டெமோக்கிரட்டிசு
டெமோக்கிரட்டிசு | |
---|---|
டெமோக்கிரட்டிசு | |
பிறப்பு | ஏறத்தாழ கிமு 460 அப்டெரா, திரேசு |
இறப்பு | ஏறத்தாழ கிமு 370 (அகவை 90) |
காலம் | சாக்கிரடிசுக்கு முந்தைய மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | சாக்கிரடிசுக்கு முந்தைய மெய்யியல் |
முக்கிய ஆர்வங்கள் | மீவியற்பியல் / கணிதம் / வானியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | அணுத்தன்மை, தொலைவிடத்து விண்மீன் கோட்பாடு |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
டெமோக்கிரட்டிசு (Democritus, கிரேக்க மொழி: Δημόκριτος, Dēmokritos, "மக்களின் தேர்வு") (கி.மு. ஏறத்தாழ 460 – ஏறத்தாழ 370) கிரேக்க நாட்டின் அப்டெர்ரா, திரேசில் பிறந்த தொன்மை கிரேக்க மெய்யியலாளர் ஆவார்.[1] இவர் சாக்கிரடிசுக்கு முந்தைய தாக்கமிக்க மெய்யியலாளராகவும் அண்டத்தில் அணுத்தன்மையை வழிமொழிந்த லெசிப்புசின் சீடராகவும் இருந்தார்.[2]
இவரது பங்களிப்புகள் இவரது குரு லெசிப்புசுவின் பங்களிப்புகளுடன் பிணைந்துள்ளதால் இவரது ஆக்கத்தை மட்டும் பிரித்தறிய இயலாது உள்ளது. இவர்களது அணுத்தன்மை குறித்தான முன்னறிதல்கள் அணுக்கருனி கட்டமைப்பு குறித்த 19வது நூற்றாண்டு புரிதல்களுடன் ஒத்துள்ளன. இதனால் டெமோக்கிரட்டிசை மெய்யியலாளராக நோக்காது அறிவியலாளராகவும் சிலர் கருதுகின்றனர். இருப்பினும் இரு கருதுகோள்களும் முற்றிலும் வெவ்வேறு அடிப்படைகளைக் கொண்டவை.[3] டெமோக்கிரட்டிசு தொன்மை ஏதென்சால் பெரிதும் புறக்கணிக்கப்பட்டாலும் அதே வடபகுதியில் பிறந்த மெய்யியலாளர் அரிசுட்டாட்டிலால் நன்கு அறியப்பட்டிருந்தார். பிளேட்டோ இவரை மிகவும் வெறுத்து இவரது அனைத்து நூல்களையும் எரிக்க விரும்பினார்.[1] பலரும் டெமோக்கிரட்டிசை "தற்கால அறிவியலின் தந்தை" எனக் கருதுகின்றனர்.[4]
டெமோக்கிரட்டிசு கிரேக்கத்தின் திரேசு பிராந்தியத்தின் தென்பகுதியில் உள்ள அப்டீரா என்ற நகரில் பிறந்தார்.[5] செல்வந்தரான இவரின் தந்தை விட்டுச் சென்ற பரம்பரையை சொத்தை செலவழித்து தொலைதூர நாடுகளுக்குச் சென்று தனது அறிவுத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார். இவர் ஆசியாவிற்கு பயணம் செய்தார், மேலும் இந்தியா மற்றும் எத்தியோப்பியாவை அடைந்ததாகக் கூறப்படுகிறது.[6] பல நாடுகளை சுற்றிவந்த பிறகு இவர் மெய்யியல் ஆய்வில் ஈடுபட்டு வாழ்வு முழுவதும் அதில் செலவழித்தார். அணுக்கள் பலவற்றின் சேர்கையினாலேயே உலகத்தின் சகலமும் தோன்றுகின்றன என்றார். எனவே இவரை அணுவாதத்தின் தந்தை என்கின்றனர்.
இவர் பல துறைகள் குறித்து ஆய்வு செய்து புதிய கருத்துகள் வெளியிட்டார். கணிதம், பௌதிகம், வானியல், பூகோளம், உடற்கூறியல், உளவியல், மருத்துவம், இசை, சிற்பம் போன்றவை குறித்து பல நூல்களை இயற்றினார்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Russell, pp.64–65.
- ↑ Barnes (1987).
- ↑ Stephen Toulmin and June Goodfield, The Architecture of Matter (Chicago: University of Chicago Press, 1962), 56.
- ↑ Pamela Gossin, Encyclopedia of Literature and Science, 2002.
- ↑ Aristotle, De Coel. iii.4, Meteor. ii.7
- ↑ Cicero, de Finibus, v. 19; Strabo, xvi.
மேலும் அறிய
[தொகு]- Brumbaugh, Robert S. (1964). The Philosophers of Greece. New York: Crowell.
- Burnet, John (1914). Greek Philosophy: Thales to Plato. London: Macmillan.
- Sandywell, Barry (1996). Presocratic reflexivity : the construction of philosophical discourse c. 600 - 450 BC. London: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-10170-0.
- Vlastos, Gregory (1945/1946). "Ethics and Physics in Democritus". Philosophical Review 54/55: 578–592, 53–64.
வெளி இணைப்புகள்
[தொகு]- O'Connor, John J.; Robertson, Edmund F., "டெமோக்கிரட்டிசு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Democritus and Leucippus - thebigview.com
- Diogenes Laërtius, Life of Democritus, translated by Robert Drew Hicks (1925).