குப்தர்களின் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குப்தர்களின் அமைச்சரவை மந்திரி பரிசத் அன அழைக்கப்பட்டது. இந்த அவையின் ஆலோசனைப்படியே குப்த அரசர்கள் நிர்வாகம் செய்து வந்தனர்.அரசியல் அறிவும், படைத்திறனும்,நன்னடத்தையும் கொண்டவர்கள் மட்டுமே அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அரசின் அனைத்து முடிவுகளும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டாலும் அர்சனின் கையொப்பம் பெற்ற பின்னரே அவை செயலாக்கம் பெற்றன. இந்திய வரலாற்றில் குப்தர்களின் ஆட்சிக்காலமே பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிறது.

அமைச்சரவையின் உட்கூறுகள்[தொகு]

  • அமாத்தியா என்றழைக்கப்படும் அலுவலர்அமைச்சரவைக்கும் அரசருக்கும் இடையில் தகவல்கள் பரிமாற்றம் செய்பவராக இருந்தார்.
  • சர்வாதியக்‌ஷா என்பவர் மத்திய நிர்வாக மேலாண்மை அலுவலராக இருந்தார்.அவர் அரசின் ஆணைகளை மாநிலங்களுக்கும், மாவ்ட்டங்களுக்கும் அறிவிப்பு செய்யும் அதிகாரியாக செயல்பட்டார்.
  • மகா சேனாதிபதி என்பவர் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆவார்.
  • மகாதண்ட நாயக்கர் என்பவர் தலைமை நீதிபதி ஆவார்.
  • மகா பாலதிகரனா என்பவர் ராணுவ நிர்வாக தலைவர் ஆவார்.
  • தாண்டோபாஷிகா என்பவர் காவல்துறையின் தலைவர் ஆவார்.
  • மகாசந்தி விக்ரகிகா என்பவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார்.
  • மகாபிரதிகாரா என்பவர் அரசமாளிகையின் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் ஆவார்.
  • மகாஷபாட்டலிகா என்பவர் அரச ஆவணப் பாதுகாப்பு மந்திரி ஆவார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்தர்களின்_அமைச்சரவை&oldid=3640117" இலிருந்து மீள்விக்கப்பட்டது