கிரண் பேடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரண் பேடி
ਕਿਰਨ ਬੇਦੀ
Kiran Bedi, Lec Dems.jpg
கிரண் பேடி, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, 2014
காவல்துறையின் தலைமை இயக்குனர் Director General of Police.png
பதவியில்
1972-2007
தனிநபர் தகவல்
பிறப்பு கிரண் பெசவாரியா
9 சூன் 1949 (1949-06-09) (அகவை 69)
அம்ரித்சர், பஞ்சாப்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பிரிஜ் பேடி(1972-தற்போது வரை)
பிள்ளைகள் சாயினா
பெற்றோர் பிரகாஷ் லால், பிரேமலதா
இருப்பிடம் புது தில்லி
கல்வி இளங்கலை ஆங்கிலம், 1968
முதுகலை அரசியல், 1970
இளங்கலை சட்டம் 1988
முனைவர் 1993
படித்த கல்வி நிறுவனங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
தில்லி பல்கலைக்கழகம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
பணி புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநர், அரசியல்வாதி, சமூக சேவகி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி.
விருதுகள் United Nations Medal, 2004
ரமோன் மக்சேசே விருது, 1994
President's Police Medal, 1979
இணையம் kiranbedi.com

கிரண் பேடி (ஆங்கிலம்:Kiran Bedi, பிறப்பு: 9 ஜூன் 1949) ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவலரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார்.[1] இவர் தில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றவர் இவர். 1993இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடன்றி[2] 1994ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற ஏதுவாய் இருந்தது. 2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார்[3] 2011இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015இல் இணைந்தார்.

2016 ஆம் ஆண்டு மே 29 இல் புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநராகப் பொறுப்பேற்று அப்பதவியில் இருக்கிறார்.[4]

இரு அரசுசாரா அமைப்புகள்[தொகு]

கிரண் பேடி, நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து 1987ஆம் ஆண்டு நவ்சோதி என்ற அமைப்பையும்[5] சிறை சீர்திருத்தங்கள், போதைமருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து 1994ஆம் ஆண்டு இந்தியா விஷன் பவுண்டேசன் என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார்.[6]

எழுதிய ஆங்கில நூல்கள்[தொகு]

 • நான் துணிந்தவள்
 • ஊழலை எதிர்த்து
 • தலைமையும் ஆளுமையும்
 • இந்திய காவல்துறை
 • பெண்களுக்கு அதிகாரம்
 • இது எப்பொழுதும் இயலும்
 • புரூம் குரூம் [7]

மேற்கோள்கள்[தொகு]

 1. "First woman IPS officer Kiran Bedi seeks voluntary retirement". Economic Times. 27 நவம்பர் 2007. http://articles.economictimes.indiatimes.com/2007-11-27/news/28417576_1_first-woman-ips-officer-kiran-bedi-delhi-police-commissioner-superseding. 
 2. About us indiavisionfoundation.
 3. CNN-IBN, Kiran Bedi quits police force, takes voluntary retirement
 4. http://indianexpress.com/article/india/india-news-india/kiran-bedi-lg-governor-of-puducherry-assumes-charge-2824801/
 5. Official website Navjyoti
 6. India Vision Foundation Official website
 7. http://www.kiranbedi.com/node/77

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_பேடி&oldid=2482132" இருந்து மீள்விக்கப்பட்டது