பாப்பாபட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாப்பாபட்டி (Pappapatti), தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த பாப்பாபட்டி ஊராட்சியில்[1] உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது உசிலம்பட்டி வட்டத்தின் வாலாந்தூர் உள்வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் ஒன்றாகும்.[2] பாப்பாபட்டி கிராம ஊராட்சியின் தலைவர் பதவி பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

வட்டத் தலைமையிடமான உசிலம்பட்டியிலிருந்து 10 கிமீ தொலைவிலும்; மாவட்டத் தலைமையிடமான மதுரையிலிருந்து 36 கிமீ தொலைவில் பாப்பாபட்டி கிராமம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 459.77 ஹெக்டர் பரப்பளவும், 356 வீடுகளும் கொண்ட பாப்பாப்பட்டி கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 1,359 ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் சமூத்தினர் 407 ஆகவுள்ளனர். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
  2. உசிலம்பட்டி வட்டத்தின் பிர்க்காக்களும், 54 வருவாய் கிராமங்களும்
  3. Pappapatti Population 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பாபட்டி&oldid=3853465" இலிருந்து மீள்விக்கப்பட்டது