வீரமலை மலைகள்
தோற்றம்
வீரமலை மலைகள் (Veeramala Hills) தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு மலையாகும். இது செருவத்தூர்கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. இந்த மலையின் மலை உச்சியில் 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட டச்சுக் கோட்டையின் இடிபாடுகள் மற்றும் கட்டுமான எச்சங்கள் காணப்படுகின்றன. கரியங்கோடு ஆறு மற்றும் சுற்றுப்புறங்களைக் காணக்கூடிய சுற்றுலாத் தளங்கள் இம்மலைப்பகுதியைச் சுற்றி உள்ளன.[1]