விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, இந்திய விக்கி அறிவியல் மாதம் 2018ஐ முன்னிட்டு பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). இதன் நோக்கம் பெண் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதும், பெண்கள் நலன் சார்ந்த கட்டுரைகளைச் செம்மைப்படுத்துவதும் ஆகும்.

விதிகள்

சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். இவை குறைந்தது 9000 பைட்டுகள் அளவு அமைய வேண்டும். அக்டோபர் 1, 2018 முதல் நவம்பர் 24, 2018 வரை போட்டி நடைபெறும்.

  • கட்டுரை அக்டோபர் 1, 2018 0:00 தொடங்கி நவம்பர் 24, 2018 23:59 (இந்திய நேரம்) வரையிலான இடைப்பட்ட காலத்தில் விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • கட்டுரை ஏற்கனவே என்ன அளவு இருந்தாலும், அதில் கூடுதலாக 9000 பைட்டுகள் சேர்க்க வேண்டும். புதிதாக உருவாகும் கட்டுரைகளும் குறைந்தது இந்த அளவாவது இருக்க வேண்டும்.(வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.)
  • கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளைத் தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
  • கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டா.
  • கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • கட்டுரை தகவல் நிறைந்ததாக அமைய வேண்டும்.
  • கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்.
  • ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.
  • ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதில் ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • தாங்கள் உருவாக்க/மேம்படுத்த விரும்பும் கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யவும்.

உருவாக்கிய கட்டுரைகள்

இத்திட்டத்திற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை அல்லது விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு பதியவும்.

நினைவுப்பரிசு

பங்குபெறும் அனைவருக்கும் சிறப்பு அஞ்சலட்டை அல்லது அதற்கு நிகரான நினைவுப்பரிசு வழங்கப்படும்.

ஒருங்கிணைப்பாளர்கள்