பயனர் பேச்சு:Balajijagadesh

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருளடக்கம்

வாருங்கள்!

வாருங்கள், Balajijagadesh, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

19:14, 27 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

Invite to WikiConference India 2011[தொகு]

WCI banner.png

Hi Balajijagadesh,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

தொடர் பங்களிப்புக்கு நன்றி[தொகு]

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Balajijagadesh!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 10:36, 3 பெப்ரவரி 2013 (UTC)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்[தொகு]

Anniv.svg வணக்கம் Balajijagadesh அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~
Face-smile.svg

-Vatsan34 (பேச்சு) 12:13, 23 சூன் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

ஆசிய மாதம்[தொகு]

@Balajijagadesh: நீங்கள் உருவாக்கிய பெங் சட் லாவ் ஆசிய மாதக் கட்டுரைப்போட்டிக்கானதா? உங்கள் பெயரை ஆசிய மாதப் பங்கேற்பாளராகச் சேர்க்கலாமா? - நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 20:37, 6 திசம்பர் 2015 (UTC)

தெலுங்குப் பதிவுகள்[தொகு]

 • உங்கள் பயனர் பக்கத்தைக் கண்டபோது உங்களுக்கு தெலுங்கு மொழி தெரியுமென்பதை அறிந்தேன்...ஆகவே நான் தமிழ் விக்சனரியில் பதிவேற்றும் தெலுங்குச் சொற்களில் குற்றம், குறைகள் ஏதேனும் காணப்படில், எனது உரையாடல் பக்கத்தில் தெரிவித்தால், தக்கவாறு திருத்திக்கொள்ள ஏதுவாகயிருக்குமெனக் கருதுகிறேன்...நன்றி, வணக்கம்--Jambolik (பேச்சு) 18:28, 30 திசம்பர் 2015 (UTC)
அப்படியே பாலாஜி (பேச்சு) 18:30, 30 திசம்பர் 2015 (UTC)

சிறுதொகுப்பு[தொகு]

இவ்வாறாகப் பல பக்கங்களில் ஒரே வார்ப்புருவைச் சேர்க்கும் சிறுமாற்றங்களைச் சிறுதொகுப்புகளாகக் குறிக்கவேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 10:38, 11 சனவரி 2016 (UTC)

அப்படியே!பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:39, 11 சனவரி 2016 (UTC)

ஆர்தர் காம்ப்டன் கட்டுரையில் மேலும் சில வரிகளை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 11:04, 11 சனவரி 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Wiki Lei Barnstar Hires.png அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.-- மாதவன்  ( பேச்சு  ) 07:12, 15 சனவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

தங்கள் பதக்கம் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது. நன்றி. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:43, 15 சனவரி 2016 (UTC)
👍 விருப்பம்-{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:18, 17 சனவரி 2016 (UTC)
நன்றி, @Shrikarsan. - பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:26, 16 பெப்ரவரி 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:20, 3 ஏப்ரல் 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Editors Barnstar Hires.png விக்கிப்புயல் பதக்கம்
விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையை அடுத்து விக்கித்தரவில் இரண்டே மாதத்தில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் தொகுப்புகளைச் செய்திருக்கிறீர்ள். மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி. --இரவி (பேச்சு) 12:24, 11 சூலை 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

மிக்க நன்றி ரவி அவர்களே. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:26, 11 சூலை 2016 (UTC)
👍 விருப்பம் தமிழ் விக்கிப்பீடியா களைகட்டத் தொடங்கியுள்ளதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது !! உங்கள் பங்களிப்பு தொடரவும் மேலும் சிறக்கவும் வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 13:15, 11 சூலை 2016 (UTC)
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 16:18, 11 சூலை 2016 (UTC)

பஞ்சாப் மாதம்[தொகு]

2016 இந்திய விக்கி மாநாட்டை ஒட்டி நடைபெறும் பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பில் பங்கேற்க வேண்டுகிறேன். இதன் மூலம் பஞ்சாப் பற்றி நாம் அறிந்து கொள்வதுடன் இந்நிகழ்வை ஒருங்கிணைக்க உழைக்கும் பஞ்சாபியர்களுக்கு நாம் அளிக்கும் அன்புப் பரிசாகவும் இருக்கும். கூடுதல் பைட்டுகள் அல்லது சொற்களைச் சேர்க்கும் சமூகத்துக்குக் கேடயமும் உண்டு. எனவே, இன்றே வாரீர்! கட்டுரைகள் தாரீர் ! :)--இரவி (பேச்சு) 20:44, 15 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்[தொகு]

2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியாவின் கொடி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியாவின் கொடி கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் கொடி மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியாவின் கொடி பாலாஜீ, இலங்கையின் கொடி மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)

👍 விருப்பம்--அன்புமுனுசாமி 16:40, 20 சூலை 2016 (UTC)
வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)
👍 விருப்பம் அன்போடு வாழ்த்தும் அன்புமுனுசாமி 18:07, 20 சூலை 2016 (UTC)
வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 13:59, 21 சூலை 2016 (UTC)
அனைவருக்கும் நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 00:44, 23 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்[தொகு]

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

--MediaWiki message delivery (பேச்சு) 17:24, 20 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016[தொகு]

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

Ta-Wiki-Marathon-2016.png

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

 • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
 • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்[தொகு]

2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியாவின் கொடி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியாவின் கொடி கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியாவின் கொடி மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கையின் கொடி மாதவன், இந்தியாவின் கொடி உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)

Rio Olympics Edit-a-thon[தொகு]

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)

சுற்றுக்காவல்[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:21, 13 அக்டோபர் 2016 (UTC)

வணக்கம். சரி. சுற்றுக்காவலில் உதவுகிறேன். அணுக்கம் பெற்றபின் சிறிது காலம் சுற்றுக்காவல் செய்கிறேன். எனது செயல்பாட்டைப் பார்த்தபின் நான் தொடருவதா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:58, 14 அக்டோபர் 2016 (UTC)
உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு தற்காவல், முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 14:17, 15 அக்டோபர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2017[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:52, 9 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை: அறிவிப்புகள்[தொகு]

2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்[தொகு]

2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.


--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:44, 12 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி[தொகு]

 LED digit 6.pngLED colon.pngLED digit 1.pngLED digit 4.pngLED pm.png
இன்று செப்டம்பர் 23, 2019
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:45, 31 திசம்பர் 2016 (UTC)

தற்போது பதிவேற உள்ள கோயில் கட்டுரைகளுக்கு விக்கித்தரவு இணைப்பு[தொகு]

பாலாஜி! விக்கித்தரவு திட்டத்தில், உங்களது தானியங்கி இயக்கப்படுகிறது அல்லவா? அதன் வழியே தற்போது பதிவேற உள்ள கோயில் கட்டுரைகளுக்கு விக்கித்தரவு உருப்படிகளை உருவாக்க இயலும். உங்களுக்கு அதில் இசைவு எனில், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் விக்கித்தரவு/தமிழகக் கோயில்கள் விக்கித்தரவு என்பதில் தெரிவிக்கவும். வணக்கம்--உழவன் (உரை) 01:38, 20 பெப்ரவரி 2017 (UTC)

தெரிவித்துள்ளேன். நன்றி -- 01:49, 20 பெப்ரவரி 2017 (UTC)

நன்றி[தொகு]

Hello User-Balajijagadesh, Thanks for your edit. It was a good faith edit, along the lines of similar one in English language Wikipedia at edit. I should have reverted it myself, as I was unable to locate the similar template in Tamil Wikipedia. If you happen to know, could you please point it out. Thanks, by contributor 2know4power (பேச்சு) 00:11, 21 பெப்ரவரி 2017 (UTC).

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பாலாஜி பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 06:31, 24 பெப்ரவரி 2017 (UTC)

@Balajijagadesh: அப்படியே. சேர்த்துவிட்டு தெரிவிக்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:15, 24 பெப்ரவரி 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:39, 6 மார்ச் 2017 (UTC)

துப்புரவில் உதவ வேண்டுகிறேன்[தொகு]

வணக்கம். இங்குள்ள கட்டுரைகளைப் பார்த்து துப்புரவில் உதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:00, 23 மே 2017 (UTC)

சரி. துப்புரவைத் தொடங்கிவிட்டேன். --பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:58, 23 மே 2017 (UTC)
மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 15:08, 23 மே 2017 (UTC)

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்[தொகு]

வணக்கம். அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:22, 11 சூன் 2017 (UTC)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:37, 11 சூன் 2017 (UTC)
மகிழ்ச்சி. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:04, 11 சூன் 2017 (UTC)
வணக்கம், முதற்பக்க அறிமுகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:26, 15 சூன் 2017 (UTC)
@பா.ஜம்புலிங்கம்: மிக்க நன்றி.. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:21, 19 சூன் 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை[தொகு]

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:14, 20 சூன் 2017 (UTC)

சுற்றுக்காவல் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம்.

குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.

அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]

அன்புள்ள பாலாஜி,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 15:42, 24 மார்ச் 2018 (UTC)

@Ravidreams: தங்கள் பதிவிற்கு நன்றி. கட்டாயம் பங்களிக்கிறேன். அன்புடன் -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 16:49, 24 மார்ச் 2018 (UTC)
மிக்க மகிழ்ச்சி. உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 04:22, 25 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

புலவர் குழந்தை.png[தொகு]

நியாயமான பயன்பாடு படிமம் பெரிய அளவில் இருத்தல் கூடாது. சிறி அளவு படிமத்தை பதிவேற்றுங்கள். --AntanO (பேச்சு) 10:26, 22 அக்டோபர் 2018 (UTC)

@AntanO: I have seen sometimes that the fair use image is scaled down automatically by a bot and previous versions removed. Do we have to do it manually. ? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:39, 22 அக்டோபர் 2018 (UTC)

ஆங்கில விக்கியில் தானியங்கி ஒன்று இதனைச் செய்கிறது. நம்மிடம் அது இல்லை. நாம் நம் முறையினால்தான் செய்ய வேண்டும். --AntanO (பேச்சு) 10:42, 22 அக்டோபர் 2018 (UTC)
@AntanO: Yes check.svgY ஆயிற்று -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:39, 24 அக்டோபர் 2018 (UTC)
👍 விருப்பம்--AntanO (பேச்சு) 10:00, 25 அக்டோபர் 2018 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம்.

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:20, 3 நவம்பர் 2018 (UTC)

WAM Organizers Update[தொகு]

Hi WAM Organizer! Hopefully, everything works just fine so far! Need Help Button, post in any language is fine

 • Here are some recent updates and clarification of rules for you, and as always, let me know if you have any idea, thought or question.
  • Additional souvenirs (e.g. postcard) will be sent to Ambassadors and active organizers.
  • A participant's article count is combined on all language Wikipedias they have contributed to
  • Only Wikipedia Asian Month on Wikipedia or Wikivoyage projects count (no WikiQuote, etc.)
  • The global top 3 article count will only be eligible on Wikipedias where the WAM article requirement is at least 3,000 bytes and 300 words.
  • If your community accepts an extension for articles, you should set up a page and allow participants to submit their contributions there.
  • In case of redirection not allowed submitting in Fountain tool, a workaround is to delete it, copy and submit again. Or a submission page can be used too.
  • Please make sure enforce the rules, such as proper references, notability, and length.
  • International organizers will double check the top 3 users' accepted articles, so if your articles are not fulfilling the rules, they might be disqualified. We don't want it happened so please don't let us make such a decision.

Please feel free to contact me and WAM team on meta talk page, send me an email by Email this User or chat with me on facebook. For some languages, the activity for WAM is very less, If you need any help please reach out to us, still, 12 more days left for WAM, Please encourage your community members to take part in it.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Best Wishes,
Sailesh Patnaik

What's Next (WAM)![தொகு]

Congratulations! The Wikipedia Asian Month has ended successfully and you've done amazing work of organizing. What we've got and what's next?

Tool problem
If you faced problem submitting articles via judging tool, use this meta page to do so. Please spread this message with local participants.
Here are what will come after the end of WAM
 • Make sure you judge all articles before December 7th, and participants who can improve their contribution (not submit) before December 10th.
 • Participates still can submit their contribution of November before December 5th at this page. Please let your local wiki participates know. Once you finish the judging, please update this page after December 7th
 • There will be three round of address collection scheduled: December 15th, December 20th, and December 25th.
 • Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
 • There will be a progress page for the postcards.
Some Questions
 • In case you wondering how can you use the WAM tool (Fountain) in your own contest, contact the developer Le Loi for more information.

Thanks again, Regards
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 04:59, 3 திசம்பர் 2018 (UTC)

WAM Postcard collection[தொகு]

Dear organiser,

Thanks for your patience, I apologise for the delay in sending the Google form for address collection. Please share this form and the message with the participants who created 4 or more than 4 articles during WAM. We will send the reminders directly to the participants from next time, but please ask the participants to fill the form before January 10th 2019.

Things to do:

 1. If you're the only organiser in your language edition, Please accept your article, keeping the WAM guidelines in mind.
 2. Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
 3. Please update the status of your language edition in this page.


Note: This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems accessing the google form, you can use Email This User to send your address to my Email. Thanks :) --Saileshpat using MediaWiki message delivery (பேச்சு) 21:15, 19 திசம்பர் 2018 (UTC)

Invitation to Organize Wiki Loves Love 2019[தொகு]

WLL Subtitled Logo subtitled b (transparent).svg

Wiki Loves Love (WLL) is an International photography competition of Wikimedia Commons to subject love testimonials happening in the month of February 2019.

The primary goal of the competition is to document love testimonials through human cultural diversity such as monuments, ceremonies, snapshot of tender gesture, and miscellaneous objects used as symbol of love; to illustrate articles in the worldwide free encyclopedia Wikipedia, and other Wikimedia Foundation (WMF) projects. February is around the corner and Wiki Loves Love team invites you to organize and promote WLL19 in your country and join hands with us to celebrate love and document it on Wikimedia Commons. The theme of 2019 is Festivals, ceremonies and celebrations of love.

To organize Wiki Loves Love in your region, sign up at WLL Organizers page. You can also simply support and spread love by helping us translate the commons page in your local language which is open for translation.

The contest starts runs from 1-28 February 2019. Independent from if there is a local contest organised in your country, you can help by making the photo contest Wiki Loves Love more accessible and available to more people in the world by translating the upload wizard, templates and pages to your local language. See for an overview of templates/pages to be translated at our Translations page.

Imagine...The sum of all love!

Wiki Loves Love team

--MediaWiki message delivery (பேச்சு) 12:33, 6 சனவரி 2019 (UTC)

நிருவாக அணுக்கம் பெற விருப்பமா?[தொகு]

வணக்கம். உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். சம்மதமா? --இரவி (பேச்சு) 15:17, 7 சனவரி 2019 (UTC)

@Ravidreams:. சம்மதம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:24, 7 சனவரி 2019 (UTC)
நிர்வாகிகள் நியமனப் பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். அங்கு உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்துங்கள். கூடவே, ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாகிகளாகத் தேர்வாகும் நிலையில், மூன்று மாதங்கள் பொறுத்திருந்து நிருவாக அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ள சம்மதமா இல்லை உடனடியாகக் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்குமா என்று குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 15:32, 7 சனவரி 2019 (UTC)
@Ravidreams: -- நன்றி. பதிவு செய்துவிட்டேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:40, 7 சனவரி 2019 (UTC)

பொங்கல் வாழ்த்துக்கள்[தொகு]

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:26, 14 சனவரி 2019 (UTC)

@Gowtham Sampath:நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 20:06, 14 சனவரி 2019 (UTC)

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்[தொகு]

வணக்கம். தை முதல் நாளாம் இன்று, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. பணி சிறக்க வாழ்த்துகள். விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி விரைவில் செயற்படத் தொடங்கும் :) --இரவி (பேச்சு) 06:17, 15 சனவரி 2019 (UTC)

தமிழர் திருநாளில் நிருவாக அணுக்கம் பெறும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். ஹிபாயத்துல்லா 07:55, 15 சனவரி 2019 (UTC)
தமிழர் திருநாள், நிருவாக அணுக்கம் இரண்டுக்கும் சேர்த்து மனம் நிறைந்த வாழ்த்துகள்--Kanags (பேச்சு) 08:15, 15 சனவரி 2019 (UTC)
சீனாவிலிருந்து மனம் நிறைந்த வாழ்த்துகள்!--நந்தகுமார் (பேச்சு) 11:51, 15 சனவரி 2019 (UTC)
@Ravidreams:, @Hibayathullah:, @Kanags:, @Nan: தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!! -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:32, 15 சனவரி 2019 (UTC)

(UTC)

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 17:02, 18 சனவரி 2019 (UTC)

@Kalaiarasy: ஆதரவு அளித்து வாக்களித்தமைக்கும் ஊக்குவிப்பதற்கும் மிக்க நன்றி. சிறப்பாக செய்ய முனைகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:32, 19 சனவரி 2019 (UTC)

தங்கள் நிர்வாக அணுக்கம் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 09:40, 15 ஏப்ரல் 2019 (UTC)

நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:34, 15 ஏப்ரல் 2019 (UTC)

ஐயம்[தொகு]

ஆம் ஐயா, கண்டேன். தமிழ் விக்கிபீடியாவில் வரும் பாமினியைப் பயன்படுத்துகிறேன். ஆனால் நான் தொகுக்கும் பொழுது அவ்வாறு எதுவும் காட்டவில்லை. எனவே இதை சாிசெய்யும் விதத்தைக் கூறவும். மேலும் பயனா் பக்கத்தில் விஷ்வல் எடிட் செய்ய முடியுமா என்றும் தெளிவு படுத்துக.. தமிழ் விக்கிபீடியாவில் எழுதிய கட்டுரையைப் போட்டியிற்குப் பதிவு செய்யும் பொழுது 4215 பைட்ஸ் எனக் காண்பிக்கிறது. அதனால் அக்கட்டுரையைப் பதிவு செய்ய முடியவில்லை. இதை எப்படி சாி செய்து கட்டுரையைப் பதிவிடுவதென்பதைப் பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா.

@Aravind Murugesan sarala:1. ஐயா. கட்டுரையின் பைட்ஸ் 4215 இருந்தால் கட்டுரையை சமர்பிக்க முடியாது. குறைந்தபட்சம் 5000 பைட்ஸ் இருக்க வேண்டும். தரவு அதிகமாக்குவதற்கு மேலும் சில பல வரிகளைக் கட்டுரையில் சேர்த்தால் பைட்டுகள் அதிகமாகும். ஒரு கட்டுரையில் எத்தனை பைட்டுகள் உள்ளது என்பதை அறிந்துகொள்வதற்கு கட்டுரைக்கு மேலே "வரலாற்றைக் காட்டவும்" என்பதை சொடுக்கி அங்கு சென்று பார்க்கலாம். 2. தாங்கள் பாமினியில் துணைக்காலுக்கு எந்த எழுத்து தட்டச்சு செய்யப் பயன்படுத்துகிறீர்கள்? h அல்லது u ? பாமினியில் h என்பது துணைக்கால். u என்பது ரகரம். தாங்கள் u மற்றும் h ஐ மாற்றி பயன்படுத்துகிறீர்களா? 3. பேச்சுப்பக்கதில் பேசும் பொழுது கடைசியில் கையொப்பம் இடுவதற்கு ~~~~ என்பதை பயன்படுத்தி சேமித்தால் தானாக உங்கள் பெயர் மற்றும் நேரம் வந்துவிடும். புரியவில்லை என்றால் மேலும் கேளுங்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:10, 16 மார்ச் 2019 (UTC)
மிகவும் தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி ஐயா. Visual edit பேச்சு பக்கத்தில் செய்ய முடியாதா ஐயா? விக்கிபீடியாவில் குறிப்பிட்ட தலைப்புகளில் கட்டுரைகளை விாிவாக்கியும் பதிவு செய்து கொள்ளலாம் அல்லவா ஐயா? பயனா் பெயரைக் குறிபிடுவது எப்படி என்பது பற்றியும் கூறவும் ஐயா. -- Aravind Murugesan sarala (பேச்சு) 07:35, 16 மார்ச் 2019 (UTC)
@Aravind Murugesan sarala: பேச்சு பக்கத்தில் visual edit இல்லை. visual edit இன்னும் சோதனை வடிவத்திலேதான் உள்ளது. போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கம் செய்தும் சமர்பிக்கலாம். அப்படி விவாக்கம் செய்யும் பொழுது, குறைந்தது 5000 பைட்டுகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், 150 சொற்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.//பயனர் பெயரைக் குறிபிடுவது எப்படி என்பது பற்றியும் கூறவும் ஐயா// -- தாங்கள் எதைப்பற்றி வினவுகிறீர்கள் என்பது புலப்படவில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:18, 16 மார்ச் 2019 (UTC)
என் பெயரை @Aravind Murugesan sarala என்று எப்படி குறிப்பிட்டுள்ளீர்கள் என்று கேட்டேன் ஐயா. இந்தியன் பில்டர் காப்பி, மரவள்ளிக்கிழங்கு சீவல், நால்வர் நான்மணி மாலை ஆகிய கட்டுரைகளில் எழுத்துப் பிழைகளைத் திருத்தியுள்ளேன். தயை கூர்ந்து மதிப்பெண்கள் வழங்குங்கள் ஐயா. ~~
@Aravind Murugesan sarala: அடைப்புக் குறிக்குள் ping|பெயர் இட வேண்டும்.--நந்தகுமார் (பேச்சு) 06:03, 18 மார்ச் 2019 (UTC)
@Aravind Murugesan sarala: பயனரைக் குறிப்பிட {{ping|Aravind Murugesan sarala}} என்று குறிப்பிட வேண்டும். ping பிறகு யாரைக் குறிப்பிடவிரும்புகிறீர்களோ அவரது பயனர் பெயரைக் குறிப்பிட வேண்டும். தங்கள் கட்டுரைகளை ஐந்து நடுவர்களில் ஒருவர் விரைவில் மதிப்பிடுவர். மேலும் 'ஐயா' தேவையில்லை. தாங்கள் என்னை பாலாஜி என்றே அழைக்கலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:44, 18 மார்ச் 2019 (UTC)

தானியங்கி[தொகு]

வேறுபாடு இதுபோன்ற தொகுப்புகளுக்கு தானியங்கி பயன்படுத்தலாம். @Kanags: --AntanO (பேச்சு) 01:11, 27 மார்ச் 2019 (UTC)

@AntanO: சரி. சோதனையாக ஒரு நூறு தொகுப்புகளைச் செய்தேன். எனது தானியங்கி விண்ணப்பம் இங்கு செய்துள்ளேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 02:55, 27 மார்ச் 2019 (UTC)

தானியங்கி செயற்பாடு[தொகு]

இவ்வாறான தொகுப்புகளில் சில பிரச்சினைகள் உண்டு:

 1. Orphan என்ற வார்ப்புரு முழுமையாக ஆங்கிலத்தில் உள்ளது. இதனை முதலில் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். ஏராளமான கட்டுரைகளின் ஆரம்பத்தில் இவ்வாறு ஆங்கில வார்ப்புரு இருப்பது நல்லதல்ல.
 2. இந்த Orphan என்ற வார்ப்புரு எதனைக் குறிக்கிறது. //தெரிவு செய்யப்பட்ட பெயர்வெளியில் அக்கம்மா செரியன் பக்கத்துக்கு இணைக்கப்பட்ட பக்கங்கள் எதுவுமில்லை.// அதில் என்ன பிரச்சினை? அக்கம்மா செரியன் என்ற கட்டுரை கட்டாயமாக வேறு ஒரு கட்டுரையில் இணக்கப்பட வேண்டுமா?
 3. இவ்வார்ப்புரு "Orphaned articles from ஏப்ரல் 2019" என்ற பகுப்பைத் தானியங்கியாக இணைக்கிறது. இப்பகுப்பின் தலைப்பு ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து உள்ளது. இது பார்க்க அழகாக இல்லை. அத்துடன் சிவப்பு இணைப்பில் உள்ளது. இவ்வாறான பகுப்புகள் கட்டுரையில் தெரியாமல் மறைக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:36, 23 ஏப்ரல் 2019 (UTC)
@Kanags: அதற்காக வேலையை தொடங்கிவிட்டேன். //அக்கம்மா செரியன் என்ற கட்டுரை கட்டாயமாக வேறு ஒரு கட்டுரையில் இணக்கப்பட வேண்டுமா?// விரிவான பதில் இங்கு உள்ளது en:Help:Orphan. இப்பக்கம் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:41, 23 ஏப்ரல் 2019 (UTC)
@Kanags: இணைப்பு எப்படி பயன்படும் என்பதை விளக்குகிறேன். கரோலின் அந்தோனிப்பிள்ளை தனித்துவிடப்பட்டக் கட்டுரை. கரோலின் அந்தோனிப்பிள்ளை என்பவர் எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளையின் மனைவி. இக்கட்டுரையில் எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளையின் மனைவியின் பெயராக கரோலைன் குணவர்தனா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவற் பெட்டியில் அவர் மனைவி இறந்த தேதி சூலை 6, 2009 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இங்கு கரோலின் இறந்த தேதி சூலை 7, 2009 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இணைப்பு ஏற்படுவதால் இது போல முரண்களை குறைக்கு முடியும். இது ஒரே ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இதுபோல் பல நன்மைகள் உள்ளன. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:47, 23 ஏப்ரல் 2019 (UTC)
@ Balajijagadesh இரண்டு நாட்களாக கனக்ஸின் ஐயம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. இவ்வார்ப்புரு தேவையற்றது என்பது எனது கருத்து. துப்புரவு பணிகள் தேங்கிக் கிடக்கும் நிலையில் இதுபோல வார்ப்புரு இணைப்பது மேலும் அசதியை ஏற்படுத்துகிறது. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:23, 4 மே 2019 (UTC)

இக்கட்டுரைகளை எப்படி மற்ற கட்டுரைகளுடன் இணைப்பது? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:57, 4 மே 2019 (UTC)

@Parvathisri: orphan வார்ப்புரு பற்றி ஒரு ஒருமித்த கருத்து ஏற்படும் வரை இவ்வார்ப்புருவை இடுவதை நிறுத்தி வைத்துள்ளேன். //இக்கட்டுரைகளை எப்படி மற்ற கட்டுரைகளுடன் இணைப்பது?// ஒரு கட்டுரை orphanஆக இருந்தால் அக்கட்டுரையை வேறு ஏதாவது ஒரு கட்டுரையில் விக்கியிணைப்பாகக் கொடுக்க வேண்டும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:25, 11 மே 2019 (UTC)
//ஒரு கட்டுரை orphanஆக இருந்தால் அக்கட்டுரையை வேறு ஏதாவது ஒரு கட்டுரையில் விக்கியிணைப்பாகக் கொடுக்க வேண்டும்.// விக்கி உள்ளிணைப்புகள் கொடுத்துள்ள கட்டுரையிலும் இந்த வார்ப்புரு காணப்படுகிறது. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:32, 14 மே 2019 (UTC)
@Parvathisri: அப்படி இருந்தால் வார்ப்புருவை நீக்கிவிடலாம். அல்லது சில நாட்கள் பின்னர் தானியக்கியை பயன்படுத்தி சீர் செய்துவிடலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:26, 18 மே 2019 (UTC)

விக்கித்தரவு தகவற்பெட்டி இணைத்தல்[தொகு]

வணக்கம். தாங்கள் விக்கித்தரவு தகவற்பெட்டியினை அதிகமான கட்டுரைகளில் இணைத்துள்ளீர்கள். இவ்வார்ப்புருவினை தமிழ்விக்கியில் சோதனை செய்யவே இறக்குமதி செய்தேன். வார்ப்புருவில் சிறு வழுக்கள் உள்ளன. அவை: அனைத்து விக்கித்தரவு properties-களும் இணைப்புகளாக இடப்படுகிறது. உம் இங்கு அடியில் இணைக்கப்பட்ட வார்ப்புருக்கள் பகுதியில் பார்க்க. மேலும் விக்கித்தரவில் தமிழில் label இல்லாக் கட்டுரைகள் ஆங்கிலத்திலேயே காட்டப்படும் (அவையும் சிவப்பு இணைப்புகளாக - வெளிப்படையாக அல்லாமல், இப்பக்கத்தை இணைத்தவையில் காணலாம்). இவற்றை திருத்த ஒவ்வொரு முறையும் விக்கித்தரவில் திருத்தம் செய்தல் வேண்டும். மேலும் விக்கித்தரவில் மேற்கொள்கள் இல்லாத் தரவுகளை இந்த வார்ப்புரு இறக்கம் செய்யாது. இக்காரணங்களாலேயே சிலக் கட்டுரைகளோடு சோதனையை நிறுத்தினேன். இதனை இன்னும் பல கட்டுரைகளில் சேர்ப்பதற்கு முன்பு பிறரின் கருத்துகள் கேட்பது நல்லது. நன்றி --அஸ்வின் (பேச்சு) 18:08, 18 மே 2019 (UTC)

@Aswn: தங்கள் கருத்திற்கு நன்றி. வார்ப்புருக்களை பயன்படுத்திப்பார்த்தால்தான் என்னென் பிரச்சனைகள் உள்ளது என்று தெரிந்து கொள்ள முடியும். அதனால் பயன்படுத்திப்பார்த்தேன். அதுவும் எந்த தகற்பெட்டியும் இல்லாத கட்டுரைகளில் தான் இட்டுள்ளேன். தகவற்பெட்டியே இல்லாமல் இருப்பதற்கு இது மேல்தானே. //அனைத்து விக்கித்தரவு properties-களும் இணைப்புகளாக இடப்படுகிறது.// நானும் கவனித்தேன். இதனைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது. //இல்லாக் கட்டுரைகள் ஆங்கிலத்திலேயே காட்டப்படும்// எற்கனவே பல தகவற்பெட்டியில் ஏராளமான ஆங்கில வார்த்தைகள் உள்ளது. மேலும் விக்கித்தரவில் ஒரு முறை லேபில் தமிழாக்கம் செய்யதால் போதுமாது. மிகவும் எளிதானது. //விக்கித்தரவில் மேற்கொள்கள் இல்லாத் தரவுகளை இந்த வார்ப்புரு இறக்கம் செய்யாது// அதுவும் நல்லது தான். தகவலின் நம்பகத்தன்மை அதிகமாகும். //இன்னும் பல கட்டுரைகளில் சேர்ப்பதற்கு முன்பு பிறரின் கருத்துகள் கேட்பது நல்லது.// இதனைப்பற்றி ஆலமரத்தடியில் எழுத நினைத்துள்ளேன். அதற்கு முன்னர் சில தரவுகள் வேண்டுமாதலால் ஒரு பத்து நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 18:22, 18 மே 2019 (UTC)

தானியங்கி சிதைப்பு[தொகு]

வணக்கம், தங்களது தானியங்கியின் இந்த சிதைப்பைக் கவனித்தீர்களா? [1] கவனக்குறைவா அல்லது ஏதேனும் எல்லைமீறிவிட்டதா எனக் கவனிக்கவும். இது போல வேறு எதுவும் நிகழ்ந்ததனவா என்று கவனித்து மீளமைக்க இயலுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 05:02, 1 சூன் 2019 (UTC)

@Neechalkaran: தகவல் தந்தமைக்கு நன்றி. அவ்வபோது கண்கானித்து வருகிறேன். இக்கட்டுரையைப் பார்க்கவில்லை. அதே AWB தேர்வுகளை வைத்து மீண்டும் ஒரு முறை ஓட்டிப் பார்த்தேன். அதன் விளைவு இங்கே. சரியாகத் தான் வேலைசெய்கிறது. ஆனால் ஏப்ரல் 26 அன்று blanking நடந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. //இது போல வேறு எதுவும் நிகழ்ந்ததனவா என்று கவனித்து மீளமைக்க இயலுமா?// மேலும் இதைக் குறித்து ஆராய்ச்சி செய்கிறேன். என்னுடைய கடவுச் சொல்லையும் மாற்றிவிடுகிறேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:12, 1 சூன் 2019 (UTC)
@Neechalkaran: இது வரை எனது தானியங்கி செய்த அனைத்து தொகுப்புகளையும் பார்த்துவிட்டேன். இந்த கட்டுரைத் தவிர வேறு எந்த கட்டுரையிலும் blanking நடைபெறவில்லை. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:35, 1 சூன் 2019 (UTC)

Arab string vandal[தொகு]

Hi. Wondering whether you would consider placing long term local blocks on the ranges Special:contributions/197.38.0.0/16 and Special:contributions/197.39.0.0/16 which are the two dominant ranges (of 7) that this vandal is using.. We are unable to place global blocks due to consequences in other places. For other info, this person will show up on special:abuselog for global abuse filter 202. Thanks for your consideration. Billinghurst (பேச்சு) 08:08, 1 சூன் 2019 (UTC)

@Billinghurst: placed the two ip on local block for a period of six months. Thanks. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:11, 1 சூன் 2019 (UTC)

Project Tiger 2.0[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balajijagadesh&oldid=2795996" இருந்து மீள்விக்கப்பட்டது