வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:03, 18 செப்டம்பர் 2013 (UTC)
27 அன்று எத்தனை மணிக்குச் சென்னை வருகிறீர்கள்? உங்கள் தொலைப்பேசி எண்ணை 99431 68304க்கு அனுப்பி வையுங்கள்.--இரவி (பேச்சு) 03:22, 25 செப்டம்பர் 2013 (UTC)
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ--01:47, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அன்புள்ள அய்யா! முக்குளம் கட்டுரையில் இருந்த மருது சகோதரர்கள் குறித்த தகவல்கள் எங்கே? உள்ளது அதை மீளமை செய்யமுடியுமா? தயவு செய்து தெரிவியுங்கள்.--யோகிசிவம் (பேச்சு) 05:06, 21 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
முக்குளம் கிராமத்தில் தான் மருது சகோதரர்கள் பிறந்தார்கள் அவர்கள் குறித்த தகவல்கள் முக்குளம் கட்டுரையில் தொகுத்திருந்தேன். தங்களின் திருத்தத்திற்குப் பிறகு அந்த தகவல்கள் நீக்கப்பட்டிருந்தது. அதை சிவகங்கைச் சீமையில் இணைப்பதற்காகவே தங்களிடம் வந்தது எனது வினா???... கண்டுபிடித்து இணைத்துவிட்டேன். முயற்சிக்க வேண்டாம் நன்றி--யோகிசிவம் (பேச்சு) 15:52, 22 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
குழுவில் பங்களித்த முன்வந்தமைக்கு மிக்க நன்றிகள். உங்களின் உரையாடல்களைக் கவனித்ததில் மிக நடுநிலையாக அணுகக் கூடியவர் என்றே நான் கருதுகிறேன். இந்தக் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக நீங்கள் குழுவில் இடம்பெறுவது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார். perception of bias தவிர்ப்பதற்கா உங்கள் பெயரை பின்வாங்குகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:50, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
An initiative to bring the voices of Indian Wikimedians to the world
Hi Srithern,
I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you.
It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian.
You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline.
We would very much like to showcase your work to the rest of the world.
Some of the previous interviews can be seen here.
வணக்கங்க, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில குறுங்கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா? பல தரப்பட்ட தலைப்புகள் குறித்து ஆர்வமும் பங்களிப்பு முனைப்பும் உடையோர் தமிழ் விக்கிப்பீடியாவில் வெகு சிலரே. எனவே, கட்டுரைகளைத் துவக்கியோரே மெனக்கட்டால் ஒழிய பல்வேறு தலைப்புகள் முன்னேற்றம் காண்பதில்லை. தற்போது இவ்வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில கட்டுரைகளில் தங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு, மணமகள். எனவே, இவற்றை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம் என்று கருதி இத்தகவலை இடுகிறேன். மற்றபடி, வழமை போல் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் குறிப்பிடத்தக்கமையும் போதிய உள்ளடக்கமும் உள்ள தரமான குறுங்கட்டுரைகளை உருவாக்குவத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:12, 12 மே 2014 (UTC)[பதிலளி]
வணக்கம்! இந்தியத் தேர்தல் குறித்த உங்களின் இற்றைகள் வழக்கம்போல நன்று! கீழ்க்காணும் கட்டுரைகளில் அட்டவணைகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. முடிவுகள் வெளியாகும்போதும், அதற்குப் பிறகும்... உங்களுக்கு ஆர்வமும், நேரமும் இருப்பின்... இற்றை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!
இந்தியக் குடியரசின் அமைச்சரவையிலிருந்து கோபிநாத் முண்டேயின் பெயரை உடனடியாக நீக்கியதற்கு நன்றி. இருப்பினும் அமைச்சகத்துடன் அந்த வரிசையையே நீக்கியதற்கு பதிலாக அவரது பெயரையும் படத்தையும் மட்டும் நீக்கியிருக்கலாம். பின்னால் வேறொருவர் அதே அமைச்சரவையில் பதவியேற்கும்போது placeholderபோல இருந்திருக்கும். உங்களுக்கும் வரிசை எண்களை சீர்படுத்த வேண்டியிருக்காது. இது ஒரு ஆலோசனை மட்டுமே..--மணியன் (பேச்சு) 06:54, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]
விருப்பம் - இப்பதவியில் மீண்டும் ஒருவரை நியமிக்கும் போது அல்லது இப்பதவியை பிற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கும்போது தகுந்த மாற்றம் செய்ய வேண்டும் --ஸ்ரீதர் (பேச்சு) 07:09, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]
தாங்கள் தொகுத்துக் கொண்டிருந்த, ”ஆளுநர்” என்ற வார்ப்புருவில் திருத்தம் செய்துவிட்டேன். நீங்கள் ஆவணப்படுத்தி இருந்த முறை வேறு மாதிரி இருந்ததால் குழம்பிவிட்டேன். பொறுத்தருள்க. வேறு மாதிரி மாற்றிவிட்டேன். தவறிருப்பின் திருத்தி உதவுக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:55, 14 சூலை 2014 (UTC)[பதிலளி]
வணக்கம் Srithern!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
மதுரை புத்தகக் காட்சியில் 10 நாட்களும் இருந்து கவனித்துக் கொள்வதற்கு என்றே திருச்சியில் இருந்து கிளம்பி வந்துள்ள உங்கள் விக்கியுணர்வு கண்டு நெகிழ்கிறேன். நீங்கள் ஒருவர் அங்கிருக்கும் தெம்பில் தான் மற்ற உறுதுணையான பணிகளைக் கவனித்து வருகிறோம். மிக்க நன்றி. இரவி (பேச்சு) 10:07, 1 செப்டம்பர் 2015 (UTC)
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
வணக்கம், சிறீதரன். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:24, 5 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
வணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC)[பதிலளி]
ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை
வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:16, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]
குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.
அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.
வணக்கம். தூத்துக்குடி மாவட்டத்தில் நீங்கள் பயிற்சி அளித்து வருவதாக அறிகிறேன். ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளை என்னால் இயன்றளவு முன்னேற்றி வருகிறேன். தலைப்பினை நகர்த்தினால், கீழ்காணும் செயலைச் செய்வேன். இந்தத் தகவலை பயிற்சி பெறுவோரிடம் தெரிவிக்கவும்; நன்றி!
ஸ்ரீவில்லிப்புத்துர் இரயில் நிலையம் என எழுதப்பட்டிருந்ததை ஸ்ரீவில்லிப்புத்தூர் தொடருந்து நிலையம் என நகர்த்தினேன். அதன்பிறகு இந்த அறிவிப்பினை பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தேன். இப்படித் தெரிவித்தால் அவர், தான் எழுதிய கட்டுரையைத் தேடவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:54, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]
தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்கு பெரும் ஆர்வத்துடனும் மலர்ச்சியுடனும் மூன்று நாட்களும் தாங்கள் பயிற்சி அளித்தமையைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:01, 8 சூலை 2017 (UTC)[பதிலளி]
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.