விக்கிப்பீடியா:மார்ச்சு 9, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு
சென்னையிலுள்ள விக்கிப்பீடியர்கள் சந்தித்துக் கூடிப்பேசும் விதமாக ஒரு விக்கிப்பீடியர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது சென்னை லினக்ஸ் பயனர் குழுவின் மாதாந்திர சந்திப்புடன் இணைந்து நடைபெற்றது. வருகை தரும் பயனர்களுக்கும் புதியவர்களுக்கும் விக்கிப்பீடியா குறித்தும் லினக்ஸ் குறித்தும் அறியக் கிடைத்தன. இந்திய விக்கியூடகப் பிரிவைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகமும் தரப்பட்டது.
இடமும் நேரமும்
[தொகு]- இடம் : வகுப்பறை எண் 2, விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering) துறை, கஜேந்திரா வட்டம் அருகில், ஐஐடி சென்னை வளாகம்
- நேரம் : 09-03-2013, சனிக்கிழமை மாலை 4-6 மணி
கலந்துகொண்டவர்கள்
[தொகு]- சூர்யபிரகாஷ் உரையாடுக 17:10, 3 மார்ச் 2013 (UTC)
- சோடாபாட்டில்உரையாடுக 17:11, 3 மார்ச் 2013 (UTC)
- அருண்மொழி
- தமிழ்க்குரிசில்
- மணியன் (பேச்சு) 17:04, 4 மார்ச் 2013 (UTC)
- Sengai Podhuvan (பேச்சு) 10:34, 7 மார்ச் 2013 (UTC)
- இரா. முத்துசாமி
- யோகேஷ்
- அருண்பிரகாஷ்
- ஆதித்யா
- ஸ்ரீனி
- மோகன் மனோகரன்
நிகழ்ச்சிக் குறிப்பு
[தொகு]ஐந்தாவது சென்னை விக்கியர் சந்திப்பு நடந்து முடிந்தது. இந்திய லினக்ஸ் பயனர்கள் சென்னை அமைப்பின் (ilugc) மாதாந்திர சந்திப்பின் ஒரு பகுதியாக இது நடைபெற்றது. இதற்கு அதன் கூட்டுனரும், கணியம் தமிழ்க் கணிமை இதழின் ஆசிரியருமான ஸ்ரீனி உதவி செய்தார். ஏறத்தாழ 15 திறமூல ஆர்வலர்களும் அதே எண்ணிக்கையில் விக்கிப்பீடியர்கள் / விக்கி ஆர்வலர்களும் பங்கேற்றனர். சூர்யா, தமிழ் விக்கித் திட்டங்களை அறிமுகம் செய்து அவற்றின் தற்போதைய நிலையை விளக்கினார். சோடாபாட்டில், விக்கிமீடியா இந்தியா அமைப்பினை அறிமுகம் செய்தார்.
விக்கிப்பீடியாவில் பதிப்புரிமை விதிகள், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள், நியாயப் பயன்பாடு, ஆளுமை உரிமைகள், விக்கி காமன்ஸ், ஓ. டி. ஆர். எஸ், விக்கிமீடியா அறக்கட்டளை, கட்டுரை தலைப்புகளின் குறிப்பிடத்தக்க தன்மை, போன்றவற்றை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு முன்பு நடந்த விக்கி 10 நிகழ்வில் வழங்கப்பட்டு, எஞ்சியிருந்த விக்கிப்பீடியா டி-சட்டைகளை மணியன் பாதுகாப்பாக வைத்திருந்து கொண்டு வந்திருந்தார். அவை புதிய விக்கிப்பீடியர்களுக்கு வழங்கப்பட்டன. செங்கைப் பொதுவன் இளைய விக்கியர்களைத் தத்தமது துறை அறிவினைத் தமிழுக்குக் கொண்டு வந்து கட்டுரைகள் எழுதும்படி வேண்டிக் கொண்டார். விக்கிமீடியா அறக்கட்டளை மற்றும் விக்கிமீடியா இந்திய நிறுவனங்களின் வளங்கள் விக்கி திட்டங்களுக்கு சரியானபடி போய்ச் சேரவேண்டும். அதற்கு விக்கியர்கள் விக்கிமீடியா இந்தியாவில் உறுப்பினர்களாகி தங்கள் பின்புல அறிவை வழங்க வேண்டுமென்றும், அமைப்பாளர்களுக்கும் நிருவாகக் குழுவினருக்கும் பரிந்துரைகள் வழங்கியும் அவர்களைக் கேள்விகள் கேட்டும் விக்கித்திட்டங்களின் நிஜ உலக நிருவாகத்தில் பங்கேற்க வேண்டுமென்றும் சோடாபாட்டில் கேட்டுக் கொண்டார்.
வெளி இணைப்புகள்
[தொகு]