பொருள்முதல் வாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அண்டம் பொருட்களாலேயே ஆனது, பொருளே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது, நிகழ்வுகள் அனைத்தும் பொருட்களுகிடையான செயற்பாடே என பொருள்முதல் வாதம் எடுத்துரைக்கிறது. இது பொருட்களுக்கு அப்பாலான கடவுள், அல்லது பொருள், பொருள் அல்லாதது என்ற கருத்து முதல்வாதத்தை மறுக்கிறது. தமிழில் இதை பொருண்மைய வாதம் என்றும் குறிப்பிடுவர்.

பொருள் என்றால் இது என்று பொருள்முதல்வாதம் இறுதியாக வரையறை செய்யமுடியவில்லை.

பொருள் முதல் வாத வரலாறு[தொகு]

உலகத்தைப் பற்றிய பொருண்முதல் வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பும் துவங்கி உருப்பெற்றது.

சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல் வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும், அடிமைச் ணமுதாய சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கும், முற்போக்கு சிந்தனையான பொருள் முதல்வாதம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சில சிந்தனையாளர்கள் இயற்கையின் நிகழ்வுகள் பொருளாயத் தோற்றுவாய்களை அனுமானித்தனர் என்பதை எகிப்தியக் கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன.

இந்தியாவில் பொருள்முதல் வாதம்[தொகு]

[[In Ancient Indian philosophy, materialism developed around 600 BCE with the works of Ajita Kesakambali, Payasi, Kanada, and the proponents of the Cārvāka school of philosophy. Kanada was one of the early proponents of atomism. The Nyaya-Vaisesika school (600 BCE – 100 BCE) developed one of the earliest forms of atomism. The tradition was carried forward by Buddhist atomism and the Jaina school.]]

இந்திய பொருள் முதல்வாதிகள்[தொகு]

இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய இந்திய தத்துவஞானி கபிலர்கபிலா " நிரந்தரமானது எதுவும் இல்லை. எந்த ஒரு பொருளும் வெற்றிடத்திலிருந்து தோன்றவில்லை, மாறாக மற்ற பொருள்களிலிருந்து தான் தோன்றுகிறது. ஏனெனில் அழிகின்ற பொருள்கள் ஒன்றும் இல்லாமல் போவதில்லை. புதிய பொருள்கள் தொன்றுவதற்கான ஆதாரப் பொருள்களாக அவை அமைகின்றன" என்று கூறியுள்ளார். இவர்கள் இந்தியாவில் லோகாயிதவாதிகள் என்று குறிக்கப்படுகின்றர். இவர்களின் தத்துவ கோட்பாடுகள் குறித்த ஆதாரங்கள் கிடைக்க வில்லையாயினும் இந்திய கருத்துமுதல்வாதிகளான ஆதி சங்கரர், போன்றவர்கள் எழுதியுள்ள மறுப்புரைகளிலிருந்து அறியமுடிகிறது.[1]

பொருள் பற்றிய பண்டைய தத்துவஞானம்[தொகு]

இந்திய தத்துவஞானி கபிலரைப்போலவே கிரேக்கத் தத்துவஞானிகளில் ஒருவரான தாலெஸ் (தேலேஸ்) இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் தண்ணீர் அல்லது ஈரம் என்று கருதினார். அனாக்சிமேனஸ் (Anaximenes) இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் காற்று என்றார். ஹெராக்ளிடஸ் (Heraclitus) இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் நெருப்பு என்றார். (Empedocles) எல்லாவற்றுக்கும் மூலம் காற்று, தண்ணீர், நெருப்பு, மண் என்ற நான்குமே என்றார். ஆனால் டெமாக்ரிடஸ்(டெமோக்கிரட்டிசு) கண்ணால் காணவோ, தொட்டறிய முடியாத மிகச் சிறிய பொருளான அணுக்கள் (கிரேக்க மொழியில் "atom" என்னும் சொல்லுக்கு "பிரிக்க முடியாதது என்று பொருள்") என்ற நிரந்தரமான, அழிக்க முடியாத, மாற்றமுடியாத அணுக்கலிலிருந்து தோன்றுவதுதான் பொருள் என்றார் உறுதியாக. குறிப்பிட்ட பருமன், வடிவம், எடை, இயக்கம் ஆகியன கொண்டவை அனைத்தும் குறிப்பிட்ட முறையில் இணைந்த அணுக்களைக் கொண்டவை. அணு அடுக்குகளின் பதிவுகளே நமது புலனுணர்வுகளும், கருத்துருவங்களும் ஆகும் என்று போதித்தார்.[1]

டெமாக்ரிடஸ் தந்த போதனையின் சுருக்கம்[தொகு]

 1. பருப்பொருள் என்பது (பொருள்வகை வஸ்துகளைப்போலவே) நமது உணர்வுக்கு வெளியே அதனைச் சாராமல் எதார்த்தத்தில் இருந்து வருகிறது;
 2. பருப்பொருள் என்பது நம்மிடம் புலனுணர்வுகளைத் தோற்றுவிக்கிற ஒன்று;
 3. புலனுணர்வுகளும், கருத்துருவங்களும் பொருள் உருவாக்கும் பதிவுகளே ஆகும்;
 4. பருப்பொருளுக்குத் திட்டவட்டமான பௌதிகப்பண்புகள் உண்டு, இதிலிருந்துதான் எல்லா வஸ்துகளும் உருவாகின்றன, இதுவே இயற்கையின் மூலாதாரக் கோட்பாடு;
 5. பருப்பொருள் என்பது மாறாத ஒன்று, அணுக்கள் இன்று இருப்பது போலவே எப்போதும் இருந்து வந்தன, எப்போதும் இருந்தும் வரும்.[1]

பொருளினுடைய இயக்கம்[தொகு]

 • பருப்பொருளினுடைய இயக்கத்தின்
  • பௌதிக வடிவங்கள் - பரப்பிடம், வேகம், நிறை, ஆற்றல், மின்னேற்றம், வெப்பம், பருமன் () போன்ற உண்மைப் பொருள்களின் தன்மைகளிலான மாற்றம்;
  • இரசாயன வடிவங்கள்- ஒருவிதமான பொருள்கள் இன்னொரு விதமான பொருள்களாக மாறுவது அதாவது அணுக்களின் இணைப்பும் மறு இணைப்பும்
  • சமுதாய வடிவங்கள்- மனித சமுதாயத்துக்கு மட்டுமே உரித்தான, சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள். இவை ஒரு குறிப்பிட்ட இயக்க வடிவமும், மனித மனத்திற்கு வெளியே எதார்த்த உண்மையாய் நிலவுகிறது, பொருளாதாய நிகழ்ச்சிப் போக்காக இருக்கிறது.
 • மனித உணர்ச்சிகள், மனநிலைகள், கருத்துகள் ஆகியவற்றின் இயக்கமோ மனிதனது மனதில் மட்டுமே இருந்து வருகிறது.
 • உணர்ச்சிகளும், கருத்துகளும், அவற்றின் பொருள்வகைத் தன்மையான மூளை இல்லாமல் தோன்றுவதில்லை.
   • இதை சிந்தனைப் பொருள்வகை தன்மையது என்று கூறுவது பிழையாகும், பொருள் முதல்வாதத்தையும், கருத்து முதல்வாதத்தையும் போட்டு குழப்புவதாகும் [2]

இவற்றையும் பாக்க[தொகு]

சான்றாவணம்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்"- முன்னேற்ற பதிப்பகம்-மாஸ்கோ-1978
 2. Collected works, V. I. Lenin-Vol-14, page-244 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருள்முதல்_வாதம்&oldid=1735108" இருந்து மீள்விக்கப்பட்டது