பயனர் பேச்சு:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகுப்பு

தொகுப்புகள்


1

வேண்டுகோள்[தொகு]

வணக்கம்! சென்னை புத்தகக் காட்சி 2015 என்பது போன்று மதுரை புத்தகத் திருவிழா 2015 எனும் தலைப்பில் தனிக்கட்டுரையை எழுத வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:45, 29 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

பாராட்டுகள்...[தொகு]

மணல் தொட்டியை முறையாகப் பயன்படுத்தும் வெகு சிலரில் தாங்களும் ஒருவர்; பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:09, 29 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

மணல்தொட்டியை முழுமையாகப் பயன்படுத்துவதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு: கட்டுரையாக்கத்தில் உங்கள் பங்களிப்புகள் (தொகுப்புகளின் எண்ணிக்கை) மறைக்கப்படுகின்றன. @Selvasivagurunathan m:--Kanags \உரையாடுக 21:44, 29 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

@Kanags: எனக்குப் புரியவில்லை; கூடுதல் விளக்கம் தர இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:49, 29 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

உதாரணமாக, மதுரை புத்தகத் திருவிழா 2015 கட்டுரையாக்கத்தில் அவரது முழுமையான பங்களிப்பு அவரது மணல்தொட்டியில் தான் உள்ளது. இந்த மூன்று தொகுப்புகளும் முதன்மைக் கட்டுரைப் பங்களிப்பில் காட்டப்பட மாட்டாது.--Kanags \உரையாடுக 21:58, 29 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

@Kanags: நீங்கள் சொல்வதை இப்போது புரிந்துகொண்டேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:09, 29 ஆகத்து 2015 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்[தொகு]

SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
மதுரை புத்தகக் காட்சியில் அன்றாடம் கலந்து கொள்கிறேன் என்று வாக்கு நல்கி அவ்வாறே செயல்பட்டு வரும் உங்கள் விக்கியுணர்வு கண்டு மகிழ்கிறேன். உள்ளூர்க்காரர் ஒருவர் அங்கிருப்பது போன்ற தெம்பை வேறெதுவும் தராது. மிக்க நன்றி. இரவி (பேச்சு) 10:12, 1 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 10:12, 1 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:18, 1 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:48, 1 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

--வார்ப்புரு:இந்திய உணவு வகைகள் தொகுக்க இயலவில்லை. எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 6 செப்டம்பர் 2015 (UTC)

இப்பக்கத்தினை முயற்சி செய்யவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:05, 6 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்[தொகு]

SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
சிறந்த வரலாற்றுக் கட்டுரைகளை விக்கிப்படுத்தலுக்கு நன்றி குறிஞ்சி (பேச்சு) 15:03, 20 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:22, 20 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]
விருப்பம்.--Booradleyp1 (பேச்சு) 05:54, 22 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]
:👍 விருப்பம்!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:09, 22 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

வணக்கங்க. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 09:50, 25 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

சேர்த்து விட்டேன் நண்பரே. நன்றி.--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 13:45, 25 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]
அறிமுகத்துக்கு நன்றி. விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்துள்ளோம். சனவரி 2016இல் உங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறும்.--இரவி (பேச்சு) 07:31, 26 அக்டோபர் 2015 (UTC)Reply[பதில் அளி]

தட்சகன்[தொகு]

இங்குள்ள மாற்றங்களை சரிபார்த்து உதவுங்கள். ஒரு பயனர் தகவலை மாற்ற முனைகிறார். --AntanO 10:11, 5 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

ஆசிய மாதம் - விதிகள்[தொகு]

WikipediaAsianMonth-ta.svg

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்:

 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும்.
 • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.

நன்றி --AntanO 06:29, 6 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

ஆசிய மாதம், 2015[தொகு]

WikipediaAsianMonth-ta.svg

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
 • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

---

----- இந்த வார்ப்புருவை தொகுக்க இயலவில்லை--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 07 நவம்பர் 2015 (UTC)

ஆசிய மாதம் - முதல் வாரம்[தொகு]

Asia (orthographic projection).svg

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

 • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
 • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
 • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
 • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
 • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

தலைப்பு மாற்றம்[தொகு]

இலக்கணப்பிழையாய் இருந்ததால், நீங்கள் உருவாக்கிய பௌத்தநாத் என்னும் கட்டுரையின் தலைப்பைப் பௌத்தநாத்து என்னும் தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். உள்ளேயும் திருத்தியுள்ளேன். உங்களுக்கு மறுப்பு இருக்காது என நினைக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 00:18, 10 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்[தொகு]

WikipediaAsianMonth-ta.svg

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
 2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
 3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
 4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

உதவி[தொகு]

சுவாட் பள்ளத்தாக்கு, சுவாட் பள்ளத்தாக்கு இரு கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே உள்ளடக்கங்கள் கொண்டுள்ளன. இரண்டும் ஒன்றிணைக்கப்பட வேண்டியவையா இல்லை வெவ்வேறனவையாக இருக்கலாமா எனக் கூற முடியுமா?--Booradleyp1 (பேச்சு) 16:41, 30 நவம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

==இரண்டையும் ஒன்றினைக்கப்பட வேண்டியவையே---கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 17:00. 30 நவம்பர் 2015 (UTC)

பகுப்பு[தொகு]

துணை பகுப்பு இருக்கும் கட்டுரைகளை அப்பகுப்பின் தாய்ப்பகுப்பிற்கு இணைக்கத் தேவையில்லை. --AntanO 11:38, 8 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

சிறு தொகுப்புகள்[தொகு]

பல பக்கங்களில் ஒரே பகுப்பு அல்லது இணைப்பது போன்ற பணிகளைச் சிறு தொகுப்புகள் என்று குறிக்க வேண்டுகிறேன். இவற்றைத் தானியங்கி கொண்டும் சேர்க்க முடியும். உதவ வேண்டுகிறேன் - @Kalaiarasy, Kanags, Info-farmer, மற்றும் Neechalkaran:--இரவி (பேச்சு) 12:12, 8 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

தானியங்கி மூலம் செய்யக் கூடிய பணிகளை அடையாளம் காண முடிந்தால் உதவ முடியும். ஆனால் எப்படி அவற்றை அடையாளம் காண்பது என்பது புரியவில்லை. நீண்ட காலமாக மிகக் குறைவாகவே பங்களித்து வருவதனால், பல விடயங்கள் மறந்தும் போய் விட்டேன் போலுள்ளது. @Kanags: இன்று KalaiBOT தானியங்கி மூலம் செய்த பணிகள்போன்று, வேறும் பணிகள் இருந்தால் கூறினீர்களென்றால் உதவ முடியும்.--கலை (பேச்சு) 19:01, 8 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்[தொகு]

Asia medal.svg விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:07, 25 திசம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]

வேண்டுகோள்[தொகு]

வணக்கம்! தாங்கள் விக்கிகோப்பைப் போட்டியில் பங்குபற்றிவருவதில் மகிழ்ச்சி... தாங்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து உருவாக்கிய ஊராட்சி ஒன்றியங்கள் பற்றிய கட்டுரைகளை இங்கிருந்து வெட்டி ஒட்டியுள்ளீர்கள் என நினைக்கின்றேன். இவ்வாறு செய்வது Madurai kittu போன்ற பயனர்களின் மனதைப் புண்படுத்துவதாக அமையும். அவர்கள் உருவாக்க நினைத்த கட்டுரைகளை தாங்கள் முந்திக்கொண்டு உருவாக்குவது நன்றன்றென்று என்பது தங்களுக்கே தெரிந்தது. தயவுசெய்து மீண்டும் இது போன்ற செயல்களைச் செய்யமாட்டீர்கள் என நம்புகின்றேன். இது இச்சிறியேனின் வேண்டுகோள் மட்டுமே!. நான் இங்கு குறிப்பிட்டவை உங்கள் மனதைப் புண்படுதுவதாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நிற்கும் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:26, 5 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

--Madurai kittu மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய பயனர் இருவரும் ஒருவரே--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 11:26, 5 சனவரி 2016 (UTC). எனது பயனர் கணக்கில் கிருஷ்ணமூர்த்தி விக்கி தமிழ் எழுத்துப்பெயர்ப்பு வேலை செய்ய மறுப்பதால், Madurai kittu என்ற பயனர் புது பயனர் கணக்கு தொடங்கி அதன் வாயிலாக தமிழ் எழுத்துப்பெயர்ப்பு செய்து, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி என்ற எனது பயனர் கணக்கில் கட்டுரைகள் எழுதுகிறேன்.Reply[பதில் அளி]


எனவே கிருஷ்ணமூர்த்தி கணக்கிற்கு தமிழ் எழுத்துப்பெயர்ப்பு இயக்க வைத்தால், இது போன்ற ஐயங்கள் எழாது என நினைக்கிறேன்.கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 11:26, 5 சனவரி 2016 (UTC).Reply[பதில் அளி]

அறியாமல் கூறியதற்கு மன்னிக்கவும். தாங்கள் தங்கள் பெயரை ஆங்கிலத்திலேயே மாற்றிவிடலாமே. இங்கு சென்று உங்கள் பெயரை மாற்றுவதற்கான வேண்டுகோளை விடுங்கள். நானும் கூட நேற்றைய தினமே எனது பயனர் பெயரை இங்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் மாற்றினேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:18, 5 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஒரு பயனர் இரண்டு கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ் பயனர் பெயர் கொண்டவர்கள் தமிழ் எழுத்துக் கருவியைப் பயனபடுத்த முடியாதா?--Kanags \உரையாடுக 06:59, 5 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

Kanags அவர்களே, எஸ்.பியின் கணக்கில் எழுத்துப்பெயர்ப்பு வேலை செய்ய மறுப்பதாக மேலே கூறியுள்ளார். அவருடைய கணக்கில் ஏதாவது நுட்பப் பிழைகள் இருக்கின்றனவோ தெரியவில்லை. எனினும் அவர் எனக்கு மேலே பதில் தந்த போது தமிழிலேயே தட்டச்சு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:10, 5 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

எழுத்துப்பெயர்ப்புக் கருவி ஒரு சில வேளைகளில் இயங்க மறுப்பது உண்மை. ஆங்கிலப் பயனர் பெயர் கொண்ட எனக்கும் அம்மாதிரி நிகழ்வதுண்டு. அதற்காக, இன்னும் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிப்பது சரியானதா?--Kanags \உரையாடுக 07:18, 5 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

Kanags இன்னும் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிப்பது சரியல்ல என்பதுவே எனது கருத்தும்... எனினும் ஒரு சில காரணங்களுக்காக மட்டும் இன்னொரு கணக்கு வைத்திருக்கலாம் பார்க்க, பார்க்க மற்றும் மாற்றீடான கணக்கு வைத்திருப்பின் அக்கணக்கின் பயனர் பக்கத்தில் இந்த வார்ப்புருவைப் பயன்படுத்த வேண்டும்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:26, 5 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

இவற்றையும் வார்ப்புருக்களாகப் பயன்படுத்தலாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:28, 5 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

உங்களுக்கு இப்போது உங்கள் தமிழ்ப்பெயர்க் கணக்கில் எழுத்துப் பெயர்ப்பு செய்ய முடிகிறதா? முடியும் என்றால் உங்கள் ஒரு கணக்கை முடக்கக் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 06:56, 7 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

--இப்போது NHM Writer உதவியுடன் தமிழில் எழுதுகிறேன் நண்பரே. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் எனது கணக்கில், தமிழ் எழுத்து பெயர்ப்பு இன்னும் இயங்கவில்லை.

பயனர்:Madurai kittu என்ற எனது இரண்டாவது கணக்கை முடக்க கேட்டுக்கொள்கிறன். கிருஷ்ணமூர்த்தி (பேச்சு)

Yes check.svgY ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 11:00, 7 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

ஊராட்சி ஒன்றியங்கள் பற்றிய கட்டுரை ஒன்றில் நான் செய்துள்ள இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 10:30, 10 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஊராட்சி ஒன்றியங்கள் பற்றிய கட்டுரைகளில் மக்கள் வகைப்பாடு என்ற பகுதியில் வரும் தகவலுக்கு உரிய மேற்கோள்கள் தாருங்கள். இல்லையேல் ஊராட்சி கட்டுரைகள் அனைத்தும் நீக்கப்படும் அபாயம் உள்ளது. மேற்கோள்கள் தரப்படாமல் இனிமேல் எழுதப்படும் கட்டுரைகள் நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 10:43, 10 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
இவ்வாறான ஒரே மாதிரியான பெருந்தொகையான கட்டுரைகள் எழுதும் போது வேறு பயனர்களிடம் (ஆலமரத்தடியில்) ஆலோசனை கேட்டு ஒப்புதல் பெற்று எழுதுங்கள். இவ்வாறே ஊராட்சிகள் பற்றிய 10000 கட்டுரைகளை நீச்சல்காரன் எழுதினார்.--Kanags \உரையாடுக 10:50, 10 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
ஒரே மேற்கோள் ஒரு கட்டுரையில் பின்வருமாறு எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 10:53, 10 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கட்டுரையில் தமிழக ஊராட்சி ஒன்றியங்கள் என்ற தாய்ப்பகுப்பை நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 20:06, 11 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆயிரவர் பதக்கம்[தொகு]

ஆயிரவர் பதக்கம்

கிருஷ்ணமூர்த்தி, தங்களின் களைப்படையாத விக்கிப் பங்களிப்பினால் 1000 கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். தங்களின் சிறந்த பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. தங்களிற்கு ஆயிரவர் என்ற பதக்கத்தை தருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மேலும் தங்களின் முனைப்பான பங்களிப்பினால் ஈராயிரவர் ஆவீர்கள் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள் ! -- மாதவன்  ( பேச்சு  ) 13:56, 12 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:11, 12 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 14:41, 12 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:54, 12 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

ஆசிய மாதம் - நிறைவு[தொகு]

WikipediaAsianMonth-en.svg

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

கவனியுங்கள்[தொகு]

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுரைகள் அனைத்திலும் இத்தவறுகள் இடம்பெற்றுள்ளன.--Kanags \உரையாடுக 08:16, 18 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

Geographical Indications in India Edit-a-thon[தொகு]

Hello,

Geographical Indications in India collage.jpg

Sorry for writing in English
CIS-A2K is going to organize an edit-a-thon between 25 and 31 January this year. The aim of this edit-a-thon is creating and improving List of Geographical Indications in India related articles.

We welcome all of you to join this edit-a-thon.
Please see the event and add your name as a participant: meta:CIS-A2K/Events/Geographical Indications in India Edit-a-thon

Feel free to ask if you have question(s).
Regards. --Titodutta (பேச்சு) 20:59, 22 சனவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி!

தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

 • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:44, 2 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்[தொகு]

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தாங்கள் உருவாக்கிய ஊராட்சி ஒன்றியக் கட்டுரைகளைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் விக்கிப்பீடியாவின் தரத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதுபோன்ற பங்களிப்பு விக்கியின் தரக் கட்டுப்பாட்டிலும், கட்டுரை உள்ளடக்கத்திலும் நன்நிலைக்கு கொண்டு செல்லும். தொடர்ந்து செயல்படுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:00, 5 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 04:09, 5 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 04:21, 5 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:33, 5 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:05, 11 பெப்ரவரி 2016 (UTC)Reply[பதில் அளி]

படிமம்[தொகு]

நியாயப் பயன்பாட்டுப் படிமங்களின் மாத்திரம் இங்கு பதிவேற்றுங்கள். ஏனையவற்றை பொதுவகத்தில் பதிவேற்றுங்கள். இந்தியச் சட்டம் 1957, பகுதி 52 இன்படி, இரு பரிமாண வேலைகள் (ஓவியம், செதுக்கல், இன்னும் பல) பதிப்புரிமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பதிவேற்ற வேண்டாம். --AntanO 08:52, 8 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]


--சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் கட்டுரையில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் காட்சிக் கூடத்தின் வெளிப்புறச் சுற்றுச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் புடைப்புச் சிற்பம் ஆகும்.

காட்சிக் கூடத்தின் உட்புறத்தில் உள்ள ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைத் தவிர காட்சிக் கூடத்திற்கு வெளியே உள்ள ஓவியங்கள் மற்றும் ஒரே ஒரு புடைப்புச் சிற்பத்தை புகைப்படம் எடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் மற்றும் வலைதளங்களில் யார் அனுமதியின்றியும் வெளியிடலாம் என்று காட்சிக் கூட நிர்வாகி கூறியதன் பேரில் இவைகளை புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ளேன். இதில் சட்ட மீறல்கள் ஏதுமில்லை. இவைகள் அனைத்தும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்களே. --எஸ். பி. கிருஷ்ணமூர்த்திUser talk:கிருஷ்ணமூர்த்தி 11:52, 8 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

இந்தியச் சட்டம் 1957, பகுதி 52 நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் என்று குறிப்பிடவில்லை. காட்சிக் கூட நிர்வாகி கூறியதை விக்கிமீடியா ஏற்றுக் கொள்ளாது. வேண்டுமானால் Open-source Ticket Request System மூலம் செய்யலாம். --AntanO 15:38, 24 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:10, 27 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்[தொகு]

வணக்கம். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். இவ்வறிமுகத்தை இடுவதற்கு ஏற்பட்ட தாமதத்துக்கு வருந்துகிறேன். தொடர்ந்து வழமை போல் சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 14:50, 30 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

உங்களது முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன். உங்கள் சிறப்பான பங்களிப்புத் தொடர எனது வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 04:03, 31 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]
தங்களைக் குறித்த அறிமுகத்தை முதற்பக்கத்தில் கண்டு மகிழ்வுற்றேன். மிகச் சிறப்பாகவும் மிக விரைவாகவும் கட்டுரைகள் வடிக்கும் தங்கள் முனைப்பும் பங்களிப்பும் தொடர வாழ்த்துகள் !! --மணியன் (பேச்சு) 06:11, 31 மார்ச் 2016 (UTC)Reply[பதில் அளி]

கவனியுங்கள்[தொகு]

வணக்கம், நான் செய்துள்ள இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். இந்தியாவில் உள்ள அனைத்து ஆயிரக்கணக்கான மாவட்டங்களையும் இந்திய மாவட்டங்கள் என்ற தாய்ப் பகுப்பினுள் இட முடியாது. அவற்றை இந்திய மாவட்டப் பகுய்ப்பின் சேய்ப் பகுப்புகளினுள் மட்டுமே சேர்க்க வேண்டும். மொத்தமாக பகுப்பு:இந்திய மாவட்டங்கள் இல் சேய்ப்பகுப்புகள் மட்டுமே இருக்க முடியும். தனித் தனி மாவட்டங்கள் பற்றிய கட்டுரைகளை சேர்க்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 20:28, 1 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கிக்கோப்பை[தொகு]

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:31, 3 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]

கவனியுங்கள் மீண்டும்[தொகு]

உங்கள் கட்டுரை ஒன்றில் நான் செய்துள்ள இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 08:56, 3 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]

தயவுசெய்து தாய்ப்பகுப்பினுள் எல்லாக் கட்டுரைகளையும் இடாது, பொருத்தமான துணைப்பகுப்புக்களினுள் இடுங்கள். நன்றி. --AntanO 00:14, 8 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]

வாழ்த்துகள்[தொகு]

முதற்பக்க அறிமுகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:24, 10 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]

தற்காவல்[தொகு]

Wikipedia Autopatrolled.svg

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும்.--நந்தகுமார் (பேச்சு) 17:35, 17 ஏப்ரல் 2016 (UTC)Reply[பதில் அளி]

உதவி[தொகு]

மகாஜனபதம்-வரைபடத்திலுள்ள ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் மாற்றுவதற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. அதனால் இங்கு உங்கள் கருத்தைத் தெரிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:07, 3 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

இலக்கணம்[தொகு]

உங்களது கட்டுரைகளில் தமிழிலக்கணத்துக்குச் சற்று முக்கியத்துவம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 09:27, 9 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

Participate in the Ibero-American Culture Challenge![தொகு]

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 13:54, 10 மே 2016 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்[தொகு]

Feather Barnstar Hires.png முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 15:20, 4 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

அமைதியான முறையில், கடும் உழைப்பினை தந்துவரும் தங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:22, 4 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:26, 4 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:08, 5 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 16:08, 5 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

உதவி[தொகு]

அய்யா புற்றுப்பாறை என்ற கட்டுரையை சற்று கவனிக்கவும்.--கி.மூர்த்தி 17:44, 8 சூன் 2016 (UTC)

பகுப்பு[தொகு]

தயவுசெய்து பகுப்பிடுதலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பார்க்க en:Wikipedia:Categorization. தாய்ப்பகுப்பு, பிரதான பகுப்பு ஆகியவற்றுக்கு தொடர்பில்லாத கட்டுரைகளை இணைக்க வேண்டாம். இது பற்றி முன்னமும் உங்களுக்கு அறிவிக்கப்பட்டது. பல கட்டுரைகளுக்கு முறையான பகுப்பிடுதலை நான் உட்பட பலர் மேற்கொண்டுள்ளோம். அவற்றைக் கவனித்து செயற்படுங்கள். அல்லது இது தொடர்பில் உரையாடுங்கள். இங்கு நான் பகுப்பாக்கம் செய்ய நீங்கள் தேவையற்று பகுப்புக்களை இணைத்துள்ளீர்கள். இது தேவையற்றதும், வீண் வேலையாகவும் உள்ளது. இனி இவ்வாறு செய்ய வேண்டாம். --AntanO 03:05, 16 சூன் 2016 (UTC)Reply[பதில் அளி]

வெளியிணைப்பு[தொகு]

பல கட்டுரைகளுக்கு இந்த இணைப்பை இணைத்துள்ளீர்கள். இது தேவையற்றது. மகாபாரதம் கட்டுரை போன்ற முக்கிய கட்டுரைகளுக்கு மட்டும் இணைப்பது ஏற்றது. --AntanO 02:06, 13 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

பொருத்தமற்ற வெளி இணைப்புக்களைத் தவிர்க்கவும். விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் --AntanO 01:50, 22 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

பஞ்சாப் மாத வார்ப்புரு[தொகு]

இந்த வார்ப்புரு {{பஞ்சாப் மாதம் 2016|created=yes}} பேச்சுப் பக்கத்தில் இடுமாறு வேண்டுகின்றேன். கட்டுரைப் பக்கத்தில் இட வேண்டாம்.--மணியன் (பேச்சு) 22:09, 16 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்[தொகு]

2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 17:15, 20 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம் அன்போடு வாழ்த்தும் Heart.pngஅன்புமுனுசாமி 18:05, 20 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம் தொடர்ந்து எழுத அன்புடன் வாழ்த்துகிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 12:15, 21 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]
வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 13:50, 21 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]
வாழ்த்துகள். --மதனாகரன் (பேச்சு) 08:13, 22 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]
வாழ்த்துகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:49, 22 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்[தொகு]

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கிக்கோப்பை 2016[தொகு]

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்[தொகு]

2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்[தொகு]

Wikicup ta (first).png விக்கிக்கோப்பை வெற்றியாளர்
தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இம்முயற்சியின் ஊடாக 453 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது வியப்புக்குரிய சாதனை ஆகும் ! தங்களின் இத்தகைய தொடர் பங்களிப்புகள் மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. நன்றி. --இரவி (பேச்சு) 09:40, 31 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் --AntanO 10:07, 31 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:36, 31 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:22, 31 சூலை 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:55, 5 ஆகத்து 2016 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:49, 11 ஆகத்து 2016 (UTC)Reply[பதில் அளி]

கட்டுரைகளுக்கான வார்ப்புரு[தொகு]

இத்தொகுப்பு தேவையற்றது. இதற்குப் பதில் ஒரு வார்ப்புருவை உருவாக்கி, தேவையான கட்டுரைகளில் இவ்வாறு இணைக்கலாம். இதனை உதவிப்பக்கத்தில் கேட்டிருக்கலாம். ஏற்கனவே தொகுத்த கட்டுரைகளுக்கு {{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}} வார்ப்புருவைக் கொண்டு மாற்றிவிடலாம். --AntanO 13:53, 1 ஆகத்து 2016 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்[தொகு]

Map of Punjab.png பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 05:09, 16 ஆகத்து 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Rio Olympics Edit-a-thon[தொகு]

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)Reply[பதில் அளி]

சிறு தொகுப்புகள்[தொகு]

இது போன்ற சிறு தொகுப்புகளைச் செய்யும் போது, பக்கத்தைச் சேமிக்கும் முன் சிறு தொகுப்பு என்று குறிக்க வேண்டுகிறேன். இதன் மூலம், அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் குறையும். மற்ற பயனர்களும் தொகுப்புகளைச் சரி பார்க்க வேண்டியிருக்காது. மேலும் விவரங்களுக்கு, https://en.wikipedia.org/wiki/Help:Minor_edit பார்க்கவும். --இரவி (பேச்சு) 18:07, 16 ஆகத்து 2016 (UTC)Reply[பதில் அளி]

உளங்கனிந்த நன்றி![தொகு]

Nelumno nucifera open flower - botanic garden adelaide2.jpg

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2016 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:30, 22 ஆகத்து 2016 (UTC)Reply[பதில் அளி]

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி இணைப்பு இணைப்பதில் விக்கிப்பீடியா வழிகாட்டல்களைக் கவனியுங்கள். ஆங்கில விக்கிப்பீடியா பக்கம் (en:Wikipedia:External links) விபரமாக வழிகாட்டல்களை வழங்குகிறது. செய்தியாக வருவதையெல்லாம் இணைக்கக்கூடாது. மேலும், இவ்வித இணைப்பு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. ஒருபால் திருமணம் குறித்த, ஆங்கில விக்கிப்பீடியா பக்கம் குறிப்பிடுவதுபோல் "Is the site content proper in the context of the article (useful, tasteful, informative, factual, etc.)" இல்லை. அத்துடன் குறிப்பிட்ட சமயப் பிரிவு மீது விமர்சனம் வைப்பது போன்று உள்ளது. வேண்டுமானால், வெளி இணைப்பின் கீழ் முக்கிய மதங்களின் (கிறித்தவம், இசுலாம், இந்து, பௌத்தம்) விமர்சனங்களை பட்டியலிட்டிருந்தால் நடுநிலையாகக் கருதலாம். இவ்வாறான செய்தி, மறைக்கருத்து வழங்கும் வெளியிணைப்புக்களைத் தவிருங்கள். பல சிக்கலான வெளி இணைப்பு இணைப்புக்களையும் நீக்கிய பின்பும் மாற்றம் இல்லாததால் குறிப்பிட வேண்டியதாயிற்று. --AntanO 04:30, 9 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்ரமசீலா சேது என்ற தலைப்பிற்கு கட்டுரையை நகர்த்த வேண்டுமா?--கி.மூர்த்தி (பேச்சு) 14:35, 24 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]

October 2016[தொகு]

Information icon Welcome to Wikipedia, and thank you for your contributions. Although everyone is welcome to contribute constructively to the encyclopedia, please note that there is a Manual of Style that should be followed to maintain a consistent, encyclopedic appearance. Deviating from this style disturbs uniformity among articles and may cause readability or accessibility problems. Please take a look at the welcome page to learn more about contributing to this encyclopedia. Thank you. AntanO 11:32, 25 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]

eg: பகுப்பு 1 & பகுப்பு 2 --AntanO 11:34, 25 அக்டோபர் 2016 (UTC)Reply[பதில் அளி]

வேண்டுகோள்[தொகு]

தாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 5 நவம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]


--ஆசியாவின் ஜோதி எனப்படும் கவிதை நூல் ஆங்கிலத்தில் எட்வின் அர்னால்டு என்பவரால் 1800களில் எழுதப்பட்டது. அந்நூலை தமிழில் ஆசிய ஜோதி எனும் பெயரால் தேசிக விநாயகம் பிள்ளையால் மொழிபெயர்க்கப்பட்டது. ஆசியாவின் ஜோதி ஆங்கில மூல நூல். ஆசிய ஜோதி தமிழ் மொழிபெயர்ப்பு நூல். எனவே இரண்டும் வேறு வேறு ஆகும் என்பதால் இரண்டு கட்டுரைகளையும் ஒன்றினைக்க தேவையில்லை என கருதுகிறேன். --பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 12 நவம்பர் 2016 (UTC)

கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள். --AntanO 03:04, 19 நவம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

பகுப்பு தொடர்பானது[தொகு]

இங்கு (எடுத்துக்காட்டுக்காக ஒரு தொகுப்பு) ஸ்ரீநகர் மாவட்டம், ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர், இந்திய இந்துக் கோயில்கள் ஆகிய பகுப்புக்களை ஏன் இணைத்தீர்கள்? இந்து யாத்திரைத் தலங்கள், சம்மு காசுமீரில் உள்ள இந்துக் கோயில்கள் ஆகிய பகுப்புக்கள் ஏற்றவை. ஏனையவை தேவையற்ற அல்லது நேர்த்தியற்றவை. இவற்றை இணைப்பதால் குழப்பமும், பிற பயனர்களின் நேர விரயமும் ஏற்படுகிறது என்பதை கவனத்திற் கொள்ளுங்கள். en:Wikipedia:Categorization, en:Help:Category என்பவற்றை வாசித்து பகுப்பு என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்து, தொகுக்கும்போது நேர்த்தியான பகுப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். --AntanO 03:04, 19 நவம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

முன்னரும் பல தடைவைகள் பகுப்பு பற்றி குறிப்பிட்டாயிற்று, நீண்டகாலமான முனைப்பாக பங்களித்துவரும் பயனர் என்பதால் அறிவிப்போடு நிறுத்தியுள்ளேன் என்பதை கவனத்திற்கொள்ளுங்கள். நன்றி. --AntanO 03:07, 19 நவம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

வேண்டுகோள்[தொகு]

தாங்கள் ஆசிய மாததிற்காக உருவாக்கிய கட்டுரைகளை கருவியில் இணைத்து விடுங்கள் . ஏற்கனவே சிந்துவின் வரலாறு கட்டுரையை மட்டுமே இணைத்துள்ளீர்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:37, 29 நவம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:31, 8 திசம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1[தொகு]

2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்[தொகு]

2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:55, 14 திசம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி[தொகு]

 LED digit 2.pngLED colon.pngLED digit 1.pngLED digit 6.pngLED pm.png
இன்று அக்டோபர் 2, 2022
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:46, 31 திசம்பர் 2016 (UTC)Reply[பதில் அளி]

வேண்டுகோள்[தொகு]

தாங்கள் மாவட்டங்கள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்க்குவது தொடர்பில் மகிழ்ச்சி. விக்கிக்கோப்பைப் போட்டிப்பயனர் ஆகிய தாங்கள் ஏற்கனவே 2 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளீர்கள், சில சமர்ப்பிக்கப்படாது உள்ளன. அவற்றையும் உடனுக்குடன் சமர்ப்பிக்க வேண்டுகிறேன். நன்றி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். சென்ற வருடம் தாங்களே வெற்றியாளர் அதே போன்று இவ்வருடமும் ஆகுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:10, 4 சனவரி 2017 (UTC)Reply[பதில் அளி]

தயவுசெய்து நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை அங்கு சமர்ப்பியுங்கள். ஒரேதடவையில் போட்டி ஈருதியி நீங்கள் சமர்ப்பித்தால், Judge செய்வதில் தாமதம் ஏற்படும். நன்றி. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:47, 5 சனவரி 2017 (UTC)Reply[பதில் அளி]

Share your experience and feedback as a Wikimedian in this global survey[தொகு]

 1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
 2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று[தொகு]

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:36, 25 சனவரி 2017 (UTC)Reply[பதில் அளி]

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey[தொகு]

(Sorry for writing in English)

மேற்கோள்கள்[தொகு]

தங்களின் கவனத்திற்கு...[தொகு]

வணக்கம். உங்களின் கட்டுரைகளில் பாசானம் என எழுதுவதைக் காண்கிறேன். பானம் என எழுதுவதே சரியானது. இங்கு காண்க: [1] --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:46, 23 பெப்ரவரி 2017 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்[தொகு]

Trophy.png விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடம்
வாழ்த்துக்கள்! தனித்துவமான மாவட்டக் கட்டுரைகள் பலவற்றை உருவாக்கி விக்கிக்க்கோப்பையில் இரண்டாம் இடம் பெற்ற தங்களுக்கு தமிழ் விக்கி சமூகம் சார்பாக எனது வாழ்த்துகள்! தொடரட்டும் தங்கள் பணி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:32, 2 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:10, 3 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--Arulghsr (பேச்சு) 03:50, 3 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்----கி.மூர்த்தி (பேச்சு) 13:32, 3 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்-- வணக்கம், நீங்கள் இரண்டாமிடம் பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:21, 4 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--அன்புமுனுசாமி
வாழ்த்துகள். 👍 விருப்பம் --AntanO 09:27, 4 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

உங்களுக்குத் தெரியுமா பரிந்துரைகள்[தொகு]

உங்களுக்குத் தெரியுமா பகுதிக்குப் பரிந்துரைத்தமைக்கு நன்றி. பரிந்துரைகளுக்கான தகுதிகள் 6. பரிந்துரைக்கும் தகவலுக்கான மேற்கோள் அக்கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும். என்கிறது நீங்கள் பரிந்துரைத்த "துறவிகளின் கிளர்ச்சி, புனித யாத்திரை செல்லும் இந்துத் துறவிகள் மற்றும் இசுலாமிய பக்கிரிகளிடம், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்கள் யாத்திரை வரி வசூலிப்பதை எதிர்த்து, பதினேழாம் நூற்றாண்டில் இறுதியில் வங்காளத்தில் நடைபெற்ற துறவிகளின் கிளர்ச்சிகளைக் குறிக்கும்." என்பதற்கு கட்டுரையில் ஆதாரம் இல்லை. எனவே ஆதாரத்தை இணைக்க வேண்டும். கட்டுரையைக் கவனியுங்கள் [சான்று தேவை] கேட்டுள்ளேன்.

ஆப்பிரிக்கப் புதர் யானைகள் என்பதில் எத்தகவல் இடம் பெற வேண்டும். கட்டுரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் விடயம் எதுவென்ற குறிப்பில்லை.

இதுபோன்ற பகுதிகளைத் திருத்திவிடுங்கள். வேறு கட்டுரைகளையும் பரிந்துரைங்கள். நன்றி --AntanO 12:17, 5 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:53, 6 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

விக்கிக்கோப்பையை வெற்றி கொண்ட தாங்களும் இதில் கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:54, 6 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு[தொகு]

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

விக்கித்தரவில் இணையுங்கள்[தொகு]

நீங்கள் உருவாக்கும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை கட்டுரை உருவாக்கியவுடனேயே விக்கித்தரவில் இணைத்து விடுங்கள். தாமதித்தால் மறந்து போய் விடுவீர்கள். அது மட்டுமல்ல, வேறு ஒருவரோ அல்லது நீங்களோ அதே கட்டுரையை மீண்டும் வேறொரு தலைப்பில் ஆரம்பிக்கக் கூடும். இதனால், பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவோருக்கு இரட்டிப்புப் பளு.--Kanags \உரையாடுக 10:22, 12 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1[தொகு]

OOjs UI icon bellOn-rtl-invert.svg


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 12 மார்ச் 2017 (UTC)Reply[பதில் அளி]

விக்கிமீடியா வியூகம் 2017[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)Reply[பதில் அளி]

நிகோலாய் Noskov[தொகு]

ஹலோ அன்பே எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி! நான் உங்கள் மொழி தெரியும் மற்றும் ஒரு ஒழுங்கு செய்ய வேண்டாம்: நீங்கள் பாடகர் நிகோலாய் Noskov (Nikolai Noskov) பற்றி உங்கள் இந்தி மொழியில் ஒரு கட்டுரை செய்ய முடியும்? நீங்கள் இந்த கட்டுரை செய்தால், நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கும்! நன்றி! --78.37.249.248 16:35, 9 ஏப்ரல் 2017 (UTC)Reply[பதில் அளி]

பகுப்பு சேர்த்தல்/நீக்கல்[தொகு]

பல முறை குறிப்பிட்டாயிற்று. உபபகுப்புக்கள் இருக்கும்போது தாய்ப்பகுப்பில் இணைக்க வேண்டாம். எ.கா: வீரபத்திரசுவாமி கோயில், குரவி என்பதில் சிவாலயங்கள், இந்திய இந்துக் கோயில்கள், இந்துக் கோயில்கள் என்பவை எதற்காக இணைக்கப்பட்டன? விளங்காவிட்டால் கேட்டுத் தெளிவு பெறுங்கள். நன்றி --AntanO 10:00, 17 ஏப்ரல் 2017 (UTC)Reply[பதில் அளி]

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு[தொகு]

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:59, 26 ஏப்ரல் 2017 (UTC)Reply[பதில் அளி]

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது![தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
  • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
 • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
 • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
 • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:04, 30 ஏப்ரல் 2017 (UTC)Reply[பதில் அளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்[தொகு]

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 2 மே 2017 (UTC)Reply[பதில் அளி]

26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:38, 6 மே 2017 (UTC)Reply[பதில் அளி]

போட்டிக்கட்டுரையை சமர்ப்பியுங்கள்[தொகு]

நீங்கள் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக விரிவாக்கம் செய்த குப்தப் பேரரசு கட்டுரையை இங்கே சமர்ப்பியுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 21:04, 3 மே 2017 (UTC)Reply[பதில் அளி]

நீங்கள் போட்டிக்காக முன்பதிவு செய்த கட்டுரைகள் அனைத்தையும் நீக்கியுள்ளீர்களே? போட்டியில் பங்குபற்றவில்லையா? Face-sad.svg--கலை (பேச்சு) 09:56, 6 மே 2017 (UTC)Reply[பதில் அளி]

பதக்கம்[தொகு]

Original Barnstar Hires.png இராமாயணக் கட்டுரைகளுக்கான பதக்கம்
இராமாயணம் பற்றிய கட்டுரைகளை ஒரு சில நாட்களாக தமிழ் விக்கியில் முனைப்போடு உருவாக்கி வருவதற்கு வாழ்த்துகள்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:34, 14 மே 2017 (UTC)Reply[பதில் அளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:18, 15 மே 2017 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம் வாழ்த்துகள்! --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:24, 15 மே 2017 (UTC)Reply[பதில் அளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
 • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
 • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:59, 21 மே 2017 (UTC)Reply[பதில் அளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

 • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
 • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
 • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
 • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
 • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:33, 31 மே 2017 (UTC)Reply[பதில் அளி]

துப்புரவுப் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

Translating Ibero-America is back! Come and join us :)[தொகு]

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 00:35, 12 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை[தொகு]

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:14, 20 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]

ஆசிய மாதம், 2017[தொகு]

WAM 2017 Banner-ta.png

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
 • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
 • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
 • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
 • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
 • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:13, 14 நவம்பர் 2017 (UTC)Reply[பதில் அளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்[தொகு]

WAM 2017 Banner-ta.png

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 1. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
 2. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
 3. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:10, 25 நவம்பர் 2017 (UTC)Reply[பதில் அளி]

வேண்டுகோள்[தொகு]

வணக்கம். கட்டுரைகளில் துணைப்பகுப்புடன் தாய் பகுப்பையும் இணைக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எடுத்துக்காட்டுகள்:

 • ”நேபாள வரலாறு” என்ற துணைப் பகுப்பில் ஒரு கட்டுரை இணைக்கப்படும் போது, தாய் பகுப்பான ”நேபாளம்” என்ற பகுப்பினுள் அக்கட்டுரையை இணைக்க வேண்டாம்.
 • ”தமிழக அருங்காட்சியங்கள்” என்ற துணைப்பகுப்புக்குள் ஒரு கட்டுரையை இணைக்கும்போது “இந்திய அருங்காட்சியங்கள்”, “அருங்கட்சியங்கள் ஆகிய இரண்டு தாய் பகுப்புகளும் அக்கட்டுரைக்குத் தேவையற்றவை.

நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:30, 16 திசம்பர் 2017 (UTC)Reply[பதில் அளி]

WAM Address Collection[தொகு]

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.

Best, Erick Guan (talk) {{subst:AFDWarning|1=மகேந்திர சிங் தோனி}} சிவகோசரன் (பேச்சு) 15:19, 1 சனவரி 2018 (UTC)Reply[பதில் அளி]

WAM Address Collection - 1st reminder[தொகு]

Hi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik

Confusion in the previous message- WAM[தொகு]

Hello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik

ஈராயிரவர் பதக்கம்[தொகு]

Iraayiravar.jpg ஈராயிரவர் பதக்கம்
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் விக்கியில் அண்மையில் இரண்டாயிரம் கட்டுரைகளையும் தாண்டி இன்றளவில் 2,650 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் அனைத்து தமிழ் விக்கிப்பீடியர் சார்பிலும் ஈராயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி!--Kanags (பேச்சு) 22:18, 27 சனவரி 2018 (UTC)Reply[பதில் அளி]

👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:52, 27 சனவரி 2018 (UTC)Reply[பதில் அளி]

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:43, 28 சனவரி 2018 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--கலை (பேச்சு) 09:15, 28 சனவரி 2018 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 15:02, 28 சனவரி 2018 (UTC)Reply[பதில் அளி]
👍 விருப்பம்--உழவன் (உரை) 17:31, 28 சனவரி 2018 (UTC)Reply[பதில் அளி]
வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி உரித்தாகுக--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:33, 17 பிப்ரவரி 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:44, 18 பெப்ரவரி 2018 (UTC)Reply[பதில் அளி]

👍 விருப்பம்--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 15:25, 18 பிப்ரவரி 2018 (UTC)

வேண்டுகோள் - இறுதி[தொகு]

உங்களுக்க பலமுறை கட்டுரைகளில் துணைப்பகுப்புடன் தாய் பகுப்பையும் இணைக்க வேண்டாம் என்றும் தேவையற்ற பகுப்புகளை இணைக்க வேண்டாம் என்றும் என்னாலும் மற்ற பயனர்களாலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டாயிற்று. இந்த அண்மைய தொகுப்பிலும் தேவையற்ற பகுப்புக்களை உள்வாங்கப்பட்டுள்ளது. எதற்கான இவ்வாறு செய்கிறீர்கள்? விளங்கவில்லையா அல்லது இவ்வாறுதான் செய்வேன் என்ற பாணியில் செயற்படுகிறீர்களா? நீங்கள் உருவாக்கிய பகுப்புகளை துப்புரவு செய்வதில் நானும் மற்ற பயனர்களும் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டுள்ளோம். இவ்வித தேவயைற்ற பகுப்பு உள்வாங்குதல் தொடர்ந்தால் நீங்கள் தடைக்கு உள்ளாகலாம். நன்றி. --AntanO (பேச்சு) 22:11, 5 மார்ச் 2018 (UTC)Reply[பதில் அளி]

March 2018[தொகு]

Stop icon with clock
You have been blocked from editing for a period of 12 hours for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 01:52, 18 மார்ச் 2018 (UTC)Reply[பதில் அளி]
உங்களுக்கு பலமுறை தெரிவித்தும், நீங்கள் அறிவிப்புகளை ஊதாசீனம் செய்யவதால் 12 மணிநேர தடை விதித்துள்ளேன். 12 நேரம் என்பது நீங்கள் தொடர்ச்சியாப் பங்களிப்பவர் என்பதால் மட்டுப்படுத்தப்பட்டது. தயவுசெய்து மீண்டும் இத்தவறைச் செய்ய வேண்டாம். அடுத்த முறை தடைசெய்வதாயின் அது நீண்டதாக இருக்கும் என்பதை நினைவிற் கொள்ளவும். நன்றி. --AntanO (பேச்சு) 01:56, 18 மார்ச் 2018 (UTC)Reply[பதில் அளி]

உங்கள் பார்வைக்கு[தொகு]

வணக்கம். இராமநாதபுரம் மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள கிராமங்களின் கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள்.

 • அந்தந்த சிற்றூர்கள் அமைந்துள்ள மாவட்டம், ஊராட்சி ஆகியவற்றுக்கு நம்பகத்தகுந்த மேற்கோளாக அரசின் வெளியீடான [2] இதனை இணைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். onefivenine.com நம்பத்தக்க மேற்கோளாகாது. இதன் பயன்பாட்டைத் தவிர்த்துவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:55, 30 ஏப்ரல் 2018 (UTC)Reply[பதில் அளி]

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்[தொகு]

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)Reply[பதில் அளி]


வேங்கைத் திட்டம்[தொகு]

வணக்கம் ஐயா, தங்களால் வேங்கைத் திட்டம் போட்டியில் கட்டுரைகளை எழுத இயலுமா? தங்களைப் போன்றவர்கள் ஒத்துழைத்தால் நிச்சயம் நாம் வெற்றி பெறலாம். தற்போதைய நிலவரப்படி பஞ்சாபியை விட 4 கட்டுரைகளே பின்தங்கியுள்ளோம். வாழ்க வளமுடன். நன்றிDsesringp (பேச்சு) 07:56, 8 மே 2018 (UTC)Reply[பதில் அளி]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் - தரப்படும் வெளியிணைப்பு தரமான, பயனுடைய உள்ளடக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். --AntanO (பேச்சு) 12:21, 18 மே 2018 (UTC)Reply[பதில் அளி]

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்![தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது[தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!![தொகு]

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை![தொகு]

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

Translation[தொகு]

Hello! May I ask you for a translation of the code placed on this page into தமிழ்? Can you put in under the English version. Thank you very much! :) -XQV- (பேச்சு) 19:07, 17 சூன் 2018 (UTC)Reply[பதில் அளி]

மூவாயிரம் கட்டுரைகள்[தொகு]

வாழ்த்துகள்

வணக்கம் கிருஷ்ணமூர்த்தி. தமிழ் விக்கிப்பீடியாவில் 3,000 கட்டுரைகள் எழுதியமைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சிறப்பான பங்களிப்புகளை தொடர வாழ்த்துகிறேன். உங்களின் உழைப்பு பல்லோருக்கும் பெரும் ஊக்கம் தருவது உறுதி. உங்களுக்கு மூவாயிரவர் பதக்கம் அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 03:29, 8 செப்டம்பர் 2018 (UTC)Reply[பதில் அளி]

--நன்றியுடன் கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 06:14, 15 செப்டம்பர் 2018 (UTC)Reply[பதில் அளி]