கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் சைவம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
இத்திட்டம் சைவம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் சைவம் தொடர்பான கட்டுரைகளை இயற்றும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.
தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்ய இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும்.
சைவ சமயம் தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.
இந்நாள் வரை விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் சைவ சமயம் தொடர்புடைய 1 வலைவாசல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. எனினும் சிறப்பு வலைவாசல் தகுதியை இன்னும் இந்த வலைவாசல் பெறவில்லை.
சிவபெருமானின் வடிவங்கள், சிவாலயங்கள் (குறைந்தபட்சம் தேவாரம் பாடல் பெற்றவைகள்), நாயன்மார்கள் ஆகிய கட்டுரைகளுக்கு ஏற்ற படங்களை இடவேண்டும்.
நாயன்மார்கள் கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும். விக்கிமீடியாவில் அனைத்து நாயன்மார்களின் புகைப்படங்களையும் ஏற்றி, விக்கி கட்டுரையில் இணைத்தல். நிறையக் கட்டுரைகள் விக்கியாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது.
தேவாரத் திருத்தலங்களுக்கு அதிக உள்ளடக்கங்களை சேர்த்தல் வேண்டும்
ஆதிசக்தி, பார்வதி, முருகன் போன்ற கட்டுரைகளை முதற்பக்க கட்டுரைகளாக ஆக்க முயற்சிகள் செய்ய வேண்டும்.
தேவையான கட்டுரைகளை அடையாளங்கண்டு வேண்டிய கட்டுரைகள் என்பதில் இணைக்க வேண்டும். பின் அதிலுள்ள கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்க வேண்டும். எதுவும் இன்றி இருப்பதற்கு குறுங்கட்டுரையாக இருப்பது மேல் அல்லவா!.
விக்கித்திட்டம் சைவத்தின் கீழுள்ள கட்டுரைகளை சிறந்த கட்டுரை, மேம்படுத்த வேண்டியவை, குறுங்கட்டுரை என பகுப்புகளாக பிரிக்க வேண்டும்.