பயனர் பேச்சு:Fathima rinosa

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Fathima rinosa, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- நற்கீரன் (பேச்சு) 08:03, 12 சனவரி 2019 (UTC)

புதிய கட்டுரை தொடங்க[தொகு]


January 2019[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், இல்லாமற் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். உதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:22, 14 சனவரி 2019 (UTC)

Information icon வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:03, 14 சனவரி 2019 (UTC)

கட்டுரைகளின் தலைப்பு[தொகு]

வணக்கம் Fathima rinosa, தாங்கள் விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகுந்து மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுக்கு தமிழில் தான் தலைப்பிட வேண்டும். A. R. Anjan Umma - இது போல் ஆங்கிலத்தில் தலைப்பிடுதல் கூடாது. நன்றி. --நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:55, 19 சனவரி 2019 (UTC)

வணக்கம், உங்கள் கட்டுரைகளுக்கான தொடுப்புகள்: அ. ர. அஞ்சான் உம்மா, அருணி ராஜபக்ச.--Kanags (பேச்சு) 04:55, 23 சனவரி 2019 (UTC)

சான்றுகள்[தொகு]

வணக்கம் பாத்திமா. நீங்கள் ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் போது அப்பக்கத்தில் வரிகளில் தரப்பட்டுள்ள மேற்கோள்களைத் தமிழ்க் கட்டுரைகளில் குறிப்புகளாகத் தனியே தராமல் அவ்வரிகளின் முடிவிலேயே தரவும். அதுதான் சரியான முறை. இது தொடர்பான சந்தேகம் இருப்பின் இங்கேயே கேட்கலாம். உதவி கிடைக்கும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:39, 26 சனவரி 2019 (UTC)

சந்தேகம்.[தொகு]

நன்றி சகோதரி. தயவு செய்து உதாரணம் தர முடியுமா? Fathima rinosa (பேச்சு) 16:56, 26 சனவரி 2019 (UTC)

நதீகா பெரேரா கட்டுரையில் மேற்கோள்களை இணைத்துள்ளேன் கவனிக்கவும். இப்படி சேர்த்தால் மட்டுமே அவை அந்தச் சான்றை சரிபார்க்கும்படி இணைப்புடன் இருக்கும். ஆங்கிலக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யும்போது அக்கட்டுரையின் Edit பக்கத்தை சொடுக்கி அதனைப் படியெடுத்து உங்கள் மணல் தொட்டியில் பதித்து மொழிபெயர்ப்பு செய்யுங்கள். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் <ref> எனத் தொடங்கி முடியும் சான்றுகளை அந்தந்த இடங்களில் சேர்க்கலாம். பயிற்சி செய்து பாருங்கள். நன்றி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:48, 26 சனவரி 2019 (UTC)

நன்றி[தொகு]

நன்றி சகோதரி. Fathima rinosa (பேச்சு) 05:30, 27 சனவரி 2019 (UTC)

பியசீலி விஜேகுணசிங்க[தொகு]

றினோஸா, நீங்கள் பியசிலி விஜகுணசிங்க என்று தலைப்பிட்டு எழுதிய பக்கத்தை நான் மேற்படி பக்கத்துக்கு வழிமாற்றினேன். நீங்கள் மீண்டும் கஷ்டப்பட்டு பிழையான பழைய தலைப்பில் கட்டுரையை ஆக்கியிருக்கிறீர்கள். அப்படிச் செய்யத் தேவையில்லை. நீங்கள் ஏற்கனவே எழுதியவை பத்திரமாக இருக்கின்றன. விக்கிப்பீடியாவில் எழுதுவதைப் பற்றி ஏதாவது சந்தேகமிருந்தால் தயங்காமற் கேளுங்கள்.--பாஹிம் (பேச்சு) 11:07, 27 சனவரி 2019 (UTC)

உதவி[தொகு]

லக்கி தர்மசேன, பியசிலி விஜகுணசிங்க ஆகிய பக்கங்களின் மேற்கோள்களின் மீளத் தொகுக்கும் போது அவை வெளி இணைப்புக்களுடன் இணைந்தன. தயவுடன் எவ்வாறு தொகுப்பது என கூற முடியமா? Fathima rinosa (பேச்சு) 08:09, 28 சனவரி 2019 (UTC) சரியாகத்தான் உள்ளது.

மைகோலோஜிஸ்ட் இற்கான தமிழ் வார்த்தையை கூறி உதவ முடியுமா?

பரிந்துரைகள்[தொகு]

வணக்கம். புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக எழுதிவருவதற்கு வாழ்த்துகள். தங்களுக்கு சில பரிந்துரைகள்

  • நூல்கள் , திரைப்படங்களின் பெயரை தமிழில் எழுதினால்போதுமானது அடைப்புக் குறிக்குள் அந்த ஆங்கில வார்த்தைகளை எழுத வேண்டாம்.

நாம் பாதுகாக்கும் பாரம்பரியம்(1990) (The heritage defend by David North)

  • சிவப்பு வண்ணம் கொண்ட வார்த்தைகளை சரியான இணைப்பில் சேர்க்கவும் அல்லது [[]] எனும் குறியினை நீக்கவும்.
  • திரைப்படங்களுக்குப்பெயரிடும் போது தமிழ்படுத்த வேண்டாம்

sir last chance ஐயா கடைசி வாய்ப்பு என்பதனை சார் லாஸ்ட் சான்ஸ் என்று மாற்றவும். விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு காண்க

  • தங்களது அனைத்துக் கட்டுரையில் உள்ள ஆங்கில வாக்கியங்களை நீக்கவும். பின் நடுவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள் .

நன்றி வெற்றி பெற வாழ்த்துகள்.SRIDHAR G (பேச்சு) 02:03, 29 சனவரி 2019 (UTC)

நன்றி ஆங்கில வார்த்தைகளை நீக்குகிறேன்.

பியசிலி விஜகுணசிங்க[தொகு]

பியசிலி விஜகுணசிங்க கட்டுரையில் போதிய எண்ணிக்கையிலான வார்த்தைகள் இல்லை. எனவே கூடுதலாக வாக்கியங்களை இணைக்கவும். வார்த்தைகளின் எண்ணிக்கியினை சரிபார்க்க https://wordcounttools.com/ , http://dev.neechalkaran.com/sulaku நன்றிஸ்ரீ (talk) 13:46, 5 பெப்ரவரி 2019 (UTC)

நன்றி வார்த்தைகளை சேர்க்கிறேன்

யாஸ்மின் குணரத்தின[தொகு]

யாஸ்மின் குணேரத்ன எனும் கட்டுரை யாஸ்மின் குணரத்தினஎனும் தலைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே புதிய தலைப்பினை சமர்ப்பிக்கவும் நன்றி.ஸ்ரீ (talk) 11:31, 10 பெப்ரவரி 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி[தொகு]

தாங்கள் தொடர்ந்து புதுப்பயனர் போட்டியில் பங்களிக்க வேண்டுகிறோம். நன்றி--ஸ்ரீ (talk) 10:22, 3 மார்ச் 2019 (UTC)

டேவிட் லீ (இயற்பியலாளர்)[தொகு]

தாங்கள் எழுதிய டேவிட் லீ (இயற்பியலாளர்) என்ற கட்டுரை டேவிட் லீ என்ற பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. வேறு டேவிட் லீ விக்கியில் இல்லாததால் அடைப்புகுறியில் உள்ளது தேவையில்லாதது. நன்றி. தொடர்ந்து பங்களியுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:47, 11 மார்ச் 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு[தொகு]

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:23, 23 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- 2019[தொகு]

நன்றி பாத்திமா ரினோசா

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்தப் போட்டியில் தாங்கள் 30 கட்டுரைகள் உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:50, 1 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி முடிவுகள்[தொகு]

புதுப்பயனர் போட்டியில் தங்களின் சிறப்பான பங்களிப்புக்கு நன்றிகள். பரிசு விவரஙகளை இங்கே காணலாம். தொடர்ந்து பங்களித்து விக்கிப்பீடியாவுடன் இணைந்திருங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:20, 7 ஏப்ரல் 2019 (UTC)

நன்றி

சந்தேகம்[தொகு]

உள்ளூர் பத்திரிகைகளில் வரும் தகவல்களை மேற்கோள் காட்டலாமா? Fathima rinosa (பேச்சு) 14:44, 12 சூலை 2019 (UTC)

நம்பத்தகுந்த பத்திரிகை என்றால் தரலாம். url (web) முகவரி, பத்திரிகை பெயர், தலைப்பு, எழுதியவர் பெயர் (தெரிந்தால்), வெளியிடப்பட்ட தேதி, பார்க்கப்பட்ட நாள் போன்ற தகவல்களுடன் எழுதலாம்.--Kanags \உரையாடுக 23:05, 31 ஆகத்து 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் கலந்துகொள்வதற்கு வாழ்த்துகள். இங்கு தமிழ் மொழிக்கான போட்டித் தலைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் தங்களுக்கு விருப்பமான துறைகள் பற்றிய கட்டுரைகள் இல்லாமல் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் துறைகள் சேர்க்கப்பட வேண்டும் என நினைத்தாலோ இங்கு தெரிவிக்கவும் நன்றி.ஸ்ரீ (talk) 06:35, 3 செப்டம்பர் 2019 (UTC)

போட்டியின் விதிமுறைகள் தெரியப்படுத்தினால் முன்னேற்பாடுகள் செய்வது இலகுவாக இருக்கும்.

தற்போது சுருக்கமாக கூறுகிறேன் .

  • கொடுக்கப்படும் கட்டுரைகளையே எழுத வேண்டும்.
  • குறைந்தது 300 சொற்கள் மற்றும் குறைந்தது 9000 பைட்டுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • தகவற் பெட்டி மற்றும் வார்ப்புருக்கள் கணக்கில் கொள்ளப்படாது (அட்டவணைகள் பற்றி பின்பு தெரிவிக்கப்படும்.) ஸ்ரீ (talk) 15:19, 3 செப்டம்பர் 2019 (UTC)

மடிக்கணினி விண்ணப்பம்[தொகு]

வணக்கம் பாத்திமா. உங்கள் விண்ணப்பத்திற்கான பக்கத்தினை இங்கு உருவாக்கியுள்ளேன். அங்கு சென்று நீங்கள் வேண்டுமான திருத்தங்கள் செய்துவிடுங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:59, 3 செப்டம்பர் 2019 (UTC)

மிக்க நன்றி அக்கா.

இலங்கைக்கூடல்[தொகு]

வணக்கம் பாத்திமா ரினோசா. விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் இப்பக்கத்தில் நடைபெறும் உரையாடலைக் கவனித்து தங்களுக்கு நேரமிருப்பின் கலந்துகொள்ளலாம் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:15, 4 செப்டம்பர் 2019 (UTC)

நன்றி. கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன்.

வேங்கைத் திட்டம் 2.0 - உங்கள் தலைப்புகளின் அளவு[தொகு]

இந்த மாற்றத்தின் வழியே நீங்கள் முன்மொழிந்த தலைப்புகளின் ஆங்கில கட்டுரையின் அளவைக் காட்டியுள்ளேன். பெரிய ஆங்கிலக் கட்டுரையாக இருந்தால் எளிதில் தமிழில் 9000பைட்டுகள்/300-350 சொற்களில் எழுத இயலும். பெரும்பாலும் 10000பைட்டுகள் உள்ள ஆங்கில கட்டுரைகள் அத்தகையது எனலாம். நீங்களும் பரிந்துரை பக்க உரையாடலில் கலந்து கொண்டு, ஏதேனும் விடுபட்டு இருப்பின் தெரிவிக்கவும்.--உழவன் (உரை) 06:05, 28 செப்டம்பர் 2019 (UTC)

பூமராங் (2019 திரைப்படம்)[தொகு]

அன்புடையீர், வணக்கம். தாங்கள் அண்மையில் பூமராங் (2019 திரைப்படம்) என்னும் கட்டுரையை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி. பூமராங் என்ற தலைப்பில் வேறு கட்டுரைகள் ஏதும் இல்லையென்றால் அக்கட்டுரைக்கு பூமராங் என்றே தலைப்பிடலாம். (2019 திரைப்படம்) என்ற பின்னொற்று தேவையில்லை. அதனால் அப்பக்கத்தை தற்பொழுது பூமராங் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். fountain கருவியில் மீண்டும் இத்தலைப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:25, 14 அக்டோபர் 2019 (UTC)

@Balajijagadesh: பூமராங் என்பது ஒரு பிரபலமான ஆயுதம் அல்லது விளையாட்டுப் பொருள். இது அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரை. எனவே பூமராங் (திரைப்படம்) என்ற தலைப்பே பொருந்தும். வழிமாற்றில்லாமல் நகர்த்தியிருக்கிறேன். வருங்காலத்தில் கட்டுரை எழுதுபவர்களுக்கு இது ஒரு தடையாக இருக்கக் கூடாது. நன்றி.--Kanags \உரையாடுக 07:10, 14 அக்டோபர் 2019 (UTC)
@Kanags:Fountain கருவியில் இருந்து பூமராங், பூமராங்(2019 திரைப்படம்) ஆகிய இரு தலைப்புகளையும் நீக்கும் படி வேண்டுகிறேன். Fathima (பேச்சு) 07:29, 14 அக்டோபர் 2019 (UTC)
@Balajijagadesh மற்றும் Info-farmer: உதவுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:36, 14 அக்டோபர் 2019 (UTC)
சில நாட்கள் காத்திருக்க வேண்டும். தமிழ் விக்கிபீடியர்களுக்கு அணுக்கம் கிடைத்தப்பிறகு செய்துவிடலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:41, 14 அக்டோபர் 2019 (UTC)
அப்படியானால் இப்போது முதலில் பதியப்பட்ட பூமராங் (2019 திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தி விடுகிறேன். பூமராங் தலைப்பை மட்டும் நீக்கினால் போதும்.--Kanags \உரையாடுக 08:56, 14 அக்டோபர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Fathima_rinosa&oldid=2814844" இருந்து மீள்விக்கப்பட்டது