பரிதிமதி, கூகுள் திட்டம் குறித்து இன்னும் சிறிது காலம் பார்ப்போம் என வாக்களித்து உள்ளீர்கள். இன்னும் எவ்வளவு காலம் தரலாம், என்னென்ன அடிப்படைகளில் தர அளவீடு செய்யலாம், எப்படி அணுகலாம் என்பது குறித்து உங்கள் கருத்துகளை விரிவாகத் தந்தால் நன்று. நன்றி--ரவி15:38, 21 ஏப்ரல் 2010 (UTC)[பதிலளி]
Hi பரிதிமதி, மார்த்தாண்டவர்ம்மா (நாவல்) என்ற ஒரு தனி பக்கம் சேர்க்கதுக்குதான் தகவல்கள் எழுதியது - தனி பக்கம் உருவாக்கதற்கு முன் விக்கிபீடியா வடிவமைப்பில் சில கடைசி திருத்தலுகள் செய்வதுக்குதான் பயனர் பேச்சு பக்கத்தில் எழுதியது – அநேகமாக இன்றே மேலேற்று செய்லாம் வார்ப்புரு Infobox Book பற்றி ஒரு ஆலாசனை புத்தகதகல் ப்பெட்டி பக்கத்தில் குறித்துள்ளது - உங்களுடைய திருத்தம் தெரிவிக்கவும். நன்றி ஹரித்01:33, 14 மே 2010 (UTC)[பதிலளி]
பரிதிமதி, உங்களைப் பற்றிய அறிமுகத்தை எழுதித் தர இயலுமா? தமிழ் விக்கிப்பீடியர்களின் பன்முகத்தை எடுத்துரைப்பது நமது திட்டம் மீதான கூடுதல் நம்பகத் தன்மையைப் பெற உதவும். தவிர, நீங்கள் எழுதிய சிறந்த கட்டுரைகளுக்கான இணைப்புகளை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தவும் உதவும். நன்றி--இரவி09:11, 30 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
இது ஒரு மூன்றாம் ஆண்டு நினைவூட்டல் :) தள அறிவிப்புகளில் ஆசிரியர்கள், மென்பொருளாளார்கள், மாணவர்கள் என்று பல்வேறு வகையிலும் அறிமுகங்களை இடுவது நல்ல பயன் தரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வேளையில் உங்கள் அறிமுகத்தைத் தருவது மிகவும் உதவும். நன்றி--இரவி (பேச்சு) 16:48, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]
நன்றி, பரிதிமதி. நீங்கள் குறிப்பிட்டபடி பதிந்துள்ளேன். இன்றைய சந்திப்பைப் பற்றிய உங்கள் இடுகையையும் பார்த்தேன். நல்லது. -- சுந்தர்\பேச்சு 18:43, 18 ஜூன் 2010 (UTC)
நானும் செய்து விட்டேன்.--Sodabottle 04:38, 19 ஜூன் 2010 (UTC)
நன்றி, சுந்தர், Sodabottle. பார்த்தேன்.நீங்கள் பதிந்துள்ளது கண்டு மகிழ்ச்சி. --பரிதிமதி 08:25, 19 ஜூன் 2010 (UTC)
நன்றி பரிதிமதி, அந்தச் சுட்டியில் சென்று பார்த்தபோது எனது பெயர் raghunath என்று உள்ளது. ஆனால் ragunathan என்று இருக்க வேண்டும். இதை மாற்ற இயலுமா? மாநாட்டுக்கான அடையாள அட்டையை எப்படிப் பெறுவது?--Ragunathan 06:27, 19 ஜூன் 2010 (UTC)
ரகுநாதன்,
மன்னிக்கவும். ரகுநாத் என்று முதலில் பதிவு செய்து விட்டேன். மாற்ற முடியுமா என்று பார்க்கிறேன். முடியாவிட்டாலும் பரவாயில்லை அல்லவா? நீங்கள் செம்மொழி மாநாட்டிற்கு வருகின்றீர்கள் அல்லவா? --பரிதிமதி 08:25, 19 ஜூன் 2010 (UTC)
பரவாயில்லை. அப்படியே இருக்கட்டும் என்று முடிவு செய்து அதையே நிரப்பி அனுப்பிவிட்டேன். மாநாட்டிற்கு வருகிறேன். உங்கள் மின்னஞ்சல் முகவரி அளிக்க முடியுமா?--Ragunathan 09:25, 19 ஜூன் 2010 (UTC)
பரிதிமதி, தாமதத்திற்கு மண்ணிக்கவும். கடந்த வாரம் முழுவதும் வெளியூர் சென்றிறுந்ததனால் விக்கி பக்கமே தலைக்காட்ட முடியவில்லை. செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. நன்றி.--அராபத்* عرفات 06:47, 28 ஜூன் 2010 (UTC)
பரிவேடம் கட்டுரையில் நான் இணைத்த சோதிடக் குறிப்பு அறிவியல் சார்ந்த கட்டுரைக்குத் தற்போதைய நிலையில் சரியாக இருக்காது என்கிற கருத்தை நானும் ஏற்கிறேன். தாங்களே அக்குறிப்புகளை நீக்கி விடுங்கள். நன்றி. --தேனி.எம்.சுப்பிரமணி. 00:42, 13 ஜூலை 2010 (UTC)
பாராட்டிற்கு நன்றி பரிதிமதி. அதை ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தேன். பெயர்களை சீன மூல ஒலிப்பிற்கு தகுந்தவாறு மாற்ற வேண்டும். --குறும்பன் 02:41, 22 ஜூலை 2010 (UTC)
உங்களிடம் இருந்து ஒரு சிறு உதவி எதிர் பார்க்கிறேன்!!! நாம் அனைவருக்கும் தெரிந்த மிக முக்கிய நகரமான கல்பாக்கம் நகரிற்கு இன்னும் தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை இல்லை என்பது வருத்தம் அளிக்கின்றது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையை கொண்டு கல்பாக்கத்திற்கு உங்களால் இயன்றால் தமிழாக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். ----ராஜ்6644 06:18, 31 ஜூலை 2010 (UTC)
பரிதிமதி, நீங்கள் தமிழ்நாட்டுப் பறவைகள் பற்றிய அருமையான கட்டுரைகளை உருவாக்கி வருவதைக் கண்டேன். உளமாறப் பாராட்டுகிறேன். -- சுந்தர்\பேச்சு 05:27, 24 ஆகஸ்ட் 2010 (UTC)
Thanks for the work. CarTick 22:24, 29 ஆகஸ்ட் 2010 (UTC)
பரிதிமதி, இயற்பியல் நோபல் பரிசாளர் பெயரை ஆந்தரே கெய்ம் என மாற்றியுள்ளேன். எனக்கு பல உருசிய நண்பர்கள் உண்டு அவர்களில் சிலரின் "முதற்பெயர்" ஆந்தரே என்பதுதான். எனவே உருசிய மொழி ஒலிப்பின்படி (பலுக்கல்படி) ஆந்தரே கெய்ம் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளேன். தவறாக நினைக்க வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா03:05, 6 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
துளிமக் கருவி போன்ற தொழில்நுட்பக் கட்டுரைகளில் ஆங்கில "ஏனைய மொழிகள்" என்ற பகுதியில் பிறமொழி விக்கி இணைப்புகள் கொடுத்தாழொலிய அதனை மேற்கொண்டு பிறவிடங்களில் புரிதல் அரிது. எனவே இஃது மொழிபெயர்ப்புக் கட்டுரையாயின் ஏனைய மொழி விக்கி இணைப்புகளையும் இணையுங்கள். குறைந்தபட்சம் ஆங்கில விக்கி இணைப்பாவது தேவை...
விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் விக்கிப்பீடியாவின் முக்கியப் பயனர்கள் சிலர் குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த முக்கியப் பயனர்களில் தாங்களும் ஒருவராக இருப்பதால் தங்கள் குறிப்புகளை படத்துடன் சேர்த்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:01, 10 மார்ச் 2011 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க அறிமுகத்திற்கேற்றவாறு விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் படத்தையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்திட மீண்டும்.... மீண்டும்...வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:29, 2 ஏப்ரல் 2011 (UTC)[பதிலளி]
நன்றி பரிதிமதி.நான் ஒன்றும் பெரியதாக செய்யவில்லை.எனது மாவட்ட தேர்தல் முடிவுகளை மட்டுமே புதுப்பிதேன்.முடிந்தால் பக்கத்து மாவட்டஙளுக்கும் சேர்த்து புதுப்பிக்கிறேன். -naveenkumar(KemliN) 07:16, 16 மே 2011 (UTC)
முதற்பக்கத்தில் இடம்பெறும் விக்கிப்பீடியர் அறிமுகப் பகுதியில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பினை இட விரும்புகிறேன். ஏனைய விக்கியர்களில் மிகப்பெரும்பாலோனோரின் அறிமுகக் குறிப்புகள் இடம் பெற்று விட்டன. மூத்த விக்கியர்களில் எஞ்சியிருப்பவர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் குறிப்பு இடம்பெற வேண்டுமென்பது என் அவா. கீழுள்ள இணைப்பில் உங்களைப் பற்றிய குறிப்பை இணைக்க வேண்டுகிறேன்.
எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார்03:09, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:42, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]
நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.
உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
பரிதிமதி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில நாட்களாகத் தங்கள் பங்களிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. நியூட்ரினோ குறித்த குறுங்கட்டுரையை விரிவாக்கம் செய்து அது குறித்து முழுமையான தகவல்களை அளிக்க வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:55, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கும் உற்சாகப்படுத்தலுக்கும் மிக்க நன்றி! Anton (பேச்சு) 03:58, 8 ஏப்ரல் 2012 (UTC)[பதிலளி]
வணக்கம்! உங்களைப் பற்றிய அறிமுகம் எனக்கு ஏற்கெனவே கிடைத்திருந்தது. உங்களுக்கு பறவையியலில் உள்ள ஆர்வம் பற்றித் பயனர்:தகவலுழவன் ஊடாக தெரிந்து கொண்டேன். சில பறவைகள் பற்றிய கட்டுரைகளை ஆரம்பித்துள்ளேன். தேவை ஏற்படும்போது மீண்டும் தொடர்புகொள்வேன். --Anton (பேச்சு) 04:16, 8 ஏப்ரல் 2012 (UTC)[பதிலளி]
நுட்பமான முறையில் கட்டுரையினை மெருகேற்றியதற்காக நன்றிகள். பறவையியலில் உங்கள் பங்களிப்பு தொடர்வதை எதிர்பார்க்கிறேன். அதேபோல் என்னால் செய்ய வேண்டிய விடங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். --Anton (பேச்சு) 06:15, 9 ஏப்ரல் 2012 (UTC)[பதிலளி]
பல்வேறு விலங்கினங்கள் பற்றி ஆர்வமுடைய நீங்கள் இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான குதிரையை மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். விலங்குகள் / பறவைகள் பற்றிய ஒரு வலைவாசல் தொடங்கினாலும் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 15:08, 21 மே 2012 (UTC)[பதிலளி]
வணக்கம், பரிதிமதி. ஒரு இயற்பியல் ஆசிரியர் என்ற முறையில் இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான ஒளி கட்டுரையை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:31, 12 சூன் 2012 (UTC)[பதிலளி]
வணக்கம், பரிதிமதி. நலமா? நீங்கள் மீண்டும் முனைப்போடு பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் பறவைகளைக் காண இன்னும் மகிழ்ச்சி ! பள்ளி விடுமுறைக் காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நிறைய பங்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:52, 5 மார்ச் 2013 (UTC)[பதிலளி]
நன்றி. இப்போதைக்கு தலைப்பை மாற்ற வேண்டாம். அப்படியே விட்டுவிடுவோம். போகப் போக மக்களின் சொல் பழக்கத்திற்கு வந்துவிடும். ஏன் என்றால், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் எனும் சொல்தொடர் மிகச் சரியான, மிகநேர்த்தியான சொல்தொடர் ஆகும். இன்த மாதிரியான சொற்களைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்---ksmuthukrishnan 03:56, 8 மார்ச் 2013 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:06, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம், பரிதிமதி. தங்கள் பள்ளியில் விக்கிப்பீடியா மாணவர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. விரிவான தகவல், ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 14:31, 25 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு, இந்திய குனூ-லினக்ஸ் பயனர் குழு சென்னை மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி குனூ-லினக்ஸ் பயனர் குழு ஆகியவை இணைந்து, வருகின்ற 22 செப்டம்பர், 2013 சுதந்திர மென்பொருள் தினத்தை சென்னை, அண்ணா பொறியில் பல்கலைகழகத்திலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் (விவேக்காநந்தா அரங்கம்) கொண்டாட இருக்கின்றன.
நிகழ்ச்சியின் பகுதியாக நிலையக (Stall) நிறுவல் நடைபெறுகிறது. இதில் தமிழ் விக்கிபீடியாவிலிருந்து நிலையக (Stall) நிறுவல் செய்ய முடியுமா?
உங்களது தொடர்பு எண் கிடைக்குமா?
சோடா பாட்டில், சூர்யா ஆகிய இருவரிடமும் பேசினோம். அவர்கள் தான் உங்களை தொடர்பு கொள்ள சொன்னார்கள்.
வருடா வருடம் இந்த நிகழ்வு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்புக்கு ask [at] fsftn [dot] org
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:12, 18 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:20, 27 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் பரிதிமதி. சென்னை விக்கிக் கூடலில் தங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் தங்கள் பெயர் விடுபட்ட போதும் அதனைப் பொருட்படுத்தாமல் தாங்கள் பண்பினால் பொறுமையாக சான்றிதழ் பெற்றது என் மனதை நெகிழச்செய்தது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:25, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ--01:56, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம் பரிதிமதி! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!
வணக்கம் பரிதிமதி!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
பயனர்:PARITHIMATHI என்பது உங்கள் பயனர் கணக்கா?--இரவி (பேச்சு) 07:00, 16 சூலை 2016 (UTC)
@Shanmugamp7 and PARITHIMATHI: ஒரு நிருவாகிக்குரிய இப்பயனர் கணக்கு பயன்பாட்டில் இல்லை. இது போன்ற கணக்குகளுக்கு நிருவாக அணுக்கத்தை நீக்குவதற்கும் மீண்டும் பயனருடன் புதிய கணக்கிற்கு நிருவாக அணுக்கத்தை அளிப்பதற்கும் உலகளாவிய நடைமுறை என்ன? --இரவி (பேச்சு) 14:39, 15 மே 2017 (UTC)[பதிலளி]
Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.
You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.
If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.
If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen775406:38, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:33, 10 ஏப்ரல் 2017 (UTC)[பதிலளி]
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.
@PARITHIMATHI: வணக்கம். கடவுச் சொல் சிக்கலால் கடந்த இரு ஆண்டுகளாக எந்தப் பங்களிப்பும் இல்லாமல் இருக்கும் முடங்கி உள இந்தப் பயனர் கணக்குக்கான நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா? ஒரு வார காலத்துக்குப் பிறகும் இந்தக் கணக்கில் இருந்து பதில் வரவில்லை எனில் நிருவாக அணுக்கம் நீக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். இதே பயனர் கணக்கை முன்பு இயக்கிய பரிதிமதி கவனிக்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 18:36, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.