உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிப்பீடியா நிர்வாகியாக்கும்படி (sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். நிர்வாகிகளின் பொறுப்பு என்ன, அவர்கள் என்ன செய்வார்கள் என்று அறிய நிர்வாகிகள் பக்கம் சென்று பார்க்கவும். ஆங்கில விக்கியில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.

சனவரி 2, 2019 முதல் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிற புதிய நிர்வாகிகள் விக்கி நிர்வாகிகள் பள்ளித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விதிமுறைகள்[தொகு]

பண்புகள்[தொகு]

விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிப்பீடியா சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளாக முன்மொழியப்படும் தேதி நிலவரத்தின் படி,

 • குறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகள்

மற்றும்/அல்லது

8 குறைந்தது 50 கட்டுரைகள் உருவாக்கம்

ஆகியவற்றைச் செய்து

 • கடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு சில மாதங்களிலேனும் முனைப்புடன் செயற்பட்டிருப்பவராகவும்
 • பொதுவாக, மற்ற பயனர்களுடன் கனிவுடன் பழகுபவராகவும்
 • பொதுவாக, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சியைக் காணும் வகையில், அதற்காக கட்டுரை ஆக்கத்துக்குக் கூடுதலாக பிற பயனர்களுக்கு உதவ முனைதல், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றல் போன்றவற்றைச் செய்ய முனைபவராகவும்
 • பொதுவாக, தமிழ் விக்கிமீடியா விதிகள், பண்பாட்டை மதித்து, கற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க முனைபவராகவும்

இருந்தால் போதுமானது.

நியமன முறை[தொகு]

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். நிர்வாகிகள் தேர்தல் என்பது இருப்பவர்களிலேயே யார் சிறந்தவர்கள் என்று ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுக்கும் போட்டி இல்லை. முன்மொழியப்படும் ஒவ்வொருவரும் சமூகத்தின் ஆதரவைப் பெற்றால் நிர்வாகி ஆகலாம். ஒவ்வொரு முறையும் ஆகக் கூடுதலாக ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று விக்கி நிர்வாகிகள் பள்ளித் திட்டம் குறிப்பிடுவதால், சற்றுப் பொறுத்திருந்து பிறகு நிர்வாகி ஆகலாம் என்று நினைப்பவர்கள் தாமாகவே விட்டுக் கொடுத்த காத்திருக்க முன்வரலாம்.

மேற்கண்ட பண்புகளை உடைய ஆறு பேர் தங்களைத் தாங்களே முன்மொழியலாம். அல்லது, மற்ற பயனர்கள் தக்கவர்களை அடையாளங்கண்டு பரிந்துரைக்கலாம். முன்மொழியும் போது என்ன காரணத்துக்காப் பரிந்துரைக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்குப் பயனர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்து நிர்வாக அணுக்கம் கொண்டு எத்தகைய பணிகளைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் மீது மற்ற பயனர்கள் ஒரு வார காலம் ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை வாக்குகளை இடலாம்.

பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவு இல்லாதிருப்பின், இக்காலம் அதிகாரிகளினால் நீட்டிக்கப்படலாம். பொதுவாக, 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது. போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்து வரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக முன்னரே நீக்கி விடலாம். எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிப்பீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.

இங்கு தகுதிகளைப் "பொதுவாக" என்று குறிப்பிடுவதன் நோக்கம், இவற்றுக்குப் புறம்பாக ஓரிரு முறை புரிதல் இன்றியோ உணர்ச்சி வசப்பட்டோ நடந்த நிகழ்வுகளைப் பெருந்தன்மையுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே. ஒருவர் தொடர்ந்து எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பதை வைத்து ஒருவரது பக்குவத்தைக் கவனித்தால் போதுமானது

உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும்.

பயனர் கணக்குகள் இல்லாதவர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.

படிமுறைகள்[தொகு]

 1. நீங்கள் நியமிக்க விரும்புகிறவருக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்புகள், தகுதிகள் உள்ளனவா என்று சரி பார்க்கவும்.
 2. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும்.
 3. இங்கு புதிய பகுதி ஒன்றில் அவரது பயனர் பெயரை இடவும்.
 4. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும். அதன் கீழ் உங்கள் ஒப்பத்தை இடவும்.
 5. குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந்நியமனத்தை ஏற்றுக் கொண்டால் இப்பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக் கொள்ளவும்.
 6. தேதியை (00:00:00) இடவும். குறைந்தது ஏழு நாட்களுக்கு வாக்கெடுப்பு நடக்கும்.
 7. விக்கிப் பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/கருத்து எனத் தமது நிலைப்பாடுகளை முன் வைக்க அழைக்கப்படுவார்கள்.
 8. 80% ஆதரவு வாக்குகள் இருக்கும் பட்சத்தில் அந்தப் பயனர் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்படுவார்.

நடப்பு வேண்டுகோள்கள்[தொகு]