விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/கட்டுரைகளை மேம்படுத்துதல்
இதையும் கவனத்திற்கொள்ள வேண்டும் - அறியாமல் மேலெழுதப்படுதல் (Overwrite)
[தொகு]@Booradleyp1, Nan, Kanags, and Ravidreams: இந்த தொகுப்பு மாற்றத்தைக் கவனியுங்கள். ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கட்டுரை கவனிக்கப்படாது அதன்மீதே எழுதப்பட்டுள்ளது (Overwrite). கட்டுரையை இப்போது முன்னிலைப்படுத்தியுள்ளேன். வரலாற்றையும் கவனித்து செயல்படுதல் அவசியமாகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:52, 4 சூலை 2017 (UTC)
அதே பயனர் இன்னொரு கட்டுரையிலும் அறியாமல் செய்ததைத் தொடர்ந்து, அவரின் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:32, 4 சூலை 2017 (UTC)
- மா. செல்வசிவகுருநாதன் இது உள்ளீடு மொழிபெயர்ப்புக் கருவி மூலம் கட்டுரை உருவாக்குவதனால் உண்டாகும் சிக்கல் என நினைக்கிறேன். நாமாக ஆவி கட்டுரை ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தமிழில் ஏற்கனவே இருப்பதைக் கவனியாது உருவாக்க முனைந்து தலைப்பைத் தேடுதல் பெட்டியில் இட்டால், கட்டுரை ஏற்கனவே இருப்பதைக் காட்டிவிடும். ஆனால் மொழிபெயர்ப்புக் கருவியோ ஏற்கனவே உள்ள கட்டுரை மீதே புதிய மொழிபெயர்ப்பை உருவாக்குகிறது என நினைக்கிறேன். மொழிபெயர்ப்புக் கருவி பற்றி ஏதும் எனக்குத் தெரியாது; இது எனது அனுமானமே.--Booradleyp1 (பேச்சு) 02:56, 4 சூலை 2017 (UTC)
@Booradleyp1: நானும் அவ்வாறே ஊகம் செய்தேன். ஆனால் நான் தெரிவிக்க விரும்பியது என்னவென்றால் - (1). இதனை அறியாது அக்கட்டுரையை மேம்படுத்த நாம் முயற்சித்தால், அது நேர விரயம். எனவே முன்னிலைப்படுத்த வேண்டும். (2). மேலெழுதப்பட்ட உரையானது, கலைக்களஞ்சிய நடையில் இல்லாவிட்டால்... அக்கட்டுரையே நீக்கப்படும் ஆபத்தும் இருக்கிறது. எனவே கட்டுரைத் தொகுப்புகளின் வரலாற்றையும் கவனிக்க வேண்டும் என கருத்திட்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:56, 4 சூலை 2017 (UTC)
விருப்பம். கவனத்தில் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:04, 4 சூலை 2017 (UTC)
@Ravidreams, Kanags, Nan, and Selvasivagurunathan m: உள்ளிடு மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருந்தாலும் கட்டுரைகள் மேலெழுதப்படும் சிக்கல் ஆபத்தானதாக உள்ளது. எனது பார்வைக்கே நாலைந்து கட்டுரைகள் பட்டுவிட்டன (கூட்டல், சிக்கல் எண்கள், திருவெண்காடு, பல்லுறுப்புக்கோவையின் படி,...) கவனத்துக்குச் சிக்காமல் போனவை எத்தனை என்று தெரியவில்லை. புதுக் கட்டுரைகளைக் கூட்டும் முகமாக ஏற்கனவேயுள்ள பண்பட்ட பயனரர்களால் உருவாக்கப்பட்ட நல்ல நல்ல கட்டுரைகளை இழக்கும் நிலை சிந்திக்க வேண்டிய சிக்கல். இச்சிக்கலை எவ்வாறு தீர்ப்பது?--Booradleyp1 (பேச்சு) 15:27, 7 சூலை 2017 (UTC)
- உள்ளடக்க மொழிபெயர்ப்பு கருவி பயன்படுத்தினாலும் ஒரு கட்டுரை ஏற்கனவே இருக்கிறது என்ற அறிவுறுத்தலை அது வழங்கும். ஆனால், அதனைக் கவனிக்காது புதிய கட்டுரைகளைத் தொடங்குவது நடக்கிறது. இன்னொன்று, தமிழில் ஏற்கனவே இருக்கும் சில கட்டுரைகளுக்கு விக்கித்தரவு இணைப்பு இல்லை. இதனாலும் ஒரே கட்டுரை இரண்டு முறை உருவாகிறது. பயனர்களின் போக்குகள், தவறுகளைக் கவனித்து அறிவுறுத்தும் விளக்கப் படங்களைத் தொடர்ந்து உருவாக்கி அனைத்து மாவட்ட வாட்சாப்புக் குழுமங்களிலும் இட்டு வருகிறோம். இக்கருவி குறித்து இன்னும் கூடுதல் புரிதலைப் பரப்ப முனைவோம். --இரவி (பேச்சு) 19:12, 7 சூலை 2017 (UTC)
அறியாமல் நீக்கப்படும் உள்ளடக்கங்கள்
[தொகு]- இம்மாதிரியான தொகுப்புகளையும் கவனித்து வரவேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:59, 4 சூலை 2017 (UTC)
- இன்னொரு உதாரணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:08, 4 சூலை 2017 (UTC)
- நன்றி செல்வா. கட்டுரைகளை நீக்கும் முன்னர் அவற்றின் வரலாற்றை ஒரு முறை நோட்டம் விட வேண்டும்.--Kanags \உரையாடுக 07:37, 4 சூலை 2017 (UTC)
துப்புரவு முடிந்த கட்டுரைகளை வகைப்படுத்துதல்
[தொகு]பகுப்பு:துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்பது போன்ற வழிமுறையை மற்ற மாவட்டத்துக் கட்டுரைகளுக்கும் பின்பற்ற வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:30, 5 சூலை 2017 (UTC)
- இப்போதைக்கு முதலில் ஒரு மாவட்டம், அதில் அண்மையில் கட்டுரைகள் உருவாக்கும் சில பயனர்கள், அவர்கள் பங்களிப்புகளில் ஓரிரு ஆக்கங்களைக் கவனித்து குறிப்பிட்ட மாவட்ட வாட்சாப்பு குழுக்களில் கருத்து பகிர்ந்து வருகிறேன். இது மேலும் மேலும் பிழைகள் மிக்க கட்டுரைகள் புதிதாக உருவாவதைத் தடுக்கும். சில கட்டுரைகளை நீக்கியும் காட்டுகிறேன். தவறு செய்தால் கட்டுரை நீக்கப்படும் என்பதைப் புரிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு கட்டுரையாகத் துப்புரவு செய்யும் முன் இவ்வாறு பரந்த அணுகுமுறையை மேற்கொள்வதற்கான தேவை உள்ளது. தங்களில் யாராவது இவ்வாறு குறிப்பிட்ட மாவட்ட வாட்சாப்பு குழுக்களில் வழிகாட்ட முன்வந்தால் பெரிதும் உதவும். @Kanags, Nan, Booradleyp1, and Selvasivagurunathan m:--இரவி (பேச்சு) 19:14, 7 சூலை 2017 (UTC)
@Ravidreams:, என்னுடைய நகர்பேசி எண்ணை தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன். முதலில் சிவகங்கை மாவட்டம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:19, 7 சூலை 2017 (UTC)
அறியாமல் பகுப்பினை சேர்த்தல்
[தொகு]ஏற்கனவே இருக்கும் ஒரு கட்டுரையில் தொகுப்பினைச் செய்ததால், மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பினை இடுதலும் காணப்படுகிறது. எனவே வரலாற்றுப் பக்கத்தையும் பார்த்து, இதுபோன்ற பகுப்புகளை நீக்கிவிட வேண்டும். இதன் மூலமாக பட்டியல் குறையும்! எடுத்துக்காட்டு: கிரண் பேடி கட்டுரை. கிரண் பேடி குறித்த கட்டுரை கண்டிப்பாக தமிழ் விக்கியில் இருக்கும் என்பதால் வரலாற்றைக் கண்ணுற்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:34, 9 சூலை 2017 (UTC)