மார்ச் 2020 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது- இறுதி வாரம்

[தொகு]

வணக்கம் விக்கி பெண்களை நேசிக்கிறது போட்டி இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தற்போதுவரை (24-03-2020) வங்காளமொழி 408 கட்டுரைகளுடன் முதல் இடத்திலும் தமிழ் 352 கட்டுரைகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. எனவே தங்களது பங்களிப்பினை தொடர்ந்து வழங்கி தமிழ் வெற்றி பெற உதவுங்கள். நன்றி ஸ்ரீ (✉) 12:59, 24 மார்ச் 2020 (UTC)

வணக்கம் தியாகு கனேஷ். வேண்டுகோளை ஏற்று போட்டிகளில் பங்களித்தமைக்கு நன்றி. போட்டி விதிகளுக்கேற்ப கருவியிலிருந்து சில கட்டுரைகள் நீக்கப்பட்டுள்ளன. சில மேம்பாட்டிற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதனைக் கவனித்து மேம்படுத்தக் கேட்டுக்கொள்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:29, 6 ஏப்ரல் 2020 (UTC)

Wiki Loves Women South Asia 2020

[தொகு]

Hello!

Thank you for your contribution in Wiki Loves Women South Asia 2020. We appreciate your time and efforts in bridging gender gap on Wikipedia. Due to the novel coronavirus (COVID-19) pandemic, we will not be couriering the prizes in the form of mechanize in 2020 but instead offer a gratitude token in the form of online claimable gift coupon. Please fill this form by last at June 10 for claiming your prize for the contest.

Wiki Love and regards!

Wiki Loves Folklore International Team.

--MediaWiki message delivery (பேச்சு) 14:10, 31 மே 2020 (UTC)[பதிலளி]

Wiki Loves Women South Asia Barnstar Award

[தொகு]

Greetings!

Thank you for contributing to the Wiki Loves Women South Asia 2020. We are appreciative of your tireless efforts to create articles about Women in Folklore on Wikipedia. We are deeply inspired by your persistent efforts, dedication to bridge the gender and cultural gap on Wikipedia. Your tireless perseverance and love for the movement has brought us one step closer to our quest for attaining equity for underrepresented knowledge in our Wikimedia Projects. We are lucky to have amazing Wikimedians like you in our movement. Please find your Wiki Loves Women South Asia postcard here. Kindly obtain your postcards before 15th July 2020.

Keep shining!

Wiki Loves Women South Asia Team

MediaWiki message delivery (பேச்சு) 13:27, 5 சூலை 2020 (UTC)[பதிலளி]

Wikipedia 20th anniversary celebration edit-a-thon

[தொகு]

Dear editor,

I hope this message finds you well. Wikipedia 20th anniversary celebration edit-a-thon is going to start from tomorrow. This is a gentle reminder. Please take part. Happy editing. Thank you MediaWiki message delivery (பேச்சு) 18:03, 8 சனவரி 2021 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

[தொகு]

அன்புடையீர் Thiyagu Ganesh,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)

[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

Your application has been approved

[தொகு]

Dear Ganesh,

Thanks for applying to the Internet support program. The committee has been approved your application. I also sent an email.

We would like to ask you your phone number which you want to recharge. Also, select your three-month plan and tell us the amount, service (Jio, Airtel etc.) and region (to mark the state in Paytm sometimes). For any query please email nitesh@cis-india.org. Thank you Nitesh (CIS-A2K) (பேச்சு) 15:38, 17 செப்டம்பர் 2021 (UTC)

hi Nitesh thanks for approved my application. 7904540685 is my JIO Number need 3 Month plan / ₹599 thank you -- ThIyAGU 14:56, 25 செப்டம்பர் 2021 (UTC)

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு

[தொகு]

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

[தொகு]

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கி மாரத்தான் 2022
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


வேண்டுகோள்

[தொகு]

வணக்கம். பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பட்டியலில் சுமார் 300 கட்டுரைகள் துப்புரவு செய்யப்பட வேண்டியவையாக உள்ளன. இந்தப் பட்டியலில் நீங்கள் எழுதிய கட்டுரைகளும் உள்ளன. இப்போது நீங்கள் ஒரு தேர்ந்த பயனராக இருப்பதால், இக்கட்டுரைகளை மேம்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். மேம்படுத்திய பிறகு, 'துப்புரவு முடிந்த' எனும் பகுப்பினை இடுங்கள்; நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:12, 22 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு

[தொகு]

வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு

[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

பதக்கம்

[தொகு]
செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் தியாகு கணேஷ், செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர்

ஸ்ரீதர். ஞா (✉) 15:37, 2 சூலை 2023 (UTC)[பதிலளி]

செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!

[தொகு]

வணக்கம்.

அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!

திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.

  • சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.

-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்


பரிந்துரை

[தொகு]

வணக்கம். அண்மையில், ஆறுகள் குறித்தான கட்டுரைகளை நீங்கள் எழுதியுள்ளீர்கள். அவற்றில், ஆறுகள் தொடர்பான குறுங்கட்டுரைகள் எனும் பகுப்பினை சேர்த்துள்ளீர்கள். இன்றைய காலகட்டத்தில் நாம் இவ்வகையான பகுப்புகளை சேர்ப்பதில்லை. காரணம் 1: பெரும்பாலானோர் 5 வரிகளுக்குக் குறையாமல்தான் கட்டுரைகளை எழுதிவருகிறார்கள். காரணம் 2: ஏற்கனவே இருக்கும் குறுங்கட்டுரைகளை செம்மைப்படுத்தி வருகிறோம். எனவே மேற்கோண்டு பட்டியலில் சேர்க்காமல் இருப்பது நல்லது.

உங்களுடைய அண்மையக் கட்டுரைகள் போதுமான அளவிற்கு தகவல்களைக் கொண்டுள்ளன என்பதால் இப்பகுப்புகளை சேர்க்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது நீங்கள் விரிவாக்கலாம். மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:52, 27 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

கவனிக்க

[தொகு]

வணக்கம், நீங்கள் அண்மையில் தொடங்கிய கட்டுரைகளில் நான் செய்துள்ள சில மாற்றங்களைக் கவனித்து, நீங்கள் தொடர்ந்து புதிதாக எழுதவிருக்கும் கட்டுரைகளில் இவற்றைக் கடைப்பிடிப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 10:12, 31 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

நிச்சயம் பின்பற்றுகிறேன். வழிகாட்டுதலுக்கு நன்றி @Kanags. ThIyAGU 10:38, 3 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

மணல்தொட்டி

[தொகு]

உங்கள் பெயரில் நிறைய மணல்தொட்டிகளை உருவாக்கி வருகிறீர்கள். ஒன்றை மட்டும் பயன்படுத்துங்கள். ஏனையவற்றை நீக்கலாம்.--Kanags \உரையாடுக 10:08, 3 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

வணக்கம் @Kanags, உங்கள் பரிந்துரைக்கு நன்றி. எனது பெயரிலுள்ள மணல்தொட்டிகளை நான் தற்பொழுது புதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே தாெடர்பங்களிப்பாளர் போட்டி காலத்தில் பல கட்டுரைகளை உருவாக்கும் போது ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கும் நோக்கில் மூத்த பயனர்கள் ஆலோசனையின் படி எனது வசதிக்காக உருவாக்கியவை. பல கட்டுரைகளை ஒரே மணல்தொட்டியில் எழுதி சேமிப்பதாலும், செல்பேசியில் அவ்வப்போது தொகுப்புகள் செய்வதாலும் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும் இவ்வாறு (ஒன்றுக்கு மேற்பட்ட மணல்தொட்டிகள்) பயன்படுத்துகிறேன். மணல்தொட்டி பயன்பாடு குறித்து விதிமுறைகள் அல்லது வரையறை இருப்பின் தெரிவித்தால் இனிவரும் காலங்களில் அதன்படி செயல்படுகிறேன். நன்றி-~~~ ThIyAGU 10:34, 3 நவம்பர் 2023 (UTC)

பரிந்துரை

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்துகள் பயன்பாடு குறித்து பலதரப்பட்ட கருத்துகள் அவ்வப்போது பரிமாறப்பட்டு வருகின்றன. முடிவுகளை எட்டுவது என்பது உறுதியன்று. இந்நிலையில், சில எழுத்துகளை முற்றிலுமாக தவிர்க்கலாம் என நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக: ஷ, ஷா. இவற்றை ச, சா என எழுதலாம். எடுத்துக்காட்டாக, பிரிஜ் கிஷோர் பிண்ட் என்பதனை பிரிஜ் கிசோர் பிண்ட் என எழுதலாம். இதனை கருத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருப்பின் இங்கு தெரிவியுங்கள். நாம் உரையாடுவோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:51, 25 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை- அழைப்பு

[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,67,603 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]

சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு

[தொகு]

வணக்கம். தமிழக ஆசிரியர்கள் எழுதியக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணியானது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப் பணியை விரைந்து முடிக்கும் வகையில், சூலை 2024 மாதத்தை சிறப்பு மாதமாக அறிவிக்க இருக்கிறோம். கூடுதலாக, சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றை 13-சூலை-2024 அன்று சென்னையில் நடத்தவிருக்கிறோம். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களின் பங்களிப்பை வழங்க அழைக்கிறோம். நிகழ்வு குறித்த விவரங்கள் சிறப்புத் தொடர்-தொகுப்பு 2024 எனும் பக்கத்தில் இடப்பட்டுள்ளன. நேரடியாக பங்களிக்க இயலவில்லை எனும் சூழலில், அன்றைய நாளில் இணையம் வழியே இணைந்தும் பயனர்கள் தங்களது பங்களிப்பைச் செய்யலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:04, 14 சூன் 2024 (UTC)[பதிலளி]