பயனர் பேச்சு:Almighty34

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகுப்பு

தொகுப்புகள்


1|2|3

ஆழ்வார்குறிச்சி[தொகு]

ஆழ்வார்குறிச்சி யை பற்றி நீங்கள் எழுதிய இரு விஷய்ங்கள் தவறாக உள்ளது. அங்கு வைகாசி வைசாகத்தன்று தெப்பம் கிடையாது. தை பூசத்தன்ன்று தான் தெப்பம். Nidhishaaryan (பேச்சு) 03:58, 25 மார்ச் 2021 (UTC)

@Nidhishaaryan: வணக்கம், ஆழ்வார்குறிச்சி யை பற்றி தமிழ்நாடு அரசின் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி இணையத்தில் https://www.townpanchayat.in/alwarkurichi // ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி நாள் அன்று ஸ்ரீபரமகல்யாணி சமேத சிவசைலநாதருக்கு தேர் திருவிழா நடைப்பெறுகிறது மேலும் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத்தன்று தெப்பத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது // என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தை பூசத்தன்ன்று தான் தெப்பம் நடைபெறும் என்று ஆதாரத்துடன் இணைக்கவும் --நன்றி தாமோதரன் (பேச்சு)04:28, 25 மார்ச் 2021 (UTC)

பகுப்புகள் புதுப்பித்தல்[தொகு]

  • தோழரே, சில தமிழ் முஸ்லீம் கட்டுரைகளை ஆங்கில விக்கிபீடியா போலவே ஒருங்கிணைக்கப் பகுப்புகளைப் புதுப்பித்தேன். அதை அனைத்தும் எதற்க்காக நீக்கினீர்கள் என்று கூறவும்.
  • அதில் சில கட்டுரைகளை அண்மை செய்திகளின் சான்றுகளோடு புதுப்பித்த பதிவுகளையும் எந்த ஒரு விளக்கமும் தராமல் நீக்கி இருக்கிறீர்கள். தெளிவுபடுத்தவும், அதில் எதிலும் பிழை அல்லது உண்மைத்தன்மை இல்லாத சான்றுகளா? -- நன்றிLoveall.human (பேச்சு) 09:20, 20 ஏப்ரல் 2021 (UTC)
@Loveall.human: வணக்கம், தாங்கள் நடிகர் ஜெய், நடிகை மோனிகா, இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஏ. ஆர். ரகுமான் போன்றவர்களின் கட்டுரையில் பகுப்பு:தமிழ் முசுலீம்களின் வரலாறு, பகுப்பு:தமிழ்நாட்டில் இசுலாம் போன்ற தேவையற்ற பகுப்புகள் இணைந்துள்ளீர்கள்.அதை தான் நீக்கினேன் (உதாரணம்: நடிகர்கள் இரசினிகாந்து, அஜித் குமார் போன்றவர்கள் இந்து என்பதால் அவர்களது கட்டுரையில் ஹிந்துகளின் வரலாறு போன்ற பகுப்புகள் இணைக்க முடியாது அது போல தான் ) மேலும் நடிகர் ஜெய், நடிகை மோனிகா போன்றவர்களுக்கும் பகுப்பு:தமிழ் முசுலீம்களின் வரலாறு தொடர்பு இல்லை என்பதால் நீக்கியுள்ளேன்.நன்றி
-- தாமோதரன் (பேச்சு) 09:46, 20 ஏப்ரல் 2021 (UTC)
@Loveall.human:// சில கட்டுரைகளை அண்மை செய்திகளின் சான்றுகளோடு புதுப்பித்த பதிவுகளையும் எந்த ஒரு விளக்கமும் தராமல் நீக்கி இருக்கிறீர்கள்.//
தாங்கள் சான்றுடன் எழுதிய எந்த கட்டுரையும் நான் நீக்கவில்லை மேலும் இனி நீங்கள் பகுப்பு:தமிழ் முசுலீம்களின் வரலாறு, பகுப்பு:தமிழ்நாட்டில் இசுலாம்,பகுப்பு:தமிழ் முசுலீம்கள் போன்ற தேவையற்ற பகுப்பு இணைக்க வேண்டாம்.நன்றி-- தாமோதரன் (பேச்சு) 10:02, 20 ஏப்ரல் 2021 (UTC)
@Almighty34:தோழரே, ஹிந்து பெரும்பான்மை நாட்டில் கூறாமலே அனைவரும் ஒருத்தர் ஹிந்து என்று பொருள் கொள்ள முடியும். ஆனால் சொற்ப எண்ணிக்கையில் காணப்படும் சிறுபான்மையினரின் வரலாறு அப்படி அல்ல. எப்படி கிறித்தவ பெரும்பான்மை நாடுகளில் சிறுபான்மை ஹிந்து நபர்களை வரலாற்றின் தொகுப்பில் ஒருங்கிணைக்கப் பகுக்கிறோமோ அதுபோல் தான். மத ரீதியில் பாகுபாடு செய்யவோ, போட்டியோ அல்ல, ஆனால் சிறுபான்மையினரின் வரலாறு எப்படி தொகுக்கலாம் என்ற இலக்கிய நோக்கத்துக்காக. ஆனால் நீங்கள் கூறியதுபோல் சம்ம்மதம் இல்லாத பகுப்புகளை டேக் செய்வதில் முடிவெடுப்பதில் தான் குழப்பம் ஆனது, ஆகையால் பயனளிக்கும் என்று சம்மதம்பட்ட அனைத்து பகுப்புகளையும் இணைத்தேன். இனி எந்தப் பகுப்புகள் இத்தகைய பக்கங்களுக்குக் கருத வேண்டும்? நன்றி Loveall.human (பேச்சு) 10:32, 20 ஏப்ரல் 2021 (UTC)
@Loveall.human:
சஞ்சீவ் கட்டுரையில் தாங்கள் இணைத்த பகுப்பு:தமிழ் முசுலீம்கள் பகுப்பு தமிழ் விக்கிபீடியா நிர்வாகி அவர்களால் நீக்கப்பட்டுள்ளதை பாருங்கள் நன்றி-- தாமோதரன் (பேச்சு) 10:06, 20 ஏப்ரல் 2021 (UTC)
@Almighty34: சரி. அவரிடம் விளக்கம் கேட்கின்றேன். நன்றி Loveall.human (பேச்சு) 10:32, 20 ஏப்ரல் 2021 (UTC)
@Loveall.human:
தமிழ் முசுலிம் நபர்கள் என்ற பகுப்பு மட்டும் இணையுங்கள், தமிழ் முசுலிம்கள் என்கிற பகுப்பு தனி நபர்கள் குறிப்பதற்கானது அல்ல. தமிழ் முசுலிம்கள் என்கிற பகுப்பு - முஸ்லீம் அமைப்புகளையும், முஸ்லீம் சமூகத்தின் உட்பிரிவுகளையும் குறிக்க உருவாக்கப்பட்ட பகுப்பு ஆகும்.தமிழ் முசுலீம்களின் வரலாறு என்கிற பகுப்பு இசுலாமியர் ஆட்சி மற்றும் இசுலாமிய மன்னர்கள் பற்றிய குறிப்பதற்கானது.நன்றி-- தாமோதரன் (பேச்சு) 10:55, 20 ஏப்ரல் 2021 (UTC)
@Almighty34: நன்றி. இனி நினைவில் வைத்துக்கொள்கின்றேன் 👍 Loveall.human (பேச்சு) 11:24, 20 ஏப்ரல் 2021 (UTC)

உதவி கோருதல்[தொகு]

வணக்கம். நான் தமிழாக்கம் செய்த ஊறுகாய் முட்டை என்ற கட்டுரையை தாங்கள் தலைப்பை மாற்றியதற்கு நன்றி. ஆனால் அந்த கட்டுரை எனது பங்களிப்பு எண்ணிக்கையில் இருந்து நீக்கியதற்கான காரணம் என்னவென்று கூற முடியுமா? தலைப்பை மாற்றி ஒரு கட்டுரையை நகர்த்துவதன் மூலம் அதை மொழிபெயர்த்த பயனர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட காரணம் என்ன? M.Muthuselvi (பேச்சு) 29 ஏப்ரல் 2021 (UTC)

@M.Muthuselvi: வணக்கம்,

முட்டை ஊறுகாய் கட்டுரை தங்களின் பங்களிப்பு எண்ணிக்கையில் தான் உள்ளது. நீங்கள் தொடங்கிய கட்டுரைகளை காண்க தலைப்பை மாற்றி ஒரு கட்டுரையை நகர்த்துவதன் மூலம் அதை மொழிபெயர்த்த பயனரின் பங்களிப்பை நீக்க முடியாது.நன்றி-- தாமோதரன் (பேச்சு) 04:47, 29 ஏப்ரல் 2021 (UTC)

நீக்க கோரிக்கை[தொகு]

நீங்கள் உருவாக்கிய மருத்துவ சமுதாயம் சார்ந்த பக்கத்தில் , எங்கள் சமூகத்தினிரை கொச்சை வழக்கு சொல்லான அம்பட்டன் என எழுதப்பட்டுள்ளது , எனவே இதை நீக்க வேண்டும் Bala1995619 (பேச்சு) 06:52, 1 மே 2021 (UTC)

@Bala1995619: வணக்கம்,

நாவிதர் சமூக கட்டுரை என்னால் தொடக்கப்பட்ட கட்டுரை அல்ல. உங்களுடைய கருத்துகளை, அந்த கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தெரிவியுங்கள், பிற பயனர்களின் கருத்துகளை கொண்டு நாம் முடிவு எடுக்கலாம். நன்றி-- தாமோதரன் (பேச்சு) 08:01, 1 மே 2021 (UTC)

பகுப்பு சேர்த்தல் குறித்து[தொகு]

நான் உருவாக்கிய ஒரு சில கட்டுரைகளில், 16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற பகுப்பினைச் சேர்த்துள்ளீர். ஆனால் அந்த கட்டுரைகளில் அப்பகுப்பிற்கான விளக்கம் தகவல் ஏதும் இல்லை. இது போன்ற செயல்களால் தமிழ்விக்கிப்பீடியாவிற்கு எவ்வித பயனும் இல்லை. கட்டுரையை மேம்படுத்த விரும்பினால் ஏதாவது உருப்படியாக செய்யவும். அதைவிடுத்து ஒரு இடைவெளியினை நீக்குவதால், தமிழுக்கு எவ்வித பயனும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். --சத்திரத்தான் (பேச்சு) 09:55, 3 மே 2021 (UTC)

@சத்திரத்தான்: ஐயா அவர்களுக்கு வணக்கம், ஐயா தாங்கள் உருவாக்கிய கட்டுரை மட்டும் அல்ல தற்போது 2021இல் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கட்டுரையிலும் 16 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற பகுப்பினைச் சேர்த்துள்ளேன்.இனிமேல் தான் அந்த கட்டுரைகளை விரிவாக்கம் செய்யவேண்டியுள்ளது.தற்போது வெற்றி பெற்று உறுப்பினர்களை எளிதாக அடையாளப்படுத்துவதற்கு தான் அந்த பகுப்பை இணைத்துள்ளேன்.

மேலும் நான் ரோந்திடுபவர்கள் என்ற அணுக்கம் (சிறப்புரிமை) பெற்றுள்ளதால் தாங்கள் உட்பட மற்ற அனைத்து பயனர்கள் உருவாக்கும் கட்டுரைகளை சுற்றுக்காவல் செய்ய வேண்டியது எனது கடமையாகும் அவ்வாறு சுற்றுக்காவல் செய்யும் போது தாங்கள் உருவாக்கி சில கட்டுரையில் உள்ள இடைவெளியினை நீக்கினேன். நான் மட்டும் அல்ல சுற்றுக்காவல் செய்யும் அனைவரும் அதில் திருத்தங்கள் இருந்தால் அதை சரி செய்வார்கள் அதை தான் நான் செய்தேன் நன்றி ஐயா. தாமோதரன் (பேச்சு) 10:39, 3 மே 2021 (UTC)

@Almighty34: தகவலுக்கு நன்றி. சிறப்புரிமை பெற்று செயல்படுவதாக சொல்லி உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி. யார் வேண்டுமானாலும் திருத்தம் இருந்தால் செய்யலாம், செய்யவேண்டியது அவசியம் என்பதை நான் அறிவேன். சிறப்பு அணுக்கம் பெற்ற தாங்கள் தங்களுடைய கட்டுரைகளில் எத்தனை திருத்தங்கள் இருந்தது என்பதை தாங்கள் அறிந்ததே. அதை ஏன் தாங்கள் செய்யவில்லை என தெரியவில்லை. நான் தொகுத்த கட்டுரையில் திருத்தங்கள் மேற்கொண்ட எவரிடமும் நான் இது போன்று உரையாடியதில்லை, ஏனெனில் அவர்களின் செயல் கட்டுரையின் மேம்பாட்டின்பால் இருந்தது. எழுத்துப் பிழை இருப்பின் நீக்கியிருந்தால் மகிழ்ச்சி. வெறுமனே ஒரு இடைவெளியினை நீக்குவதால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எவ்வித பெருமையும் இல்லை.

கட்டுரையில் பகுப்பினைச் சேர்த்து பின்னர் மேம்படுத்தலாம் என்பது, என்னவகை நடைமுறை என எனக்குத் தெரியவில்லை.--சத்திரத்தான் (பேச்சு) 13:37, 4 மே 2021 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Almighty34&oldid=3141936" இருந்து மீள்விக்கப்பட்டது