விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றினை தமிழ் விக்கிப்பீடியாவில் 2024 ஆம் ஆண்டில் நடத்துவதற்கான திட்டப் பக்கம்.

காண்க: தொடர்-தொகுப்பு என்பதற்கான வரையறை

நோக்கம்[தொகு]

தொடர்பங்களிப்பாளர்கள் நேரில் ஒன்றுகூடி, கவனக்குவியம் பெற்ற தொகுத்தல் பணிகளைச் செய்தல். இரண்டு தொடர்ச்சியான நாட்களுக்கு இப்பணிகள் நடைபெறும்.

கவனக்குவியம்[தொகு]

  1. கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல்.
  2. மேற்கோள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்த்தல்.

அணுகுமுறை[தொகு]

  1. ஒரு குறிப்பிட்டப் பணியை செய்து முடிப்பதற்கான செயல்வழியை (strategy) கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும்.
  2. முடிவு செய்த செயல்வழியைப் பயன்படுத்தி, செம்மைப்படுத்துதலை அங்கேயே செய்து பார்க்க வேண்டும்.
  3. பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், செம்மைப்படுத்தும் பணியினை தொடர்ந்து செய்து இலக்குகளை எட்டுதல்.

நிகழ்வு குறித்த விவரங்கள்[தொகு]

கலந்துகொள்வோரின் பொறுப்புகள்[தொகு]

  1. தமிழகத்தில் வாழும் பயனர்கள், தமது பயணத்திற்கான ஏற்பாடுகளை தாமே செய்துகொள்ள வேண்டும். அதற்குரியச் செலவுகள் மதிப்பூதியத்தில் உள்ளடங்கும்.
  2. இலங்கை, மலேசிய நாடுகளில் வாழும் பயனர்களின் வானூர்திப் பயணம், இந்தியாவில் உள்நாட்டுப் பயணம் ஆகிய ஏற்பாடுகளை நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் செய்து தருவர். (உள்நாட்டில் தேவைப்படும் பயண ஏற்பாடுகள், விசா ஆகியவற்றை அந்நாட்டுப் பயனர்கள் தாமே செய்துகொள்வர்).
  3. பயனர்கள் தமது மடிக்கணினியைக் கொண்டு வர வேண்டும்.

ஏற்பாடுகள்[தொகு]

  • தேவைப்படும் நிதியைப் பெறுதல்
  • உகந்த விடுதியை தேர்வு செய்தல்
  • விடுதியை முன்பதிவு செய்தல்
  • கலந்துகொள்ளும் பயனர்களை ஒருங்கிணைத்தல்

திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்[தொகு]

  1. நிகழ்வு நடத்துவதற்கான நிதியைப் பெறும் பொறுப்பு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:53, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

உதவிப் பக்கங்கள்[தொகு]

  1. நிதி நல்கை பெறுவதற்கான திட்டமிடல்