விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 15

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீகர்சன் (மே 25, 2013- சூன் 1, 2014) (வாக்கு: 3|1|2)[தொகு]

ஸ்ரீகர்சன், ஆகிய நான் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றேன். தற்போது வரை விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையை ஏனும் உருவாக்காத போதிலும்[1] தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, பிலிப்பீன்சு, இசுதான்புல் போன்ற கட்டுரைகளை அதிகளவில் விரிவாக்கியுள்ளேன். அண்மைக்காலமாக முதற்பக்க கட்டுரைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.[2] ஆனால் வார்ப்புரு:Mainpage v2 இல் தொகுக்க முடியாதுள்ளதால் மற்ற நிர்வாகிகளின் துணையை ஒவ்வொரு வாரமும் நாடவேண்டியுள்ளது. அத்தோடு விக்கிப்பிடியாவில் மீடியாவிக்கி பெயர்வெளியிலுள்ள பல நிரல்கள் மேம்படுத்தப்பட வேண்டி உள்ளன. நுட்பம் சார் அறிவு உள்ளதால் என்பங்களிப்பை விக்கிப்பீடியாவிற்கு நுட்பரீதியாகவும் வழங்க முடியும். இணைக்கப்பட வேண்டிய கட்டுரைகளை இணைத்து உதவவும் முடியும். அத்துடன் நிர்வாகிக்குரிய அதிகாரங்களை (பயனர் தடை,பக்கங்களை நீக்குதல்) எந்த வகையிலும் துஷ்பிரயோகம் செய்யமாட்டேன் என உறுதிகூறி என் பரிந்துரியை முன்வைக்கின்றேன்.

சான்றுகள்;

  1. தொடங்கிய கட்டுரைகள்
  2. விக்கிப்பீடியா:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு#தற்போதைய பராமரிப்பாளர்கள்

--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:23, 25 மே 2014 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

  1. ஸ்ரீகர்சன் நிச்சயம் நிர்வாகியாக வேண்டியவர் அவர் நிர்வாகி ஆக்குவதை ஆமோதிக்கின்றேன் --✍ mohamed ijazz ☪® (பேச்சு) 07:06, 26 மே 2014 (UTC)[பதிலளி]
  2. ஆமாம் இயாசு இவர்களே, நானும் ஸ்ரீகர்சன் அவர்கள் நிர்வாகி ஆவதை ஆமோதிக்கின்றேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:32, 26 மே 2014 (UTC)[பதிலளி]
  3. ஆர்வத்துடனும், ஆக்கப்பூர்வமான பணிகளிலும் ஈடுபாடு உள்ளதாலும், தக்க சமயத்தில் இவருக்கு நிர்வாக தரம் கொடுக்கப்பட்டால், விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவுமென்ற காரணத்தினால் ஸ்ரீகர்சனுக்கு நிர்வாக தரம் கொடுப்பதற்கு முழுமனதுடன் ஆதரவு அளிக்கிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:42, 26 மே 2014 (UTC)[பதிலளி]

(வாக்கெடுப்புக் காலம் முடிந்தது)

எதிர்ப்பு[தொகு]

  1. --AntonTalk 17:56, 25 மே 2014 (UTC)[பதிலளி]

(வாக்கெடுப்புக் காலம் முடிந்தது)

நடுநிலை[தொகு]

  1. சீறீகர்சனின் ஆர்வத்தையும், அவரின் தைரியத்தையும் மதிக்கின்றேன். அதேவேளையில், நிர்வாகியாவதற்கு அவர் பயிலவேண்டியது இன்னமும் நிறைய இருப்பதாகவும், இன்னபிற பங்களிப்பினைத் தரவேண்டியது உள்ளன எனக் கருதுவதாலும் நடுநிலை வகிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:55, 26 மே 2014 (UTC)👍 விருப்பம்-- நி.மாதவன்  ( பேச்சு  ) 13:45, 26 மே 2014 (UTC)[பதிலளி]
  2. -- நி.மாதவன்  ( பேச்சு  ) 13:45, 26 மே 2014 (UTC)[பதிலளி]

(வாக்கெடுப்புக் காலம் முடிந்தது)

கருத்து[தொகு]

  • ஒப்பீட்டளவில் இங்கு அதிகமான நிருவாகிகள் உள்ளதால் இன்னும் நிருவாகிகள் தேவையா? ஏற்கெனவே உள்ளவர்களின் பணி சிறப்பாக அமையவில்லை என்று கருத வேண்டி உள்ளதா? அண்மையில் நிருவாகிகளாக்கப்பட்ட சிலர் விக்கியில் குறைந்தளவு நிருவாகப் பங்களிப்பு செய்கின்றனர். எனவே ஆர்வ மிகுதியால் நியமிக்கத் தேவையில்லை. ஏற்கெனவே நிருவாகியாக்கப்பட்ட மாணவர்களில் தற்போதைய பங்களிப்பு, நுட்ப உதவிக்காக நிருவாகியாக்கப்பட்டவர்களின் தற்போதைய பங்களிப்பு என்பன குறைந்துள்ளதால் குறிப்பிட்ட விடயத்திற்கான (முதற்பக்க கட்டுரைகள் ஒழுங்கமைப்பு, நிரல்கள் மேம்படுத்தப்பட) நிருவாகிகள் தேவையில்லை. இதுவரை எக்கட்டுரையும் உருவாக்கவில்லை. பதிப்புரிமை தொடர்பான அறிவு, பயனர் அணுகுமுறை, கொள்கை தொடர்பான அறிவு, தமிழ் மொழியறிவு ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்கள் போன்ற பரவலான விடயங்களில் தொடர்புள்ளவர்கள் இதற்கு அவசியமாகின்றனர். மேலும், இதுவரை நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் கட்டுரை வெல்வதில் காட்டிய ஆர்வம், அதை முறையாக வெல்வதில் வெளிப்படுத்தாததால் நிருவாகியாக செயற்படக் கூடிய பக்குவம் இல்லை என்றே கருதுகிறேன். மேலும், இங்குள்ள "விதிமுறைகள்" மேம்படுத்தப்பட வேண்டும். --AntonTalk 18:06, 25 மே 2014 (UTC)[பதிலளி]
  • ஸ்ரீகர்சன், நீங்கள் புதிய கட்டுரைகளை உருவாக்காமல் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மட்டும் மேம்படுத்தி வருகிறீர்கள் என்பது வியப்பான செய்தி. நிச்சயம், இத்தனைத் தொகுப்புகளுடன் இவ்வாறாக செயற்படுபவர் நீங்கள் ஒருவராகத் தான் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். பாராட்டுகள். அண்மையில் இணைந்த மற்ற பல புதிய பயனர்களைக் காட்டிலும் நீங்கள் பன்முகப் பங்களிப்புகளைத் தருகிறீர்கள் என்பதில் ஐயமில்லை. எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியா பேச்சு:தொடுப்பிணைப்பி#குறித்த கால Refimprove வார்ப்புரு சேர்க்க வேண்டும், விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) பகுதியில் உள்ள பங்களிப்புகள். நிச்சயம், வருங்காலத்தில் ஒரு நல்ல நிருவாகியாக செயற்படுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. ஆனால், தற்போது உள்ள நிலையில் உங்கள் நிருவாக அணுக்க வேண்டல் கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். ஏனெனில்: 1. தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே 39 நிருவாகிகள் உள்ளனர். இது உலக அளவிலான விக்கிப்பீடியாக்களில் நிருவாகிகள் எண்ணிக்கையில் 13ஆவது இடம். எனவே, முதற்பக்க இற்றை / நுட்பப் பணி இற்றை ஆகியவற்றைக் கவனித்துச் செய்ய போதுமான அளவில் ஆட்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட பங்களிப்புகளை விரைவாகச் செய்ய நிருவாக அணுக்கம் தேவை இல்லை. 2. விக்கிப்பீடியா துப்புரவில் கூடுதல் பங்களியுங்கள். கொள்கை உரையாடல்களிலும் கட்டுரை பேச்சுப் பக்க உரையாடல்களிலும் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நிருவாக அணுக்கம் கிடைத்த பிறகு உங்கள் செயற்பாடு, அணுகுமுறை, நிலைப்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள பயனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். 3. தமிழ்விக்கி10 கொண்டாட்டத்துக்குப் பிறகு தமிழ் விக்கிப்பீடியா ஒரு நிலைமாறும் கட்டத்தில் (transition period) உள்ளது. நிருவாகியாக இருப்பவர்கள் கூடுதலான அழுத்தங்களை எதிர்கொள்ளும் போதும் நிலை தடுமாறாமல் செயற்பட வேண்டும், விக்கிப்பீடியா நடைமுறைகள், பண்புகளில் இருந்து வழுவாமல் செயற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. மிக நீண்ட நாளாக பங்களிப்போருக்கே இது ஒரு சவாலான விடயமாகவே உள்ளது. உங்களுக்கு அறிவுரை சொல்வதாக எண்ண வேண்டாம். நான் உட்பட பல நிருவாகிகளும் கூட இந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. எனவே, புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுப்பில் மிக உயர்வான தர எல்லைகளை வகுப்பது நல்லது என்று தோன்றுகிறது. போன நிருவாகிகள் தேர்தலின் போதே இது சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், இதற்கான உரையாடல் இன்னும் துவங்கவில்லை. இது பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டு புதிய நிருவாகிகள் தேர்தலில் ஈடுபடுவது சிறப்பாக இருக்கும். இன்னும் முனைப்புடன் தொடர்ந்து செயற்படுங்கள். இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு தக்க பயனர்கள் யாரும் உங்கள் நிருவாக அணுக்க வேண்டல் கோரிக்கையை முன்மொழிந்தால், நீங்கள் ஒருமித்த கருத்துடன் நிருவாக அணுக்கம் பெறுவற்கான கூடுதல் வாய்ப்பு உண்டு. வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 06:47, 26 மே 2014 (UTC)[பதிலளி]
அண்மைக்காலங்களில் மட்டுமல்ல பங்களிக்க ஆரம்பித்ததில் இருந்தே சோதனை முயற்சியாக பல நிரல்களை வடிவமைத்தும் பல விக்கித்திட்டங்களில் தேடி இங்கு கொண்டுவந்து மொழிபெயர்த்தும் உள்ளேன் (காண்க - சிறப்பு:PrefixIndex/பயனர்:Shrikarsan/). இம்மாதம் வரை கட்டுரைப் போட்டிகளில் தொடர்ந்து பங்களித்ததால் பல அழுத்தங்களுடனேயே பங்களிக்க வேண்டியிருந்தது. ஏனெனில் சற்று விலகியிருந்தாலும் எமது இடத்திற்குப் பாதகமாக அமைந்துவிடும்! அதனால் சில கொளகை உரையாடல்களில் கருத்திட முடியாது போனது ஆனால் பல உரையாடல்களில் இயன்றவரை பங்கெடுத்திருந்தேன். (நான் விக்கியில் பங்களிக்க முன் நடைபெற்ற உரையாடல்களின் தொடர்ச்சியான உரையாடல்களைத் தவிர்த்து) கட்டுரைப் போட்டியின் நோக்கம் குறுங்கட்டுரைகளை விரிவாக்குதல் எனத் தெரிந்திருந்த போதிலும் சில சமயங்களில் குறுக்குவழிகளில் விரிவாக்க முயன்றதும் உண்மைதான். கட்டுரைப் போட்டி என்பதால் வெற்றிக்காக அப்படிச் செய்திருக்கலாம் ஆனால் அதை பொதுவான விக்கிமுறை மீறலாகக் கருதமுடியாது (கட்டுரைப் போட்டி விதிகளே மீறப்பட்டன). //ஏற்கெனவே நிருவாகியாக்கப்பட்ட மாணவர்களில் தற்போதைய பங்களிப்பு, நுட்ப உதவிக்காக நிருவாகியாக்கப்பட்டவர்களின் தற்போதைய பங்களிப்பு என்பன குறைந்துள்ளதால் குறிப்பிட்ட விடயத்திற்கான (முதற்பக்க கட்டுரைகள் ஒழுங்கமைப்பு, நிரல்கள் மேம்படுத்தப்பட) நிருவாகிகள் தேவையில்லை// இவ்வாறு உள்ளதை வைத்து எப்படி நானும் அவ்வாறு செயற்படுவேன் எனக் கூற முடியும். அவர்களுக்கு பங்களிக்க நேரம் கிடைக்காதிருக்காலாம் அல்லவா! அதன் காரணமாகவே நிர்வாகித்தர வேண்டுகோளை நுட்பப் பங்களிப்பை முன்னிறுத்தி எழுதினேன். //பதிப்புரிமை தொடர்பான அறிவு, பயனர் அணுகுமுறை, கொள்கை தொடர்பான அறிவு, தமிழ் மொழியறிவு ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்கள் போன்ற பரவலான விடயங்களில் தொடர்புள்ளவர்கள் இதற்கு அவசியமாகின்றனர்.// இத்துறைகளில் என்க்கும் ஆர்வம் உள்ளன. ஆனால் கட்டுரைப் போட்டியால் அவற்றில் என் ஈடுபாட்டை அதிகம் காட்ட முடியவில்லை. அனைத்திற்கும் கட்டுரைப்போட்டியைக் காரணம் காட்டித்தப்பிக்க முயல்வதாக நினைக்ககாதீர்கள். நான் கட்டுரைப்போட்டி வாகையர் பட்டம் பெறும் பொருட்டு அனைத்து மாதங்களிலும் பங்களித்ததே இதற்குக் காரணம். இம்மாதத்துடன் கட்டுரைப்போட்டிகள் முடிவடைவதால் அடுத்த மாதத்திலிருந்து என்னாலான பங்களிப்பை முழுமையாக வழங்கும் பொருட்டே நிர்வாகி அணுக்க கோரிக்கையை முன்வைத்தேன். முழுமையான நிர்வாக அணுக்கம் இல்லையெனில் தற்காலிக அணுக்கம் வழங்கினாலும் ஏற்றுக்கொள்கின்றேன். அத்தற்காலிக காலத்தில் உரிய நிரல்களில் மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்து உதவ முடியும். நீங்கள் அனைவரும் கூறிய கருத்துக்களை எற்கின்றேன் ஆனால் நான் இட்ட கருத்தினை வாசித்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:47, 26 மே 2014 (UTC)[பதிலளி]
ஸ்ரீகர்சன், நீங்கள் கூறுவது அனைத்தும் புரிகிறது. ஆனால் உங்களுக்கு என் முந்திய கால நிலை தகுந்த பதிலாக இருக்கலாம். நான் உங்களுக்குத் தெரியுமா பகுதியில் பங்களிக்கத் தொடங்கி சராசரியாக ஏழுமாதங்கள் கழித்து தான் நிர்வாகப் பொறுப்புக் கிடைத்தது. போட்டி முடிந்ததும் நீங்கள் மேலே கூறிய பகுதிகளில் அதிகமாகப் பங்களியுங்கள். எப்படியும் இன்னும் கால் - அரை ஆண்டில் சிறந்த நிர்வாகியாக ஆகிவிட முடியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:36, 26 மே 2014 (UTC)[பதிலளி]

(வாக்கெடுப்புக் காலம் முடிந்தது)

கேள்விகள்[தொகு]

முடிவு[தொகு]

வாக்கெடுப்பின் மீதான முடிவை அதிகாரி நிலை பயனர்கள் இங்கு உரையாடிய பின் அறிவிப்பது நல்லதாகப் படுகிறது. வாக்கெடுப்பு முடிவை எவ்வாறு புரிந்து கொண்டு இணக்க முடிவாக அறிவிப்பது என்ற முறையில் அணுகுவது சரியாக இருக்கும். நிருவாக அணுக்க கோரிக்கை குறித்த தங்கள் தனிப்பட்ட ஆதரவு / நடுநிலை / எதிர்ப்பு நிலைப்பாட்டை மேலே பதியலாம். எனவே, அந்த தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்து விலகி வாக்கெடுப்பு நிலவரத்துக்கு ஏற்ப என்ன முடிவு எடுப்பது என்பது பற்றி மட்டும் இங்கு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன். கவனிக்க: பயனர்:Mayooranathan, பயனர்:Natkeeran, பயனர்:Sundar. --இரவி (பேச்சு) 15:24, 1 சூன் 2014 (UTC)[பதிலளி]

பயனர்:Mayooranathan, பயனர்:Natkeeran, பயனர்:Sundar - சூன் 8, 2014க்கு முன்பு விரைந்து உங்கள் கருத்துகளைத் தந்தால் இணக்க முடிவை காலம் தாழ்த்தாமல் எடுக்க உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 08:48, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]

மேலோட்டமாக பார்த்ததில் சிரீகர்சன் சிறப்பாகப் பங்களிக்கக் கூடியவர் என உணர்கிறேன். அதேவேளை பதிவான வாக்குகளையும் கருத்துக்களையும் பார்த்தால் அவர் இன்னும் சிலகாலம் பங்காற்றியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தெரிகிறது. குறிப்பிட்ட ஒரு வார்ப்புருவைத் தொகுப்பதற்கும் நுட்பச் செயல்பாடுகளுக்கும் இப்போதுள்ள வசதிப்படி இந்த அணுக்கம் தேவைப்படாது என்றே நினைக்கிறேன். வேண்டிய எண்ணிக்கையில் நிருவாகிகள் இருப்பதாகப்பல பயனர்கள் கருத்துத் தெரிவித்திருப்பதால் நிருவாகி அணுக்கத்திற்கான தகுதிகளைச் சற்று வரையறுக்கலாம் என நினைக்கிறேன் (இந்த நியமனத்தை முன்னிட்டில்லாவிட்டாலும் இனிவரும் முன்மொழிவுகள் அனைத்தையும் எண்ணி இவ்வாறு செய்தல் வேண்டும்.) இப்போதைக்கு போதிய ஆதரவு இருப்பதாகவும் தெரியவில்லை. (நான் அவ்வப்போது மட்டும் வந்துசெல்வதால் ஏதேனும் தகவலைக் கவனிக்கத் தவறியிருக்கலாம். அவ்வாறிருந்தால் சுட்டிக்காட்டி உதவுங்கள்.) -- சுந்தர் \பேச்சு 11:02, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]
அண்மைய நிருவாக அணுக்க வாக்கெடுப்புகளை ஒப்பிட இந்த வாக்கெடுப்பில் குறைவான எண்ணிக்கை வாக்குகளே பதிவாகியுள்ளன. அவற்றிலும் சரி பாதி எதிர்ப்பு / நடுநிலை / கருத்துகளைக் கொண்டிருப்பதால், இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் தற்போது சிறீகர்சனுக்கு நிருவாக அணுக்கம் வழங்குவதற்கான சூழல் இல்லை. இது ஒரு அதிகாரி நிலை பயனர் என்ற முறையில் வாக்கெடுப்பு நிலவரம் தொடர்பான என்னுடைய தனிப்பட்ட கருத்து. மற்ற அதிகாரி நிலை பயனர்களும் கருத்து தெரிவித்த பிறகு சூன் 8, 2014க்குப் பிறகு வாக்கெடுப்பு முடிவு அறிவிக்கப்படும்.--இரவி (பேச்சு) 11:47, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]
ஸ்ரீகர்சன் தமிழ் விக்கிப்பீடியாவின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாகவும், தொடர்ச்சியாகவும் பங்களித்து வரும் ஒரு பயனர் என்பதில் சந்தேகம் இல்லை. பிற பயனர்களுடன் பழகும் விதம், மற்றவர்களுடைய ஆலோசனைகளைச் செவிமடுத்தல் போன்ற விடயங்களிலும் அவர் முறையாகவே செயல்படுவது தெரிகிறது. எனவே, தமிழ் விக்கியின் எதிர்கால வளர்ச்சிக்கு முன்னணியில் நின்று செயல்படக்கூடிய ஒரு பயனராகவே அவரை நான் பார்க்கிறேன்.
அவரது நிர்வாக அணுக்கம் தொடர்பான மேலுள்ள வேண்டுகோள் தொடர்பில் ஆறு பயனர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது அண்மைக் காலங்களிலான வேண்டுகோள்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது. இது ஏன் என்று தெரியவில்லை. நானும் வாக்களிக்கவில்லை. இதற்கு இது என் கண்ணில் படாமல் விட்டதே காரணம். மேலும் பலருக்கு இதுபோல் நிகழ்ந்திருக்கக்கூடும். எது எப்படி இருந்தாலும், என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு வாக்கெடுப்பின் அடிப்படையில் மட்டும் பார்க்கும்போது இந்த முறை ஸ்ரீகர்சனுக்கு நிர்வாக அணுக்கம் வழங்குவதற்கான சாதகமான நிலை இல்லை என்றே தெரிகிறது. இந்த நிலைமை குறித்துச் ஸ்ரீகர்சன் உற்சாகம் இழக்கவேண்டிய அவசியம் இல்லை. சில பயனர்கள் நீங்கள் சில விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே அதை ஒரு ஆலோசனையாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பணியாற்றுங்கள். விரைவில் இந்த அணுக்கத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ் விக்கியில் நிர்வாகிகள் கூடுதலாக இருக்கிறார்கள் என்பது பிரச்சினையல்ல. இத்தனை பேர் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். இத்தனை வீதம் நிர்வாக அணுக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதெல்லாம் நிர்வாக அணுக்கம் வழங்குவதற்குத் தடையாக இருக்க வேண்டியது இல்லை. இது தமக்குக் கீழே ஒரு குறிப்பிட்ட அளவு பயனர்களை வைத்துக்கொண்டு மேலாண்மை செய்வதற்கான பதவி அல்ல. பொறுப்பான பயனர்களுக்கு வழங்கப்படும் வழங்கப்படும் சில கூடுதல் அணுக்கங்கள் மட்டுமே. எனவே விக்கிப்பீடியாவின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் புரிந்துகொண்டு, தமது கூடுதல் அணுக்கங்களைப் பொறுப்புடன் பயன்படுத்தக்கூடிய எவரும் நிர்வாகியாக இருப்பதில் தவறு இல்லை. ஆனாலும், ஒவ்வொரு பயனரையும் பற்றி மற்ற எல்லாப் பயனர்களும் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கக்கூடிய எல்லைகளைத் தாண்டி தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்து வருவதால், நிர்வாக அணுக்கம் வழங்குவதற்குரிய கொள்கைகளை வகுத்துக் கொள்வது அவசியமே. இது நிர்வாக அணுக்கம் கோர விரும்புபவர்களுக்கும், வாக்களிப்பவர்களுக்கும் உதவியாக அமையும்.
---மயூரநாதன் (பேச்சு) 08:14, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 08:24, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]
@மயூரநாதன் அவர்களே //அவரது நிர்வாக அணுக்கம் தொடர்பான மேலுள்ள வேண்டுகோள் தொடர்பில் ஆறு பயனர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது அண்மைக் காலங்களிலான வேண்டுகோள்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது. இது ஏன் என்று தெரியவில்லை. நானும் வாக்களிக்கவில்லை. இதற்கு இது என் கண்ணில் படாமல் விட்டதே காரணம். மேலும் பலருக்கு இதுபோல் நிகழ்ந்திருக்கக்கூடும்.// என்று கூறியிருந்தீர்கள். வழக்கமாக அண்மையில் நடைபெற்ற தேர்தல்களுக்கும் மீடியாவிக்கி:Sitenotice இல் அறிவிப்பு இடப்பட்டிருந்தது (காண்க: 1, 2, 3) இதனால் அனைத்துப் பயனர்களுக்கும் வாக்கெடுப்பு நடைபெறுவது தெரியவந்து வாக்களித்திருந்தனர். ஆனால் இம்முறை மீடியாவிக்கி:Sitenotice இல் அறிவிப்பு இடப்படவில்லை. நானே மீடியாவிக்கி:Sitenotice இல் அறிவிப்பு இடும்படி கேட்பது முறையல்ல (காண்க: Canvassing) என்பதால் இதுபற்றித் தெரிவிக்கவில்லை. சிலவேளைகளில் இதனாலும் பயனர்கள் வாக்களிக்காது விட்டிருக்கலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:27, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]
ஆதரவு வாக்களிக்க விரும்புகிறேன். ஆனால் காலம் முடிவடைந்துவிட்டது என்ற குறிப்பையும் இப்போதுதான் பார்த்தேன். நிர்வாக அணுக்க வாக்கெடுப்பு நடக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.--பவுல்-Paul (பேச்சு) 19:20, 7 சூன் 2014 (UTC)[பதிலளி]
காலம் கடந்த கருத்திற்கு மன்னிக்கவும். விக்கி விடுப்பில் இருந்ததனால் கவனிக்க தவறி விட்டேன். இது தமிழ் விக்கிக்கு தொடர்பில்லாமல் இருந்தாலும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். ha விக்கியில் நிர்வாகி அணுக்கத்தைப் பெற கையாள் கணக்குகளை உபயோகித்துள்ளார். இது பற்றி மேலாளர்கள் உரையாடி அவரது மற்றைய கணக்குகளை தடை செய்துவிட்டனர் (இணைப்புகள் [1] & [2]). இது பற்றி ஸ்ரீகர்சனிடம் ஏற்கனவே அறிவுறுத்தலாம் என்றிருந்தேன். எப்படியோ மறந்து விட்டேன். @ஸ்ரீகர்சன் நிர்வாகி என்பதை ஒரு பதவி என்பது போல பார்க்காமல் ஒரு துப்புரவு கருவியாக பார்த்து எப்போதும் போல பங்களிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். நீங்கள் நிர்வாகியானால் அதை நல்ல முறையில் பயன்படுத்துவீர்கள் என்பதில் உறுதியாக இருந்தாலும், ha விக்கி நிகழ்விற்கு பிறகு உங்களுக்கு ஆதரவு அளிப்பதில் சிறிது தயக்கம் ஏற்படுகிறது. இது போன்ற செயல்களை தமிழ் விக்கியில் ஒருபோதும் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன். தயவுசெய்து இதனை குற்றச்சாட்டாக எடுத்துக்கொள்ளாமல் எப்போதும் போல பங்களிக்கவும். தகுந்த காலம் வரும் போது நானோ, மற்ற பயனர்களோ அல்லது நீங்களே உங்களை நிர்வாக அணுக்கத்திற்கு மீண்டும் முன்மொழியலாம். --சண்முகம்ப7 (பேச்சு) 16:02, 9 சூன் 2014 (UTC)[பதிலளி]

முடிவு: மேற்கண்ட வாக்கெடுப்பு நிலவரம், அதனையடுத்த அதிகாரி நிலை பயனர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தற்போது இந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் சிறீகர்சனுக்கு நிருவாக அணுக்கம் வழங்குவதற்கான சூழல் இல்லை. இங்கு பகிரப்பட்டுள்ள கருத்துகளை உள்வாங்கி தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க சிறீகர்சனுக்கு வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 07:18, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]