சந்திரசேகர் எல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்திரசேகர் எல்லை என்பது ஒரு வெண்குறுமீனின் நிறைக்கான கருத்தியல் பெரும எல்லை - இது சூரியனின் நிறையைப் போல ஏறக்குறைய 1.4 மடங்காகும். இது கோட்பாட்டு (கருத்தியல்) இயற்பியலாளரான சுப்பிரமணியன் சந்திரசேகரின் பெயரை நினைகூரும் வண்ணம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த எல்லை நிறைக்கு மேல், சமவாற்றல்-நிலை எலக்ட்ரான் அழுத்தத்தினால் (அவ்வமைப்பை) உள்நோக்கி வீழ்த்தும் ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த இயலாது. அவ்விண்மீன் நியூட்ரான் விண்மீனாக மாறிவிடும்; அல்லது ஓப்பனைமர்-வோல்க்காப் எல்லையையும் கடந்த அமைப்பென்றால், அது ஒரு கருந்துளையாக உருமாறுவதைத் தடுக்கவியலாது.

கலைச்சொற்கள்[தொகு]

  • கருத்தியல் பெரும எல்லை - theoretical maximum limit
  • சமவாற்றல்-நிறை எலக்ட்ரான் அழுத்தம் - degenerate electron pressure
  • கருந்துளை - black hole.

குறிப்புதவி[தொகு]

  • டேவிட்டார்லிங்கின் கலைக்களஞ்சியம் [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரசேகர்_எல்லை&oldid=2743664" இருந்து மீள்விக்கப்பட்டது