உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோக்கம்[தொகு]

இதற்கு முன்னடந்த வேங்கைத்திட்டத்தில் நாம் பங்கு கொண்டு, இரண்டாவது இடத்தை இந்திய அளவில் பெற்றோம். அதன் பிறகு, இந்திய அளவில் பின்னூட்டங்கள் பெறப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. அந்நிகழ்வின் தொடர்ச்சியாக, இந்த இரண்டாம் நிலை வேங்கைத் திட்டம் 2.0விரைவில் தொடங்க உள்ளது. அதற்குரியவைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் இத்திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

 • m:Growing Local Language Content on Wikipedia (Project Tiger 2.0) என்ற பக்கம், இதன் தொடக்கம் ஆகும். இதில் இந்திய மொழிகளுக்களுக்கான, அனைத்துக் குறிப்புகளையும் ஆங்கிலத்தில் காணலாம். இதில் தமிழுக்குப் பொருத்தமான துணைப்பக்கங்கள், இங்கு கவனத்துடன் எடுத்தாளப்படுகின்றன. எனினும் நீங்களும் ஒருமுறை சரிபார்த்து, இத்திட்டம் சிறப்புறப் பங்களியுங்கள்.

அவசரக் குறிப்புகள்[தொகு]

பதிவு செய்யத் தொடங்கலாமா?[தொகு]

இத்திட்டத்தில் பங்களிக்க விரும்பும் பங்களிப்பாளர்கள், இப்பொழுதே பதிவு செய்யலாமா? அப்படி செய்தால், இத்திட்டம் சிறக்க முன்னேற்பாடுகளை செய்வது எளிமையாகும்.--உழவன் (உரை) 02:47, 1 செப்டம்பர் 2019 (UTC)

சரி பயனர்களைப் பதிவு செய்யச் சொல்லலாம். கூடுதலாக அவர்கள் திட்டமிட்டுள்ள கட்டுரை இலக்க எண்களையும் கொடுக்கலாம். முக்கியமான வேங்கத் திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்படும் கட்டுரைகளில் எந்த விதமான கட்டுரைகளைப் போட்டிக்குக் கொடுக்கலாம் என்பதைத் தான் தற்போது நாம் திட்டமிட வேண்டும். உதாரணம் சினிமா துறை சார்ந்து எழுதுபவர்கள் அத்துறை சார்ந்த தலைப்புகளைச் சரியாகக் கொடுத்துப் போட்டிக்குக் கொண்டு வந்தாலே இலக்கு சுலபமாக எட்டமுடியும். எனவே அவரவர் ஆர்வமான துறை இல்லை என்று போட்டியில் பின்னர் சுணக்கம் கொள்ளாமல், தற்போதே அத்துறையில் தலைப்புகளைக் கொண்டுவர முயலவேண்டும். தமிழ்ப்பட்டியல் பொதுப்பட்டியல் -நீச்சல்காரன் (பேச்சு) 10:10, 1 செப்டம்பர் 2019 (UTC)
நன்றி. விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை என்பதில் இணைப்புகளைத் தந்துள்ளேன். தலைப்புகளைக் குறித்து தனித்தனியாக ஒவ்வொரு பங்களிப்பாளர்களிடம் வினவி வருகிறேன்.ஏனெனில் பொதுவாக ஆலமரத்தடியில் இடும்போது ஏனோ பலர் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. இத்திட்டதுணைப்பக்கங்களில் உள்ள தலைப்புகள் என்ற உட்பிரிவில் உங்களது முன்மொழிவுத் தலைப்புகளையும் இணைக்கக் கோருகிறேன்.--உழவன் (உரை) 02:08, 2 செப்டம்பர் 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

 • @Neechalkaran and Info-farmer: // துறை சார்ந்து எழுதுபவர்கள் அத்துறை சார்ந்த தலைப்புகளைச் சரியாகக் கொடுத்துப் போட்டிக்குக் கொண்டு வந்தாலே இலக்கு சுலபமாக எட்டமுடியும்// அந்தந்த துறை சார்ந்த பகுப்புகளைக் கொடுக்க வேண்டுமா அல்லது அந்த தலைப்புகளையே கொடுக்க வேண்டுமா?
  • தலைப்புகளை தருதல் சிறப்பு. ஏனெனில் பகுப்பு தொடர்ந்து மாறும் இயல்புடையது. புதியன இணைந்தால் அக்கட்டுரையை அறிவது கடினம்.--உழவன் (உரை) 03:02, 3 செப்டம்பர் 2019 (UTC)
 • நடுவர்களுக்கு நினைவுப் பரிசு அல்லது பரிசுத் தொகை போன்றவற்றினை அளிக்கவேண்டும் என சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடலில் நாம் அனைவருமே எடுத்துக் கூறினோம். அதன் நிலை தற்போது என்ன? எனத் தெரிந்துகொள்ளலாமா? ஏனெனில் அவர்களின் பங்கும் அளப்பரியது.
  • தெரியவில்லை. நான் கட்டுரைகளையே எழுத விரும்புகிறேன். அதே நேரத்தில் என்னால் இயன்றவரை ஒருங்கிணைப்பு செய்ய விரும்புகிறேன். யாரேனும் முன்னெடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லது கூட்டாகவே தொடர்ந்து இற்றைப்படுத்துவோம்.--உழவன் (உரை) 03:02, 3 செப்டம்பர் 2019 (UTC)
 • விதியில் தகவல் பெட்டி மற்றும் வார்ப்புருக்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படக் கூடாது எனக் கூறியுள்ளது. எனில் அட்டவணைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமா?ஸ்ரீ (talk) 08:17, 2 செப்டம்பர் 2019 (UTC)
  • மூலப்பக்கத்தினைக் காணும் போது, அக்கருவியை மேம்படுத்த உரையாடல் நிகழ்கிறது. ஆங்கில மூலப்பக்கத்தினை அடிக்கடி பார்க்கவும்.--உழவன் (உரை) 03:02, 3 செப்டம்பர் 2019 (UTC)

கட்டுரை முன்னேற்பாடு[தொகு]

@Neechalkaran:திட்டம் தொடங்குவதற்கு முன்னே, கட்டுரைகளை எழுத சிலர் ஆர்வம் கொண்டுள்ளனர். ஒருவர் தேர்ந்தெடுத்த கட்டுரையை மற்றொருவர் அறிய என்ன நுட்பத்தைக் கையாள வேண்டும்?--உழவன் (உரை) 02:56, 3 செப்டம்பர் 2019 (UTC)

போட்டி தொடங்குவதற்கு முன்பே எழுதுவது எனக்கு சரியாகப் படவில்லை. மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்கவும். நீங்கள் மேலே கேட்டதற்கு நாம் வழக்கமாக முன்பதிவு செய்த கட்டுரைகள் எனும் தலைப்பில் பதிவதன் மூலம் இதனை எளிமையாகக் கையாளலாம் என நினைக்கிறேன்.
@கி.மூர்த்தி, Fahimrazick, Arularasan. G, and Parvathisri:மேலும் இந்த திட்டத்திற்காக ஒரு சமூக ஊடகத்தில் குழு ஒன்று துவங்கலாம் என நினைக்கிறேன். தங்களின் கருத்துக்களையும் கூறவும். வாட்சப்/ முகநூல்/டெலிகிராம் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். (ஒருங்கிணைப்பாளர்கள், நடுவர்கள் போன்ற சில நடைமுறைகளுக்கு) நன்றிஸ்ரீ (talk) 06:26, 3 செப்டம்பர் 2019 (UTC)
@ஞா. ஸ்ரீதர்:// போட்டி தொடங்குவதற்கு முன்பே எழுதுவது எனக்கு சரியாகப் படவில்லை.// எழுதி , அவரவர் கணினியில் வைத்துக்கொள்ளலாம் எனக் கூறவந்தேன். என்னைப் போல, அனுபவமற்றவருக்கு போகப் போகத்தான் விரைந்து கட்டுரைகள் எழுதுவது எப்படி என்பது புரியும் என்பதால் கூறினேன். சென்றமுறை வந்த விதிகளைக்குறித்து சுருக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அது பலருக்கும் பயனாகும். மற்றொன்று ஏதேனும் மாற்றம் இம்முறை இருப்பின் தெரியப்படுத்துக.--உழவன் (உரை) 09:28, 3 செப்டம்பர் 2019 (UTC)
தலைப்புகள் இறுதி செய்யப்பட்டு போட்டிகள் தொடங்கிய பின்னர் எழுதுவதே சரியாக இருக்கும். வாட்சப் குழு தொடங்கலாம். மேற்கோள்கள் இல்லாத கட்டுரையை எழுதாமல் இருப்பது நல்லது. கூடுமானவரை முழுமையான கட்டுரைகளாக உருவாக்கினால் நலம்.--கி.மூர்த்தி (பேச்சு) 11:21, 3 செப்டம்பர் 2019 (UTC)
கடந்தமுறைபோல் முகநூல் மெசஞ்சர் பக்கத்தையும் பயன்படுத்தாலம். இதனால் கட்டுரைகளை எழுத மடிக்கணினி முன் அமர்ந்திருக்கும்போதே குழு உரையாடலை பார்த்து உற்சாகமாக பணியாற்ற ஏதுவாக இருக்கும்.--அருளரசன் (பேச்சு) 13:14, 3 செப்டம்பர் 2019 (UTC)

500 கட்டுரைகளை சமூகமே..[தொகு]

 • @கி.மூர்த்தி, Fahimrazick, Arularasan. G, Parvathisri, Neechalkaran, and Info-farmer: 500 கட்டுரைகளின் தலைப்பினை அந்தந்த விக்கி சமூகங்களே முடிவு செய்யலாம் எனக் கூறியுள்ளனர். எனவே 500 கட்டுரைகளையும் மிக எளிதாக உள்ள தலைப்பினைத் தேர்வு செய்யலாம் என நினைக்கிறேன். அது நமது கட்டுரை எண்ணிக்கையினை அதிகரிப்பதற்காக பயன்படுத்தலாம் எனவும் நினைக்கிறேன். 500 என்பதனால் ஐந்து பிரிவுகளின் கீழ் உள்ள 100 கட்டுரைகளைத் தேர்வு செய்யலாமா? எனது பரிந்துரை துடுப்பாட்ட வீரர்கள் 50 கட்டுரைகள், நடிகர்கள் 50 கட்டுரைகள் அல்லது நீங்கள் ஏற்கனவே இங்கு அளித்துள்ள பகுப்பில் இருந்து கட்டுரைகளை தேர்வு செய்யலாமா? தங்கள் அனைவரின் கருத்துக்களை அறிய நினைக்கிறேன். நன்றிஸ்ரீ (talk) 14:15, 3 செப்டம்பர் 2019 (UTC)
  • 500கட்டுரைகள் நாமே முடிவு செய்து கொள்ளலாம் என்பது மிக்க மகிழ்ச்சியான செய்தியே. எந்நாளுக்குள், நாம் தேர்ந்து எடுத்த, 500 கட்டுரகைளை அறிவிக்க வேண்டும்? 50பேர் பங்கு கொள்வதாக்க் கொண்டால், ஒருவர் தங்கள் விருப்பம் போல10 கட்டுரைகளை எழுதலாம் என்று அறிவித்தால் அது தூண்டுகோலாக பலரிடையே அமையும். எடுத்துக்காட்டாக முன்மொழிவு பக்கத்தில் நான், நீங்கள், அருளரசன், .. என பலர் குறிப்பிட்டதை காணுங்கள். அந்த முதலில் தேர்ந்து எடுத்த 10கட்டுரைகள் முடித்த பிறகு அடுத்த 10 கட்டுரைகளை தங்களது விருப்பம் போல அமைத்துக் கொள்ள வழிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம். நமக்கு நாமே வேகமாக செயற்பட இது ஒரு நல்ல வாய்ப்புஉழவன் (உரை) 01:39, 4 செப்டம்பர் 2019 (UTC)
கட்டுரைகளின் அளவுகள் போட்டிக்கான விதிமுறைகளைப் பின்பற்றி இருக்க வேண்டும். வேதியியல் கட்டுரைகள் குறைந்த பட்சம் 100 தலைப்புகள் என்னால் தரமுடியும்--கி.மூர்த்தி (பேச்சு) 01:52, 4 செப்டம்பர் 2019 (UTC).
இந்தப் பரிந்துரைகளைக் கொடுத்தவர்களுக்கு நன்றி. ஆனால் பொதுவாகக் குறிப்பிடாமல் இணையான ஆங்கிலப் பகுப்பைக் கொடுத்தால் அக்கட்டுரைகளைச் சுட்டிக் காட்டவியலும். நாம் கொடுக்க வேண்டியது கட்டுரைக்கான சரியான தலைப்பு, பொதுவான துறைகள் அல்ல. மேலும் தேவைப்படும் கட்டுரைகளை இப்போட்டிக்கு கூகிள் பரிந்துரைத்துவிட்டது. அதைக் கவனத்தில் கொண்டு இல்லாத தலைப்புகளை அல்லது பகுப்புகளைப் பரிந்துரைக்கவும். -நீச்சல்காரன் (பேச்சு) 09:15, 4 செப்டம்பர் 2019 (UTC)
 • கூகுள் பரிந்துரைத்தக் கட்டுரைகளைக் கண்டேன். 500 கட்டுரைகள் நாம் மேலும் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதுபற்றி நாம் நீங்கள் கூறிய படி தலைப்புகளைத் தருகிறேன். அவற்றை எனது முன்மொழிவு பக்கத்தில் காணலாம். (தமிழக மூலிகைப்பட்டியல்) எனது வினா யாதெனில் அந்த 500 கட்டுரைகளை முன்கூட்டியே அவர்களுக்குத் தர வேண்டுமா? ஆங்கில தட்டச்சு எனக்கு சற்று கடினம் என்பதால் யாரவது வினவினால் நன்றாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை அவர்கள் தந்த பட்டியலில் விருப்பமானதை தேர்ந்தெடுத்த பின்பு, அம்மூலிகைப் பட்டியலில் இருந்து தலைப்புகளைத் தருவேன்.உழவன் (உரை) 11:01, 4 செப்டம்பர் 2019 (UTC)

தென்கிழக்காசியத் தலைப்புக்களையும் (இனக்குழுக்கள், உயிரினங்கள்) தலைப்புக்களிற் சேர்ப்பது நல்லது. எமது பெயர்களைக் கட்டாயம் பதிவு செய்யத்தான் வேண்டுமா? பதிவு செய்யாமல் கட்டுரை எழுதினால் என்ன?--பாஹிம் (பேச்சு) 09:33, 4 செப்டம்பர் 2019 (UTC)

 • பெயர் பதிவு எத்தனை பேர் தமிழில் பங்களித்தார்கள் என்று காட்டும்.இன்னும் சில சிறப்புகள் உண்டு. எனவே மறவாமல் மறுக்காமல் பதிவு செய்யக்கோருகிறேன்.உழவன் (உரை) 11:01, 4 செப்டம்பர் 2019 (UTC)

//யாதெனில் அந்த 500 கட்டுரைகளை முன்கூட்டியே அவர்களுக்குத் தர வேண்டுமா?// எனது புரிதலின்படி பதில் தருகிறேன். Fountain கருவியில் அவர்கள் போட்டிக்கான தலைப்பினை கொடுத்தால் தான் அதனை நாம் submit செய்யும் போது ஏற்றுக்கொள்ளும். அதனால் தான் அவர்கள் முன்னமே கேட்கிறார்கள். எனது கருத்து என்னவெனில் அனைவரும் எளிமையாக எழுதும் ஐந்து துறைகளைத் தேர்வு செய்து அதில் 100 கட்டுரைகள் வீதம் தேர்வு செய்யலாம். ஏனெனில் கூகுள் பரிந்துரையில் பல நல்ல கட்டுரைகள் உள்ளதாக எனக்குத் தெரிகிறது. நல்ல கட்டுரைகள் எழுதும் அதே சமயத்தில் எண்ணிக்கையும் முக்கியமல்லவா? எதுவாயினும் நமது பரிந்துரைகளை விரைவாகத் தெரிவித்தால் அவர்கள் முடிவு எடுக்க இலகுவாக இருக்கும். நான் அவர்களிடம் கேட்டதற்கு 500 கட்டுரைத் தலைப்புகள் எந்த கட்டுரையாகவும் இருக்கலாம்,ஆனால் தங்களது சமூகத்திடம் கலந்தாலோசித்து எடுக்கலாம் என்றனர். ஸ்ரீ (talk) 12:51, 4 செப்டம்பர் 2019 (UTC)

 • 500 கட்டுரைகளை நாம் எந்நாளுக்குள் தர வேண்டும் என்று வினவியுள்ளேன்?--உழவன் (உரை) 08:07, 5 செப்டம்பர் 2019 (UTC)

பயனர் கி. மூர்த்தி மற்றும் எனக்காக வேதியியல் தலைப்புகளில் ஒரு நூறு கட்டுரைத் தலைப்புகள் சேர்ப்பதை பரிசீலனை செய்யுங்கள்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 05:26, 7 செப்டம்பர் 2019 (UTC)

@TNSE Mahalingam VNR: தருக. மூர்த்தி பட்டியல் கொடுத்துள்ளார். முன்மொழிவு திட்டப்பக்கத்தில் பார்க்கவும். அனைவரும் தந்த பிறகு சமூக ஒப்புதலைப்பெற்று திட்டத்தில் தலைப்புகளை இணைக்கலாம். அனைவருக்கும் சமவாய்ப்பு எனினும், முன்திட்டத்தில் அதிகம் கட்டுரைகள் எழுதியவருக்கு வாய்ப்பு அதிகம் தரலாம் என்று எண்ணுகிறேன். இன்னும் ஒரு வாரத்தில் தந்தால் இனிது--உழவன் (உரை) 06:44, 7 செப்டம்பர் 2019 (UTC)

நாம் பரிந்துரைத்த தலைப்புகளின் கட்டுரை அளவு[தொகு]

 • கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் பல 300 சொற்களுக்கும் குறைவானவை உள்ளன. அவற்றை மொழிபெயர்ப்பவர்கள் 300 சொற்கள் இலக்கை எட்ட முடியாமல் சிரமப்படுவார்கள். நேர விரயமும் சோர்வும் ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணம்: en:Rameswaram railway station, en:Thalattu --கி.மூர்த்தி (பேச்சு) 11:36, 5 செப்டம்பர் 2019 (UTC)
 • கூகுள் அளித்த கட்டுரைகளில் பைட்டுகளின் எண்ணிக்கையை அட்டவணையில் காட்ட இயலும் நுட்பத்தினை போட்டி தொடங்குவதற்கு முன்பே உருவாக்க முயல்கிறேன்.--உழவன் (உரை) 01:57, 21 செப்டம்பர் 2019 (UTC)
காண்க: விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-2 பரிந்துரை
போட்டிக்காக தமிழ் விக்கிப்பீடியா சமூகம் பரிந்துரைக்க வேண்டிய 500 கட்டுரைத் தலைப்புகளை இறுதி செய்யும் முன்பாக சில கருத்துகளை மனதில் கொள்ள வேண்டியவை.....
1. உங்களால் முன்மொழியப்பட்ட தலைப்புகள் அத்தனையும் போட்டிக் காலத்தில் கட்டுரையாக மாறிவிட வேண்டும் என்பதை மனதிற் கொள்ளுங்கள். (உங்கள் தலைப்பை கட்டுரையாக்க எவரும் முன்வராவிட்டாலும் நீங்களே கட்டுரையாக்கி விட வேண்டும் என்பது கட்டாய இலக்காக இருக்க வேண்டும்).
2. புதிய கட்டுரைகள் எனில் 9000 பைட்டுகள் அளவை கொண்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய கட்டுரை எனில் கூடுதலாக 9000 பைட்டுகள் அளவிற்கு உள்ளடக்கம் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.
4. நம் சமூகம் பரிந்துரைக்கும் 500 தலைப்புகளைத் தாண்டி நாம் கூகுள் பரிந்துரைந்துள்ள தலைப்புகளையும் கட்டுரையாக்க வேண்டும் என்பது நினைவில் இருக்கட்டும்.
5. இப்போட்டியில் நாம் குறைந்த பட்சம் 2000 கட்டுரைகள் என்ற இலக்கினை மையமாகக் கொண்டு திட்டமிட்டால்தான் முதலிடத்தைப் பிடிக்க இயலும்.
6. வழக்கத்தைக் காட்டிலும் சற்று அதிகமாக பங்களிக்க வேண்டும் என்ற சிறிய முயற்சியை ஒவ்வொரு பயனரும் உறுதியாகக் கொண்டால் வெற்றி நமக்கே. --கி.மூர்த்தி (பேச்சு) 12:14, 21 செப்டம்பர் 2019 (UTC)
நன்றி மூர்த்தி. என்னுடன் கடந்த 15 நாட்களாக இணைந்தவர்களிடம், அவர்கள் புதியவர்கள் என்பதால், நேரடியாகச் சொல்லிய பின்பு, தலைப்புகளை ஒருங்கிணைத்தேன். இறுதி 3நேரத்தில் , என்னுடன் இணைந்த நீங்கள், மகாலிங்கம், சிறீதர், அருண், பார்வதிக்கு மிக்க நன்றி. முதல் தடவை இந்த ஒருங்கிணைப்பு பணி செய்தமையால், சிறு பங்களிப்பு என்றாலும், பதட்டப்பட்டே செய்து முடித்தேன். --உழவன் (உரை) 01:26, 23 செப்டம்பர் 2019 (UTC)
போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள தலைப்புகளிலும் பல கட்டுரைகள் 9000 பைட்டுகள் அளவை எட்டும் கட்டுரைகளாக இல்லை என்பதை கவனிக்கவும். அவற்றை என்ன செய்யலாம்?--கி.மூர்த்தி (பேச்சு) 01:35, 23 செப்டம்பர் 2019 (UTC)
இங்குள்ள முதல் வினாவும் அதே வினா தான். அங்கேயே பதில் அளித்துள்ளேன். முயற்சிக்கிறேன். --உழவன் (உரை) 02:16, 23 செப்டம்பர் 2019 (UTC)
பைட்டுகளின் அளவைக் கண்டறிய, இந்த தலைமை ஒருங்கிணைப்புப் பக்கத்தில் தொழினுட்ப உதவியைக் கேட்டுள்ளேன்.--உழவன் (உரை) 16:01, 23 செப்டம்பர் 2019 (UTC)

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1 முன்மொழிவு/மகாலிங்கம் @கி.மூர்த்தி: இந்த பக்கத்தில் உள்ள அட்டவணையைப் போல காட்டலாமா?--உழவன் (உரை) 16:33, 25 செப்டம்பர் 2019 (UTC)

சந்தேகம்[தொகு]

வேங்கை திட்டம் 2.0 இல் அறிவித்துள்ள கட்டுரை தலைப்புக்களில் சில ஏற்கனவே தமிழில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளாக உள்ளதே?--Fathima (பேச்சு) 05:01, 5 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

அவ்வாறு உள்ள கட்டுரைகளில் மேலும் 300 வார்த்தைகள் அதாவது (9000) பைட்டுகள் கொண்டு கூடுதலாக விரிவாக்க வேண்டும். ஸ்ரீ (✉) 12:17, 5 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

நன்றி... Fathima (பேச்சு) 15:39, 5 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

போட்டி துவங்க இருப்பதால் தற்போது அங்குள்ள சில தகவல்கள்/ முன்னேற்பாடுகள் இங்கு நகர்த்தப்படுகின்றன.மாற்றுக் கருந்து இருந்தால் தெரிவிக்கவும்.ஸ்ரீ (✉) 06:55, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

கட்டற்ற பனுவல் பயன்பாடு[தொகு]

 • வெவ்வேறு இடங்களில், வேறுபட்ட காலங்களில் செய்த பதிவுகள்இங்கே ஒருங்கிணைப்படுகிறது.
 • சூலை 2014-செல்வா&இரவி --->c:File:Letter_from_Tamil_Development_Board_donating_20_volumes_of_encyclopedia_in_Tamil_under_Creative_Commons_license.jpeg
 • இந்தப் பக்கத்தில், கலைக்களஞ்சியத் தலைப்புகள் உள்ளன. அதில் மூலப்பக்கமும் உள்ளன. அருமையான அடித்தளப்பணியை நீச்சல்காரன் செய்துள்ளார். அதில் இருந்து தலைப்புகளை, மேற்கூறிய மூர்த்தி உரையை மனதில் கொண்டு கண்டு தேர்ந்தெடுக்கலாம். இம்மாதம் 20ந்தேதிக்குள் தலைப்புகளை முடிவு செய்வோம். ஏற்கனவே, போட்டியில் பங்கு கொண்டு, அதிக கட்டுரைகள் எழுதியவர்களுக்கு சற்று அதிக கட்டுரைத் தலைப்புகளை தர எனக்கு விருப்பம். பிறரின் எண்ணம் அறிய ஆவல்.--உழவன் (உரை) 13:06, 6 செப்டம்பர் 2019 (UTC)

முன்னேற்பாடு[தொகு]

அறிவிப்புகள்[தொகு]

தலைப்புகள்[தொகு]

 1. விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-1 முன்மொழிவு - இதில் நீங்கள் முன்மொழியும் தலைப்புகளைத் தெரிவிக்கவும்.
 2. விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-2 பரிந்துரை - நாம் மேற்கூறிய தலைப்புகளில் இருந்து தேர்ந்தெடுத்து, தமிழ் விக்கிப்பீடியாவின் பரிந்துரையாக, திட்டநடத்துனருக்குத் தெரிவிக்க வேண்டும்.
 3. விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்-3 அறிவித்தவை - இந்திய திட்ட நடத்துனர், அறிவித்தத் தலைப்புகளை இங்கு காணலாம்.

மடிக்கணினிகள்[தொகு]

விரைவுத் தேவைகள்[தொகு]

இப்பகுதியில், விரைந்து கவனிக்கப்பட வேண்டியவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிறகு உரிய இடத்திற்கு, இடுபவைகள் நகர்த்தப்படும்.

பரப்புரை[தொகு]

வேங்கைத் திட்டத்திற்கான பரப்புரைப் பணிகளை இனி முன்னெடுக்கலாம். விக்கிப்பீடியாவின் கட்டுரைகளின் மேலே Sitenotice வைக்கலாம், கடந்த ஓராண்டு ஈடுபட்ட அனைத்துப் பயனர் & கடந்த ஆண்டு கலந்து கொண்ட பயனர் பேச்சுப் பக்கங்களிலும் @Sridhar G: தொகுத்த இந்த அறிவிப்பைத் தானியங்கி கொண்டு இடாலாம். வேறு எவ்வாறு செய்யலாம் என ஆர்வமுள்ளவர்கள் கருத்திடலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:14, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் போட்டியில் பங்குபெற்றவர்களின் பேச்சுப்பக்கத்திலும் அறிவிப்பை வெலியிடலாம். அவரவர் முகநூல் பக்கத்திலும் வாட்சாப் குழுக்களிலும் பகிரலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:16, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
கடந்த ஓராண்டில் குறைந்தது இருவாரங்களாவது பங்களித்த சுமார் 630 பயனர்களுக்கு இச்செய்தி அவர்களின் பேச்சுப் பக்கத்தில் தானியங்கி உதவியுடன் இடப்பட்டுள்ளது. (இதில் புதுப் பயனர் போட்டியில் கலந்து கொண்டவர்களும் அடக்கம்)-நீச்சல்காரன் (பேச்சு) 15:01, 15 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
@Neechalkaran, Sridhar G, and Parvathisri:, 15 நாட்களுக்கு ஒரு முறை இவர்கள் அனைவருக்கும் போட்டி நிலவரம் குறித்து செய்தி அனுப்பலாம். போட்டியில் தமிழின் நிலவரத்தைக் கண்டு இன்னும் சிலர் பங்களிக்க வேகம் கொள்ளலாம். இது போல் வேறு ஏதும் பயனர் பட்டியல்கள் பயனுள்ளதாக இருக்குமா என்று சிந்திக்கிறேன். முன்பு முனைப்பாக இருந்த பங்களிப்பாளர்களையும் கண்டு மீண்டும் இணைந்து பங்களிக்கக் கோரலாம். --இரவி (பேச்சு) 17:25, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் குறித்து நியூஸ்18 இணையத்தளத்தில் சிறப்புக் கட்டுரை -நீச்சல்காரன் (பேச்சு) 08:25, 12 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

தலைப்புகள் முன்பதிவு[தொகு]

இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் பங்குகொள்ள விரும்பும் பயனர்கள் இப்பக்கத்தில் ஒரு வாரத்திற்கான, தான் புதிதாக எழுதவிருக்கும் அல்லது விரிவாக்கவிருக்கும் ஐந்து கட்டுரைகளைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது ஒரே கட்டுரையை பலர் எழுதுவதைத் தவிர்த்து காலவிரயமாவதையும் தடுக்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:41, 6 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

சந்தேகம்[தொகு]

இந்தியர்கள் மட்டுமா இப்போட்டியில் பங்குபற்ற முடியும். இல்லை இலங்கை தமிழர்களும் பங்குபற்றலாமா?−முன்நிற்கும் கருத்து ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

போட்டி விதிகளுக்கு உட்பட்டு எழுதப்படும் தமிழ் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கப்படும். நில எல்லைகள் தடையல்ல.பங்கு பெற்று, தமிழ் முதலிடம் பெற உதவுங்கள். தங்கள் பங்களிப்புகளைக் காணும் ஆவலுடன்..--உழவன் (உரை) 06:41, 7 செப்டம்பர் 2019 (UTC)

நன்றி[தொகு]

இந்த பக்கத்தில் உள்ள தகவல்கள் வேங்கைத் திட்டம் 1 போலவே இருப்பதனால் அதிலிருந்து வெட்டி இங்கு ஒட்டப்பட்டுள்ளது. அதனை உருவாக்கிய @Ravidreams: அவர்களுக்கு நன்றி.ஸ்ரீ (✉) 13:41, 8 செப்டம்பர் 2019 (UTC)

இத்திட்டப்பக்கம் மட்டும் அல்ல. பல திட்டங்களுக்கு(மடிக்கணினி, இரண்டாவது இந்திய விக்கியர் மாநாடு, உறைவிட விக்கிப்பீடியர், இந்திய விக்கமூலம் புத்துயிர் பெற்றது என இந்திய அளவில் செயற்பட அடித்தளமிட்டவர் இரவியே. அதனால் பலன் அடைந்தவர்களுள் நானும் ஒருவன். நம் தமிழ் சமூக முன்னோடிகளின் பெருமையை உணர, பிற இந்திய மொழி விக்கியர்களைச் சந்தித்தால் தான் தெரியும். இரவியின் மாதிரியைக் கொண்டு, நம் சமூகத்தில் செயற்படதான் ஆள் பற்றாக்குறை எனலாம். அதனைப் பற்றி இம்முறை முதலிடத்தைப் பெறுவோம். --உழவன் (உரை) 00:26, 21 செப்டம்பர் 2019 (UTC)
@ஞா. ஸ்ரீதர் and Info-farmer: மகிழ்ச்சி. நன்றி. உங்கள் எல்லோரின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டு விட்டது. வேங்கைத் திட்டம் 2.0வில் தமிழ் வெல்ல உழைப்போம்!--இரவி (பேச்சு) 17:12, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

ஆமாம் ஐயா .. மகிழ்ச்சி

எம்கோ சிவ (பேச்சு) 08:52, 10 சனவரி 2020 (UTC)[பதிலளி]

ஒருங்கிணைப்பாளர்கள்[தொகு]

அனைவருக்கும் வணக்கம். இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக கடந்த ஆண்டில் ரவிசங்கர் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரும் சிறப்பாக எங்களை வழிநடத்தினார்கள். இந்த ஆண்டு சில காரணங்களினால் ரவிசங்கர் அவர்களால் ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட இயலவில்லை. எனவே மூத்த பயனர்கள் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டால் சிறப்பாக இருக்கும். அவர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட தயாராக உள்ளோம். நிர்வாகிகள் எவரேனும் ஒருவர் வந்தால் Mass message போன்ற விசயங்களுக்கு உதவியாக இருக்கும். எங்கள் அன்புத் தொல்லையினைத் தாங்குமாறு @Arularasan. G, Neechalkaran, Parvathisri, Balajijagadesh, Sivakosaran, and Dineshkumar Ponnusamy: கேட்டுக்கொள்கிறோம். அனைவரையும் ஒருங்கிணைப்பு பணிகளிலும் கட்டுரைப் போட்டிக்கும் வருக வருக என வரவேற்கிறோம். நன்றி ஸ்ரீ (✉) 15:38, 15 செப்டம்பர் 2019 (UTC)

 1. 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:20, 20 செப்டம்பர் 2019 (UTC)
 2. ஏற்கனவே உரிய திட்ட ஆவணங்களை ஒழுங்கு படுத்தியும், மேம்படுத்தியும் வருகிறேன். தொடர்ந்து அதனைச் செய்வேன். நீங்களும் (@ஞா. ஸ்ரீதர் and Parvathisri:)செயற்படுவதை அறிவேன்.
  1. இருப்பினும், நாம் ஒருங்கிணைப்புப்பணியைச் செய்வதால், கூடி பேசி, பரிந்துரை பக்கத்தில் அறிவித்து, இதில் ஈடுபடுவோர் ஒப்புதல் பெற்ற பின்பே, நம் சமூகத்திற்கு வெளியே அறிவித்தல் நலம். அப்பொழுதுதான் தலைப்புகளில் தவறு வராது.
  2. 500 தலைப்புகளுக்காக, சிலரே முன்மொழிந்துள்ளனர். அவற்றை, அவர்களுடன் உரையாடி, ஒரு வாரமாகத் தொகுத்து வருகிறேன்.
  3. அந்த இலக்கிற்கு, நாளை (22-ந்தேதியே) இறுதி நாள் தரப்பட்டுள்ளது
  4. அதனால் விக்கிக்கு வெளியே, அவசரப்பட்டு அறிவிக்காதீர்கள். அவற்றை அங்கு நீக்கியுள்ளேன். நாம் ஒன்றிணைந்து செய்வதே நம் சமூகத்திற்கு நல்லது.
  5. 500 தலைப்புகள் குறித்து இனி இப்பக்கத்தில் உரையாடுவோம்.
  6. இத்திட்டத்தினை நன்குவழி நடத்திச்செல்ல நம் 'முன்னோர்களை' ( @Ravidreams and Dineshkumar Ponnusamy:)தொடர்ந்து கேட்போம். --உழவன் (உரை) 01:06, 21 செப்டம்பர் 2019 (UTC)
 • மகிழ்ச்சி. இன்னும் 1 நாள் மட்டும் உள்ளதால் நாம் இன்னும் விரைவாக செயல்பட வேண்டும். தங்கள் முயற்சிக்கு நன்றி. ஸ்ரீ (✉) 01:43, 21 செப்டம்பர் 2019 (UTC)
  • டெலிகிராமில் கூறியபடி இன்று தொடர்ந்து 12மணிநேரம் என் வாழிடத்தில் மின்சாரம் இருக்காது என்பதால், அத்தடை நீங்கிய பிறகு, இங்கு எழுதுகிறேன். நீங்கள் ஆலோசனை வழங்கியபடி, முனைப்பான பங்களிப்பாளர்களை களத்தில் இறக்க உரையாடியும், ஒழுங்கு படுத்தியும் வருகிறேன். இம்முறை தமிழ் முதலிடம் பெற என்னால் இயன்றதை செய்வேன். அதுவே இரவிக்கு தரும் புத்துணர்ச்சிப் பரிசு அல்லவா?.--உழவன் (உரை) 01:49, 21 செப்டம்பர் 2019 (UTC)

இப்பக்கத்தினை வளர்த்தெடுக்க உதவுக[தொகு]

விக்கிப்பீடியா:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களைப் படியெடுத்தல்--உழவன் (உரை) 13:23, 20 செப்டம்பர் 2019 (UTC)

நமது 500 தலைப்புகளை அறிவித்தாகியது[தொகு]

 • வேங்கைத்திட்டம் 2.0 நடைபெறும் அனைத்து மொழிகளுக்குமான ஒருங்கிணைப்புப் பகுதியில் தமிழுக்குரிய இடத்தில்(இந்த பக்கத்தில்,) அனைவரது முன்மொழிவுகளையும் உள்வாங்கி, கொடுக்கத் தகுந்த வடிவில் இருந்தவற்றில், 500 தலைப்புகளைத் தந்துள்ளேன்.--உழவன் (உரை) 18:28, 22 செப்டம்பர் 2019 (UTC)

கட்டற்ற பனுவல் பயன்பாடு[தொகு]

(ஆலமரத்தடி-அறிவிப்பு பகுதியின் படி இதுவாகும்)

விக்கிப்பீடியா:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களைப் படியெடுத்தல் என்ற பக்கத்தினை வளர்த்தெடுக்க எண்ணமிடுங்கள். ஏனெனில் கட்டற்ற தமிழ் பனுவல்களை இப்பொழுது இணையத்தில் காண இயலுகிறது. எடுத்துக்காட்டக, இப்பக்கத்தினைச் சொல்லலாம். முதலில் அவற்றை இங்கு கொண்டு வர வேண்டும். பிறகு முழுமையான விக்கியாக்கக் கலைகளஞ்சிய நடைக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். புதியவர்களை முதற்கட்ட பணிக்கு பயன்படுத்தலாம். அனுபவம் உள்ளவர்கள் அதனை தொடர்ந்து மேம்படுத்த இயலும். கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுக்கு தனி பகுப்பு இருப்பது போல, இவற்றிற்கு என பகுப்பிடலாம்.--உழவன் (உரை) 13:29, 20 செப்டம்பர் 2019 (UTC)

2014 ஆம் ஆண்டு பெற்ற கலைக்களஞ்சியத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி குறித்து எண்ணமிடுக[தொகு]

(ஆலமரத்தடி-அறிவிப்பு பகுதியின் படி இதுவாகும்)

 • சூலை, 2014-செல்வா அவர்கள் முயற்சியால் பத்தாண்டுகளுக்கும் மேற்பட்டு பலரால் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியம் , பொதுஉரிமத்தில் கிடைத்தது. அந்த ஆவணத்தை, இரவி பொதுவகத்தில் பதிவேற்றியுள்ளார். காண்க:c:File:Letter_from_Tamil_Development_Board_donating_20_volumes_of_encyclopedia_in_Tamil_under_Creative_Commons_license.jpeg
 • ஏப்ரல் 2015 அதன் பிறகு அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சி, இந்தப் பக்கத்தில் உள்ளன. அதில் மூலப்பக்கமும் இணைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பாகும். இந்த அருமையான அடித்தளப்பணியை நீச்சல்காரன் செய்துள்ளார்.
 • செப் 2019 நீச்சல்காரனின் அட்டவணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளை, இங்கு படிப்படியான நிலைகளில் தான் உருவாக்க இயலும். அது குறித்த எண்ணங்களை விக்கிப்பீடியா_பேச்சு:வேங்கைத்_திட்டம்_2.0#கட்டற்ற_பனுவல்_பயன்பாடு என்பதில் இடுக. பலரும் கவனிக்கும் இச்சூழ்நிலையில், அப்பொது உரிமத் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், புதியவர்களுக்கு இதனால் ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கும் திறன் தேவையில்லை. அவர்களுக்கு பங்களிப்பு செய்ய நல்லதொரு தொடக்கமாக அமையும். நம் மொழி முதலிடம் பெற்று வெற்றி அடைய இது ஒரு நல்ல தொடக்கமாகும் என்பதால் வினவுகிறேன்
 • எண்ணங்களையும், வழிமுறைகளையும் இடும் போது, en:Wikipedia:Text of Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License என்ற ஆங்கிலவிக்கிப்பீடியாவின் வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு, நமது சூழலுக்கு ஏற்றவாறு வழிகாட்டவும்.--உழவன் (உரை) 16:36, 23 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இணைக்கப்பட்டவைகளின் எண்ணிக்கை[தொகு]

@Neechalkaran:வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இணைக்கப்பட்டு, ஏற்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கையை எங்கு காண வேண்டும்? அதனை அனைவரும் அறியும் படி செய்தால் ஊக்குவிப்பாக அமையும். இந்திய மொழிகளோடு ஒப்பிட்டு அறிய என்ன செய்யலாம். --உழவன் (உரை) 05:16, 15 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Mobile Site notice[தொகு]

@Neechalkaran: போட்டி குறித்த அறிவிப்பை Mobile site noticeல் சேர்க்க முடியுமா? "விக்கிப்பீடியர்களுக்கான கட்டுரைப் போட்டி! பரிசுகளை வெல்லுங்கள்!" என்ற செய்தியுடன் விக்கிமீடியா இலச்சினை மட்டும் போதும். புலி இலச்சினை இட்டால் இலங்கையில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். --இரவி (பேச்சு) 17:10, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

@Neechalkaran: இலச்சினை குறித்த வேண்டுகோளைத் திருத்தி உள்ளேன். விக்கிமீடியா இலச்சினை தற்போது முழுக்க கருப்பு வண்ணத்தில் உள்ளது. அந்தப் புதிய இலச்சினையைப் பயன்படுத்த வேண்டும். --இரவி (பேச்சு) 17:17, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

சொல்லெண்ணும் கருவி[தொகு]

பவுண்டைன் கருவியானது, தகவல் சட்டம், உட்தலைப்புகள்(== இடுபவை), படங்கள், பகுப்பு, அட்டவணை, பட்டியல்(*, # இடுபவை), மேற்கோள் போன்றவற்றைக் கணக்கில் கொள்ளாது. இதனால் கருவியில் சேர்க்கும் போது சொல் எண்ணிக்கை 300க்கும் குறைவு என்று கூறி ஏற்கப்படாமல் மீண்டும் எழுத வேண்டிய நிலையுள்ளது. சொல் எண்ணிக்கை அறியவே நேரம் செலவாகிறது. இதைக் குறைக்க பவுண்டைன் கருவிக்கொப்ப சொற்களை எண்ணிக் காட்டும் ஒரு உட்சொருகி உருவாகியுள்ளது. தேவைப்படுபவர்கள் எனது காமென்ஸ்.ஜேஎஸ் பக்கத்தில் உள்ளது போல importScript('User:Neechalkaran/contentcounter.js'); என்று கொடுத்துக் கருவியை நிறுவிக் கொள்ளலாம். ஒவ்வொருமுறை தொகுத்தல் பெட்டியிலிருந்து சுட்டியை எடுக்கையில் பெட்டிக்குக் கீழே words bytes என்று எண்ணிக்கையைக் காட்டப்படும். புதிய கட்டுரைகளுக்கு உதவும் ஆனால் மேம்படுத்தப்பட்ட கட்டுரைகளுக்குப் பயனர்கள் தான் தொகுப்புக்கு முன், தொகுப்புக்குப் பின் என எண்ணிக்கை வேற்றுமைகளை அறிந்து கொள்ளவேண்டும்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:14, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

@Neechalkaran: பயனுள்ள கருவி. மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 18:25, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Outreach Dashboard[தொகு]

@Balajijagadesh: Outreach Dashboardல் வேங்கைத் திட்டம் 2.0க்கு ஒரு பக்கம் தொடங்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:24, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

செல்பேசிக்கு உகந்த பக்கம்[தொகு]

WP:NUC போல இந்தத் திட்டப் பக்கத்தையும் செல்பேசிக்கு உகந்த பதிப்பாக மாற்ற வேண்டும். தற்போது இப்பக்கம் Mobile Sitenoticeல் இணைக்கப்பட்டுள்ளது. --இரவி (பேச்சு) 18:32, 25 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

@Neechalkaran and Balajijagadesh: உதவ வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 19:08, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

கட்டுரை இணைக்க முடியா நிலை[தொகு]

வணக்கம், ஜலான் அருங்காட்சியகம், பாட்னா என்ற கட்டுரையை எழுதி இணைக்க முற்படும்போது Network error என்ற குறிப்பு வருகிறது. அதலால் கட்டுரையை இணைக்க முடியவில்லை. இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:32, 3 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

எழுதிமுடித்த கட்டுரையை பதிவு செய்ய பதிவுப் பக்கம் திறக்கவில்லை. இதற்கு இணையப் புலமை மிக்கோரில் யாராவது உதவி செய்ய வேண்டுகிறேன். ஆறுமுகி (பேச்சு) 15:57, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

@ஆறுமுகி: சற்று நேரம் கழித்து முயற்சி செய்யவும்.அல்லது கட்டுரை எழுதி சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் இணைய இணைப்பு சரியானதும் சமர்ப்பிக்கலாம்.ஸ்ரீ (✉) 16:03, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

சென்னையில் தொடர் தொகுப்பு நிகழ்வு[தொகு]

நவம்பர் 10 ஞாயிறன்று சென்னை வேளச்சேரியில் பயிலகம் வளாகத்தில் ஒரு நாள்(காலை 10 முதல் மாலை 5 வரை) தொடர்தொகுப்பு நிகழ்வைத் திட்டமிட்டுள்ளோம். இதற்குள் விரும்பிய நேரத்திலும் கலந்துகொள்ளலாம். இதில் வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியை மையமாக வைத்து தொகுப்புகள் நடைபெறும். சென்னையைச் சுற்றியுள்ள விக்கிப்பீடியர்கள் இதில் கலந்து கொண்டு பங்கெடுக்கலாம். ஆர்வமுள்ள புதியவர்களும் வந்து கற்றுக் கொள்ளலாம். நிகழ்ச்சியைத் திட்டமிட இங்கே முன்பதிவு செய்து கொள்ளக்கோருகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:28, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Maathavan Talk 10:30, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
@Neechalkaran: நிகழ்வு நல்லபடியாக நடந்ததா? --இரவி (பேச்சு) 20:33, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
ஆமாம் பதின்மூன்று நபர்கள் கலந்து கொண்டனர். @Karthiban Harikrishnan, Udhaya.v, Chitra Siva R, இர.இரா.தமிழ்க்கனல், and Gnuanwar: போட்டிக்கான கட்டுரையையே எழுதினர். மேலும் திவ்யாகுணசேகரன், காயத்திரி, உதயன், பிச்சைமுத்து, அருண் போன்ற கலந்து கொண்டு கற்றுக் கொண்டனர். மேலும் செய்திப்பதிவு இங்கே உள்ளன-நீச்சல்காரன் (பேச்சு) 08:51, 11 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 12:21, 11 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பேணல் பணிகள்[தொகு]

 • வேங்கைத்திட்டம் 2.0 மூலம் உருவாக்கப்பட்டது என்று பகுப்பிடப்பட்டுள்ள சில கட்டுரைகள் ஏற்கனவே இருந்ததில் இருந்து விரிவாக்கப்பட்டவை. அவற்றுக்குச் சரியான பகுப்பிட வேண்டும்.
 • சுமார் 600 கட்டுரைகள் மட்டுமே உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது என்று ஏதேனும் ஒரு பகுப்பின் கீழ் வருகின்றன. தொடக்கத்தில் உருவான கட்டுரைகள் பகுப்பின்றி இருக்கலாம். இவற்றைக் கவனித்து உரிய பகுப்பில் சேர்க்க வேண்டும். --இரவி (பேச்சு) 19:28, 5 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
  • இது குறித்த அடிப்படைகளைச் செய்துள்ளேன். நான் உருவாக்கும் கட்டுரைகளில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன். பிறர் பட்டியல் தந்தால், தானியக்கமாக மாற்றித் தர, வாட்சுஅப்பில் கேட்டிருந்தேன். இறுதியில் செய்து கொள்ளலாம் என @Balajijagadesh: கூறியதாகவே நினைக்கிறேன்.--உழவன் (உரை) 01:32, 6 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

கூகுள் மொழியாக்கக் கருவியின் பயன்பாடு[தொகு]

@Mayooranathan, Sundar, Kanags, Ravidreams, Gowtham Sampath, and Arularasan. G: பொதுவாக ஒரு கட்டுரை போட்டி நிகழும் பொழுது, பிறரை விட அதிக கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். தற்போது இப்போட்டியில் இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் பல, கூகுள் மொழியாக்கக் கருவியின் தரவை, அப்படியே உள்ளிடாக உள்ளதைக் காண முடிகிறது. குறிப்பாக ஆங்கில சொல்லான and என்பது, தவறாகவே இக்கருவி மொழிபெயர்ப்பாதாகத் தெரிகறிது. 'உம்' விகுதியின்மையால், அவ்வாக்கியத்தின் பொருண்மையே தவறாகத் தெரிகிறது.

எடுத்துக்காட்டாக, "mother,he and me went the tour" என்பதை கூகுள் எந்திரம்,

"அம்மா, அவரும் நானும் சுற்றுப்பயணத்திற்கு சென்றோம்" என்று மொழியாக்கம் செய்கிறது. இது பார்ப்பதற்கு சரி போல தெரிந்தாலும், தவறான பொருண்மையி்ல் அமைந்துள்ளது. ஏனெனில் அம்மாவிடம் கூறுவது போல இருக்கிறது. அம்மா என்பவள் அச்சுற்றுலாவுக்கு வராத பொருண்மை, இங்கு அமைந்து விடுகிறது.

"அம்மாவும், அவரும், நானும் சுற்றுலாவிற்குச் சென்றோம்" என்றே அமைய வேண்டும் அல்லவா?

ஆனால் பலர் இடப்பட்ட வாக்கியங்களின் பொருண்மையைக் கணக்கில் கொள்ளாமல், தரவுகளை மாற்றம் செய்யாமல், அப்படியே படி எடுத்து ஒட்டி விடுகின்றனர். தமிழ் எழுத்துநடையையும், பேண வேண்டியது நமது கடமை அன்றோ. மேலும் போட்டி விதிப்படி, கூகுளின் மொழிபெயர்ப்புத் தரவுகளால் கட்டுரைகளில் நிரப்பக்கூடாது என்பதை மீறும் கட்டுரைகளை என்ன செய்வது? மொழியாக்கம் சரியில்லை என்று பகுப்பிடலாமா? அவரவரே திருத்தினால், இத்தகைய அடையாளமிடல் தேவையில்லை தானே? என்ன செய்யலாம்? தரமே, நிரந்தரம் என்பதால், இதனை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இத்திட்டக் கட்டுரைகள் இருக்கும் பகுப்பின் உரையாடற்பக்கத்தில் குறிப்பிடல் சிறப்பு என எண்ணுகிறேன்.அப்பகுப்பில் கட்டுரை சொற்களின் எண்ணிக்கை குறைபாடு உள்ளதையும், பகுப்புப் பிழை உள்ளதையும், மேற்கோள் இல்லாதவைகளையும், விக்கித்தரவு இணைப்பு இல்லாதவைகளையும் குறிப்பிட முன்மொழிகிறேன். --உழவன் (உரை) 02:11, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

மொழியாக்கம் சரியில்லை என்று பகுப்பிடலாம் என்பது என் கருத்து. கட்டுரை எழுதியவர் மொழியாக்கத்தை சீர் செய்வேண்டியது மிக அவசியம். இப்பொழுது அதை சீர் செய்யவில்லை என்றால் அது அப்படியே தேங்கிவிடும். இதை நடுவர்கள் முதன்மையாக கவனித்து கட்டுரை எழுதுபவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். கட்டுரையின் எண்ணிக்கையைவிட தரம் மிக அவசியம்--அருளரசன் (பேச்சு) 02:55, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
நடுவர்கள் இது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு கூகுளால் மொழிபெயர்க்கப்பட்ட சில போட்டிக்கட்டுரைகளை நடுவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதை நான் அவதானித்தேன். இவற்றை உடனடியாகவே பயனருக்கு அறிவித்து கட்டுரையிலும் தகுந்த வார்ப்புரு இட வேண்டும். போட்டி முடிவடைந்தும் திருத்தப்படவில்லையானால் கட்டுரை நீக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 04:09, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
இவ்வாறு உருவாக்கும் கட்டுரைகளில் தகுந்த பகுப்பையோ அல்லது வார்ப்புருவையோ நடுவர்கள் இட்டு, அந்தப் பயனர்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து செய்து வந்தால், அவர்களை போட்டியில் இருந்து நீக்கப்படலாம் எனவும் அறிவிப்பு செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் கட்டுரையின் எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதை விட, கட்டுரைகளின் தரத்தில் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறேன். Kanags அண்ணன் சொல்வதை போல், போட்டி முடிவடைந்தும் திருத்தப்படவில்லையானால் கட்டுரை நீக்கப்பட வேண்டும். ஏனென்றால் கட்டுரைகளின் எண்ணிக்கையை விட தரமே முக்கியமானதாகும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:24, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
உடன்படுகிறேன். பல கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைச் சிறிதும் மாற்றாமல் அப்படியே இட்டுள்ளார்கள். இது குறித்து ஏற்கனவே சில பேச்சுப் பக்கங்களில் தெரிவித்து உள்ளேன். கூகுள் நம்மிடம் இருந்து தான் கற்றுக் கொள்கிறது. நாம் திருத்தாமல் அப்படியே இட்டாமல் அதற்கு மீண்டும் மீண்டும் தவறாகவே சொல்லிக் கொடுப்பதாகவே அமைந்து விடும். போட்டி எண்ணிக்கை முக்கியமில்லை. இதை இப்போது சரி செய்யாவிட்டால் அப்படியே தங்கி விடும். இத்தகைய கட்டுரைகளை நடுவர்கள் நிராகரித்து உடன் திருத்தங்களை மேற்கொள்ளச் சொல்ல வேண்டும். --இரவி (பேச்சு) 09:39, 9 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]
ஆம். நமது பொதுவான வளர்ச்சிக்கு இந்தப்போட்டியை ஓர் ஊக்கியாகக் கொள்வோம். மற்றபடி போட்டியில் வெல்வதற்காக கட்டுரைகளின் தரத்தினில் எந்தவித இசைவும் வேண்டாம். -- சுந்தர் \பேச்சு 11:44, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

மேற்கூறிய ஆலோசனைகளை நமது சமூகத்திற்கு வழங்கியமைக்கு மிகவும் மகிழ்கிறேன். இருப்பினும் தொடர்ந்து எந்திர மொழிபெயர்ப்புகளை மேம்படுத்தாமல் கட்டுரைகளை, சிலர் எழுதி வருகின்றனர். நான் அக்கட்டுரைகளை பவுன்டன் கருவியல் காணும் போது, அதுகுறித்து குறிப்புகளை அங்கு இடுகிறேன். எனினும் ஒருவரே இத்தகையப் போக்கினை மாற்ற இயலாது. போட்டி என்பதால் எண்ணிக்கையை மட்டும் இலக்காகக் கொண்டு செயல் படுவதால், இதற்குரியவைகளைத் தொடர்ந்து கவனிக்க தனிப்பக்கத்திற்கு இதனை மாற்றுகிறேன். அங்கு தொடர்வோம். தரமே நிரந்தரம் எனவே, உங்களை ஒத்துழைப்பை நல்க, இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்ட உரையாடற்களின் தொடர்ச்சிகளையும், அதனால் விளைந்த முழுமையான மாற்றங்களையும் கீழுள்ள துணைப்பக்கத்தில் அறியலாம். இதன் உட்பிரிவு அனைத்தும் அங்கும் படியிடப்பட்டுள்ளது. --உழவன் (உரை) 01:28, 21 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

தலைப்புப் பட்டியல்களில் தலைப்புகள் விடுபட்டுள்ளன[தொகு]

இந்த கூகுள் புதிய கட்டுரைப்பட்டியலில் , விரிவாக்கம் செய்யவேண்டிய தலைப்புகள் உள்ளன. எனவே, தலைப்புகள் விடுபட்டுள்ளன. மூலப்பக்கத்தினை இணைத்துள்ளேன். எங்கள் ஊரில் அதிகாலை நேரத்தில் மட்டுமே இணைய வேகம் இருக்கும். பட்டியலை சீரமைக்க வேண்டி, மூலப் பக்கத்தினை இணைத்துள்ளேன். சீர் செய்க.--உழவன் (உரை) 16:53, 12 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

நர்வா என்ற புதிய கட்டுரையை எழுதினேன். தொகுப்பை வெளியிட்டவுடன் இணைக்க முடியவில்லை. Fountain கருவியில் எழுத்துக்கள் பூச்சியம் என காட்டுகின்றது. கட்டுரையின் எழுத்துக்களும் மாயமாகி விட்டன உதவவும். Fathima (பேச்சு) 09:27, 14 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

Fathima rinosa! 15:09, 14 நவம்பர் 2019‎ என்ற நேரத்தில் நீங்களே இணைத்துவிட்டீர்கள். மற்றபடி எல்லாம் சரிதானே?.--உழவன் (உரை) 00:21, 20 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஆம். நீச்சல்காரர் உதவி செய்தார். அன்றே கருவியில் ஏற்றிவிட்டேன்.—Fathima (பேச்சு) 03:46, 21 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

பிற மொழிகளின் இடப்பெயர்களை, தமிழில் மாற்றுவது எப்படி?[தொகு]

பொதுவாக பிற மொழியில் இருக்கும் இடத்தின் பெயரை அல்லது ஊரின் பெயரை தமிழில் அமைக்கும் போது, ஒலிப்பையே முதன்மையாகக் கொண்டு மாற்றுகிறோம். மூல ஒலி இல்லாத சூழ்நிலையில் அல்லது மூல ஒலியை தமிழில் எழுத இயலாத நிலை உள்ளது. இதற்கு தமிழ் இலக்கண ஒலிப்பியல் விதிகளோடு, மாற்றித் தர வல்ல வழிகாட்டல்கள் அல்லது ஒரு செயலி தேவை. ஒரு தேவையை இங்கு தெரிவித்துள்ளேன். காண்க: விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#ஆங்கில பெயர்ச்சொற்களின் மொழிபெயர்ப்புகள் தேவை ஒரு தலைப்பை உருவாக்கிய பிறகு, இதுதான் சரியானது என்பது போன்ற பல உரையாடல்கள் நமது விக்கியில் நடைபெற்றுள்ளது. அதை தவிர்க்கவே வினவுகிறேன். நமக்கும் துப்புரவு பணியடர்வு குறையும் அல்லவா? போட்டிக்கட்டுரைகளை இந்த காரணங்களுக்காக மாற்றும் போது, இணைப்பு முறிவு உண்டாகிறது. அதனைத் தவிர்க்கவும், இந்த நுட்பம் உதவும்--உழவன் (உரை) 06:41, 29 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

நடுவர்கள் கவனிக்க[தொகு]

@Dineshkumar Ponnusamy, Arularasan. G, கி.மூர்த்தி, ஞா. ஸ்ரீதர், Balajijagadesh, and Info-farmer: போட்டிக்கட்டுரைகள் ஒரு சிலரின் (குறிப்பாக balu1967)கட்டுரைகள் தவிர மற்றவை உடனுக்குடன் திருத்தப்படுகின்றன. இது அவருக்கு ஒருதலை பட்சமாக நடந்துகொள்வது போன்ற சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எனது உறவினர் என்ற காரணத்தினால் நடுநிலைமை கருதியே அவரின் கட்டுரைகளை மதிப்பிடுவதை நிறுத்தியுள்ளேன். எனவே மற்ற நடுவர்கள் இதனை கவனித்து மதிப்பிடக் கேட்டுக்கொள்கிறேன். அவரின் கட்டுரையை நீங்கள் ஏற்காத காரணத்தையும், செய்ய வேண்டிய மேம்பாடுகளையும் அவரின் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். இது அவருக்கு மேலும் பயனுள்ள வகையிலும் தொடர் பங்களிப்பை அளிக்கவும் உதவக்கூடும்.நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:21, 3 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

//அவரின் கட்டுரையை நீங்கள் ஏற்காத காரணத்தையும், செய்ய வேண்டிய மேம்பாடுகளையும் அவரின் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம்.//விருப்பம். கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டால், கண்டுணர்தல் எளிமையாகும். பவுன்டன் கருவியில் நீங்கள் தந்த குறிப்புகளை, அக்கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் தந்தால், எனது எண்ணங்களைச் சொல்ல வசதியாக இருக்கும். ஏனெனில், பவுன்டனில் எனது நோக்கை கூறும் வசதியில்லை. மற்றொன்று ஏற்காத நான் உருவாக்கியக் கட்டுரையை நீக்குதலை நான் விரும்புகிறேன். அவற்றை நீக்குக.--உழவன் (உரை) 04:32, 9 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
வணக்கம், நான் வேங்கைத் திட்டம் 2.0 நடுவர் குழுவில் இல்லை, ஆகையால் என்னால் எதுவும் செய்ய இயலாது. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:41, 4 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
நீங்கள் இணைந்துள்ளீர்கள். ஆசியமாதக்கட்டுரைகளை இங்கு முதலில் கவனிக்க வேண்டுகிறேன். எனது கட்டுரைகளில் மாறுபட்ட கருத்து இருக்குமாயின் நீக்குக.--உழவன் (உரை) 04:32, 9 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

வருத்தம்[தொகு]

@Dineshkumar Ponnusamy, Arularasan. G, கி.மூர்த்தி, ஞா. ஸ்ரீதர், Balajijagadesh, and Info-farmer: வேங்கைத் திட்டம் 2.0 போட்டிக்கட்டுரைகள் எனது கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது. தவிர மற்றவர்களின் கட்டுரைகள் உடனுக்குடன் மதிப்பீடு செய்யப்பட்டு வருவது என்ன காரணமென்று எனக்குத் தெரியவில்லை. இதனால் சில சமயம் மிகுந்த மனச்சோர்விற்கு ஆளாகிறேன். ஆனால் அதே சமயம் ஆசிய மாதம் திட்டத்தில் பதிவேற்றிய எங்கள் கட்டுரைகள் அனைத்தும் தினேஷ் பொன்னுசாமியால் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

வேகமாக கட்டுரைகளை பதிவேற்றுவது எனது இயல்பு. அதில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டினால்தான் தவறுகளைத் திருத்திக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். மேலும், என்னுடைய மூன்றாம் இராமா கட்டுரையில் உள்ள பிழைகளை இரவி அவர்கள் சுட்டிக்காட்டியவுடன் அதை உணர்ந்து கொண்டு நான்கு தினங்கள் எந்தக் கட்டுரையும் மொழிபெயர்க்காமல் நான் ஏற்கனவே பதிவேற்றிய பல கட்டுரைகளுக்குள் சென்று முடிந்தவரை (எனக்குத் தெரிந்தவரை) சரி செய்துள்ளேன் என்பதையும் அனைவருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதை நடுவர்கள் கவனித்தீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. எனவே நடுவர்கள் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளப் படவேண்டுமென்று தெரிவித்தீர்களென்றால் என்னுடைய தவறுகளை சரி செய்து கொள்ள மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி.--பாலசுப்ரமணியன் (பேச்சு) 14:22, 3 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

வணக்கம் பாலு, நீங்கள் கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள், மற்ற நடுவர்கள் நிச்சயம் படித்தபிறகு ஏற்றுக்கொள்வார்கள். நான் வேங்கைத் திட்ட நடுவர் குழுவில் இல்லை, அதனால் என்னால் எதுவும் செய்ய இயலாது. வழக்கமாக, கட்டுரைகளை ஏற்பதற்கு போட்டி முடிந்தபிறகும் அவகாசம் இருக்கும். அதனால் தொடர்ந்து எழுதுங்கள். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:43, 4 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
@Balu1967: வேறு கட்டுரைகளை மதிப்பிட்டு, உங்கள் கட்டுரையை மதிப்பிட்டவில்லை என்று கூறுவதால் உங்கள் ஆதங்கம் புரிகிறது. நடுவர்கள் இக்கட்டுரைகளை மதிப்பிட்டு, மேம்பாடுகள் தேவையெனில் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டுவிட்டு, அந்தக் கட்டுரையை பவுண்டைனிலிருந்து நீக்கக் கோருகிறேன். இதனால் அவருக்கும் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் கட்டுரைகளை ஏற்றுக் கொள்க. கடைசி மாதத்தில் தான் போட்டி இன்னும் வேகமாக இருக்கும் அதனால் நமக்குள் குழப்பங்களின்றி செயல்பட வேண்டிக் கொள்கிறேன். @Parvathisri: வேறு நடுவர்கள் அனுமதிக்க வேண்டும் எனக் காத்திருக்க வேண்டியதில்லை. ஷாமுகி விக்கியினர் தானே எழுதி தானே அனுமதித்தும் கொள்கின்றனர். அதனால் அனுபவம் வாய்ந்த பயனர் என்ற அடிப்படையில் நேரமிருந்தால் நீங்களே அனுமதிக்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 14:24, 4 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்அதனால் தான் எனது கட்டுரைகளை நீக்கக் கோரியிருக்கிறேன். புரிந்துணர்வை ஏற்படுத்தியமைக்கு நன்றி--உழவன் (உரை) 04:36, 9 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். போட்டி விதிகளில் ஏற்பட்ட அதீத மாற்றங்கள் காரணமாக பங்களிக்க மனமில்லாது இருந்தேன். இந்தப் பக்கத்தினையும் கவனிக்கத் தவறினேன். @Balu1967: தாங்கள் தொடர்ந்து எழுதவும். மிக விரைவில் தங்களது கட்டுரைகள் மதிப்பிடப்படும். நன்றிஸ்ரீ (✉) 07:14, 6 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
@Dineshkumar Ponnusamy: //நான் வேங்கைத் திட்ட நடுவர் குழுவில் இல்லை, அதனால் என்னால் எதுவும் செய்ய இயலாது.// தங்கள் பெயர் வேங்கை திட்ட நடுவர் குழுவில் உள்ளது. தங்கள் கவனத்திற்கு. Jury members: Balajijagadesh Dineshkumar Ponnusamy Info-farmer Parvathisri Sridhar G கி.மூர்த்தி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 23:24, 11 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

தொடர் தொகுப்பு -III நிகழ்வு - லயோலா கல்லூரி[தொகு]

சென்னை, மதுரையை அடுத்து மீண்டும் சென்னையில் தொடர்தொகுப்பு டிசம்பர் 15 லயோலா கல்லூரியில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கல்லூரி மாணவர்களும் நம்முடன் தொகுக்கவுள்ளார்கள். காலை 10 முதல் மாலை 5 வரை. (இதற்கிடையிலும் கலந்து கொள்ளலாம்). சென்னையைச் சுற்றியுள்ளவர்கள் மற்றும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள மற்றவர்களும் கலந்து கொள்ள அழைக்கிறோம். முன்பதிவுப் படிவம் -14:57, 6 திசம்பர் 2019 (UTC)


போட்டிக் கட்டுரைத் தலைப்புக்களை நகர்த்துவதும் திருத்துவதும்[தொகு]

நானும் போட்டிக்காகப் புதிய கட்டுரைகளை எழுதலாமென எண்ணியிருந்த போதிலும் இன்று வரை அதற்கான வாய்ப்புக் கிடைக்கவேயில்லை. வேலைப்பளு கூடிக்கொண்டே வருவதால் புதிய கட்டுரைகளை உருவாக்குவதில் கவனஞ் செலுத்த முடியவில்லை. ஆயினும் ஏராளமான கட்டுரைகளின் தலைப்புக்களிலும் உள்ளடக்கங்களிலும் பெயர்ப் பிழைகளைக் காண்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும் போது அவற்றைத் திருத்தலாம். அவ்வாறு திருத்துவது அல்லது தலைப்புக்களை மாற்றுவது போட்டிக் கட்டுரைகளுக்கு வேண்டாத பாதிப்பை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. அதனைப் பற்றிச் சிறிது விளக்கம் தேவை.--பாஹிம் (பேச்சு) 15:28, 6 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

பாதிப்பு என்று சொல்ல முடியாது ஆனால் சிறுது வேலைப்பளு அதிகமாகும் உதாரணத்திற்கு ஒரு கட்டுரையை எழுதி சமர்ப்பித்து விட்டபிறகு நீங்கள் அதன் தலைப்பை மாற்றினால் போட்டி கட்டுரைக்கு அந்தக் கட்டுரையை மதிப்பிட முடியாது மாறாக அந்த கட்டுரையை நடுவர் ஒருவர் போட்டி கட்டுரைகளில் இருந்து நீக்கி பிறகு நடுவர் அல்லது அந்தப் பயனர் நீங்கள் கொடுத்த தலைப்பை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் அதன்பிறகு அதனை மதிப்பிட முடியும்.ஸ்ரீ (✉) 15:37, 6 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

@Fahimrazick:! தலைப்புகளுக்கான தேவை {{Nehbandan County}} இங்கு அதிகம் உள்ளது. அதன் பேச்சுப்பக்கத்தில் நேரம் இருக்கும் போது எழுதுங்கள். ஏற்கனவே, உங்கள் பரிந்துரையை செயற்படுத்தி உள்ளேன். சிறீ கூறியது பணியடர்வு குறித்தத் தயக்கம் வேண்டாம். உடனுக்குடன் தெரிவித்தால் மறவாமல் தேவையான மாற்றங்களை அனைத்திலும் மாற்றிவிடுகிறேன். சரி, தவறு என்று கூறாமல் முடிந்தால் சிறு விளக்கம் தந்தால் பல தவறுகள் உருவாகாமல் இருக்கச் செய்யலாம்.--உழவன் (உரை) 04:45, 9 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

அவ்வாறு தலைப்பு மாற்றிய கட்டுரைகளைத் தனியே பட்டியலிட்டால் அதனைக் கருவியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் நடுவர்களே சரியான தலைப்பை ஏற்ற முடியும். ஆயினும் பயனருக்கு பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுவது நலம். அவரே மீண்டும் சரியான தலைப்பை கருவியில் ஏற்றலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:02, 11 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

இவற்றுக்குரிய தமிழ்ப் பெயர்களை உருவாக்கித் தருகிறேன். பாரசீக மொழியமைப்பு தமிழுடன் நல்ல முறையில் பொருந்துகிறது. ஆங்கிலத்தை நாடாமல் நேரடியாக அம்மொழியிலிருந்து பெயர்களைப் பெறும் போது பல தவறுகளைத் தவிர்க்கலாம். இங்கே மிக எளிய முறை உருது வழியைப் பின்பற்றுவதாகும். உருது மொழியிலும் பாரசீக மொழியிலும் எழுத்துக்களின் மொழிதல் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். இவை அறபு எழுத்துக்களைப் பயன்படுத்துகின்ற போதிலும் அறபு மொழிப்பு முறையை அப்படியே பின்பற்றுவதில்லை. அங்ஙனமே, ஒருவர் இந்தோனேசியத் தலைப்புக்களில் எழுதுவதைப் பார்த்தேன். அவருக்கு நான் கூறுவது என்னவென்றால், இந்தோனேசிய மொழி பற்றிய கட்டுரையை நான் விரிவாக்கிப் பல தகவல்களைச் சேர்த்துள்ளேன். அவற்றைப் பின்பற்றினால் தவறுகள் நிகழ்வது குறையும். இவ்வாறான வேற்றுமொழித் தலைப்புக்களில் ஆங்கிலத்தையோ ஆங்கில வழி உச்சரிப்பையோ பின்பற்றவே வேண்டாம். அது வேற்றுமொழிப் பெயர்களைக் கேலிக் கூத்தாக்கி விடும். அத்துடன் ஒரு சிலர் மொங்கோலியத் தலைப்புக்களை மங்கோலியா என்றவாறு எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். அது முற்றிலும் தவறு. ஏனென்றால், ஆங்கிலத்தின் O எழுத்தை ஆ என வாசிக்கும் பழக்கம் இந்தியாவில் உள்ள போதிலும், கீழைத் தேய நாடுகளில் எதிலும் ஒருபோதும் அவ்வாறு வாசிப்பதில்லை. அது ஓ என்ற ஓசையுடன் மாத்திரமே வரும். மேலும் C என்பதை ச்ச எனும் ஓசையுடனேயே வாசிக்க வேண்டும். க என்ற ஓசையுடன் அதனை வாசிக்கவே கூடாது. இம்மொழிகளுக்கு ஆங்கிலம் எந்த வகையிலும் மூலமுமல்ல, பொருத்தமுமல்ல என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.--பாஹிம் (பேச்சு) 10:03, 9 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஆங்கிலவழி மொழிபெயர்க்கும் போது நெருடலாகவே இருந்தது. எந்த மூலத்தையும் பின்பற்றுவதே சிறப்பு. அதை நீங்கள் செய்து தர இருப்பது மகிழ்ச்சி. இதற்கு தனியானத் திட்டபக்கத்தினை உருவாக்கி, நிரல்வழி எளிமையாக்குவேன். பிறகு, விருப்பப்பட்டவருக்குப் பயற்சியும் அளிப்பேன். எனவே, தொடர்ந்து வேங்கைத்திட்டம் முடிந்தவுடன் உரையாடலைத் தொடர்வோம். விரைவில் உங்கள்பேச்சுப்பக்கத்தில் கூகுள் விரிதாளைத் தொடங்கித் ஆங்கில, பெர்சிய, உள்ளீடுகளை உருவாக்கித் தொடர்பு கொள்கிறேன். உங்களுக்கும் இந்த இலக்கு இன்னும் எளிமையாகும். அவ்வப்போது இத்திட்டத்தில் இணைந்துள்ள தலைப்புகளில் உங்கள் பரிந்துரை இருப்பின், பத்துநாட்கள் இடைவெளிவிட்டு யாரும் மாற்றுக் கருத்துத் தெரிவிக்கவில்லையெனில் மாற்றிவிடுகிறேன். மிக்க நன்றி. --உழவன் (உரை) 00:28, 10 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டத்தின் பரிசுப் போட்டி[தொகு]

வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டம் என்ற அமைப்பு விக்கிப்பீடியாவில் வேங்கைத் திட்டத்தில் கட்டுரை எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசுடன் இணைந்து கட்டுரைப் போட்டியை நடத்திய மாதிரியில் கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற்று, தகுதிவாய்ந்த கட்டுரைகளை விக்கியாக்கம் செய்து தனிக்கணக்கில் பதிவேற்றத் திட்டமிட்டுள்ளனர். காப்புரிமைச் சிக்கலில்லாமல் பொதுவுரிமத்திலும், தகுந்த மேற்கோள்கள் கொண்டும் இருப்பதன் தேவையை உணர்ந்துள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் இப்பரிசிற்கும் தொடர்பில்லை. அவர்களின் பரிசுக்கான தேர்விற்கும் தொடர்பில்லை. ஆனால் விக்கிப்பீடியாவில் ஏற்றப்படும் கட்டுரையின் தரத்தை மட்டும் நாம் முடிவு செய்து கொண்டு போட்டிக்கு ஏற்பதா மேம்படுத்த கோருவதா என்று முடிவெடுக்க வேண்டும். இதர போட்டிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பஞ்சாபியர்களின் குபீர் கட்டுரைகளுக்கு ஈடு கொடுக்க இதன் மூலம் ஒரு பரிட்சார்த்த முயற்சியாகப் பார்க்கிறேன். விக்கியாக்கத்திற்குச் சிரமப்படும் புதியவர்களை இப்படி ஊக்குவிக்கலாம், கட்டுரை தனிக் கணக்கில் உள்ளீடு செய்த பின்னர் கட்டுரை எழுதியவர், விக்கி தொகுத்தலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளலாம் என்று யூகிக்கிறேன். இப்போட்டிக்கு மற்றவர்களின் ஆதரவைக் கோருகிறோம் -ஐயோன் & நீச்சல்காரன் (பேச்சு) 20:45, 9 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

 1. மிக்க விருப்பம். ஒரு படியை கூகுள் கோப்புரையில் யாவருக்கும் பகிர்ந்தால்,அதனைத் திருத்தி தர ஏதுவாகும். புதியவர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும். ஓரிருவருக்கு என்னால் இயன்றதைச் செய்வேன். --உழவன் (உரை) 00:29, 10 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
 2.  ஆதரவு--குறும்பன் (பேச்சு) 03:22, 10 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
 3.  ஆதரவு--Commons sibi (பேச்சு) 05:33, 10 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
 4.  ஆதரவு--இரா. பாலாபேச்சு 01:39, 11 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு[தொகு]

கருத்து[தொகு]

 • //கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற்று, தகுதிவாய்ந்த கட்டுரைகளை விக்கியாக்கம் செய்து தனிக்கணக்கில் பதிவேற்றத் திட்டமிட்டுள்ளனர்.// தகுதியான கட்டுரைகளை விக்கியாக்கம் செய்து தனிக்கணக்கில் பதிவேற்றுவதைவிட, விக்கியாக்கம் செய்து பயனருக்கு மின்னஞ்சலில் அனுப்பி பயனரின் மூலமே அவரது கணக்கில் பதிவேற்றம் செய்யக் கோரலாம். --இரா. பாலாபேச்சு 01:39, 11 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
 • மின்னஞ்சல் மூலம் பெறுவது காப்புரிமை சிக்கலகளுக்கு வழிவகுக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் எழுதியவர் இதனை CC by SA உரிமத்தின் கீழ் வெளியட ஒத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? யாராவது விளக்கம் அளித்தால் புரிதல் மேம்படும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 23:30, 11 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
@Balurbala: நேரடியாக விக்கியிலும் எழுதலாம் என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஆர்வமூட்டுமா எனத் தெரியாததால் கூடுதலாக மின்னஞ்சல்வழி பங்கேற்பையும் ஈர்க்கின்றனர். நேரடியாக எழுதுவதில் புதியவர்களுக்குப் பல சிக்கல்கள் உள்ளன. விக்கியில் நாம் அதை ஏற்கத்தக்கதா என மதிப்பிடவும், விக்கியாக்கம் செய்யவும், திருத்தம் செய்வதற்கும், வழிகாட்டுவதற்கும் போதிய ஆட்களில்லை, மேலும் போட்டிக் காலத்திற்குள் முழுதும் புதியவர் நடைமுறையறிந்து எழுதுவதும் கடினமாகலாம். எனவே பொதுக் கணக்கில் ஏற்றிவிட்டு, அந்தப் பயனர்களை மேம்பாடு செய்யச் சொல்லிக் கோரலாம். @Balajijagadesh: போட்டி அறிவிப்புப் பக்கத்தில் விதிமுறைகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் அச்சிக்கல் இல்லை.-நீச்சல்காரன் (பேச்சு) 05:21, 12 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

மருத்துவச் சொற்களுக்கான தமிழ் சொற்களின் உதவிக்கு[தொகு]

நமது விக்கி மூலத்தில் உள்ள மருத்துவக்களஞ்சியப்பேரகராதி உதவலாம். மேலும் இந்தத்தளம் பெரும்பாலான சொற்களுக்கு தமிழ்ப் பொருளைச் சரியாகத் தருகிறது. இவற்றைப் பயன்படுத்தலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:17, 11 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

{.{Infobox settlement}}[தொகு]

மக்கள் தொகை வேறுபாடு ஈரான் கட்டுரைகளில், சரியாக இட்டும், தவறாகக் காட்டுவதற்கானக் காரணத்தைக் கண்டறிந்தேன். யாதெனில், {{Infobox settlement}} வார்ப்புருவை பயன்படுத்தும் போது, எண்களில் நிறுத்தற்குறியை (comma) இடக்கூடாது. அந்த வார்ப்புருவே தன்னியக்கமாக, குறியை இட்டுக் கொள்கிறது. அதனால் அந்த வழு வந்தது சீர் செய்துள்ளேன். எடுத்துக்காட்டு: இந்த வேறுபாடு அதனை உணர்த்தும் இதனைச் சுட்டிய பார்வதிசிறீக்கு நன்றி.--உழவன் (உரை) 01:55, 15 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

ஏற்கப்படாதக் கட்டுரைகளை நீக்குதல்[தொகு]

பவுன்டன் கருவியில் ஏற்கப்படாதக் கட்டுரைகளை நீக்குதல் வழமை. அதுபோல பலரின் கட்டுரைகள் நீக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அகம் கட்டுரைப் பொருத்தமற்றது என நீக்கப்பட்டது. பின்பு அக்கட்டுரையாளர் மாற்றம் செய்ததால், மீண்டும் இணைக்கப்பட்டது. அதே நடைமுறையை, அனைவரது கட்டுரைகளிலும் பின்பற்றுதல் நலம். தற்போது என கட்டுரைகள் பல, ஆசிய மாத பவுன்டன் கருவியில் ஏற்கபட்டவை, இங்கு ஏற்கபடாமல் உள்ளன. ஆசியமாத நடுவரிடம் ஆலோசித்தே, அக்கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. பொதுவெளியில் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றுவது இயற்கையே.@Parvathisri: எனது வேண்டுகோள் யாதெனில், அனைவருக்கும் ஒரே மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்றக் கோருகிறேன். எனவே, நீங்கள் இப்போட்டியில் ஏற்காத கட்டுரைகளை நீக்குக. மேலும், அது குறித்த குறிப்புகளை, அதனதன் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடலாம். அல்லது இங்கேயே கட்டுரைத் தலைப்பை எழுதி அருகிலேயே, ஏற்கப்படாமைக்கு காரணங்களைத் தரலாம். --உழவன் (உரை) 02:09, 16 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

பேச்சு:நஃபந்தான்[தொகு]

பேச்சு:நஃபந்தான் என்பதில், பலர் பின்னூட்டம் எழுதியுள்ளனர். அனைவரது எண்ணங்களைப் பெற்றே செயற்பட விரும்புகிறேன். ஆகவே, உடன் எழுதக் கோருகிறேன். அதனை மாதிரியாகக் கொண்டு நான் எழுதியுள்ள, கருத்து வேறுபாடுள்ள, இப்போட்டிக் கட்டுரைகளில் மாற்றம் செய்யவே இந்த வேண்டுகோள். அனைவரும் உடன் தந்தால் அதனை முடித்து அடுத்த கட்டுரைகளை உருவாக்க இயலும். எனது போட்டி கட்டுரைகளில் இவை 10% மட்டுமே. பிறரின் போட்டிக் கட்டுரைகளில் பலவற்றைக் குறித்த மாற்று கருத்துக்களைத் தெரிக்க உள்ளேன். அதற்கு முன் எனது கட்டுரைகளை, நான் திருத்திக் கொள்ளவே இந்த கோரிக்கை. குறிப்பாக, என்னுள் இருந்து என்னை வழிநடத்தும்,@Mayooranathan, Sundar, Kanags, Ravidreams, and செல்வா: என்பவர்களின் வழிகாட்டுதல்களையும், இப்போட்டி நடுவர்களான @Balajijagadesh and Parvathisri: ஆகியோரின் எண்ணங்களையும் எதிர்நோக்குகிறேன். பவுன்டன் கருவியிலோ, வாட்சு-அப் போன்ற சமூக ஊடகங்களிலோ தெரிவிக்கும் எண்ணங்களை, பின்னாளில் எடுத்துக்காட்டாக பிறருக்கு காட்ட இயலாது என்பதால் இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன்.--உழவன் (உரை) 02:30, 18 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

கீழே பார்வதியின் கருத்துக்கு அடுத்து என் கருத்தை இட்டுள்ளேன். --இரவி (பேச்சு) 07:09, 20 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]
அக்கட்டுரையை செம்மையாக்கிய @பா.ஜம்புலிங்கம்: மிக்க நன்றி. பலர் அக்கட்டுரையை ஏற்றாலும், சுந்தர் கூறிய மறுப்புரை, நல்ல வழிகாட்டுதலாக அமைந்து, மிகவும் புரிதலை உருவாக்கியது. இதுபோன்ற வழிகாட்டுதலே நற்சமூகத்தை வளர்த்தும். @Sundar:அவருக்கு மிகவும் நன்றி.--உழவன் (உரை) 00:40, 22 சனவரி 2020 (UTC)[பதிலளி]

மாற்றுக்கருத்துள்ள கட்டுரைகள்[தொகு]

நான் ஏற்கனவே இதுபோன்ற கட்டுரைகளை ஏற்காததன் காரணத்தை கருவியில் பின்னூட்டம் மூலம் தெரிவித்துள்ளேன். ஊராட்சிக் கட்டுரைகள் இதுபோல சேர்க்கப்பட்டன என்பது வாதமாக வைத்தால் அவற்றில் மாநிலம், மாவட்டம், நகரம் போன்ற சொற்கள் மட்டுமே திரும்பத் திரும்ப அனைத்து கட்டுரைகளிலும் வரும். அவை அரசிடமிருந்து செய்திகள் பெறப்பட்டு சமூகத்தால் ஏற்பளிக்கப்பட்டு பின்னரே தானியக்கமாக எழுதப்பட்டன. அவற்றில் தலைப்பு குறித்த செய்திகளே விரிவாக்கப்பட்டு உள்ளது. ஆனால் தலைப்பிற்கு தொடர்பற்ற இரண்டு வரிகளில் குறிப்பிட வேண்டிய செய்திகள் ஈரான் பற்றிய சில கட்டுரைகளில் பைட்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டி சேர்க்கப்பட்டுள்ளன.

தலைப்பை ஒட்டிய செய்திகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். உதாரணமாக பசுவைப்பற்றி எழுதவேண்டிய கட்டுரையில் தென்னை மரத்தைப் பற்றி எழுதிவிட்டு பசுவை இந்தத் தென்னை மரத்தில் தான் கட்டுவார்கள் என எழுதுவது எப்படி ஏற்றுக்கொள்ளவியலதோ, அது போலத்தான் ஈரானில் உள்ள நகரம், கிராமம், அல்லது மாகானங்கள் பற்றி எழுதும்பொழுது ஈரான் நாட்டைப்பற்றியும் அதற்கு ஏன் அப்பெயர் வந்தது என்பது பற்றியும் அதன் மாகாணங்களும் மாவட்டங்களும் எவ்வாறு பிரிக்கப்பட்டன, அவற்றின் பெயர்கள் எவை என்பதையும் விரிவாக எழுதி, தலைப்பைப் பற்றிய சிலவரிச் செய்திகள் மட்டுமே இருக்கும் கட்டுரைகளும். இதேபோன்று தகவல் சட்டத்தை விரிவாக்குகிறேன் என இந்திய ஊர்கள் நகரங்கள் மற்றும் பிற கட்டுரைகளில் இந்தியா பற்றியும், தமிழ்நாடு பற்றியும், அந்த மாவட்டம் பற்றியும் விரிவான தகவல்களைத் தந்துவிட்டு தலைப்பு தொடர்பாக ஒரு சிறிய பத்தி மட்டுமே தகவல்கள் தந்தால் அதுவும் அனைத்து கட்டுரைகளிலும் ஒரே தகவல்கள், மேற்கோள்கள் கூட மாறாமல் கொடுத்தால் எப்படியிருக்கும்?

கீழ்க்கண்ட கட்டுரைகளை தயவு செய்து ஒரு முறை கவனியுங்கள்.

சூசெஃப்பு ஊரக வட்டம்,சூசெஃப்பு,சூசெஃப்பு மாவட்டம், நடுவ மாவட்டம், நஃபந்தான் மண்டலம், தெகெசுதன், ஈரான், கோலெசுதான், ஈரான், காட்சு, ஈரான், நசிம்சார், ஆன்டிசே. மலர்டு, குவர்சக்கு,சாரியர், தெகுரான் மாகாணம்,பாக்ச்சு,நஃபந்தான் மண்டலம்,நஃபந்தான்,அப்தௌலகபாத்-இ ஒயக்கு,இலாப்பெ சனக்கு,கோற்றாம்சார், பான்டார்-இ மாக்சார் இக்கட்டுரைகளில் ஒரே செய்திகள் ஆளுகை, புவியியல், மக்கள் தொகை போன்ற செய்திகளைத் திரும்பத் திரும்ப அனைத்து கட்டுரைகளிலும் வெட்டி ஒட்டியது போல் உள்ளன.

போட்டிக்காகவெனினும் மற்ற போட்டியாளர்கள் தங்கள் நேரத்தைக் கொடுத்து கட்டுரைகளை நூற்றுக்கணக்கில் உருவாக்கும்பொழுது இப்படி எளிமையாக அனைத்துக் கட்டுரைகளிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரே தகவல்களை இட்டு, கட்டுரை அளவையும் எண்ணிக்கையையும் கூட்டுவது சரியல்ல. மேலும் விக்கியின் தரத்துக்கும் ஏற்றதல்ல. இது போல இலட்சக்கணக்கில் உருவாக்கலாம் என்றால் பலராலும் இயலும். இவை மற்ற பயனர்களுக்கு ஒரு தவறான உதாரணமாகி விடும். எனவே அச்செய்திகள் நீக்கப்பட வேண்டும். எனக்கு இதில் உடன்பாடில்லை. அனைவரும் தமிழ்விக்கியின் நலனுகாகவே நேரத்தைச் செலவிடுகிறோம், நானும் உழவனும் அவ்வாறுதான்.மேலும் நான் ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்கிறேன் எனவும், எனக்கும் தகவல் உழவனுக்கும் கருத்து வேறுபாடு என்பது போன்றும் செய்திகள் பரவுவதில் எனக்கு ஆட்சேபனை உள்ளது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:40, 18 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

பார்வதியுடன் கருத்துடன் உடன்படுகிறேன். போட்டிக்காக என்றில்லை. யார் எழுதுகிற கட்டுரை என்றாலும், தென்னை மரத்தில் கட்டிய பசு போன்ற கட்டுரைகளை எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். அதனால் ஒரு பயனும் இல்லை. ஒரு பொருள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளத் தான் தனிக் கட்டுரைகளும் உள்ளிணைப்புகளும் இருக்கின்றன. எனவே, ஒரே உள்ளடக்கத்தை மீண்டும் மீண்டும் பல கட்டுரைகளில் இடத் தேவை இல்லை. நன்றி. --இரவி (பேச்சு) 07:08, 20 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

முன்னதாக திட்டத்தின் பக்கத்தில் இருந்த தலைப்புகள் தற்போது காணப்படவில்லை[தொகு]

முன்னதாக இருந்த தலைப்புகளின் பட்டியலில் தமிழில் எழுதப்படாத தமிழ்த் திரைப்படங்கள் தொடர்பான ஆங்கில கட்டுரைகள் நிறைய இருந்தன. தற்போதுள்ள பட்டியலில் அப்படிப்பட்ட தலைப்புகளைக் காண இயலவில்லை. புதிதாக விக்கியில் எழுத வருபவர்களுக்கு ஆழ்ந்த பொருளுள்ள கட்டுரைகள் இல்லாமல் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளை மொழிபெயர்ப்பது எளிதான வேலையாக இருந்தது. தற்போதுள்ள பட்டியலில் அப்படிப்பட்ட ஆங்கில விக்கியில் உள்ள, தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத தமிழ் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகள் காணவில்லை. இதை சரிசெய்யவும்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 14:24, 21 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

பயிர்[தொகு]

விரிவாக்கம் 160 சொற்களுக்கு மேல் செய்யப்பட்டுள்ளது. எனவே ஏறகவும்.ஆறுமுகி (பேச்சு) 15:06, 22 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

புத்தாக்கம்[தொகு]

கட்டுரையில் விடுபட்ட ஆங்கிலப் பகுதி தமிழாக்கத்தை முடித்துவிட்டேன். எனவே, கட்டுரையை ஏற்கலாம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:10, 2 சனவரி 2020 (UTC)[பதிலளி]

போட்டி விதிமுறை குறித்து[தொகு]

வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டி குறித்து சமூகத்தின் கருத்தைக் கோரியுள்ளனர். போட்டியில் கால அளவை நீட்டிப்பது மற்றும் பஞ்சாபியரின் குபீர் கட்டுரை தொடர்பாக கருத்தைத் தெரிவிக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 12:03, 27 திசம்பர் 2019 (UTC)[பதிலளி]

தன்னியக்க மொழிபெயர்ப்பு வாயிலாக மட்டுமே ஒருவர் இவ்வளவு கட்டுரைகளை எழுத முடியும். மேலும் அவரது கட்டுரைகளின் தரம் பற்றி நாம் கூறவியலாது. இக்கட்டுரைகளின் தரம் சார்ந்த மற்ற பஞ்சாபியரின் மதிப்பீட்டையும் அறிந்து இது பற்றிய முடிவெடுக்க வேண்டும். உண்மையில் அக்கட்டுரைகள் தரமாக அமைந்திருந்தால் மட்டுமே ஏற்கவியலும். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:17, 2 சனவரி 2020 (UTC)[பதிலளி]

கட்டுரை இடல்[தொகு]

கட்டுரையிடும் கருவி பயனில் இல்லையென அறிக்கை வருகிறது. என்ன சிக்கல் எனத் தெரிய்வில்லை. எனவே, கட்டுரையைத் திட்டத்தில் இட முடியவில்லை.ஆறுமுகி (பேச்சு) 05:23, 7 சனவரி 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், தட்டச்சிடப்படும் கட்டுரைகளை பதிவிட முடியவில்லை. பதிவினை ஏற்கும் அளவிற்கு கருவியைச் சரி செய்ய ஆவன செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:06, 7 சனவரி 2020 (UTC)[பதிலளி]

--உழவன் (உரை) , நீச்சல்காரன் (பேச்சு) Fountain கருவியைக் காணவில்லை. கட்டுரைகளைப் போட்டிக்கு எப்படி பதிவது. மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா? உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:34, 8 சனவரி 2020 (UTC)[பதிலளி]

@ஆறுமுகி, பா.ஜம்புலிங்கம், and உலோ.செந்தமிழ்க்கோதை: கருவியினைச் சரி செய்ய கேட்டுள்ளோம். நீங்கள் தொடர்ந்து கட்டுரையினை எழுதுங்கள் கருவி சரியானதும் மொத்தமாக சம்ர்ப்பித்துக் கொள்ளலாம். காலநீட்டிப்பு இருந்தால் இங்கு தெரிவிக்கப்படும். நன்றி ஸ்ரீ (✉) 09:47, 8 சனவரி 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், ஸ்ரீ, தகவல் அறிந்தேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:50, 8 சனவரி 2020 (UTC)[பதிலளி]
வணக்கம், ஸ்ரீ, தகவல் அறிந்தேன். நன்றி. ஆறுமுகி (பேச்சு) 15:50, 8 சனவரி 2020 (UTC)[பதிலளி]

வணக்கம், தற்போது பவுண்டன் கருவி செயல்படுகிறது. தகவலுக்காக. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:33, 10 சனவரி 2020 (UTC)[பதிலளி]

தார் கட்டுரை[தொகு]

பயனர்:Waytonanda தார் நகரம் என்ற கட்டுரையை மொழிபெயர்த்து சேமிக்கும் பொழுது அது தார் கட்டுரையுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. எனவே தார் கட்டுரையை மீட்டுள்ளேன். கருவியில் நான் மீளமைத்த கட்டுரையே இருக்கிறது. தற்பொழுது கருவி கட்டுரையை ஏற்காததால், யார் மதிப்பிட்டாலும் தார் கட்டுரைக்குப் பதிலாக தார் நகரம் கட்டுரை அவருடைய எண்ணிக்கையில் கணக்கில் வைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:47, 12 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு[தொகு]

விக்கித்தரவு இணைக்கப்பட வேண்டும் என்பது போட்டியின் விதிகளுள் ஒன்று. அவ்விதம் இணைக்கப்படா கட்டுரைகளை என்ன செய்யலாம்? அதற்கான நுட்பம் உள்ளதா? அல்லது அத்தலைப்புகளை போட்டியில் இருந்து, நீக்கி விடலாமா?--உழவன் (உரை) 04:38, 15 சனவரி 2020 (UTC)[பதிலளி]

நீக்க வேண்டாம். நாம் அதற்கான பணிகளை மேற்கொள்வோம். அந்த பட்டியல்களைக் கொடுத்தால் நலம்.நன்றிஸ்ரீ (✉) 14:31, 15 சனவரி 2020 (UTC)[பதிலளி]
சரிங்க. சிறீதர். பிறரின் பின்னூட்டங்களுக்காகக் காத்திருப்போம். குறிப்பாக, பிற நடுவர்களின் கருத்தினையும் அறிவோம்.@Balajijagadesh, Dineshkumar Ponnusamy, Parvathisri, and கி.மூர்த்தி:--உழவன் (உரை) 01:28, 16 சனவரி 2020 (UTC)[பதிலளி]
நீக்க வேண்டாம். பட்டியலிருப்பின் அனைவரும் கூட்டாக இணைக்கலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:54, 16 சனவரி 2020 (UTC)[பதிலளி]
விக்கிதரவுகள் இல்லாத கட்டுரை 58. அதனை இங்கு காணலாம். இதற்கு இணையான வேறு மொழி கட்டுரைகள் இல்லையென்றால் புதிய விக்கித்தரவு உருப்படியை உருவாக்கிக் கொள்ளலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:13, 16 சனவரி 2020 (UTC)[பதிலளி]

:::@ பாலாஜி, தரவுப் பக்கத்தில் சில கட்டுரைகளை இணைத்த பிறகும் இது மாறவில்லை, எவ்வாறு புதிய பட்டியலை கண்டறிவது? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:16, 16 சனவரி 2020 (UTC) இப்போது சரியாக வருகிறது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:36, 16 சனவரி 2020 (UTC)[பதிலளி]

கொடுக்கப்படாத தலைப்புகள்[தொகு]

வணக்கம். நண்பர் பாலு தவறுதலாக பத்மபூசன் எனும் கொடுக்கப்படாத தலைப்புகளின் கீழ் சில கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றை என்ன செய்யலாம் என்பதற்கான அனைவரது கருத்துக்களைப் பதிவு செய்யவும் . போட்டி முடிவுகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்க வேண்டி இருப்பதனால் இதற்கான தங்களது கருட்துக்களை பதிவு செய்யவும். நன்றி ஸ்ரீ (✉) 03:55, 16 சனவரி 2020 (UTC)[பதிலளி]

தரமான கட்டுரைகளாயின், போட்டியில் சேர்த்துக்கொள்ளலாம்.--நந்தகுமார் (பேச்சு) 04:12, 16 சனவரி 2020 (UTC)[பதிலளி]
கூகுள் பரிந்துரைக்கும் தலைப்புகளில் , மக்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் விருதுபெற்றோர்கள் என நபர்கள் பற்றிய பரிந்துரைகள் இருக்கின்றன. எனவே அப்பகுப்புகளில் இவற்றை இணைக்கலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:59, 16 சனவரி 2020 (UTC)[பதிலளி]
 எதிர்ப்பு //கீழ் சில கட்டுரைகளை எழுதியுள்ளார்.// அவை எவை? விதிகளுக்கு உட்படா, அக்கட்டுரைகளை போட்டியில் இருந்து நீக்கலாம்.ஆனால், விக்கியில் பேணலாம். அப்படி நீக்கினாலும், அவர் முதல் இடத்தில் தான் இருப்பார். மற்றொன்று போட்டியில் ஏற்கப்பட்டதாக அறிவித்தல் என்பது, பின்னாளில் நடக்க இருக்கும் போட்டிக்கு, தவறான எடுத்துக்காட்டலாகிவிடும்.--உழவன் (உரை) 00:24, 22 சனவரி 2020 (UTC)[பதிலளி]
முதல் வேங்கைத் திட்டம் நடைபெற்ற போது, நான் உருவாக்கிய நான்கு கட்டுரைகள் என்று நினைக்கிறேன், அவை அப்போதையப் பட்டியலில் இல்லை. அதனை அறியாமல் நான் எழுதியிருந்தேன். அதனை அப்பொழுது நடுவர்களாக செயற்பட்டவர் நீக்கினர். எனவே, அதனைப் பின்பற்றுவது என்றும் நலம் பயக்கும். சமூக உறுதித்தன்மையை காக்கும். இப்போட்டியில், ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட பத்மபூசண் விருது கட்டுரைகளை, போட்டி பட்டியலில் நீக்கஇயலாது. ஆனால், ஏற்க மறுத்தால், அது எதிர்காலத்திற்கு நல்லது. இப்பொழுது ஏற்றால்,அது பேச்சுப் பொருளாக பின்னாளில் மாறும். நானும், சிறீதரும் இதனை ஏற்க மறுத்துள்ளோம். பிற நடுவர்களும் செயற்படக் கோருகிறேன். பேச்சு:நஃபந்தான் என்பதனை நானே உருவாக்கி, பின்னூட்டம் பெற்றேன். அதில் 6 நண்பர்கள் ஏற்றாலும், 4நண்பர்களே மறுத்தனர். இருப்பினும் சமூகநலன் கருதி, அவற்றை போட்டியில் இருந்து நீக்கி உள்ளேன். எனவே, செயற்பட தயங்காதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 01:38, 23 சனவரி 2020 (UTC)[பதிலளி]

விரிவு படுத்தா கட்டுரைகள்[தொகு]

300 சொற்களைக் கொண்டு விரிவு படுத்தாத பல கட்டுரைகளை ஏற்கப்பட்டதாகப், போட்டி நடுவர்களால் தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றினை இனங்கண்டறிவது கடினமான பணி. எடுத்துக்காட்டு, காந்தி ஜெயந்தி. அவற்றினை என்ன செய்யலாம்? அறிவிப்பு தந்தும் விரிவுபடுத்தாதக் கட்டுரைகளைப் போட்டியில் இருந்து நீக்கலாமா?@Neechalkaran: அக்கடினத்தினை நீக்க நுட்ப வழிகாட்டுதலை, விக்கியிலேயே அமைக்க இயலுமா? பைத்தான் வழி அமைத்தாலும், அதனை அனைவரும் பயன்படுத்துவது எளிதன்று. யாவாகிறிப்டில் செய்தால் நன்றாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே சொல் எண்ணிக்கைக்கு செய்துள்ளமையால் ஆவலுடன் வினவுகிறேன் --உழவன் (உரை) 00:30, 22 சனவரி 2020 (UTC)[பதிலளி]

பயிற்சிக்கு பஞ்சாபி விக்கிபீடியர்களை அழைத்தல்[தொகு]

அனைவருக்கும் வணக்கம், சென்ற ஆண்டு நடைபெற்ற வேங்கைத் திட்டம் போட்டியில் நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இருந்தபோதிலும், நமது பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் சுமார் 20 பேரை பஞ்சாப்பில் நடைபெற்ற பயிற்சிமனைக்கு அழைத்து, மிகச் சிறப்பான முறையிலும் நட்பு பாராட்டினர். சென்ற முறை அங்கேயே நாம் சொல்லியிருந்தோம், அடுத்த முறை நாங்கள் வெற்றி பெறுவோம் நிச்சயம் நீங்கள் அடுத்தமுறை எங்களது ஊருக்கு வரவேண்டும் எனக் கூறியிருந்தோம். இந்த முறை நாம் அனைவரது பங்களிப்புகளின் மூலமாக வெற்றி பெற்றதாக தகவல் வந்துள்ளது. (அதிகாரப்பூர்வ தகவல் இங்கு ). எனவே நமது பயிற்சியில் அவர்களை அழைப்பது சரியாக இருக்கும் என நம்புகிறேன். தங்களது அனைவரது கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி ஸ்ரீ (✉) 14:42, 10 பெப்ரவரி 2020 (UTC)

 1. கண்டிப்பாக அவர்களை அழைக்க வேண்டும். அது தான் நம் பண்பாடு, culture, பாரம்பரியம் :) --இரவி (பேச்சு) 15:11, 10 பெப்ரவரி 2020 (UTC)
 2. பஞ்சாபிய விக்கிப்பீடியர்கள் அழைப்பது அவசியம். அது நமக்குள்ள கடமை.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:36, 10 பெப்ரவரி 2020 (UTC)
 3. ஆம். அவர்களை அழைப்பதே முறை.--பாஹிம் (பேச்சு) 16:42, 10 பெப்ரவரி 2020 (UTC)
 4. சென்னை வந்த சில பஞ்சாபியருடன் உரையாடிய போது, அவர்கள் வாழ்நாளில் முதன்முதலில் பெருங்கடலைப் பார்த்து வியந்ததை அறிய முடிந்தது. எனவே, வருவோர் விருப்பம் அறிந்து நிகழ்விடம் அமைத்தல், இன்னும் சிறப்பாக அமையும். அவர்கள் கலாச்சார இடத்திற்கு சென்றது போல, நாமும் நமது பண்பாடுகளைக் காட்ட விருப்பம். நான் சென்ற, பல இந்திய விக்கிப் பயணங்களில் மிகச்சிறப்பாக அமைந்தது, அவர்களின் விருந்தோம்பலே என்பதால் இந்த முன்மொழிவைக் கூறுகிறேன்.--உழவன் (உரை) 02:39, 11 பெப்ரவரி 2020 (UTC)
 5. பஞ்சாபி விக்கியர்களை அழைப்பதில் எனக்கும் பெருவிருப்பம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:42, 11 பெப்ரவரி 2020 (UTC)
 6. பஞ்சாப் விக்கிப்பீடியர்களை அழைக்கலாம் --பாலசுப்ரமணியன் (பேச்சு) 08:17, 11 பெப்ரவரி 2020 (UTC)
 7. இன்னும் திட்டமிடலும், நிதி ஆதாரமும் உறுதி செய்யப்படவில்லை. இதுவரை பயிற்சிபெறாத தமிழ் விக்கிப்பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கவே விரும்புகிறேன். ஆனால் போதிய நிதி ஆதரவு இருந்தால் (தமிழும் பஞ்சாபியும் ஏற்கனவே வளர்ந்த சமூகம் என்றதனடிப்படையில்) பஞ்சாபியர்களை மட்டும் அழைக்காமல் அனைத்து மொழியில் முதலிரண்டு இடம் பெற்ற அனைவரையும் அழைக்கலாம் என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:38, 19 பெப்ரவரி 2020 (UTC)

--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:18, 28 பெப்ரவரி 2020 (UTC)

ஊடக வெளியீடுகள்[தொகு]

599 (629) மற்றும் 217 (270)[தொகு]

வணக்கம், சிரமப்பட்டு போட்டியில் கலந்துகொண்டு ஆர்வமாக ஒவ்வொருவரும் எதிர்நோக்கி நல்ல சாதனை புரிந்துள்ளோம். நல்ல சாதனையை மகிழ்ச்சியாக எதிர்கொள்கின்ற நேரத்தில் " 217 கட்டுரைகள் எழுதியவரைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் 270 கட்டுரைகள் எழுதியுள்ளதாக முன்னணி இதழ்களில் செய்தி தரப்பட்டு உலா வருவதைக் காணமுடிந்தது. அவ்வாறே முதலிடம் பெற்றவர் 629 கட்டுரைகள் எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் எழுதியது 599. அவ்வகையில் பார்க்கும்போது இரு இடங்களில் எண்களில் வேறுபாட்டினைக் காணமுடிகிறது. இந்நிலையில் சில நண்பர்கள் என்னைத்தொடர்பு கொண்டு வேறுபாட்டிற்கான விவரங்களைக் கேட்டு நீங்கள் எழுதியது 260தானா, மூன்றாவது இடம் என்பது உண்மைதானா என்று கேட்டதோடு, என் பதிவின் நம்பகத்தன்மை குறித்து ஐயமாக வினா எழுப்புகின்றனர். என்னைப் பின்னுக்குத் தள்ளி இந்த எண் (270) வந்ததைப் பற்றி விசாரித்து வருகின்றனர். அரிய சாதனை படைத்த நாம், இந்த வேறுபாடு குறித்து எழுதி பயனர்களையும், பொதுமக்களையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். இதனைப்பற்றி ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பிடுவது அவசியம் எனும் நோக்கில் என் வலைப்பூவில் பதிகிறேன். நண்பர்கள் தம் கருத்துக்களை அதில் பதிவு செய்ய வேண்டுகிறேன். முன்னணியில் நின்று எண்ணிக்கை உயர உழைத்த அனைவருமே ஊக்குவிக்கப்படவேண்டும். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், உடன் எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:39, 25 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம் ஐயா, இது குறித்து மேலும் தெளிவாக எந்தெந்த இதழ்களில் செய்தி வந்துள்ளது எனவும் குறிப்பிடுங்கள். வலைப்பூக்களிலோ, முகநூலிலோ இது குறித்து பதிய வேண்டாம். நடுவர்கள் பதிலளிப்பார்கள். நன்றி -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:46, 25 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம், சகோதரன் ஜெகதீஸ்வரன். நீங்கள் கேட்ட இணைப்புகளில் சிலவற்றினைக்கீழே தந்துள்ளேன்.

 • பிபிசி தமிழ் : “……270 கட்டுரைகள் என….899 கட்டுரைகளைப் படைத்துள்ளனர்.” (விக்கிப்பீடியா : இந்தி, சம்ஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம், பிபிசி தமிழ், 21 பிப்ரவரி 2020, https://www.bbc.com/tamil/india-51582172)
 • பிபிசி நியூஸ்தமிழ் யு ட்யூப் : “……270 கட்டுரைகள் என…” (தமிழ் எப்படி சாத்தியமானது? பிபிசி நியூஸ்தமிழ் யு ட்யூப், 21 பிப்ரவரி 2020, https://www.youtube.com/watch?v=rFoLHAQcaNs)
 • ஒன்இந்தியாதமிழ் : “……270 கட்டுரைகளை எழுதியுள்ளார்…..ஆக மொத்தம் 899 கட்டுரைகளைச் சமர்ப்பித்து…. ” (விக்கிப்பீடியா, கூகுள் நடத்திய போட்டி..இந்தி உட்பட பிற இந்திய மொழிகளை வீழ்த்தி தமிழ் முதலிடம், ஒன்இந்தியா தமிழ், 21 பிப்ரவரி 2020, https://tamil.oneindia.com/news/chennai/tamil-wins-in-a-competition-held-by-the-google-and-wikipedia-377743.html)
 • The Hindu : “…and his wife....have contributed a total of 899 articles” (Tamil bags first place in online contest, The Hindu, 24 February, 2020, https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-bags-first-place-in-online-contest/article30898887.ece)

இதுதொடர்பாக முகநூலிலோ, என் வலைப்பூவிலோ பதியமாட்டேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:08, 25 பெப்ரவரி 2020 (UTC)

@Parvathisri:, @Info-farmer:,@Balajijagadesh: தங்களின் கவனத்திற்கு.. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:25, 25 பெப்ரவரி 2020 (UTC)
வணக்கம்@பா.ஜம்புலிங்கம்:
 1. \\ இரு இடங்களில் எண்களில் வேறுபாட்டினைக் காணமுடிகிறது\\ உண்மைதான். இந்தச் செய்தியினை தொலைபேசி மூலமாக கட்டுரை எண்ணிக்கையினை தெரிவித்த போது இது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டது. டூ செவன்டீன் என்பது டூ செவன்டி என்பதாக புரிந்துகொள்ளப்பட்டது என்பதாக தகவல் அறிந்தேன். பாலு அவர்கள் எழுதிய கட்டுரை எண்ணிக்கை வேறு ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்னிக்கை வேறு எனவே அந்த எண்ணிக்கையில் இந்த குழப்பம் ஏற்பட்டது. {மேலே உள்ள கொடுக்கப்படாத தலைப்புகளைக் காணவும்)
 2. //என் பதிவின் நம்பகத்தன்மை குறித்து ஐயமாக வினா எழுப்புகின்றனர். என்னைப் பின்னுக்குத் தள்ளி இந்த எண் (270) வந்ததைப் பற்றி விசாரித்து வருகின்றனர்.// வருந்துகிறேன். அவர்களுக்கு இந்தப் பக்கத்தினை அறியத் தந்து அவர்களின் ஐயங்களைப் போக்கவும்.
 3. //இந்த வேறுபாடு குறித்து எழுதி பயனர்களையும், பொதுமக்களையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.// ஏற்கனவே நாம் சில ஊடகங்களில் தகவலைக் கொடுத்த போது மேற்குறிப்பிட்ட பக்க இணைப்பினையும் சேர்த்தே வெளியிட்டுள்ளார்கள். எனவே அவர்கள் தேவைப்படின் அந்த இணைப்பில் சென்று காணலாம்.
 4. //முன்னணியில் நின்று எண்ணிக்கை உயர உழைத்த அனைவருமே ஊக்குவிக்கப்படவேண்டும்.// இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர்களை செம்மயாக சிறப்பு செய்வோம். என்போன்றோருக்கு தங்களது வழிகாட்டலையும் எதிர்பார்க்கிறோம்.

தங்களது கருத்திற்கு நன்றி.ஸ்ரீ (✉) 15:59, 25 பெப்ரவரி 2020 (UTC)

நன்றி. பயனர்:Jagadeeswarann99, பயனர்:பா.ஜம்புலிங்கம் பயனர்:ஞா. ஸ்ரீதர். இதுபோல இனி நடக்காமல் இருக்க, நாம் பின்வரும் முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என முன்மொழிகிறேன். பொதுவாக ஊடகங்களுக்கு தர வேண்டிய செய்திகளை இங்கேயே, முன்கூட்டியே எழுதி வைத்துத் தருதல் சிறப்பாகும். யார் எப்பொழுது வினவுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது அல்லவா? மேலும், ஊடகவியலாளர் வினவும் அனைத்தையும், பதிப்பிக்க மாட்டார்கள். மற்றொன்று, சூழ்நிலைக்கு ஒப்ப பவுன்டன் கருவியை இப்படி பயன்படுத்துங்கள் என்று கூறினேன். ஏனோ நடுவராக இருக்கும் சிலர் அதை ஏற்க மறுத்தனர். அதுவும் கவனிக்கத் தக்கது. எனவே, பவுன்டன் கருவி இன்னும் வளர, அது குறித்த பின்னூட்டங்களைத் தர வேண்டும். சில மேம்பாடுகள் பவுன்டன் கருவிகள் இருப்பின், எழுதிய கட்டுரை; ஏற்றக் கட்டுரை எண்ணிக்கை வேறுபாடு வராது. “இனி ஒரு விதி செய்வோம்; அதனை எந்நாளும் காப்போம்.” --உழவன் (உரை) 01:17, 26 பெப்ரவரி 2020 (UTC)
பதினாறாமாண்டுக் கொண்டாட்டத்தை ஊடகங்களுக்கு அலுவல்பூர்வமாக அனுப்ப முயன்றோம் ஆனால் நடக்கவில்லை. இந்த நிகழ்விலும் அலுவல்பூர்வ அறிவிப்பு என்று சி.ஐ.எஸ்ஸும் ஊடகங்களுக்கு அனுப்பவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவும் ஊடகங்களுக்கு அனுப்பவில்லை. ஊடகத்தில் இதுகுறித்து செய்தியைப் பரப்ப வேண்டும் என்று பல விக்கிப்பீடியர் விரும்பினர். சி.ஐ.எஸ். அறிவிப்பதற்கு சில நாள் முன்னர் தகவலையாவது கொடுங்கள் தமிழ் விக்கிசார்பாகவாவது செய்தியைப் பரப்புகிறோம் என்றோம். ஆனால் சி.ஐ.எஸ் அறிவிப்பை மின்னஞ்சலுடன் நிறுத்திக் கொண்டனர். தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து மேல்விக்கியில் வெற்றியை 19 அன்று அறிவித்தனர். தாய்மொழி நாளையொட்டி எனது தனிப்பட்ட தமிழ்ச்சரம் தளத்தின் வெளியீட்டுப் பணியில் கவனம் செலுத்தியதால் ஜனவரியில் எழுதிவைத்த ஒரு செய்திக் குறிப்பை எனது முகநூலில் வெளியிட்டேன். சர்வதேசத் தாய்மொழி நாளுக்கு முன்னர் ஊடகங்களுக்குச் செல்லவேண்டும் என்பதால் முகநூல் படியை எடுத்து தொடர்பிலுள்ள ஊடக நண்பர்களுக்கு அனுப்பினேன். முதல் நோக்கம் வெற்றிச் செய்தியை அறிவிப்பது, நூறு கட்டுரை மேல் எழுதியவர்களை கௌரவிப்பது, எதிர்காலப் பயனர்களை உள்ளிழுப்பது என்பது மட்டுமே. ஊடகங்களில் வருமா என்றே தெரியாமல் மற்றவர்களிடம் தொடர்புகள் கேட்டே செய்தி அறிக்கை அனுப்பினேன். மொத்தக்கட்டுரை எண்ணிக்கை 2942 என்கிறது சி.ஐ.எஸ்., 2929 என்கிறது பவுண்டைன், போட்டி நிறைவுற்ற காலத்தில் 2959 அடிப்படையில் செய்திகள் வந்துவிட்டன. 629 போட்டி நிறைவு செய்த காலத்தில் உள்ள எண். மதிப்பிடல் முடிந்த பின்னர் 599 ஆக எண்ணிக்கை மாறியுள்ளது. 62 பயனர்கள் என்று செய்தி வந்துவிட்டது ஆனால் 62 என்பது பயனர்பெயர், 61 தான் பயனர்கள், அதில் 60 பயனர்கள் தான் சரியாக எழுதினர். இது போல பிறமொழிகளின் கட்டுரை எண்ணிக்கையிலும் மாற்று எண்ணிக்கையினை அவர்கள் வைக்கிறார்கள். இன்னும் சில எண் முரண்கள் உள்ளன. அந்த மாதிரி 217 என்பது 270 ஆக உரையாடல் கவனக்குறைவில் நிகழ்ந்திருக்கலாம். இப்படிப் பிழைகள் வரும் எனக் கணிக்கவில்லை அதற்கும் முன்னர் இப்படி ஊடகக் கவனம் வரும் என்றும் கணிக்கவில்லை. இதில் எனது பிழை உள்ளது. அதனால் தான் பின்னர் பெரும்பாலான ஆங்கில ஊடகங்களுக்குச் செய்தியை அனுப்பவில்லை. பலரது படங்கள் அனுப்பியும் எந்த ஊடகங்களும் வெளியிடவில்லை இயன்றவரை அனைவரையும் ஊக்கப்படுத்தவே முயல்கிறோம். அதனால் இந்தப் படிப்பினையை ஆக்கப்பூர்வமாகக் கொண்டு அடுத்த நிகழ்வுகளில் கையாளுவோம். போட்டியில் எழுதாமல் கூட துணை நின்றவர்கள் பலர் உள்ளனர். எனவே ஒரு நிகழ்வின் செய்தியால் யாரையும் குறைத்தோ உயர்த்தியோ எண்ணவேண்டாம். இறுதியில், யாரும் ஊடகங்களுக்காக எழுதவில்லை. நமது ஆர்வத்தில்தான் விக்கிப்பீடியாவில் எழுதுகிறோம் அதனால் ஊடகச் செய்தியின் அடிப்படையில் பங்களிப்பு ஊக்கத்தைத் தீர்மானிக்க வேண்டாம் என நினைக்கிறேன். விக்கிப்பீடியாவே பெரிய ஊடகம் தான்.-நீச்சல்காரன் (பேச்சு) 04:18, 26 பெப்ரவரி 2020 (UTC)
ஊடகங்கள் வேங்கைத் திட்டத்தினைப் பற்றி நன்முறையில் செய்தியாக வெளியிட்டன. மொழிகளிடையே முதன்மை பெற்றது அவர்களுக்கு உந்துதலாக இருந்திருக்கலாம். பரவலாக மக்களை விக்கி சென்றடைய இச்செய்திகள் ஒரு கருவியாக இருந்ததை காண முடிந்தது. பெரும் இலக்கு நோக்கி பயணிக்கும் போது இது போல சிறுசிறு இடர்களை வழமை போல களைந்து செல்வோம். ஐயா ஜம்புலிங்கம் அவர்களே.. தேவை ஏற்படின் ஊடக செய்திகளில் மனித தவறின் காரணமாக இது போன்ற எண் குளறுபடிகள் நடந்தேறின என நண்பர்களிடம் எடுத்துரையுங்கள். பங்களிப்பை தொடர்ந்திடுங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:10, 27 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம், @Jagadeeswarann99:, @ஞா. ஸ்ரீதர்:, @Info-farmer:, @Neechalkaran:. உங்கள் அனைவருக்கும் என் நன்றி. உங்களுடைய மற்றும் பிற விக்கிப்பீடியா நண்பர்களின் ஒத்துழைப்புடன் வழக்கம்போல் தொடர்ந்து பங்களிப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:18, 28 பெப்ரவரி 2020 (UTC)

பிற[தொகு]

--உழவன் (உரை) 01:06, 7 மார்ச் 2020 (UTC)

வேங்கைத்திட்டம் 2.0 (2019) போட்டிக்குப் பிந்தைய நிகழ்வுகள்[தொகு]

இப்போட்டியில் தமிழ் விக்கிப்பீடியா இந்திய அளவில் முதலிடம் பெற்றது. இது தொடர்பான வெற்றிவிழா அல்லது பயிற்சி நல்கை ஆகியவை கொரோனா பெருந்தொற்று காரணமாக இதுவரைப் பேசப்படாமல் (அல்லது நிதி நல்குகை தொடர்பான சிக்கல்கள் ஏதும் இருந்தனவா?) இருந்தது. தற்போது இது தொடர்பான ஒரு உரையாடலைத் தொடங்கலாம் எனக் கருதுகிறேன். நாம் வெற்றி பெற்றதன் பயனைத் துய்க்க இது உகந்த நேரம் அல்லவா? (கொரோனா தீ நுண்மித்தாக்கம் குறைந்துள்ளதால்) தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகள் இது குறித்து பங்களிப்பாளர்களின் கருத்துகளைப் பெற்று ஒரு முன்முயற்சியைத் தொடங்கலாம் எனக் கருதுகிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 11:50, 5 மார்ச் 2022 (UTC)

சிஐஎஸ் ஆனந்திடம் நினைவூட்டியுள்ளேன். விரைவில் பதிலளிப்பதாகச் சொல்லியுள்ளார். -நீச்சல்காரன் (பேச்சு) 12:03, 5 மார்ச் 2022 (UTC)
தொற்றின் காரணமாக இந்த இரண்டாவது வேங்கைத் திட்டத்தின் கணக்குவழக்குகளை முடித்துவிட்டனராம். எனவே அடுத்த வேங்கைத் திட்டத்திலோ அல்லது வேறு வகையிலோ திட்டமிடலாம் என்று சிஐஎஸ் தரப்பில் பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக அடுத்த வாரத்தில் ஒரு இணையவழிச் சந்திப்பை நிகழ்த்தவுள்ளனர். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களும் அந்த உரையாடலில் உள்ளனர். இணைப்பு வந்தவுடன் இங்கே பகிர்கிறேன் மற்றவர்களும் இணையலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 04:52, 7 ஏப்ரல் 2022 (UTC)
இணையவழிச் சந்திப்பு குறித்து நினைவூட்டல் அனுப்பியுள்ளேன். அண்மையில் விக்கிமீடிய அறக்கட்டளை தன்வீருடன் நடந்த உரையாடலில் என்ன மாதிரியான பயிற்சிகள் தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் தேவை என்ற ஒரு பரிந்துரையினைக் கேட்டார். பொதுவான பரிந்துரைகளை அனைவரும் வழங்கலாம். பின்னர் ஒரு கருத்துக் கேட்பின் மூலம் வரிசைப்படுத்தி, பரிந்துரையாக முன்வைக்கலாம் என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:30, 25 மே 2022 (UTC)[பதிலளி]
 1. விக்கித்தரவில் QUERY பயன்படுத்துவது குறித்தான பயிற்சி.
 2. விக்கிமூலத்தில் பைத்தான் பயன்பாடு.
ஸ்ரீதர். ஞா (✉) 15:28, 25 மே 2022 (UTC)[பதிலளி]
 1. விக்கிப்பீடியாவில் புதிய தகவல் பெட்டிகள் உருவாக்கம், வார்ப்புருக்கள் உருவாக்கம், மேற்கோள்களில் ஏற்படும் பிழைகள் நீக்கம் --TNSE Mahalingam VNR (பேச்சு) 00:47, 26 மே 2022 (UTC)[பதிலளி]
எனது சில பரிந்துரைகள் விக்கி பரப்புரை செய்தல், விக்கிக் கொள்கைகள், உள்ளடக்க உருவாக்கம், மேம்பட்ட மொழிபெயர்ப்பு, எழுத்துப் பிழையின்றி எழுதுதல், பயனுள்ள பயனர் கருவிகள், விக்கி ஏபிஐ, விக்கி வார்ப்புருக்கள் போன்றவற்றிற்குப் பயிற்சியளிக்கலாம். இது தொடர்பாக வரும் ஞாயிறு மாலை இணையவழிச் சந்திப்பிற்கு சிஐஎஸ் அழைத்துள்ளனர். இணைப்பு வந்தவுடன் பகிர்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 01:46, 26 மே 2022 (UTC)[பதிலளி]
வரும் ஞாயிறு மே 29 மாலை 7 மணியளவில் meet.google.com/byt-nnsx-adz இணையவழியில் சிஐஎஸ்சுடன் முதல்கட்ட கலந்துரையாடல் நிகழவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்க. -நீச்சல்காரன் (பேச்சு) 04:04, 27 மே 2022 (UTC)[பதிலளி]