விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Wiki Loves Women South Asia - ta.svg

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021

விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 எனும் கட்டுரை எழுதும் திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதுவதனை ஊக்கப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த ஆண்டிற்கான இந்தத் திட்டம் செப்டெம்பர் 1, 2021 முதல் செப்டெம்பர் 31,2021 வரை நடைபெறுகிறது.

கருப்பொருள்....

இவ்வருட விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா திட்டம் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருட்களாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

ஏன் பங்குபற்ற வேண்டும்?
விக்கிப்பீடியாவிற்கு உதவுதல்

பாலின இடைவெளியை குறைப்பதற்கும் அதிக பன்மயத்துடன் வளப்படுத்த விக்கிப்பீடியாவிற்கு உதவுதல்.

இது பரிசோதனை செய்யவும் மேலதிகமாக கற்கவும் ஒரு பெரும் வழியாகும்.

இதில் பங்களிப்பதால் நீங்கள் பெரியளவில் கற்றுக்கொள்ள வழியேற்படுத்தும். இவ்விடயம் தொடர்பில் ஆழமாக அறியவும் உதவும். நீங்கள் இவ்விடயம் தொடர்பில் அதிக ஆர்வம் இல்லாதவராயினும், புதிதாக அறிந்திட உதவும்.
விபரம்

UN Women - Domestic-violence.png நாங்கள் வன்முறைக்கு
எதிரானவர்கள்

UN Women - Economy.png நாங்கள் தன் மேம்பாடு பெறுவதற்கு
ஆதரவாக உள்ளோம்

UN Women - Vaw.png நாங்கள் பாலின வேறுபாட்டை
குறைக்க உதவுவோம்

UN Women - Youth.png நாங்கள் பெண்களின் பங்களிப்பினை
பரவலாக்க வேண்டுகிறோம்

YoungEuropeanStrings logo.png
பங்கேற்பாளர்களுக்கான வழிமுறைகள்
 • இதுவரை பயனர் கணக்கு உருவாக்கவில்லை எனில் பயனர் கணக்கினை உருவாக்கி கலந்து கொள்பவர்கள் என்பதில் தங்களது பயனர் பெயரைப் பதிவு செய்யவும்.
 • விதிகளைக் கவனமாகப் பின்பற்றவும். விதிகளைப் பின்பற்றாத போது உங்கள் உழைப்பு வீணாகலாம்.
 • பெண்கள் தன் மேம்பாடு பெறுதல் மற்றும் பாலின வேறுபாடு போன்ற கருப்பொருள்கள் அடங்கிய தலைப்பின் கீழ் கட்டுரைகளை உருவாக்கவும். (காண்க:கருப்பொருள்)
 • Fountain கருவி மூலமாக மட்டுமே தங்களது கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

பரிசு

மொழித் திட்டவாரியாக
 • அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் நடுவர்களுக்கும் சான்றிதழ்
 • குறைந்தது 4 கட்டுரைகளை எழுதியவர்களுக்கு விக்கிப்பதக்கம்
 • முதல் பங்களிப்பாளர்களுக்கு பரிசு செலவுச்சான்று
  • 1 ஆம் பரிசு : அமெரிக்க $12
  • 2 ஆம் பரிசு : அமெரிக்க $10
  • 3 ஆம் பரிசு : அமெரிக்க $8
மொத்த திட்டங்கள்

பன்னாட்டளவில் முதல் நிலை கட்டுரை உருவாக்குனர்களுக்கு (திட்ட கருப்பொருளும் முறையான சான்றுகளுடனும்)

 • 1 ஆம் பரிசு : அமெரிக்க $250
 • 2 ஆம் பரிசு : அமெரிக்க $150
 • 3 ஆம் பரிசு : அமெரிக்க $100

YoungEuropeanStrings logo.png
போட்டிக்கான விதிகள்
 • புதிய கட்டுரைகள் குறைந்தது 300 சொற்களையும் 3000 பைட்டுகள் அளவும் கொண்டிருக்க வேண்டும்.
 • கட்டுரைகள் இயந்திர மொழிபெயர்ப்பைக் கொண்டிருக்கக்கூடாது.
 • புதிய கட்டுரைகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரையான காலப்பகுதியில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • கட்டுரைகளின் கருப்பொருள்கள் பாலின சமத்துவமின்மை, பெண்ணியம், பெண்களின் மேம்பாடு போன்ற கருப்பொருட்களின் அடிப்படையில் அமைய வேண்டும்.
 • கட்டுரை பதிப்புரிமை மீறல், குறிப்பிடத்தக்கமை போன்ற சிக்கல்கள் இன்றியும் முறையான சான்றுகளுடன் விக்கிப்பீடியாவின் கொள்கைக்குட்பட்டாத எழுதப்பட வேண்டும்.

பங்களிக்கத் தயாரா?

Google Verified Badge.svg

உங்களைப் போன்றே பிற தெற்காசியா விக்கிகளும் போட்டியில் பங்குபெறுகின்றன. போட்டியிடும் தெற்காசியா விக்கிகளும் திட்டப்பக்கமும்