பாரி வேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரி வேட்டை என்பது ஒரு விழாக்கால விளையாட்டு. சித்திரா பௌர்ணமி அன்று பொதுவாக இந்த விளையாட்டு நடைபெறும். இதனைச் சில இடங்களில் முயல்வேட்டை என்றும் கூறுவர். இந்த விளையாட்டின்போது முயல் வேட்டை விலங்குகளில் முதன்மை இடத்தைப் பெறும்.

பாரிவேட்டை என்பது ஆண்டுக்கு ஒருமுறையாவது நடைபெறும். பாரிவேட்டையானது பறம்புமலை சுற்றியுள்ள வலையர் நாட்டுகள் ஏலூர்பத்து நாடு,மூங்கில்ககுறிச்சி நாடு,பொன்னமராவதிவலையப்பட்டி நாடு,ஆலவயல் நாடு போன்ற நாட்டு பிரிவுகளில் உள்ள வலையர் குடிமக்களே பாரி வேட்டை திருவிழாவை நடத்துகின்றர். மேலும் மதுரை திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் பாரி வேட்டை நடத்துகின்றனர்.இப்பாரிவேட்டையை வலையர் சமுகத்தினர் மட்டுமே கொண்டாடுகின்றனர்.பாரி வேட்டைக்கு செல்லும் முன் வலைய அம்பலநாட்டு கூட்டம் நடத்தி நல்ல நாள் பார்த்து பாரிவேட்டையின் தேதி அறிவிக்கப்படும்.பின்னர் பாரிவேட்டை அன்று குல தெய்வ வழிப்பாட்டை தொடங்கி சாமி அழைத்து மேளம்,ஆட்டம் பாட்டமாக பாரிவேட்டையை தொடங்கப்படும்.பாரி வேட்டையின் போது தலையில் உருமா கட்டயும்,,கை கடியல்,துப்பாக்கி,வளரி,கூரான ஈட்டி போன்ற ஆயுதங்ளுடன் பாரிவேட்டையாடப்படும் ஆயுதங்களை கொண்டுள்ளனர்.பாரி வேட்டை தொடங்கும் முன் வேட்டையாடப்படும் இடத்தில் சிறப்பு பூஜை செய்து ஆன்மிக முறையை முதல்படியாக கொண்டு தொடங்குகின்றர்.பின்னர் வேட்டையாடி மிருங்களை வைத்து தெய்வங்களை வணங்கி அப்பகுதியை விட்டு வீடு திரும்புகின்றனர்.பின்னர் பாரி வேட்டையாடி வந்தபின் பறம்புமலைக்கு தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும்.ஆட்டம் பாட்டத்துன் வேட்டை நிறைவடைந்து பறம்புமலையை பார்த்து வணங்கி வேட்டையாடி மிருங்களை பங்கு பிரிக்கின்றனர்.பின் அவற்றை ஒவ்வொருவர் வீட்டிலும் தெய்வங்களுக்கு படையல் வைத்து வணங்கி பின்னரே சாப்பிடுகின்றர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
  • மறைகின்ற விளையாட்டுகள், 2002
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரி_வேட்டை&oldid=2556732" இருந்து மீள்விக்கப்பட்டது