பயனர்:ரகுநந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரகுநந்தன் எனும் அடியேன் விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சியை சார்ந்தவன்.சைவத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாய் இந்த சைவ திட்டத்தில் இணைந்துள்ளேன்.எங்கள் ஊருக்கு அருகில் உள்ள தென்கீரனுர் எனும் சிற்றூரில் அமர்ந்துள்ள திரு உண்ணாமுலையம்மை உடனருள் திரு அண்ணாமலையாரின் கருணையின் துணை கொண்டே இப்பயணம் துவங்குகிறது.சைவம் என்பது சிவம்,சிவம் என்பது சீவன்,சீவன் என்பது அன்பு எனவேதான் சிவமும் அன்பும் இரண்டென்பார் அறிவிலார் என திருமூலர் கூறுகிறார்.இது போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய சைவம் எனும் திட்டத்தில் இணைவதில் என் ஆத்மா மிக்க ஆனந்தம் அடைகிறது.மேலும் இத்திட்டத்தினை செம்மையுற அமைவதற்கு அடியேனால் இயன்ற அளவு பங்களிப்பேன்.திருச்சிற்றம்பலம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ரகுநந்தன்&oldid=1834112" இலிருந்து மீள்விக்கப்பட்டது