பயனர் பேச்சு:Rabiyathul

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Rabiyathul, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- Chandravathanaa (பேச்சு) 06:45, 1 மே 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்![தொகு]

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)

சான்றிணைத்தல்[தொகு]

வனக்கம் ராபியாத்துள். தங்களின் எலும்பு நோய் கட்டுரையில் மேற்கோள்கள் இல்லாததால் கருவியிலிருந்து நீக்கியுள்லேன். சான்றிணைத்து மீண்டும் கருவியில் ஏற்றவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 20:14, 31 திசம்பர் 2019 (UTC) இப்பதான் கற்கிறேன் விரைவில் அனைத்தையும் செய்யவேன்.--Rabiyathul (பேச்சு) 09:48, 4 சனவரி 2020 (UTC)

விரிவாக்கம்[தொகு]

  • எலும்பு நோய் கட்டுரையில் படங்களையும், மேற்கோள்களையும் இணைத்துள்ளேன். இவைகள் இல்லாததால் @Parvathisri:(பார்வதிசிறீ) வேங்கைத்திட்டத்தில் நீக்கியிருந்தார். தயக்கம் வேண்டாம். தொடர்ந்து எழுதவும். நான் மாற்றங்களை போட்டி முடியும் வரை செய்கிறேன். பிறகு நநாளடைவில் இதுபோல மாற்றங்களை செய்ய நீயும் கற்கலாம். ஊரில் உனது எண் தொடர்பு கிடைக்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பவும். அனுப்புகிறேன். நீதிமன்ற வேலையில் நல்ல முன்னேற்றம். சட்டப்படிப்பு முடித்தமையால், சீனியருடன் உரையாட உதவியாக உள்ளது. விரைவில் EP முடியும்.--உழவன் (உரை) 06:34, 3 சனவரி 2020 (UTC)

jioக்குமாறிட்டேன். --Rabiyathul (பேச்சு) 09:52, 4 சனவரி 2020 (UTC)

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:53, 4 சனவரி 2020 (UTC)

கலப்பின நாய்கள்[தொகு]

en:Whippet -cross dog

en:Jack Russell Terrier-cross dog

en:Scottish Terrier-cross dog

en:Cocker Spaniel-cross dog

en:American Cocker Spaniel

en:Russkiy Toy-cross dog என்பன கலப்பின நாய்கள். இவைகளை மொழிபெயர்ப்புக்கருவியில் இட்டுத்தேடுக. இதில் ஏதேனும் இருந்தால், அக்கருவியே சொல்லும். கூகுள் மொழிபெயர்ப்பை மேம்படுத்தவும். பகுப்பை நாய்கள் எனவும், விக்கித்தரவை அதே இட்டுக்கொள்ளும். சிறிய கட்டுரையாக இருந்தாலும் பரவாயில்லை. இடப்பக்கம் சொற்களின் எண்ணிக்கையைக்காட்டும். அதில் 400 க்கு மேல் காட்டுமாறு வந்தால் மட்டும், பதிப்பிடவும். ஏனெனில், அது தகவற்பெட்டியையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். மேற்கோள் இடுதல் எளிது. அதனை கடைசியாகச் செய்யவும்.--உழவன் (உரை) 02:03, 10 சனவரி 2020 (UTC)

பொய் கொலைத் திமிங்கிலம் தற்போது பவுன்டன் கருவியில் சரியான உரைகளுடன் தெரியும். அப்பிழை வந்தது ஏனெனில், தகவற்பெட்டியினால், அதனை மேம்படுத்தியவுடன் தெரிகிறது. நாளை போட்டி முடிவதால், அதுவரை தகவற் பெட்டியைத்தவிர்க்கவும். எனக்கும் அதுகுறித்த மேம்பாட்டுப் பணி அமையாது.--உழவன் (உரை) 02:29, 10 சனவரி 2020 (UTC)

நன்றி. நாளை இறுதி நாள் என்பதால், எனது முயற்சிகளுக்குப் பிறகு செய்கிறேன். இங்கு விட விக்கிமூலம் எனக்கு எளிது.--Rabiyathul (பேச்சு) 09:42, 10 சனவரி 2020 (UTC)

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020[தொகு]

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:26, 17 சனவரி 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rabiyathul&oldid=2896094" இருந்து மீள்விக்கப்பட்டது