உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"கல்வியில் தகவல் தொழில்நுட்பம், மற்றும் விக்கிப்பீடியா" எனும் அடிப்படையில், தமிழகக் கல்வித்துறையினரிடையே நிகழ்ந்த உரையாடல்களின் விளைவாக இப்பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.


2/5/2017 முதல் 4/5/2017 வரை மூன்று நாட்கள் மாநில அளவில் விக்கிப்பீடியா பயிற்சியும், 10/5/2017 முதல் 12/5/2017 வரை மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டங்களில் பயிற்சியும் வழங்கப்படும்.


இதன் படி முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆயிரம் கட்டுரைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பாக பங்களிக்கும் மாவட்டத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகளும் விருதுகளும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.


இப்பயிற்சியினூடாக தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கை பல ஆயிரங்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு[தொகு]

2/5/2017 முதல் 4/5/2017 வரை மூன்று நாட்கள் மாநில அளவில், மாவட்டத்திற்கு இரண்டு தமிழக அரசு அலுவலர்கள் ஏறத்தாழ 70 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பயிற்சி அளித்த விக்கி பங்களிப்பாளர்கள் வருமாறு:-

 1. தமிழ் பரிதி மாரி
 2. த.சீனிவாசன்
 3. காமன்சு சிபி
 4. உலோ.செந்தமிழ்க்கோதை
 5. செம்மல்
 6. பார்வதி சிறீ
 7. தகவலுழவன்
 8. நீச்சல்காரன்
 9. பரிதிமதி

இதில் பங்கு கொண்டவர்கள், அடுத்து மாவட்ட அளவில் 10/5/2017 முதல் 12/5/2017 வரை மூன்று நாட்கள் உரிய மாவட்ட அளவில் பணியாற்றும் தமிழக அரசுப் பள்ளி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

மாவட்ட பயிற்சி தர விருப்பமுடையோர்[தொகு]

 • மாநிலம் முழுமையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் பயிற்சிக்கு வரும் விக்கிப்பீடியர்களுக்கு, உணவு, தங்குமிடம், பயணச்செலவு மதிப்பூதியம் ஆகியவை வழங்கப்படும். ஒரு விக்கிப்பீடியர் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் 3 மாவட்டங்களில் பயிற்சியில் கலந்துகொள்ளலாம். பெயர் பதிவிட்டால் ஒருங்கிணைக்க ஏதுவாக இருக்கும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:40, 6 மே 2017 (UTC)[பதிலளி]

மாவட்டப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள்[தொகு]

பயிற்சிக்கால விக்கிப்பீடியா நடவடிக்கைகள்[தொகு]

கட்டுரைகளில் வார்ப்புரு இட்டுப்பராமரிப்பு, துப்புரவு, சான்றிணைப்பு, கட்டுரை உரைதிருத்தம் ஆகிய பணிகளில் ஈடுபடக்கூடிய பயனர்கள்

துப்புரவு வழிகாட்டல்[தொகு]

 • புதிய பயனர் கணக்குகள் உருவாக்கும் கட்டுரைகளை இங்கு காணலாம்.
 • பதிப்புரிமை மீறல், துரித நீக்கல் தகுதிக்குரிய கட்டுரைகளை மட்டும் உடனுக்கு உடன் நீக்குங்கள். எஞ்சிய கட்டுரைகளில், மேம்படுத்த/தலைப்பைத் தக்க வைக்க சிறிதளவே வாய்ப்பிருப்பினும் தொடுப்பிணைப்பி கொண்டு {{Cleanup june 2017}} என்ற வார்ப்புருவை இணையுங்கள். இவற்றை அடுத்த மாதம் முதற்கொண்டு கவனித்து முழுமையான துப்புரவில் ஈடுபடலாம். கட்டுரைகளை நீக்கினாலும் மேம்படுத்த வாய்ப்பிருந்தாலும் பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் சுருக்கமாகவேனும் கருத்திடுங்கள். ஒரே மாதிரியான அறிவிப்புகளை மீண்டும் மீண்டும் இட வேண்டி வந்தால் இதற்கான வார்ப்புருக்களை உருவாக்கலாம்.
 • நல்ல கட்டுரைகள், தொகுப்புகளை மேற்கொள்ளும் புதுப்பயனர்கள், அவர்களுக்கு வழிகாட்டும் விக்கிப்பீடியர்கள், துப்புரவில் ஈடுபடுவோரை ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கள் பேச்சுப் பக்கங்களில் கருதிடுங்கள். பதக்கங்கள் அளிக்கலாம். தொகுப்புகளுக்கு நன்றி தெரிவிக்கலாம். இது ஒரு புறம் விக்கிக் கொள்கைகளை நிறைவேற்றும் அதே வேளை, விக்கி பற்றிய நல்லெண்ணமும் உற்சாகமும் கூட உதவும்.

துப்புரவினை குறைக்கும் வழிமுறைகள்[தொகு]

 • தமிழகம், தமிழர் சார்ந்த பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளன. அவற்றை தமிழில் மொழிபெயர்க்கக் கூறலாம். எடுத்துக்காட்டுகள் வருமாறு:-

மணல்தொட்டி என்னும் பயிலுமிடத்தில் எழுதி சரிபார்த்த பின்புதான், கட்டுரையை வெளியிட வேண்டும். அப்பொழுதே பிறமொழியினரால் நமது தமிழ் விக்கிப்பீடியா போற்றப்படும். நமக்கும் துப்புரவு பணிகள், வெகுவாகக் குறையும்.

8 முதல் 10 மே வரை பயிற்சி நடைபெறும் இடங்கள்[தொகு]

 • வேலூர் ,ஆசிரியப்பயிற்சி நிறுவனம், இராணிப்பேட்டை,
வேலூர் பெரிய மாவட்டம் என்பதால் முன்கூட்டியே, இரண்டு இடங்களில் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது.

10 மே 2017 நடந்தவை[தொகு]

தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி தற்காலிக இரத்து[தொகு]

(ஆலமரத்தடியில் அறிவிக்கப்பட்ட நகல் வருமாறு)

தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி நிருவாகக் காரணங்களை முன்னிட்டு தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஒரு தேதியில் ஒருங்கிணைக்கப்படலாம்.--இரவி (பேச்சு) 13:04, 10 மே 2017 (UTC)[பதிலளி]

பின்னர் எப்போது நடக்கும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:22, 10 மே 2017 (UTC)[பதிலளி]
தேதி முடிவாகவில்லை. முன்கூட்டியே அறிவிக்க வேண்டுவோம். இது நம் தரப்பில் தேவையான ஏற்பாடுகளைக் கவனிக்க உதவும். --இரவி (பேச்சு) 13:50, 10 மே 2017 (UTC)[பதிலளி]
இரவி, போட்டிக்கு இடையூறு விளைவிக்காத நாள் ஒன்றில் ஒழுங்கு செய்யமுடியாதா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:54, 10 மே 2017 (UTC)[பதிலளி]
~30 மாவட்டங்களில் ஏறத்தாழ 3000 ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி என்பது மாபெரும் நடைமுறை ஏற்பாடுகள் அடங்கிய திட்டம். இதனை ஒருங்கிணைப்பவர்கள் தேதியை முடிவு செய்ய பல்வேறு காரணிகள் உள்ளன. விக்கிப்பீடியாவுக்குத் தோதான நாளில் நடத்துங்கள் என்று கோருவது ஏரணமற்றது. முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமானால் கோரலாம். --இரவி (பேச்சு) 14:07, 10 மே 2017 (UTC)[பதிலளி]
//நிருவாகக் காரணங்களை முன்னிட்டு// விளக்க முடியுமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:12, 10 மே 2017 (UTC)[பதிலளி]
ஏற்பாட்டாளர்கள் வேறு காரணம், விளக்கம் ஏதும் தரவில்லை. மீண்டும் நிகழ்ச்சிகளைத் தக்க வேளையில் ஒருங்கிணைக்க ஆர்வமாக உள்ளார்கள் என்று மட்டும் அறிய முடிகிறது. --இரவி (பேச்சு) 14:15, 10 மே 2017 (UTC)[பதிலளி]

அடுத்த கட்டப் பயிற்சிகள் (சூன், சூலை மாதங்கள்)[தொகு]

குறுக்கு வழி:
WP:TNSEJUNE17

ஆசிரியர்களுக்கான அடுத்தக்கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பயிற்சிகளை, மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் திட்டமிடலின் கீழ் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஒருங்கிணைக்கும். மாவட்டத்துக்கு 30 ஆசிரியர்கள் மூன்று நாட்கள் பயிற்சிகளில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். முதல் நாள் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகமும், அடுத்த இரு நாட்கள் கட்டுரையாக்கமும் நோக்கமாக அமையும். இப்பயிற்சிகளில் கலந்து கொண்டு தமிழ் விக்கிப்பீடியா பற்றி பயிற்சி அளிக்க விரும்பும் விக்கிப்பீடியா பயனர்கள், கீழே அந்தந்த மாவட்டங்களுக்கு நேராக தங்கள் பெயரையும், செல்ல இயலும் தேதியையும் குறிப்பிட வேண்டுகிறோம். பயிற்சிக்குச் செல்பவர்களுக்கு தங்குமிடம், போக்குரவத்து, உணவு ஏற்பாடுகள் ஒருங்கிணைப்பாளர்களால் பொறுப்பெடுத்துக் கொள்ளப்படும்.

சூன் 21 - 23[தொகு]

 1. திருச்சி -தியாகு கணேஷ் (சூன் 21 )
 2. பெரம்பலூர் - சூன் 22 ஹிபாயத்துல்லா ; சூன் 23 உழவன் (உரை)
 3. அரியலூர் - சூன் 21, 22 உழவன் (உரை)
 4. வேலூர் - இரவி (சூன் 21)
 5. திருவண்ணாமலை - இரவி (சூன் 22)
 6. விழுப்புரம் - த. சீனிவாசன் (சூன் 21)
 7. கடலூர் - இரவி (சூன் 23)
 8. நாகப்பட்டினம் -மணி.கணேசன் - (சூன் 22)
 9. திருவாரூர் - மணி.கணேசன் -சூன் 21 மற்றும் 23 (2 நாட்கள்)
 10. தஞ்சாவூர் - தியாகு கணேஷ் -சூன் 23, ஹிபாயத்துல்லா
 11. கரூர்- தியாகு கணேஷ் (சூன் 22)
 12. திருநெல்வேலி

சூன் 28 - 30[தொகு]

 1. கன்னியாகுமரி - சங்கர் (சூன் 28), இரா. பாலா (சூன் 29)
 2. தூத்துக்குடி- Srithern (சூன் 28, 29, 30)
 3. இராமநாதபுரம்-ஹிபாயத்துல்லா (சூன் 28), அரும்புமொழி (சூன் 28, 29, 30)
 4. சிவகங்கை-ஹிபாயத்துல்லா (சூன் 29)
 5. தேனி-ஹிபாயத்துல்லா (சூன் 30) சங்கர் (சூன் 29,30)
 6. திண்டுக்கல்-முஹம்மது அம்மார் (சூன் 28), சசிக்குமார் (சூன் 29, 30)
 7. விருதுநகர்-இரா. பாலா (சூன் 28), மகாலிங்கம் (சூன் 28, 29, 30)
 8. மதுரை-சசிக்குமார் (சூன் 28), முஹம்மது அம்மார் (சூன் 29, 30)
 9. புதுக்கோட்டை - தியாகு கணேஷ்- சூன் 28,29,30 மூன்று நாட்களும்

சூலை 04 - 06[தொகு]

 1. சென்னை - உலோ.செந்தமிழ்க்கோதை (சூலை 4, 5, 6 ), சண்முகம் (சூலை 5)
 2. திருவள்ளூர் - பரிதிமதி (சூலை 4, 5, 6)
 3. காஞ்சிபுரம் - ப. இரமேஷ் (சூலை 4, 5,6), அன்புமுனுசாமி (சூலை 4, 5, 6), சீனிவாசன் (சூலை 5)
 4. கிருஷ்ணகிரி - அருளரசன் (சூலை 5), TNSE JOHN VLR (மூன்று நாட்களும்)
 5. தர்மபுரி - அருளரசன் (சூலை 4), அரும்புமொழி
 6. சேலம் - ஹிபாயத்துல்லா (சூலை 6),
 7. ஈரோடு - ஹிபாயத்துல்லா (சூலை 5), பார்வதி (சூலை 6), சுரேந்திரன்
 8. நாமக்கல் - மூன்று நாட்களும் (சூலை 4, 5, 6) --உழவன்
 9. திருப்பூர் - ஹிபாயத்துல்லா (சூலை 4), மகாலிங்கம் (சூலை 5)
 10. நீலகிரி - சண்முகசுந்தரம் (சூலை 5,6)
 11. கோயம்புத்தூர் - மகாலிங்கம் (சூலை 4) சண்முகசுந்தரம் (சூலை 4)