உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கி மாரத்தான் 2022

விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுவதும், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும்.

தமிழ் விக்கி மாரத்தான், தமிழ் விக்கிப்பீடியர்களால் நடத்தப்படுகிறது. அனைத்துப் பயனர்களை ஒருங்கிணைக்கவும், ஒற்றுமையை உறுதிப்படுத்தவும், புதிய பயனர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும். தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு நடைபெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பயனர்கள், அந்த நேர அளவு முழுவதும் பங்களிக்க வேண்டும் என்பது இல்லை; அவரவருக்கு உகந்த நேரத்தில் விருப்பமான அளவிற்கு பங்களிக்கலாம்.

2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நோக்கம்[தொகு]

தற்போதைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும்.

நாள், கால அளவு[தொகு]

 • நாள்: 25 செப்டம்பர் 2022 (ஞாயிறு)
 • கால அளவு: 24 மணி நேரம் [ஞாயிறு அன்று காலை 6 மணி (இந்திய, இலங்கை நேரம்) முதல் அடுத்த நாள் காலை 6 மணி (இந்திய, இலங்கை நேரம்) வரை]

திட்டம் / கவனக்குவியம்[தொகு]

விக்கியில் பங்களிப்பது தன்னார்வப் பணி என்பது போன்றே மாரத்தான் நிகழ்வில் கலந்துகொள்ளுதலும்.

பயனர்கள் தமக்கு விருப்பமான தொகுப்புகளை இந்த நிகழ்வின்போது செய்யலாம்.

இவ்வாண்டு மாரத்தானில், துப்புரவு உள்ளிட்ட மேம்படுத்துதல் பணிகளை முதன்மையாகக் கருதி தொகுக்குமாறு பயனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பரிந்துரைக்கப்படும் வழமையான தொகுப்புகள்[தொகு]

எண் செயல் உதவி
1 கட்டுரைகளில் எழுத்துப் பிழை, சந்திப்பிழை, இலக்கணப் பிழை உள்ளிட்ட திருத்தங்களைச் செய்தல் விக்கிப்பீடியா:உரை திருத்தும் திட்டம்
2 பழைய கட்டுரைகளில் உள்ள தகவல்களை மேம்படுத்துதல் இணையான ஆங்கிலக் கட்டுரையை பயன்படுத்தலாம்
3 தேவைப்படும் உகந்த புதிய பகுப்புகளை உருவாக்குதல் உதவி:பகுப்பு
4 கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல் இணையான ஆங்கிலக் கட்டுரையை பயன்படுத்தலாம்
5 கட்டுரைகளுக்குத் தேவையான படிமங்களை இணைத்தல் விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம்
6 புதிய கட்டுரையைத் துவக்குதல் விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல்

பேருதவி: விக்கிப்பீடியா:உதவி

பரிந்துரைக்கப்படும் துப்புரவு / மேம்படுத்துதல் தொகுப்புகள்[தொகு]

எண் செயல் முக்கியத்துவம் உதவி கூடுதல் உதவி
1 கூகுள் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளை செம்மைப்படுத்தல் உரிய மொழிநடையில் கட்டுரைகள் இருத்தல் அடிப்படையாகும் பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்
2 தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளை சரிபார்த்தல் முன்னெடுப்பு ஒன்றின் வாயிலாக 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்டுரைகள் பகுப்பு:தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2022
3 கட்டுரைகளில் குறைந்தபட்சம் ஒரு மேற்கோள் சேர்த்தல் ஆதாரங்களை கொண்டிருத்தல் கலைக்களஞ்சியக் கட்டுரையின் முக்கியக்கூறாகும் பகுப்பு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்
4 பகுப்பு இல்லாத கட்டுரைகளில் பகுப்பு சேர்த்தல் பகுப்பினைக் கொண்டிராத கட்டுரை முழுமையடைவதில்லை பகுப்பு:பகுப்பில்லாதவை விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு
5 விக்கியாக்கம் செய்தல் கலைக்களஞ்சிய நெறிகளின்படி கட்டுரைகள் இருப்பது அவசியமாகும் பகுப்பு:விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் விக்கிப்பீடியா:விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள்/துப்புரவு
6 பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகளை ஒன்றிணைத்தல் சரியான பொருத்தமான கட்டுரையை தக்கவைத்தல். குழப்பம் தவிர்க்கப்படும். பகுப்பு:ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் விக்கிப்பீடியா:ஒத்த கட்டுரைகள்/கட்டுரைகளை ஒன்றிணைத்தல்
7 தானியக்கக் கட்டுரைகளை சரிபார்த்தல் ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் பதிப்பிடப்பட்ட கட்டுரைகளை சரிபார்ப்பது, தரத்தை மேம்படுத்தும் பகுப்பு:சரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள் விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்/சரி பார்த்தல்
8 குறுங்கட்டுரைகளை உறுதி செய்தல் குறுங்கட்டுரை என்பதை உறுதி செய்து, மொத்த எண்ணிக்கையை இறுதி செய்வது அவசியம் பகுப்பு:குறுங்கட்டுரைகள் விக்கிப்பீடியா:குறுங்கட்டுரைகள்/விரிவாக்கம்
9 விக்கித்தரவில் இணைக்கப்படாத கட்டுரைகள், பகுப்புகள் ஆகியவற்றை இற்றை செய்தல் தரவுத்தளத்தை மேலாண்மை செய்தல் பிற மொழி இணைப்பற்ற பக்கங்கள் - தமிழ் விக்கிப்பீடியா (wikipedia.org) விக்கிப்பீடியா:விக்கித்தரவு/கட்டுரைகள், பகுப்புகள் ஆகியவற்றை இற்றை செய்தல்
10 தேவைப்படும் பகுப்புகளை உருவாக்குதல் பகுப்பு தொடர்பான சிவப்பு நிற இணைப்புகள் கட்டுரைகளில் தெரிகின்றன வேண்டிய பகுப்புகள் விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு
11 தேவைப்படும் பக்கங்களை உருவாக்குதல் / சரியான இணைப்பை ஏற்படுத்தல் கட்டுரைகள் தொடர்பான சிவப்பு நிற இணைப்புகள் வார்ப்புருகளில் தெரிகின்றன வேண்டிய பக்கங்கள் விக்கிப்பீடியா:பக்கங்கள்/ஒழுங்கமைவு

பேருதவி: பகுப்பு:விக்கிப்பீடியா துப்புரவு

பங்கேற்பாளர்கள்[தொகு]

 1. மகாலிங்கம்
 2. தேன்மொழி
 3. பாலசுப்ரமணியன்
 4. தியாகு கணேஷ்
 5. பார்வதிஸ்ரீ
 6. மா. செல்வசிவகுருநாதன்
 7. கு. அருளரசன்
 8. Pavithra.A (பேச்சு)
 9. ஸ்ரீதர். ஞா (✉)
 10. ருக்மணி
 11. இரா.முத்துசாமி
 12. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 13. சிவகோசரன்
 14. இரா. பாலா
 15. சா. அருணாசலம்
 16. சத்திரத்தான்
 17. வசந்தலட்சுமி
 18. வ. அம்சவள்ளி
 19. Mksharmila (பேச்சு)
 20. செந்தி
 21. Rasnaboy (பேச்சு) 02:42, 19 செப்டம்பர் 2022 (UTC)
 22. கி.மூர்த்தி
 23. ராம்குமார் கல்யாணி
 24. Almightybless
 25. பா.ஜம்புலிங்கம்
 26. கலை
 27. தே.நீதிதாஸ்
 28. ரூபி
 29. Kanags \உரையாடுக
 30. தாட்சாயனி (பேச்சு) 13:24, 22 செப்டம்பர் 2022 (UTC)
 31. பயனர்:Uksharma3
 32. இளங்கோ
 33. சந்திரவதனா
 34. பயனர்:Balaji2594
 35. நேயக்கோ (பேச்சு) 23:23, 24 செப்டம்பர் 2022 (UTC)
 36. --உழவன் (உரை) 04:14, 25 செப்டம்பர் 2022 (UTC)
 37. சுப. இராஜசேகர்
 38. பசுபதி நல்லப்பன் (பேச்சு) 23:23, 24 செப்டம்பர் 2022 (UTC)
 39. --Booradleyp1 (பேச்சு) 11:51, 25 செப்டம்பர் 2022 (UTC)
 40. --Thamizhpparithi Maari (பேச்சு) 17:27, 25 செப்டம்பர் 2022 (UTC)
 41. --பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:59, 25 செப்டம்பர் 2022 (UTC)

ஒருங்கிணைப்பாளர்கள்[தொகு]

 1. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:26, 20 சூலை 2022 (UTC)[பதிலளி]
 2. நீச்சல்காரன் (பேச்சு)
 3. 👍 விருப்பம் அவசியம் நடத்தப்பட வேண்டும்--Balu1967 (பேச்சு) 05:56, 22 சூலை 2022 (UTC)[பதிலளி]

பங்களிப்பு விவரம்[தொகு]

ஒட்டுமொத்தத் தொகுப்புகள்[தொகு]

Graph shows total edits during 24 hours of Wiki Marathon 2022

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2022/வளர்ச்சி புள்ளிவிவரம்)

ஒவ்வொரு மணிநேரமும் செய்யப்பட்ட தொகுப்புகள்[தொகு]

This graph shows edits done in each hour during the Marathon 2022 event

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2022/வளர்ச்சி புள்ளிவிவரம்)

பெற்ற பலன்கள்[தொகு]

 1. சொந்தக் காரணங்களால் தொடர் பங்களிப்பை செய்ய இயலாத பயனர்கள், மாரத்தானில் கலந்துகொண்டு பங்களித்தனர்.
 2. கேட்டுக்கொண்டபடி - செம்மைப்படுத்துதல், சீரமைத்தல், மேம்படுத்துதல், துப்புரவு ஆகியன சார்ந்து பெரும்பாலான தொகுப்புகள் அமைந்தன.

புள்ளிவிவரம்[தொகு]

 • 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட மொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 2,060
 • 24 மணி நேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை: 24
 • கவனக் குவியம் கொள்ளப்பட்ட பணிகள் குறித்தான விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன:-
எண் வகை குறிப்புகள்
1 செம்மைப்படுத்தப்பட வேண்டிய கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் 6 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டன.
2 சரிபார்க்க வேண்டிய தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் 123 கட்டுரைகள் சரிபார்க்கப்பட்டன.
3 மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் 177 கட்டுரைகள் கையாளப்பட்டன.
4 பகுப்பு இல்லாத கட்டுரைகள் 127 கட்டுரைகள் கையாளப்பட்டன.
5 விக்கியாக்கம் செய்யப்பட வேண்டிய கட்டுரைகள் 6 கட்டுரைகள் கையாளப்பட்டன.
6 ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் 15 கட்டுரைகள் அதிகரித்தன. துப்புரவுப் பணியால் இது நடந்திருக்கலாம்.
7 சரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள் 14 கட்டுரைகள் சரிபார்க்கப்பட்டன.
8 குறுங்கட்டுரைகள் 2 கட்டுரைகள் அதிகரிப்பு. துப்புரவுப் பணியால் இது நடந்திருக்கலாம்.

(மூலம்: விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2022/புள்ளிவிவரம்)