விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 13

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்க்குரிசில் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 21, 2013) (வாக்கு: 36|1|0)[தொகு]

தமிழ்க்குரிசில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீரான பங்களிப்பை அளித்து வருகிறார். குறிப்பாக விக்கி நுட்பம், ஒத்தாசை, பரப்புரை, துப்புரவு முதலிய பணிகளில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. பண்பான உரையாடல்களுக்கு அறியப்படுபவர். இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் பராமரிப்புப் பணிகள் பலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருகுகம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி இரவி! விக்கியர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ஒளிர்வேன் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:24, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

  1. 👍 விருப்பம் 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:33, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:49, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:53, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:37, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:08, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:27, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:46, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. --Antonஃ٠•●♥Talk♥●•٠ஃ 10:46, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  21. --மணியன் (பேச்சு) 11:40, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  22. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:13, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  23. நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  24. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  25. சண்முகம்ப7 (பேச்சு) 16:55, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  26. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:15, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  27. 👍 விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 18:31, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  28. 👍 விருப்பம்--கிருஷ்ணாபேச்சு 01:32, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  29. --செல்வா (பேச்சு) 22:58, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  30. --Sengai Podhuvan (பேச்சு) 20:37, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  31. --நீச்சல்காரன் (பேச்சு) 04:56, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  32. --சிவகோசரன் (பேச்சு) 10:06, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  33. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:16, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  34. எஸ்ஸார் (பேச்சு)
  35. 👍 விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 16:52, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  36. மதனாகரன் (பேச்சு) 16:44, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு[தொகு]

--Tamil23 (பேச்சு) 03:20, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நடுநிலை[தொகு]

கேள்விகள்[தொகு]

கருத்து[தொகு]

  • எதிர்ப்பிற்கான கருத்தினை கவனத்தில் கொள்ளும் அதே வேளையில், ஆதரவிற்கான கருத்தினையும் நாம் கவனிக்கவேண்டும். அதற்கு வாக்களித்தவர், தனது கருத்தினை இடவேண்டும் என்பதனால்... தமிழ்க்குரிசில் குறித்த எனது கருத்துகளை இங்கு நான் பதிகிறேன்.
  1. தமிழ்க்குரிசில் ஒரு பண்புமிக்க இளைஞர். தனது நளினமான பேச்சு மற்றும் செயல்களினால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு காந்தம். அவரின் பேச்சுப் பக்கங்களில் அவருக்குக் கிடைத்த பதக்கங்கள் இதனைப் பறைச் சாற்றும்.
  2. நிறைய புதுப்பயனர்களுக்கு உதவி செய்து, அவர்களை தொடர் பங்களிப்பாளர்களாக்கிய பெருமை தமிழ்க்குரிசிலையும் சாரும்.
  3. நிறைய பங்களிக்க வேண்டும் என்ற ஆர்வமுடைய, கல்வி கற்று வரும் ஒரு மாணவர்; கண்களை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியும், அத்துடன் விக்கியில் பங்களிப்பவர். அலைபேசியில் உள்ள இணையதள வசதியினை மடிக்கணினியுடன் இணைத்து அதன்மூலம் பங்களித்து வரும் ஒரு துடிப்பான இளைஞர். எத்தனை இளைஞர்கள் இக்காலகட்டத்தில் இப்படி இருப்பார்?
  4. நிறைய கட்டுரைகளை படைக்கவேண்டும் எனும் ஆசை அனைவருக்குமே இருக்கும். இவர் குறுங்கட்டுரைகளை எழுதினாலும், அவ்வப்போது அக்கட்டுரைகளை வாய்ப்பு வரும்போது விரிவாக்குதலை நான் கவனித்துள்ளேன்.
  5. இவர் வேண்டுமென்றே பிறமொழி எழுத்துக்கள், சொற்களை கட்டுரைகளில் (அல்லது தலைப்புகளில்) புகுத்துவதாக நான் நினைக்கவில்லை. சில தருணங்களில் அறியாமல் செய்திருக்கலாம்; சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளும் பண்பினை இவரிடம் நான் கண்டுள்ளேன்.
  6. பொதுவாக அனைவருக்கும் வரும் சிறுசிறு எழுத்துப் பிழைகள் இவருக்கும் வரலாம்; மற்றபடி பெரிதாக இலக்கணப்பிழை எதனையும் நான் காணவில்லை. இளவயதில் அனைத்தையும் சுத்தமாக செய்ய இயலாது. அனுபவத்தின் மூலமாகவே எவரும் தன்னை சீர்படுத்திகொள்ள இயலும். அந்த ஊக்கம் இவரின் உள்ளத்தில் இருக்கிறது.
  7. பட்டக்கல்வியோடு தனிப்பட்ட முறையில் சனி, ஞாயிறுகளில் சில வகுப்புகளுக்கு இவர் செல்வதாக நான் அறிகிறேன். அங்கு கற்கும் கல்வியினை விக்கியின் தொழில்நுட்ப தேவைகளுக்கு பயன்படுத்தப் போவதாக இவர் ஒருமுறை தெரிவித்துள்ளார்.
  8. இவருக்கு நிர்வாக அணுக்கம் தரப்பட்டால், காத்திருக்க வேண்டியதில்லை; தான் செய்ய வேண்டிய நற்செயல்களை உடனுக்குடன் இவரால் செய்ய இயலும்! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:49, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தங்களின் அன்பிற்கு நன்றி ஐயா! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:58, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்புக்கான காரணங்கள்: மிகக்குறுகிய கட்டுரைகளை உருவாக்கி, விரிபுபடுத்தாமை. தமிழ் இலக்கண முறைகளைப் பின்பற்றாமை. உதாரணம்: தமிழுக்கு முன், பின் வரக்கூடாது என்ற எழுத்துக்களில் கட்டுரை உருவாக்கம்/சொற்கள் உருவாக்குதல். அந்நிய மொழிச் சொற்களை அப்படியே வலிந்து தலைப்புகளாக்குதல். மிகவும் அதிகளவான கிரந்தச் சொற்களின் பாவனை, கட்டுரைகள் உருவாக்குதல். --Tamil23 (பேச்சு) 03:20, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் என்பது மொழிநடைக்கானது அல்ல என்பதைப் புரிந்துகொள்க. எந்தவொரு பயனரும் இதை பின்பற்ற வேண்டியது அவசியமே! நிர்வாக அணுக்கம் பெற்றவர்கள் பக்கங்களை நிர்வகிக்க முடியும். எனவே, மொழிநடை முதன்மை வகிப்பது அல்ல (கட்டுரைக்கு மட்டும் எழுத்துநடை அவசியம்). தமிழுக்கு முன், பின் வராத எழுத்துகளில் தலைப்புகளை நான் உருவாக்குவதில்லை. ஃ என்பது பொதுவழக்கில் உள்ளதே! அந்நிய மொழிச் சொற்களை திணித்துள்ளேன் என்பது தவறு. கட்டுரைகளில் எங்கெல்லாம் சொற்கள் வருகின்றனவோ அங்கெல்லாம் தமிழிலேயே எழுதுகிறேன். மேலும், நான் தனித்தமிழ் பற்றாளன்! நான் அன்னிய மொழிச் சொற்களை திணிப்பதாகக் கூறியிருப்பது வியப்பளிக்கிறது. வேற்று மொழிப் பெயர்களை மட்டும் அப்படியே எழுதுகிறேன். கிரந்தம் சேர்த்தோ, நீக்கியோ எழுதுகிறேன். கிரந்தச் சொற்கள் பாவனை எனக் கூறியிருப்பது தவறு. பெயர்கள் சமசுகிருதமாய் இருந்தால் அப்படியே பயன்படுத்துகிறேன். ”பிரத்யேகம்” என்றுகூட சேர்ப்பதில்லை, பதிலாக ”சிறப்பு” என்றே எழுதுகிறேன். குறுகிய கட்டுரைகளை உருவாக்குகிறேன் என்பது உண்மையே! வருந்துகிறேன். தமிழில் கட்டுரைகள் அதிகம் இருக்க வேண்டும் என்ற ஆசையே இதற்கு காரணம். ஆயினும், அடிக்கடி நேரம் கிடைக்கும்போது விரிவாக்கிவருகிறேன். இனி, குறுங்கட்டுரைகளை உருவாக்கமாட்டேன் என்று வாக்களிக்க முடியாது. ஆயினும், முடிந்தவரை சீர்படுத்தியும், விரிவாக்கியும் வருவேன் என்று உறுதி கூறுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:58, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ்க்குரிசில் உங்களுக்குள்ள தமிழ்ப் பற்றையும், விக்கி ஈடுபாட்டினையும் நன்கு அறிவேன். ஆயினும், இலக்கண விதி பற்றிய உங்கள் புரிந்துணர்வை சற்று மேம்படுத்தலாம் என்பது என் கருத்து. //ஃ என்பது பொதுவழக்கில் உள்ளதே!// பொதுவழக்கில்தான் கிரந்தம் உட்பட்ட அன்னிய மொழிச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றனவே. அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளாபோது "ஃ" பற்றிய இலக்கண விதியையும் ஏற்றுக் கொள்ளல் சிறப்பு. பார்க்க: பேச்சு:தெமாகு பெரிய பள்ளிவாசல் (இதனை நிருவாகி தரத்துக்கான விடயமாக எடுத்துக்கொள்ளாமல், இலக்கண விதி பற்றிய உரையாடலாகவும் உங்கள் பதிலுக்கான என் கருத்தாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்.)--Anton·٠•●♥Talk♥●•٠· 06:16, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தமிழ்க்குரிசில், பதிலளித்தமைக்கு நன்றி. தமிழில் சொல்லின் தொடக்கத்திலும் இறுதியிலும் இன்னின்ன எழுத்துகள்தான் வர முடியும் என்ற விதியைத்தான் அன்ரன் நினைவூட்டியுள்ளார். மற்றபடி நிருவாகப்பணியை மட்டும் செய்வதானால் அது பொருட்டல்ல என அவரே குறிப்பிடவும் செய்துள்ளார். எழுத்துப்பணியின்போது அதை நினைவில் கொள்க. விதிகள் தெரியாதது குற்றமில்லை, ஆனால் மற்றவர்கள் திருத்தும்போது இலக்கணம் தலைப்பு இப்படித்தான் இருக்க வேண்டுமென வலியுறுத்தாமல் இருந்தால் போதுமானது. நீங்கள் அப்படி செய்ததாக எனக்குத் தெரியாது. இது பொதுவாகக் குறிப்பிடும் கருத்து. -- சுந்தர் \பேச்சு 12:47, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வத்சன் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 28, 2013) (வாக்கு: 26|1|6)[தொகு]

வத்சன், 2009 முதல் தமிழ் விக்கிப்பீடியா பணிகளில் ஈடுட்டுள்ளார். கட்டுரையாக்கம், சமூக ஊடகப் பரப்புரைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யவும் கூடிய பங்களிப்புகளை ஊக்குவிக்கவும் இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிர்வாக பொறுப்புக்கு என்னை பரிந்துரைத்ததிற்கு நன்றிகள்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு இயன்றவரை பங்களிப்பேன். - Vatsan34 (பேச்சு) 16:15, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:34, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:44, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. 👍 விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:40, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:13, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:47, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:17, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --மணியன் (பேச்சு) 11:45, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:12, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:18, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  21. 👍 விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 18:33, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  22. 👍 விருப்பம்--கிருஷ்ணாபேச்சு 01:32, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  23. --செல்வா (பேச்சு) 00:16, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  24. --சிவகோசரன் (பேச்சு) 10:09, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  25. --Sengai Podhuvan (பேச்சு) 20:43, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  26. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:19, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு[தொகு]

  1. --Tamil23 (பேச்சு) 03:23, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நடுநிலை[தொகு]

  1. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. --Anton (பேச்சு) 16:47, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. எஸ்ஸார் (பேச்சு)
  5. மதனாகரன் (பேச்சு) 16:45, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. --Kanags \உரையாடுக 22:03, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கேள்விகள்[தொகு]

கருத்து[தொகு]

  • விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் ஆதாரங்களோடும், விக்கியாக்கத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனவர். எதிர்காலத்தில் அனைத்து கட்டுரைகளையும் இனங்கண்டு செம்மைப்படுத்த உதவுவார் என்பதால் என்னுடைய ஆதரவு. வாழ்த்துகள் வத்சன்! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:47, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி சகோதரரே!-Vatsan34 (பேச்சு) 16:15, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • விக்கியில் உங்கள் ஈடுபாடுபற்றி நான் அறிந்திராததால் நடுநிலை வகிக்கிறேன். --Anton (பேச்சு) 16:47, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • விக்கியில் உங்கள் ஈடுபாடுபற்றி நான் அறிந்திராததால் நடுநிலை வகிக்கிறேன், 2009ல் இருந்து இருக்கிங்க எப்படி கவனிக்காம இருந்தேன் :( --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • கட்டுரைகளில் விக்கி நடையில் மேலும் முன்னேற்றம் தேவை.--Kanags \உரையாடுக 21:27, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • ஏற்கனவே, முதற்பக்கத்தில் உங்களைக் கண்டிருக்கிறேன். வாழ்த்துகிறேன் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:18, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • எதிர்ப்புக்கான காரணங்கள்: தமிழ் இலக்கண முறைகளைப் பின்பற்றாமை. உதாரணம்: தமிழுக்கு முன், பின் வரக்கூடாது என்ற எழுத்துக்களில் கட்டுரை உருவாக்கம்/சொற்கள் உருவாக்குதல். அந்நிய மொழிச் சொற்களை அப்படியே வலிந்து தலைப்புகளாக்குதல். மிகவும் அதிகளவான கிரந்தச் சொற்களின் பாவனை, கட்டுரைகள் உருவாக்குதல். இலகு தமிழில் கட்டுரை எழுதாமை (கடினமாகவே புரிந்து கொள்ள முடிகிறது). −முன்நிற்கும் கருத்து Tamil23 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
  • கட்டுரைகள் விக்கிநடையில் (இலக்கண முறை, கிரந்தப் பயன்பாடு போன்றவை விக்கிநடைக்குள் அடங்காது) எழுதுவது நிருவாகி ஒருவருக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். நிருவாகி ஒருவருக்கு இது தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை எனக் கருதினால், எனது எதிர்ப்பை மீளப் பெற்று மீண்டும் நடுநிலைக்கு மாற்றி விடுகிறேன்.--Kanags \உரையாடுக 23:22, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இவரின் அண்மைய பங்களிப்புகளில் இருந்து விக்கி நடை பிரச்சினை தொடர்பான இரு எடுத்துக்காட்டுகளைத் தந்தால் தொடர்ந்து உரையாட உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 09:55, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தாமதத்திற்கு மன்னிக்கவும்! நான் பள்ளியில் முழுதும் ஹிந்தி மற்றும் சம்ஸ்க்ருதம் இரண்டாம் மொழியாக பயின்றவன்.எழுத்துத் தமிழ் என்பதே செய்தித்தாள்கள் மற்றும் குமுதம், ஆனந்த விகடன் போன்ற வார இதழ்கள் மூலமாக தான் எனக்கு பரிச்சயம். ஆகையால், எனக்கு தமிழ் இலக்கணத்தில் புலமை இல்லை. புலமை என்ன, அறிமுகம் கூட இல்லை. விக்கிப்பீடியாவில் எனக்கு தெரிந்த தமிழை வைத்து கட்டுரைகளை மொழிபெயர்த்தும் உருவாக்கியும் கொண்டிருந்தேன். ஆக, எனக்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் நியாயமானதே. விக்கி நடையில் எழுத முயல்கிறேன். ஆனால், கட்டுரைப் போட்டிக்காக இரண்டு கட்டுரைகளை சமீபமாக அவசரமாக தொகுக்க நேர்ந்தது. ஆதலால் அது விக்கி நடைக்கு ஒவ்வாது இருந்தது. இவ்வாறு நிகழ்ந்ததை தவிர, நான் இதற்க்கு முன்னர் விக்கி நடையில் எழுதவே முயன்றுள்ளேன். - Vatsan34 (பேச்சு) 14:22, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விளக்கத்துக்கு நன்றி, வத்சன். தமிழை முறையாகப் படிக்காத நிலையிலும் தமிழ் விக்கிப்பீடியாமீது அக்கறைகொண்டு பங்களிக்க வந்துள்ளதைக் கேட்டு மகிழ்ச்சியடைகிறேன். இங்கு மற்றவர்கள் உரை திருத்துவதைப் பார்த்தே நம்மில் பலரும் நமது நடையை மேம்படுத்திக் கொள்கிறோம். அதைத் தொடர்ந்து பின்பற்றுங்கள், முன்பு கணேசுபாட்டை இயக்கிய கணேசு என்பவரும் தமிழ்நாட்டுக்கு வெளியே வந்ததால் தமிழில் எழுத முடியவில்லை. ஆனால், நுட்ப அளவில் நல்ல பணியாற்றினார். அது போல உங்களால் எதைத் திறம்படச் செய்ய முடிகிறதோ அவ்வாறான பணிகளைத் தேர்ந்தெடுத்துச் செய்து வளம் சேருங்கள். -- சுந்தர் \பேச்சு 14:32, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வத்சனின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு எனது எதிர்ப்பு வாக்கை மீள எடுத்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் வத்சன்.--Kanags \உரையாடுக 22:03, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வத்சன், நீங்கள் தமிழை முறையாகப் படிக்காவிட்டாலும் நீங்கள் இவ்வளவு ஆர்வம் கொன்டு இவ்வளவு நன்றாக எழுதுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. நீங்கள் அளித்த விளக்கத்துக்கு நன்றி.--செல்வா (பேச்சு) 12:51, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தற்காலிகமாக விக்கியை அணுகுவதில் வத்சனுக்குத் தொழில்நுட்பச் சிக்கல் இருப்பதால், விளக்கம் கொடுப்பதற்கான காலத்தை நீட்டித்துத் தருமாறு முகநூலில் என்னிடம் தெரிவித்துள்ளார்.--இரவி (பேச்சு) 07:53, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஒரு வாரம் நீட்டித்துள்ளேன், இரவி. -- சுந்தர் \பேச்சு 08:44, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இன்றுவரை எனது தொலைப்பேசி சீராகவில்லை. பிரவுசிங் சென்டர் மூலமே இன்று புகுபதிகை செய்து பதில் அளித்துள்ளேன். நீட்டித்தறக்கு நன்றி மற்றும் தாமதத்திற்கு மன்னிக்கவும்!- Vatsan34 (பேச்சு) 14:37, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கிருஷ்ணபிரசாத் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 21, 2013) (வாக்கு: 28|1|4)[தொகு]

கிருசுணபிரசாத், 2011 முதல் தமிழ் விக்கிப்பீடியா பணிகளில் ஈடுட்டுள்ளார். கட்டுரையாக்கம், உரை திருத்தம், வார்ப்புரு பராமரிப்பு முதலிய பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யவும் கூடிய பங்களிப்புகளை ஊக்குவிக்கவும் இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பரிந்துரையை ஏற்கின்றேன். நன்றி--கிருஷ்ணாபேச்சு 09:58, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

  1. 👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. 👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. 👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:43, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  5. 👍 விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  6. 👍 விருப்பம்--கலை (பேச்சு) 10:40, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  7. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  8. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  9. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:35, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  10. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  11. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  12. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:14, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  13. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  14. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:47, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  15. 👍 விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  16. 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:15, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  17. --மணியன் (பேச்சு) 11:50, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  18. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:05, 9 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  19. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  20. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:18, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  21. --Sengai Podhuvan (பேச்சு) 20:44, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  22. --சோடாபாட்டில்உரையாடுக 04:23, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  23. --சிவகோசரன் (பேச்சு) 10:09, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  24. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:20, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  25. --சண்முகம்ப7 (பேச்சு) 15:48, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  26. ----V.B.Manikandan (பேச்சு) 02:38, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  27. எஸ்ஸார் (பேச்சு) 14:04, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  28. மதனாகரன் (பேச்சு) 16:50, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு[தொகு]

  1. --Tamil23 (பேச்சு) 03:27, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நடுநிலை[தொகு]

  1. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:04, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  2. --Anton (பேச்சு) 10:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  4. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கேள்விகள்[தொகு]

கருத்து[தொகு]

எதிர்ப்புக்கான காரணங்கள்: தமிழ் இலக்கண முறைகளைப் பின்பற்றாமை. உதாரணம்: தமிழுக்கு முன், பின் வரக்கூடாது என்ற எழுத்துக்களில் கட்டுரை உருவாக்கம்/சொற்கள் உருவாக்குதல். அந்நிய மொழிச் சொற்களை அப்படியே வலிந்து தலைப்புகளாக்குதல். மிகவும் அதிகளவான கிரந்தச் சொற்களின் பாவனை, கட்டுரைகள் உருவாக்குதல்.--Tamil23 (பேச்சு) 03:27, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்களின் நேரடியான விமர்சனத்தை வரவேற்கிறேன், தொழில் நுட்பம் சார்ந்த கட்டுரைகளில் பொதுவாக காணப்படும் குறைபாடுகள் இவை, கட்டுரை உரை திருத்தங்களில் இக் குறைகளை நீக்கிவிடலாம் இனி கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பேன் --கிருஷ்ணாபேச்சு 01:26, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விளக்கத்துக்கு நன்றி, கிருட்டிணா. -- சுந்தர் \பேச்சு 06:29, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பொதுவான கருத்துகள்[தொகு]

அண்மைக்காலத்தில் முனைப்பாக இருந்திராத சில பயனர்களுக்கு நடுநிலை வாக்குகள் வருவது புரிந்து கொள்ளத்தக்கது. இவர்களை ஏன் பரிந்துரைத்தேன் என்று விளக்க விரும்புகிறேன். 2005களில் தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்க காலத்தில் விக்கிப்பீடியாவில் இணைந்து ஒரு சில நாட்களிலேயே நான், சிவக்குமார் மற்றும் பலர் நிருவாக அணுக்கம் பெற்றோம். ஏனெனில், இருக்கிற பணிப்பளுவைப் பிரித்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. பங்களிப்புகள் மூலம் ஒருவரின் திறனை மெய்ப்பித்துக் காட்டும் வரை பொறுத்திருக்க காலம் இல்லாததால் நல்லெண்ண நன்னம்பிக்கை மட்டுமே ஒரே வழி. அந்த நம்பிக்கை வீண் போகாமல் அனைவரும் நல்ல வகையில் நிருவாகப் பொறுப்பு ஆற்றினோம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகளைத் தாண்டும் இந்த வேளையில் நாம் தொடங்கி வளர்ந்த விதத்தையும் மறந்து விடக்கூடாது. நமது அடுத்த பாய்ச்சலுக்கு இதே வகையான நல்லெண்ண நன்னம்பிக்கை தேவைப்படுவதாக உணர்கிறேன். தற்போது 30 நிருவாகிகள் இருந்தாலும் முனைப்பாக உள்ளோர் ஒரு சிலரே. அவர்களிலும் சிலர் பல்வேறு பின்புல வேலைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பல்வேறு பங்களிப்பாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் முனைப்பாக இருந்திருந்தாலும் அவர்கள் தொடர்ந்து உந்துதலுடன் பங்காற்ற நிருவாகப் பொறுப்பு உதவும் என்று எதிர்பார்க்கிறேன். ஆங்கில விக்கிப்பீடியா அளவுக்கு நமக்கு இறுக்கமான எதிர்பார்ப்புகள் தேவையில்லை. நிருவாகப் பொறுப்பு ஏற்ற பிறகும் கற்றலுக்கான வாய்ப்பு உண்டு. அவர்களின் பணியைக் கவனித்து ஏற்கனவே உள்ள நிருவாகப் பயனர்களும் வழி காட்டலாம். நிருவாகப் பொறுப்பை அளிப்பதற்கான நம்பகத்தன்மையும் விக்கிப் பண்புகளும் செயலாற்றுவதற்கான உற்சாகமும் பயனர்களிடம் இருக்கிறதா என்ற அடிப்படையிலேயே பரிந்துரைகளை முன்வைத்துள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 05:03, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விளக்கத்திற்கு நன்றி இரவி. உங்கள் உத்தியை உணர்ந்தால்தாலும், தெளிவில்லாமல் ஒருவரை ஆதரிக்க முடியாது என்பதால் நடுநிலை. ஆயினும் எல்லோரும் சிறப்பாக பங்களிப்பார்கள் என நம்புகிறேன். --Antonஃ٠•●♥Talk♥●•٠ஃ 05:27, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நம்பிக்கைக்கு நன்றி, அன்டன். வழக்கத்துக்கு மாறாக ஒரே நேரத்தில் கூடுதல் பரிந்துரைகள், நடுநிலை வாக்குகள் இருப்பதால் விளக்கினேன். மற்றபடி, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பதோ விரும்பியவாறு ஆதரவு / நடுநிலை / எதிர்ப்பு தெரிவிப்பதோ புரிந்து கொள்ளத்தக்கதே. --இரவி (பேச்சு) 14:28, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நிருவாகியாக தேர்ந்தெடுக்க இருப்பவர்கள் பண்புடனும் ஒழுக்கத்துடனும் மற்ற பங்களிப்பாளர்களுடன் பழகுதல் வேண்டும். எடுத்தெறிந்து பேசுவது நையாண்டி செய்வது முதலியவை ஒருவரைத் தகுதியற்றவராக ஆக்கும். வெறும் எண்ணிக்கையை வைத்து தேர்வது பொருந்தாது. அறிவார்ந்த முறையிலும் அறமான முறையிலும் கருத்துகளை எடுத்துவைத்து இணக்கம் நோக்கி நல்லுணர்வோடு நகரச்செய்யும் பாங்கு பெற்றிருக்க வேண்டும். சில நுட்பத்திறன்கள், பராமரிப்புப் பணித்திறன் அல்லது ஆர்வம் பெற்றிருப்பதும் நல்லதே. --செல்வா (பேச்சு) 22:58, 11 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தற்போது நையாண்டி செய்தல் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு நிர்வாக அணுக்கம் கொடுத்தால் எப்படி மற்றவர்களுடன் பழகுவார்கள்? உலகிலுள்ளவர்கள் தங்களைப் பார்ப்பார்கள் என்பதை மறந்துவிட்டு நையாண்டி செய்கிறார்கள். சிலவேளை அதற்கு பதக்கமும்கூட. பரிந்துரையில் உள்ள ஒருவர் ரோமுக்கும் உரோமுக்கும் வித்தியாசம் தெரியாமல் கட்டுரை எழுதுகிறார். இலக்கணம் முக்கியம். அது தெரியாதவர்கள் எப்படி மற்றவர்களை வழிகாட்டுவது? சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது. பரிந்துரைத்தால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலை இங்கு. அரசியலில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவர்கள்போல். பள்ளிக்கூட மாணவர் முதல் பேராசிரியர் வரை பங்களிக்கலாம் என்றால் இப்படித்தான். அவர் அவர் நிலையில்தான் பங்களிக்க முடியும். இங்குள்ள கல்வியறிவு பெற்றவர்கள் விக்கியை மீண்டும் மீள் ஆய்வுக்கு உட்படுத்தி அடுத்த கட்டம் பற்றிய ஆராய வேண்டும். இல்லையேல் தமிழுக்குள்ள நல்ல வாய்ப்பை இழந்துவிடுவோம்.

தற்போதைக்கு நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோளை நிறுத்தி வைத்துவிட்டு திட்டமிடுங்கள். பின்பு நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோளை இடுங்கள். பரிந்துரையை பின்வாங்குவதா என ரவி நினைக்க வேண்டாம். வாக்கை செல்லுபடியற்றதாக்குவதா என மற்றவர்களும் கருத வேண்டாம். நிர்வாகியாகும் வாய்ப்பு வீணாகியதே என பரிந்துரைக்கு உள்ளானவர்கள் கவலையுற வேண்டாம். அல்லது பண்பாளனாக நீங்களாகவே பின்வாங்கிவிடுங்கள். தமிழுக்கு பங்களிப்புச் செய்ய பல வழிகள் உள்ளன. --216.185.35.73 02:33, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பலருக்கு ஒரே நேரத்தில் நிர்வாக அணுக்கம் வழங்குவது இதுவரை தமிழ் விக்கியில் நடைபெற்றிராத ஒன்றாக இருக்கலாம். ஆனால். இதில் எவ்வித பிழையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதரவு, எதிர்ப்பு, நடுநிலை என வாக்குகள் கொடுப்பது அவரவர் குறித்த பயனர் பற்றி எவ்வளவுக்கு அறிந்துள்ளார் என்பதையும், அவர்மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதையும் பொறுத்தது. பெரும்பாலான பயனர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கவில்லை என்றே தோன்றுகிறது. கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பதானால் பல நடுநிலை, எதிர்ப்பு வாக்குகள் வர நியாயம் இல்லை. எழுத்துப் பிழைகள், தமிழ் நடை போன்றவை நிர்வாக அணுக்கம் கொடுக்காமல் விடுவதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருந்தால் எனக்கு நிர்வாக அணுக்கம் கிடைத்திராது. என்னுடைய தமிழ் நடை பற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. மேலும், தமிழில் எழுதுவது மட்டும் விக்கிப் பணியாக இல்லை. பல்வேறு நுட்ப விடயங்களில் பயனர்கள் விக்கிக்குப் பெருமளவு உதவுகின்றனர். பிற பயனர்களுக்கு ஊக்கம் கொடுப்பதில் பல பயனர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே நிர்வாக அணுக்கம் தரப்பட வேண்டும்.
நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோளை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே எண்ணுகிறேன். இங்கே பரிந்துரைக்கப்பட்ட எல்லோரும் போதிய காலம் பங்களிப்புச் செய்திருப்பதுடன் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குப் பல வழிகளிலும் உதவி வருகிறார்கள். நான் வாக்களிக்கும்போது எல்லோரைப் பற்றியும் அறிந்து கொண்டே வாக்களித்தேன்.
இங்கே பதியப்படும் பயனர்களது கருத்துக்கள் சில பயனர்களை மனவேதனைக்கு உள்ளாக்கக்கூடும். ஆனால், விக்கிப்பீடியாவில், ஆதரிக்கவும், எதிர்க்கவும், கருத்துச் சொல்லவும் எல்லாப் பயனர்களுக்கும் உரிமை உள்ளது என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்க் கருத்துக்களும் தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும், கூட்டாகத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் முக்கியமானவையே. மற்றவர்களுடைய விமர்சனங்களைச் சீர்தூக்கிப் பார்த்து அவ்வாறான விமர்சனங்கள் எழாதபடி நம்மைச் சீர்படுத்திக்கொள்வதன் மூலமே நான் ஒவ்வொருவரும் வளர்கிறோம். அதனால் இவற்றைக்கண்டு எவரும் மனவேதனைப்படவோ பயப்படவோ வேண்டியதில்லை. இன்று தமிழ் விக்கியில் தீவிரமாக உழைத்துவருகின்ற பலரும் கடுமையான பல விமர்சனங்களுக்கு உள்ளானவர்களே. அத்தகைய விமர்சனங்கள் அவர்களை மேலும் புடம் போட்டுள்ளனவேயன்றி தொய்ந்து போகவோ விலகி ஓடவோ வைக்கவில்லை. எனவே நிதானமாக இருங்கள். திறந்த மனத்துடன் எடுத்துக்கொண்ட நோக்கத்தை அடைவதற்காகப் பணியாற்றுங்கள். உங்களுடைய பணிகளைப் போற்றுவதற்கும் உங்களைச் சுற்றி நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
பத்தாண்டு நிறைவுக் கூடலுக்குப் பின்னர் ஒரு நாளுக்குப் பதிவு செய்துகொள்ளும் புதிய பயனர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50% கூடியுள்ளது. ஏற்கெனவே உள்ள பயனர்கள் கூடிய உற்சாகத்துடன் பணியாற்றுவதும் தெரிகிறது. இந்த நிலையில் கருத்து வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி இந்த நல்ல சூழ்நிலையைக் கெடுத்து விடாமல் இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் கடமை. தமிழ் விக்கியில் தனிப்பட்ட நம் ஒவ்வொருவரதும் கருத்துக்களை விட நமது ஒற்றுமை மிகவும் முக்கியம், நமது நோக்கத்தை அடைவது எல்லாவற்றிலும் முக்கியம் எனவே இவற்றை உணர்ந்து ஒற்றுமையாகச் செயல்பட உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.

---மயூரநாதன் (பேச்சு) 05:33, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இம்முறை வாக்குப்பதிவு முடிந்தபின் என்னுடைய கருத்தைப் பதிய விரும்புகிறேன். வாக்களிக்காத அதிகாரி என்ற முறையில் இறுதி வாக்கு நிலவரத்தையும் கருத்துக்களையும் கொண்டு தேர்வைச் செயற்படுத்த எண்ணியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 13:42, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மயூரநாதன் (பேச்சு) 16:42, 12 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அடையாளம் காட்டாமல் கருத்திட்டுள்ள பயனரே, உங்கள் அக்கறையை மதிக்கிறேன். உங்கள் கருத்துகள் உண்மையிலேயே நன்னோக்குடையவை என்றே நம்புகிறேன். ஆனால், எனது அனைத்துப் பரிந்துரைகள் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன் என்பதால் பரிந்துரைகளை மீளப் பெறப்போவதில்லை. பல்வேறு வாழ்க்கைச் சூழலால் இவர்களில் சிலரால் தொடர்ந்து முனைப்பாக நிருவாகப் பணியாற்ற முடியாமல் போகலாம் என்பது தவிர வேறு தவறான விளைவுகள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதே வேளை, பரிந்துரைகள் கிடைத்த உடனேயே கூட பலரும் உற்சாகத்துடன் கூடிய பங்களிப்புகள் தருவதைக் காண முடிகிறது.

Tamil23, நிருவாகிகளாக ஆகிறவர்கள் தமிழ் நடையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்துள்ளீர்கள். இது வரவேற்கத்தக்க எதிர்பார்ப்பு என்றாலும் அடிப்படைத் தேவை இல்லை. கட்டுரையாக்கம் அல்லாத பிற பராமரிப்புப் பணிகள், நுட்பப் பணிகளில் ஈடுபடுவோரிடம் தமிழ் நடைத் தேர்ச்சியை வலியுறுத்த முடியாது. நம்மில் பலரின் மொழிநடையே கூட தொடக்கத்தில் இருந்ததை விட எவ்வளவோ மேம்பட்டுள்ளது. தமிழ் இலக்கண முறைகளை கடுமையாகப் பின்பற்றவில்லை என்று ஒரு பயனருக்கான நிருவாக அணுக்கத்தை மறுப்பது சரியில்லை. ஏனெனில், நம்முடைய நடைக்கையேட்டிலேயே இன்னும் சீர்மை இல்லை. அதனை மேம்படுத்த வேண்டும். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு அனைவருக்கும் உண்டு. பொது ஏற்பு உள்ள நடைக்கையேட்டை ஒரு வலுக்கட்டாயமாக மீறுகிறார் என்றால் மட்டும் அவர் விக்கிப்பண்புகளில் இருந்து வழுக்குகிறார், நிருவாகப் பொறுப்புக்கு ஏற்றவரில்லை என்று கூறலாம். தற்போது நிலை அப்படி இல்லை.

இன்னொன்று, சிறு நையாண்டி செய்யும் போக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும், தற்போது தாங்கள் நன்கு அறிந்த நண்பர்களுக்குள்ளேயே இவ்வாறு செய்து கொள்கிறார்கள். இது அடுத்து வரும் தலைமுறையின் முகநூல் தாக்கமுடைய பண்பாடு. விக்கி நடைமுறையை விட்டுக் கொடுக்காமல் இந்தப் பண்பாட்டுக்கும் எவ்வாறு இடம் தரலாம் என்று யோசிக்கவேண்டும். இல்லாவிட்டால், விக்கி மிகுந்த இறுக்கமுடைய ஒன்றாக கருதப்பட்டுப் பங்களிப்புகள் குறையலாம். ஆங்கில விக்கியில் விக்கி நகைச்சுவை என்று தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளதைப் போல் நாமும் செய்ய முனையலாம். பயனர்களிடம் அடிப்படை அறம், நயம் இருக்கிறதா என்றே பார்க்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவின் பல நல்ல நிருவாகிகளும் கூட (என்னையும் சேர்த்து :) ) சில இடங்களில் பொறுமை இழந்திருக்கிறோம் என்பதே உண்மை. அதே வேளை, தொடக்கத்தில் சற்று முதிர்ச்சியின்மையுடன் இருந்து தற்போது நன்கு மெருகேறியுள்ளவர்களும் உள்ளனர். இந்த நன்னோக்கும் மேம்படுவதற்கான காலமும் தர வேண்டும். முற்றிலும் சிறப்பான பயனர்களைத் தான் நிருவாகிகள் ஆக்குவோம் என்று காத்திருந்தோம் என்றால், தமிழ் விக்கியின் வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் போவது போலத் தான். பயனர்கள் முனைப்பாக உள்ள காலத்திலேயே அவர்களுக்கான அணுக்கங்களைத் தந்து உற்சாகப்படுத்துவது நல்லது. இன்னொன்று, பயனர் என்ற முறையில் சற்று பொறுப்பு தவறிச் செயல்படுவோர் கூட நிருவாக அணுக்கம் கிடைத்த பிறகு அதன் பொறுப்பு உணர்ந்து இன்னும் பக்குவத்தோடு செயல்படலாம். அல்லது, அந்தப் பொறுப்பை மற்றவர்கள் சுட்டிக்காட்டலாம்.

சற்று காலத்தால் முந்தைய பயனர்களின் பங்களிப்பு தெரியாது என்ற அடிப்படையிலேயே பெருவாரியான நடுநிலை வாக்குகள் விழுந்துள்ளன. இந்த முறை யாருமே நிருவாக வாக்கெடுப்பில் கேள்விகள் கேட்கவில்லை. வரும் தேர்தல்களில் வெறுமனே எதிர்ப்பு, நடுநிலை வாக்குள் இடாமல் கேள்விகள் கேட்டு அதன் மூலமாக வாக்கை முடிவு செய்யுமாறு ஒரு நினைவூட்டல் விடலாம். தமிழ் விக்கி வளர வளர அனைவருக்கும் அனைவரையும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது. உரையாடல் பக்கங்களில் பெரிதும் தலை காட்டாமல் நிருவாகப் பணிகள், கட்டுரைப் பக்கங்களில் ஈடுபடுவோரும் உளர். இவர்களுக்கான பொது அறிமுகம் குறைவாகவே இருக்கும். அதே வேளை, நிருவாகப் பணி ஏற்றுக் கொண்ட பிறகு, பிற பயனர்களுக்கான ஒத்தாசை, வழிகாட்டல் ஆகியவற்றில் கூடுதலாக ஈடுபட்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளலாம். இன்னொன்று, ஒரு பயனரை நிருவாகத் தேர்தலுக்குப் பரிந்துரைக்க விரும்பி அவரது ஒப்புதலையும் பெற்ற பிறகு ஒரு சில மாதங்கள் கழித்தும் பரிந்துரையைத் தரலாம். இடைப்பட்ட காலத்தில் அவர் வழமை போல் பங்களித்து வருவதுடன், முந்தைய ஆலமரத்தடி உரையாடல்கள், கொள்கைப் பக்கங்கள், உதவிப் பக்கங்கள் ஆகியவற்றைப் படிப்பதன் மூலம் நிருவாகப் பணியைச் சிறப்பாக ஆற்றுவதற்கான தயாரிப்புகளைச் செய்யலாம். ஒத்தாசைப் பக்கம், புதுப்பயனர்களின் பேச்சுப் பக்கங்களைக் கவனித்து அவர்களுக்கு உதவி வருவதன் மூலம் தமிழ் விக்கிச் சமூகத்தில் தங்களின் அறிமுகத்தையும் கூட்டிக் கொள்ளலாம்.

ஆகவே, பெருவாரி வாக்குகளை மதித்து அணுக்கம் அளிக்கும் அதே வேளை, எதிர்ப்பு / நடுநிலை வாக்குகள் உள்ள இடங்களில், அந்தந்த பயனர்கள் எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கான ஆலோசனைகளை முறையாக வழங்கி, தொடர்ந்து கவனித்து உதவி வரலாம். இதுவே வளர்முகமான அணுகுமுறையாக இருக்கும் என்று நம்புகிறேன். --இரவி (பேச்சு) 19:35, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இப்போதைக்கான முடிவுகளை அறிவித்துள்ளதாலும் என்னுடைய பொதுவான கருத்துக்கள் எஞசியுள்ள வேண்டுகோள் எதையும் குறித்து இல்லாதபடியாலும் என்னுடைய கருத்துக்களை இங்கு பதிகிறேன். இவ்வுரையாடலே பேச்சுப் பக்கத்தில் இருந்தால் நல்லது.


தேர்வு முறைமை
  • நிருவாக அணுக்கம் வேண்டுவோரிடம் சில கேள்விகள் கேட்டு அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளும் வழக்கைக் கடைபிடிக்க வேண்டும். முன்பு அதைக் கையாண்டபோது கலையரசியின் மிக அருமையான பதில்கள் அசர வைத்தன (நினைவில் இருந்து ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே, மேலும் துழாவியதில் கலை, சோடாபாட்டில் ஆகியோரது சிறப்பான பதில்கள் கிடைத்தன). இவ்வாறு கேட்பதன் கூடுதல் பயன் இந்த முறைமையை வாக்கெடுப்பாகப் புரிந்து கொள்ளாமல் இணக்க முடிவை நோக்கிய உரையாடலாக மாற்றுதல்.
  • மொத்தமாக இத்தனை பேரை ஒரே நேரத்தில் பரிந்துரைத்ததில் கொள்கை வைத்து மட்டுறுத்தும் அளவுக்குப் பெரிய சிக்கலில்லை. இருந்தாலும் நடைமுறையில் நாம் கேள்விகள் கேட்டு ஒவ்வொரு பரிந்துரைக்கும் உரித்தான மதிப்பளித்து உரையாடி முடிவு செய்ய வேண்டுமானால் ஒரே நேரத்தில் ஒருவர் மூன்று பரிந்துரைக்கு மிகாமல் பார்த்துக் கொண்டால் நல்லது. (இந்த மூன்று என்பதே கூட கணிப்பு எதுவும் இன்றி எடுத்துக் கொண்டதே.) வருங்காலத்தில் நம் பயனர் எண்ணிக்கை கூடுமபோது ஒவ்வொரு பயனரும் அனைத்து வேண்டுகோள்களையும் அலசி வாக்களிக்க வேண்டியதில்லை என்ற நிலை வரும்போது இச்சிக்கல் எழாது.
  • ஒவ்வொரு முன்மொழிவையும் அதற்குறிய துணைப்பக்கத்தில் செய்யும் முறையைக் கொண்டுவர வேண்டும். பக்கத்தைத் தொகுப்பது எளிதாகும். அதைவிட முக்கியமாக ஒருவரது முன்மொழிவை எப்போது வேண்டுமானாலும் எளிதில் கண்டுபிடிக்கவும் முடியும்.
  • எந்த அடிப்படையில் தேர்வு செய்வது? வெறும் வாக்கு எண்ணிக்கையை வைத்துத் தேர்வு செய்வது இம்முறையின் அடிப்படைக்கே எதிரானது. ஆயிரக்கணக்கான வேண்டுகோள்களில் முடிவெடுத்த ஆங்கில விக்கியிலுங்கூட இதைப் பற்றி அறுதியிடவில்லை. இருந்தாலும் அங்கு சில கருவிகளைக் கொண்டு சில தகவல்களைக் கொணர்கின்றனர். பல்கலைக்கழக ஆய்வு ஒன்றின்படி (!) அங்கு நடக்கும் தேர்வில் வெற்றி தோல்வியை வெறும் தரவுகளைக் கொண்டு 74 விழுக்காடு கண்டுபிடிக்க முடிகிறது! நம்மைப் போன்ற சிறு விக்கியில் அது இயலாது, அவ்வளவு தேவையும் அல்ல. மாறாக நிருவாகிகளைப் பற்றிய எதிர்பார்ப்பைத் தெளிவுபடுத்தி வாக்களிப்பவர்களையும் பரிந்துரைத்துள்ளவர்களையும் தயார் செய்ய முனைய வேண்டும். ஒரேயோர் எதிர்ப்போ கருத்தோ ஆனாலும் ஒரு முக்கிய கொள்கைமீறலையோ, பண்பற்ற உரையாடலையோ சுட்டினால் அதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். அது பொறுப்பாளர் மட்டுமே செய்வதற்குப் பதிலாக வாக்களிப்பவர்களே கவனித்துத் தக்கவாறு செயல்பட்டால் நல்லது. பரிந்துரைக்கப்பட்டவர்களும் நேர்மையான விமர்சனத்தை ஏற்கும் நிலை இருக்க வேண்டும்.
உரையாடற் பண்பும் பாங்கும்
  • பண்போடு உரையாடுவதும், விக்கியின் அடிப்படைக் கோட்பாடுகளான நன்னயம் கருதுதல் போன்றவற்றில் வழுவாது இருத்தலும் அனைவருக்குமே தேவையான ஒன்று. நிருவாகி அணுக்கம் பெறுபவர்களிடம் அவற்றைக் கட்டாயம் எதிர்பார்க்க வேண்டும். அதே வேளையில் எப்போதோ ஒருமுறை தவறினாலும் பின்னர் மாறிவிட்டால் பழைய நிகழ்வை ஒதுக்கி விடலாம்.
  • தீநோக்கம் எதுவும் இல்லாமல் இருந்தாலும் நையாண்டி செய்வது வெறும் உரையாடல் நடையைப் பற்றியதல்ல. மாறாக, விக்கி எனும் ஊடகத்தில் முகம் பாராமல் பேசுமபோது புரிதல் சிக்கலைக் கூட்டக்கூடியதும், விசயத்தைவிட்டு வேறுபுறம் உரையாடல் தடம் புரள வாய்ப்பை ஏற்படுத்துவதும் ஆகும். தவிர அது ஒரு தன்தேர்வுகோல். அதனால் முகநூல் பழக்கம் என்று இங்கும் கொண்டுவர வேண்டியதில்லை. இறுக்கத்தைத் தளர்த்த வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். ஆனால், அதற்கு நையாண்டிக்கு மாற்றாக வேறு வழிகளைப் பின்பற்றலாம். அல்லது விக்கி இரக நையாண்டியை உருவாக்கலாம். ;)
தமிழ் நடை

தமிழ்நடை விக்கி நடை ஆகியவற்றின் அடிப்படையில் நிருவாக அணுக்கம் வழங்குவதை முடிவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், வேண்டுமென்றே நடைக் கொள்கைக்கு எதிராகச் செய்வதைக் கொள்கை மீறல் அடிப்படையில் மறுக்கலாம். பல்வேறு காரணங்களால் கட்டுரைகளில் அதிகமாகப் பங்களிக்க முடியாதவர்கள் (எ.கா. கணேசுபாட்டை எழுதிய கணேசு) நிருவாக அணுக்கம் கொண்டு சிறப்பாகத் துப்புரவுப் பணிகளிலும் நுட்பச்செயற்பாடுகளிலும் இயங்க வாய்ப்பிருந்தால் அவர்களை ஊக்குவிக்கலாம்.


இன்னும் நிறைய சொல்ல விரும்பினாலும் இப்போதிருக்கும் குறுங்கணினியில் (netbook) கடினமாகவுள்ளதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 17:17, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறேன், சுந்தர். ஒரு பயனரைப் பற்றி சரியாக அறியாத போது, வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்கும் தெரிவும் உண்டு என்பதைத் தெளிவுபடுத்தலாம். தற்போது, பெருவாரியான நடுநிலை வாக்குகள் பயனரைப் பற்றி அறியாமல் அளித்த வாக்குகளே. வாக்களிப்போர் பயனர்களின் பங்களிப்புகளைச் சரி பார்த்து அதன் அடிப்படையிலும் தங்கள் கேள்விகள், ஐயங்களைக் கேட்டுத் தெளிந்து அதன் அடிப்படையிலும் வாக்களிக்கலாம். அதே போல் வெறுமனே, ஆதரவு / எதிர்ப்பு / நடுநிலை என்று வாக்கிடாமல் ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் தனித்துவமான கருத்துகளை முன்வைத்து வாக்கிடும் முறையையும் வலியுறுத்தலாம். தற்போது நடைபெறும் தேர்தல் முடிந்தவுடன் இது போன்ற பரிந்துரைகைளை இறுதி செய்யலாம். நன்றி. --இரவி (பேச்சு) 19:01, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி இரவி. ஆம், ஒருவரைப்பற்றித் தெரியாதவிடத்தில் வாக்களிக்காமலேயே இருந்துவிடலாம் என்ற வாய்ப்பையும் தெளிவுபடுத்த வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:19, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மதிநுட்பமாக அணுகிய சுந்தருக்கும், பொது நோக்கும் நடுநிலை நோக்கும் கொண்ட ஏனைய விக்கியர்களுக்கும் பாரட்டுக்கள்! எதிர்ப்பு வாக்களித்தவன் என்பதால் என் கருத்தைப் பொதுவாக வைக்கிறேன்.

இங்குள்ள யாருக்கும் நான் எதிரானவன் இல்லை. விக்கியில் விசமத்தனம் செய்யும் ஆர்வமும் எனக்கில்லை. தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும், மறைக்கப்பட்ட அல்லது முகம் காட்டி எழுத முடியா தகவல்கள் ஆவணமாக வேண்டும் என்பதால் IP முகவரியில் எழுதிய நான் பயனர் கணக்கு மூலம் இங்கு எழுதத் தொடங்கினேன். எவருக்கும் நிர்வாக அணுக்கம் கிடைக்கக் கூடாது என்பதல்ல எனது நோக்கம். மாறாக, சிறந்த நிர்வாகிகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்க வேண்டும் என்பதே.

தமிழ்நடை, விக்கி நடை ஆகியவற்றின் அடிப்படையில் நிருவாக அணுக்கம் வழங்குவதை முடிவு செய்ய வேண்டியதில்லை என்பதை நீங்கள் ஆதரித்தால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் என்னுடைய கேள்வி தமிழ்நடை விக்கி நடை தெரியாத ஒருவர் மற்ற பயனர்களை எப்படி வழிநடத்துவார்? முந்தைய வேண்டுகோள்கள் 9 இல் ஒருவர் கொடுத்துள்ள பதிலைப் பாருங்கள். அதன் இன்றைய தாக்கம் எப்படியுள்ளது? --Tamil23 (பேச்சு) 03:01, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ்123, உங்கள் கருத்துக்கு நன்றி. இம்முறை நிருவாகிகளுக்கான தேர்வு முடிந்தபின், இந்த எதிர்பார்ப்புகளைப் பற்றி உரையாடி முடிவெடுக்கலாம். -- சுந்தர் \பேச்சு 05:34, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
Tamil123 நீங்கள் கூறும், முந்தைய வேண்டுகோள்கள் 9 இல் ஒருவர் கொடுத்துள்ள பதிலைப் பாருங்கள். அதன் இன்றைய தாக்கம் எப்படியுள்ளது? என்பது எதைச்சுட்டுகின்றது என்று விளங்கவில்லையே! சுட்டிக்காட்டுவீர்களா?--செல்வா (பேச்சு) 09:51, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வாக்குப்பதிவு நிறைவு[தொகு]

நடப்பு வேண்டுகோள்களுக்கான குறிப்பிட்ட வாக்குப்பதிவு நேரம் முடிந்துவிட்டதால், இனி யாரும் வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இன்றிரவு இந்திய நேரம் இறுதித் தேர்வைச் செயற்படுத்துகிறேன். காலையே செய்துவிட எண்ணியிருந்தேன் இயலவில்லை. -- சுந்தர் \பேச்சு 09:00, 15 அக்டோபர் 2013 (UTC) நிருவாக அணுக்கம் பெறுவதற்குப் பின்வரும் கூறுகள் பொதுவாக அறியப்பட்டிருந்தாலும் அறுதியான வரையறை எதுவும் இல்லை:[பதிலளி]

  1. விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கோட்பாடுகளை முழுவதும் உணர்ந்து ஏற்பவர்களாக இருக்க வேண்டும். அதனால் கொள்கைகளை மதித்து நடந்திருக்க வேண்டும். விக்கி நற்பழக்கவழக்கங்களை உறுதியாகப் பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும்.
  2. உடன் பங்காற்றுபவர்களின் நன்மதிப்பைப் பெற்றிருத்தல் வேண்டும். உடன் பணியாற்றபவர்களை மதித்து (அவர்களும் தம்மைப் போலவே கூட்டாக உழைக்க வந்தவர்கள் என்ற அடிப்படையில்) பண்புடன் உரையாட வேண்டும்.
  3. துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில் ஆர்வம் இருந்தால் நல்லது.
  4. தள மேலாண்மை, துப்புரவுப் பணிகள் ஆகியவற்றுக்கான கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தால் நல்லது. தெரியாதவிடத்தில் மற்றவர்கள் உதவியை நாடலாம். ஆனால் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்ற நினைப்பு இருக்க வேண்டும்.

அவ் அடிப்படையில் மேலே பரிந்துரைத்தவர்கள் பெரும்பாலும் பொருத்தமானவர்களாகவே தோன்றுகிறார்கள். சில சிறு தவறுகள் நடந்திருந்தாலும் நாம் அனைவருமே தொடர்ந்து பக்குவமடைதல் போலவே அவர்களும் பக்குவமடைவார்கள் என நம்புகிறேன். இருப்பினும் சிலருக்கு எதிரான வாக்குகளும், முழு ஆதரவில்லாமல் நடுநிலை வாக்குகளும் வந்துள்ளன. அதற்கான முறையான காரணங்கள் சிலவும் முன்வைக்கப்பட்டன. அவர்கள் நேர்மையான விமர்சனங்களை ஏற்குமிடத்தில் அதைக் குறிப்பிட்டு இனி கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பதாக உறுதியளிப்பது கருத்திட்டவரையும் பொதுவாக விக்கி சமூகத்தையும் கூடுதல் நமபிக்கை கொள்ளச் செய்யும். பிழையான புரிதலினாலோ, தவறான தகவலின் பேரிலோ எதிர்ப்பு வந்திருந்தால் தக்கவாறு விளக்க வேண்டும். இவ்வாறு கருத்திடுவது சரியோ இல்லையோ என்ற ஐயத்தில் அவர்கள் செய்யாமலிருந்திருக்கலாம். ஆகையால் ஒரு மறுப்பு வாக்காவது வந்திருப்பவர்களின் தேர்வு வேண்டுகோள்களை நீட்டிக்கிறேன். போதுமான காலத்துக்குப்பின் அவர்களின் வேண்டுகோளின்மீது முடிவெடுக்கலாம். மற்றவர்களின் வேண்டுகோள்களைப் பரணிடுகிறேன், அவர்களுக்கான அணுக்கத்தை நாளை செயற்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 16:19, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சுந்தர், தங்களின் இந்த முடிவு எனக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. தற்போது இவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கின்றனரா? இவர்களுக்கு எதிர்ப்பு நிலையைக் கடைப்பிடித்தவர்கள் கருத்தை ஆதாரத்துடன் அறிந்து, அதற்குத் தொடர்புடைய பயனர்கள் தன்னிலை விளக்கமளிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 18:16, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், வாக்கெடுப்புக் காலத்தை நீட்டித்து நிருவாகப் பணிக்குத் தேவையான உரையாடித் தீர்வு காணும் பாங்கு, இணக்க முடிவு நோக்கி நகர்ந்திருப்பதை வரவேற்கிறேன். மிகச் சிறந்த முடிவு. தற்போது தேர்தலில் உள்ள பயனர்கள், எதிர்ப்பு / நடுநிலை வாக்குகள் குறித்த தங்கள் கருத்தைப் பதியலாம். அத்தகைய வாக்களித்திருப்போரிடம் பேசி நிருவாகப் பணி மீதான எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்ள முனையலாம். --இரவி (பேச்சு) 18:56, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சுந்தர், எந்த ஒரு பயனரது வேண்டுகோளையும் நிராகரிக்காமல் இருந்ததற்கு நன்றி. அணுக்கம் அளிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ள பயனர்களின் வேண்டுகோளை மீண்டும் எடுத்துக்கொள்ளும்போது சில விடயங்களைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்வது நல்லது. ஒரு குறிப்பிட்ட பயனர் பல பயனர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளார். இவர் கொடுத்துள்ள காரணங்கள் வலுவானவையாக இல்லை. தமிழர் மத்தியில் இன்னும் பொதுக் கருத்து எட்டப்படாத விடயங்களில் (தமிழ் எழுதுவது தொடர்பில்) இப்படித்தான் செய்யவேண்டும் என்று பயனர்களை வற்புறுத்துவதோ அல்லது அப்படிச் செய்யாவிடில் நிர்வாக அணுக்கம் கிடையாது என்று கூறுவதோ சாத்தியம் இல்லை என்பதே எனது கருத்து. எனவே நீண்டகாலம் ஒத்திப்போடுவதன் மூலம் பயன் எதுவும் விளையப்போவதில்லை. எனவே குறித்த பயனர் எதிர்ப்புக்காகக் கொடுத்துள்ள காரணங்கள் வலுவுள்ளவையா இல்லையா என்று ஒரு இணக்க முடிவுக்கு வந்து விரைந்து முடிவெடுப்பதே பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 21:56, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
தேனி மு. சுப்பிரமணி, அவர்களை காத்திருப்புப் பட்டியலில் வைக்கவில்லை. விமர்சனங்களைப் புரிந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் எதிர்ப்பு வாக்களித்தவர்களிடம் கூடுதல் தகவல்களைக் கேட்டுப் பெறவும்), தங்கள் நிலையை விளக்கவும் ஒரு வாய்ப்பாகத்தான் இக்கால நீட்டிப்பு. தற்போதைய நிலையில் இவர்களுடைய பரிந்துரைகள் எவ்விதத்திலும் குறையானவையாகக் கருதவில்லை.
புரிதலுக்கு நன்றி இரவி.
மயூரநாதன், இங்கு மேலே நீங்களும் மற்ற பயனர்களும் தெரிவித்துள்ள காரணங்களைக் கட்டாயம் கருத்தில் கொள்வேன். சொல்லப்போனால் நான் மேலே குறிப்பிட்டபடி அனைவருமே தொடர்ந்து பக்குவப்பட்டே வருகிறோம், பொதுவாக எந்தவொரு நெடுநாள் பயனருக்கும் நிருவாக அணுக்கம் வழங்குவது பொதுவாக ஒரு பெரிய விசயமல்ல. அதே வேளையில் குறைகளைச் சுட்டிக்காட்டும்போது அதைப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பக்குவமாக அணுகி விளக்குவது பல வகைகளில் பயன் தருவதுதானே? முதலில், மாற்றுப் பார்வைகளைப் பொறுமையாகக் கேட்கும் தன்மை, தனது நிலையைத் தேவைப்பட்டால் திருத்திக் கொள்ளும் ஆளுமை, தான் சரியாகச் செய்திருக்கிறோம் என்று உறுதியாக இருந்தால் அதை மாற்றுக் கருத்து கொண்டவர் ஏற்கும்வண்ணம் பக்குவமாக எடுத்துச் சொல்லுதல் போன்ற திறன்கள் மிகவும் பயன் தருவன. தவிர, கேள்வி எழுப்புபவரின் நோக்கத்தையும் நாம் மதிக்க வேண்டும். சில வேளைகளில் எவரேனும் வேண்டுமென்றே கூட எதிர்ப்பைப் பதிவு செய்யலாம். அதனால்தான் வெறும் எதிர்ப்பு எண்ணிக்கை போன்றவற்றை மட்டும் நாம் கணக்கில் கொள்வதில்லை. எதிர்ப்புக்கான காரணம் வலுவாக உள்ளதா என நிருவாக அணுக்கம் வழங்கும் பொறுப்பாளரும் வாக்களிக்கும் மற்றவர்களும் கருத்தில் கொள்வது இனி வழக்கமாகும் என நம்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 07:13, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மயூரநாதன் (பேச்சு) 07:59, 16 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம்[பதிலளி]
முன்னெப்பொழுதும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பயனர்கள் வாக்களித்திருக்கவில்லை. இது தமிழ் விக்கி வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. குறைந்த அளவில் பயனர்கள் வாக்களிக்கும்போது ஒப்பீட்டளவில் கருத்து வேறுபாடுகள் குறைவு. எண்ணிக்கை அதிகரிக்கும்போது கருத்து வேறுபாடுகளும் எதிர்ப்பு வாக்குகளும் அதிகமாகும். எனவே எதிர்காலத்தில் நிர்வாக அணுக்கம் கோர விரும்புபவர்கள் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அறிந்து அதன்படி நடக்க வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது. எதிர் காலத்தில் இது நம் எல்லோருக்கும் ஒரு சவாலாகவே இருக்கும். அதே வேளை சுந்தர் குறிப்பிட்டுள்ளது போல் இது பயனர்களுக்குச் சூழ்நிலைகளைக் கையாளும் திறனை வளர்க்க உதவும். எனவே எதிர்காலத்தில் பயனர்கள் இவ்வாறான சூழ்நிலைகளை எவ்வித மனத்தாங்கலும் இன்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பே அதிகாரி அணுக்கத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு எதிர்ப்பு வாக்கு விழுந்ததனால் அவர் பெருந்தன்மையுடன் பல மாதங்கள் காத்திருந்து அந்த அணுக்கத்தைப் பெற்றுக்கொண்டார். அப்பயனர் இன்றும் மிகத் தீவிரமாக இயங்கும் ஒரு பயனராக இருக்கிறார். இது நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. ---மயூரநாதன் (பேச்சு) 10:12, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 11:03, 16 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம்[பதிலளி]

மிகச்சிறப்பாகக் கருத்திட்ட சுந்தருக்கு பாராட்டுகளும் நன்றியும். --செல்வா (பேச்சு) 14:49, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வாக்கு/கருத்துப்பதிவுக்காலம் நீட்டிப்பு[தொகு]

இப்போது இருக்கும் பரிந்துரைகளைப் பற்றிய கருத்துக்களைப் பதியவும், புரிந்துணர்வை எட்டவும் ஏற்ற வகையில் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் எவரும் தங்கள் வாக்குகளை மாற்றியமைக்கவும் செய்யலாம் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். பொதுவாக, ஒருவரைப் பற்றி அறியாதவிடத்தில் வாக்களிக்காமலேயும் இருந்துவிடலாம், அதற்காக நடுநிலை வாக்கு ஒன்றைப் பதியவேண்டியதில்லை. (பதியக்கூடாது என மறுக்கவில்லை.) -- சுந்தர் \பேச்சு 05:38, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நண்பரே, நடுநிலை வாக்குகள் எதன் காரணமாக இடப்படுதல் வேண்டும் என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன். ஒருவரைப் பற்றி அறியாதவிடத்து இடப்படும் நடுநிலை வாக்குகள் கணக்கல் கொள்ளப்படுதல் கூடுமா?. நடுநிலை வாக்குகளின் முக்கியத்துவம் என்ன? என்பதை தெளிவு செய்ய வேண்டும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:19, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பின்வருவது எனது தனிக்கருத்து தான். ஒருவரை அறியாத காரணத்தால் பதியும் நடுநிலை வாக்கை வாக்களிக்காதது போலவே கருதுவதுதான் முறை. பின்வரும் காரணங்களுக்காக நடுநிலை வாக்களிக்கலாம் என்பது என் எண்ணம்:
  • ஒருவரின் சில நடவடிக்கைகள் நிறைவளிக்காமல் இருந்தாலும், நிருவாக அணுக்கத்தைத் தடுக்கும் அளவுக்குப் பெரிய செய்தியாக நினைத்தால்
  • ஒருவரின் சில நடவடிக்கைகள் போதவில்லை என்று கருதினாலும் அது பொதுவான நிருவாக அணுக்க எதிர்பார்ப்புகளில் இல்லை எனும்போது (நுட்ப விசயங்களில் ஈடுபடவில்லை என்பது போன்றவை)
  • ஒருவரைப் பற்றிச் சில குறைகளைக் கண்டிருந்தாலும், அவரது நிறைகளை அறியும் அளவுக்குப் பழக்கமில்லாமல் இருக்கும்போது
  • சில வேளைகளில் முதலில் சார்பாகவோ, எதிராகவோ வாக்களித்துவிட்டு உரையாடலின்போது சிறிதளவு மனம் மாறும்போது

அடுத்த கேள்வி, நிருவாக அணுக்கத்தைச் செயற்படுத்தும் பொறுப்பாளர் இதை எப்படி கணக்கில் கொள்வது என்பது பற்றி. எதிர்ப்பே இல்லாதவிடத்தில் நடுநிலை வாக்குகள் ஒன்றிரண்டு இருந்தால் பரவாயில்லை. எதிர்ப்பும் இருக்குமிடத்தில் மொத்த ஆதரவு வாக்குகள் 80 விழுக்காட்டைத் தாண்டுகின்றனவா எனப் பார்க்கலாம். இந்த நுனிநிலை அலசலுக்குப்பிறகு வந்திருக்கும் எதிர்ப்புகள், கருத்துக்கள், கேள்வி பதில்கள், பரிந்துரைத்தவர் அவற்றை அணுகிய விதம் போன்றவற்றைக் கொண்டு ஒரு பொறுப்பாளர் முடிவுக்கு வரலாம். -- சுந்தர் \பேச்சு 13:47, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தங்களின் கருத்து நிறைவாக இருக்கிறது. மற்றவர்களும் இதனை ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன். எதற்காக ஆதரவு, நடுநிலை, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென்ற பொது வரையரை ஒன்றை உருவாக்கி வாக்களிப்பவர்களுக்கு வழிகாட்ட வேண்டுகிறேன். இம்முறை நானும் சில நண்பர்களும் நடுநிலை வாக்கிட இப்புரிதல்கள் இல்லாமலேயே காரணமாக இருந்தது. வரும் காலத்தில் மயுரநாதன் அவர்கள் சுட்டிக் காட்டியவாறு நிறைய பயனர்கள் வாக்கிட விளையும் பொழுது இந்த வழிகாட்டல் உதவிகரமாக இருக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:47, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடுநிலை வாக்குகள் என்பதற்கு நான் கொண்டுள்ள விளக்கம் - an abstention on a matter decided by unanimity has the effect of a yes vote; on matters decided by qualified majority it has an effect of a no vote.. --Anton·٠•●♥Talk♥●•٠· 06:05, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]