பயனர் பேச்சு:சுப. இராஜசேகர்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பயனர் பேச்சு:Mereraj இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பங்களிப்பாளார்[தொகு]

வணக்கம் செம்மைப்படுத்துதல் இரண்டாம் காலாண்டில் பங்களித்துவருவதற்கு நன்றிகள். நீங்கள் திட்டப் பக்கத்தில் பங்களிப்பாளர் என்பதில் உங்களது பெயரை பதிவு செய்தால் உதவியாக இருக்கும் நன்றி. ஸ்ரீதர். ஞா (✉) 12:59, 8 ஏப்ரல் 2023 (UTC)Reply[பதில் அளி]

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

பதக்கம்[தொகு]

செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் சுப. இராஜசேகர், செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு 39 கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர்

ஸ்ரீதர். ஞா (✉) 15:40, 2 சூலை 2023 (UTC)Reply[பதில் அளி]

செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது![தொகு]

வணக்கம்.

அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!

திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.

  • சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.

-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்

விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு[தொகு]

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)

- ஒருங்கிணைப்புக் குழு