பயனர் பேச்சு:Hibayathullah

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


ஹிபாயத்துல்லா பேச்சு:பயனர்:Hibayathullah
   
பயனர் பேச்சு: Hibayathullah
   
பயனர்: Hibayathullah /பங்களிப்பு
   
பயனர்: Hibayathullah /பயனர் பெட்டி
   
பயனர்: Hibayathullah /அங்கீகாரம்
   
பயனர்: Hibayathullah /படிமம்
   
Special:Emailuser/Arafath.riyath
   
பயனர்: Hibayathullah /மணல்தொட்டி
 
முகப்பு
   
பேச்சு
   
பங்களிப்பு
   
பயனர் பெட்டி
   
அங்கீகாரம்
   
படிமம்
   
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
Stop.png மறுமொழிக் கொள்கை
அன்பர்களே! என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.
தொகுப்பு

தொகுப்புகள்


1

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில், எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 09:19, 20 செப்டெம்பர் 2006 (UTC)

பொருளடக்கம்

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழு[தொகு]

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழுவில் பங்காற்ற இயலுமா? நன்றி. ஒவ்வொரு மாதமும் ஆர்வமுள்ள பயனர்கள் தங்களுக்குள் இப்பொறுப்பை மாற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி--ரவி 17:19, 21 பெப்ரவரி 2010 (UTC)


துபாயில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா[தொகு]

துபாயில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா பற்றி ஒரு வலைப்பதிவு எழுதித் தந்தால் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவைத் துபாயில் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கில் எழுதலாம். நன்றி. --Natkeeran 16:27, 25 அக்டோபர் 2009 (UTC)


கருத்து வேண்டல்[தொகு]

தமிழ்நாடு தொடர்பான பல கட்டுரைகளை எழுதி நீங்கள் இந்த ஆண்டு பங்களித்துள்ளீர்கள். தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி நல்ல வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கிறது. நன்றி.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வு செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களைப் பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான, செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 03:10, 19 டிசம்பர் 2009 (UTC)


மகிழ்ச்சி[தொகு]

வணக்கம் ஹிபாயத்துல்லா. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர் பங்களிப்புக்கு வாழ்த்துகளும் நன்றியும்--ரவி 21:52, 1 மார்ச் 2010 (UTC)

என்னை ரவி என்றே அழையுங்க. என்னை மட்டுமல்ல எல்லா விக்கிப்பீடியர்களையும் தோழமையுடன் பெயர் சொல்லி அழைக்கும் பண்பாட்டையே இங்கு விரும்புகிறோம். --ரவி 10:42, 2 மார்ச் 2010 (UTC)

ஹிபாயத்துல்லா! முதற்பக்கத்தில் இடம்பெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை அளியுங்கள். --பரிதிமதி 13:50, 2 மார்ச் 2010 (UTC)
இறைவனின் பரிசே!! முதற் பக்கத்தில் உங்களைப் பற்றிய அறிமுகத்தை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.--Arafat 14:18, 2 மார்ச் 2010 (UTC)

முதற்பக்கத்தில் இடம் பெற்ற தாங்கள் மேலும் மேலும் முதற்தரமான கட்டுரைகளைத் தங்கள் பங்களிப்பின் மூலம் வழங்கிட வாழ்த்துகிறேன்.--Theni.M.Subramani 14:53, 2 மார்ச் 2010 (UTC)

உங்கள் படத்தையும் அறிமுகத்தையும் முதற்பக்கத்தில் காட்சிபடுத்தியுள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். மேன்மேலும் உங்கள் பங்களிப்புகள் பெருகவும், சிறக்கவும் நல்வாழ்த்துகள். --செல்வா 18:43, 2 மார்ச் 2010 (UTC)


பிரிக்க வேண்டாம்[தொகு]

நண்பரே, தாங்கள் தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள், பேரூராட்சி மன்றங்கள் என்ற தனித்தலைப்புகளில் செய்து வரும் பக்கங்கள் அப்படியே நான் முன்பு உருவாக்கிய தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கட்டுரைகளின் சிறு பகுதிகளாகவே இருக்கின்றன. இந்தப் பிரிவுகள் தேவையற்றது என்று கருதுகிறேன். தயவு செய்து இதைப் பிரித்துத் தனிப்பக்கங்களாக உருவாக்க வேண்டாம்.--Theni.M.Subramani 14:35, 21 மார்ச் 2010 (UTC)

கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.[தொகு]

வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)

நடுநிலைமை[தொகு]

நடுநிலைமை மீறியதாக நீங்கள் கருத்தும் கட்டுரைகளுக்கு மேலே உள்ள வார்ப்புருவை இட்டு, பேச்சுப் பக்கத்தில் விளக்க்வும். உரையாடி இணக்க முடிவு எட்டலாம். நன்றி. --Natkeeran 03:59, 5 மே 2010 (UTC)


தேவநேயப் பாவாணர்[தொகு]

இபாயத்துல்லா! வணக்கம். தேவநேயப் பாவாணர் தலைப்பில் ஒரு தகவல் பக்கம் ஏற்கனவே (ஓரளவு சிறப்பான உள்ளடக்கத்துடன்) உள்ளது. ஞா. தேவநேயப் பாவாணர் என்ற தலைப்பிலும் இன்னுமொரு பக்கம் இருப்பதை விட இப்பக்கத்திலுள்ள உள்ளடக்கங்கள் எவையேனும் முதல் கூறிய பக்கத்தில் இல்லையென்றால் அவற்றை இட்டு விட்டு இப்பக்கத்தை தே. பா. பக்கத்திற்கு வழி மாற்று செய்ய முடியுமா?--பரிதிமதி 16:39, 4 ஜூலை 2010 (UTC)

நன்றி, இபாயத்துல்லா! --பரிதிமதி 17:34, 4 ஜூலை 2010 (UTC)


நன்றி ஹிபாயத்துல்லா[தொகு]

ஹிபாயத்துல்லா ஊராட்சி ஒன்றியத்திற்கு தமிழாக்கம் செய்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி ஹிபாயத்துல்லா. ----ராஜ்6644 11:41, 4 ஆகஸ்ட் 2010 (UTC)


பழனிச்சாமி தேவர் கட்டுரையின் பகுப்பு நீக்கம்[தொகு]

ஐயா, இந்த கட்டுரையிலுள்ள ஆஸ்திரேலயத் தமிழர் என்ற சரியா பகுப்புப்பை நீங்கள் நீக்கயுள்ளதைக் கவனித்தேன். அது சரியானப் பகுப்புதானே, தாங்கள் அதை தவறுலாக நீக்கியிருக்க்க்கூடுமென கருதி அந்தப் பகுப்பை மீண்டும் சேர்த்துவிட்டேன்.

நகராட்சிகள் வார்ப்புரு[தொகு]

நீங்கள் முன்பு உருவாக்கிய\மாற்றம் செய்த வார்ப்புரு சரி. தற்போதைய மாற்றம் சரியல்ல என்பது என் கருத்து. சரி என்றால் மாற்றத்திற்கான சுட்டியை தருகிறீர்களா? --குறும்பன் 19:41, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி[தொகு]

நிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:03, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

வாழ்த்துக்கள்[தொகு]

இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்துக்கள். இறைவன் உங்கள் மீது சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவானாக. --அராபத்* عرفات 01:56, 10 செப்டெம்பர் 2010 (UTC)

உங்களுக்கு எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 21:33, 10 செப்டெம்பர் 2010 (UTC)


சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

நீங்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளை தொகுத்து வருவதை பாராட்டுகிறேன். அதன் தகவல்களை எங்கிருந்து எடுக்கிறீர்கள் என்று குறிப்புகள் கொடுத்தால் உதவியாயிருக்கும். நன்றி -- மாஹிர் 16:45, 29 செப்டெம்பர் 2010 (UTC)

  • நன்றி மாஹிர் தமிழ்நாடு அரசின் தேர்தல் வலைத்தளத்தில் எடுக்கப்பட்டதுதான் தற்காலிகமாக அந்ததளம் தற்போது இயங்கவில்லை.--ஹிபாயத்துல்லா 17:26, 29 செப்டெம்பர் 2010 (UTC)
இபயதுல்லா, நானும் பாராட்டுகிறேன். இது தொடர்பில் குறும்பனின் பேச்சுப்பக்கத்தில் நான் இட்டிருக்கும் கருத்தையும் பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 17:02, 29 செப்டெம்பர் 2010 (UTC)
  • நன்றி சுந்தர் நான் முன்பே பார்த்துவிட்டேன்.--ஹிபாயத்துல்லா 17:26, 29 செப்டெம்பர் 2010 (UTC)
  • நன்றாக அனைத்து கட்டுரைகளும் வருகிறது. தாலுகா என்பதற்கு பதில் வட்டம் என பயன்படுத்துங்கள். --குறும்பன் 17:49, 29 செப்டெம்பர் 2010 (UTC)


விக்கி மாரத்தான்[தொகு]

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)

துபாய் விக்கிப்பட்டறை[தொகு]

ஹிபாயத்துல்லா, இந்நிகழ்வை என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. அப்பக்கத்தில் என்னுடைய பெயரைப் பதிவு செய்துள்ளேன். -- மயூரநாதன் 18:58, 20 நவம்பர் 2010 (UTC)

நாமக்கல் மாவட்ட ஊர்கள்[தொகு]

அன்பு நண்பரே, நாமக்கல் மாவட்ட ஊர்கள் என்பதும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் என்பதும் ஒரே பொருள் தருவன. கிராமம் என்பது தமிழ்ச் சொல் அல்ல. ஆகவே நாமக்கல் மாவட்ட ஊர்கள் என்றே இருப்பது நல்லது என நினைக்கிறேன். இது பற்றி ஏற்கனவே சோடாபாட்டில் அவர்களுடன் பேசியிருக்கிறேன். அதேபோல 'ஊர்ப்பெயர்கள்' என்பதும் இருப்பதும் நல்லது. ஊர்ப்பெயர்கள் என்பது பொதுப்பாகுபாடு. எந்த மாவட்டத்தில் உள்ள ஊர்ப்பெயரையும் அதில் சேர்க்கலாம். ஊர்ப்பெயராய்வு என்னும் தனித்துறை இயங்கி வருவதையும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.--Perumalmurugan 00:12, 29 நவம்பர் 2010 (UTC)

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்[தொகு]

வணக்கம் இபாயத்துல்லா. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:26, 2 மே 2011 (UTC)


ஈத் முபாரக்[தொகு]

இம் மாதம் முழுவதும் நோன்பிருந்து பல்வேறுபட்ட அமல்களில் ஈடுபட்டு புனித ரமழான் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்வடைகின்றோம். விக்கி குடும்பத்தின் சார்பில்--P.M.Puniyameen 01:02, 31 ஆகத்து 2011 (UTC)

ரமலான் வாழ்த்துகள்[தொகு]

என் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:59, 31 ஆகத்து 2011 (UTC)

Supplicating Pilgrim at Masjid Al Haram. Mecca, Saudi Arabia.jpg அஸ்ஸலாமு அலைக்கும் Hibayathullah அவர்களே , எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!
--சமீர்உரையாடுக!

நலமா?[தொகு]

வணக்கம், Hibayathullah! உங்களைத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் நீண்ட நாட்களாகக் காணவில்லையே?! நலமாக உள்ளீர்களா? தற்போது, நாம் 1,23,754 கட்டுரைகளைக் கொண்டு நன்றாக வளர்ந்து வருகிறோம். நீங்களும் அவ்வப்போது பங்களித்து வந்தால் மிக்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்! நன்றி.--இரவி 22:36, 19 பெப்ரவரி 2012 (UTC)

காயலும் இசுலாமியரும்[தொகு]

பேச்சு:காயல்பட்டினம் இங்கு உங்களுக்கு பதிலளிக்கப்பட்டுளது. பார்க்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:43, 9 சூன் 2012 (UTC)

மகிழ்ச்சி[தொகு]

மீண்டும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பங்களியுங்கள். அன்புடன்--இரவி (பேச்சு) 17:26, 2 நவம்பர் 2012 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:07, 24 சூன் 2013 (UTC)

நீங்கள் விக்கிக் கூடலுக்கு வர இருப்பது அறிந்து மகிழ்கிறேன். உதவித் தொகை தேவை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போது வெளிநாட்டில் இருக்கிறீர்களா? வந்து திரும்பிச் செல்ல உத்தேசமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதைத் தெரிவிக்க முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 05:58, 28 சூன் 2013 (UTC)
நீங்கள் இங்கேயே செய்தியாளராகப் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியா பத்தியும் எழுதிக் கொடுங்க :) --இரவி (பேச்சு) 14:06, 29 சூன் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:06, 18 செப்டம்பர் 2013 (UTC)


வேண்டுகோள்...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:09, 27 செப்டம்பர் 2013 (UTC)

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை[தொகு]

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:33, 1 அக்டோபர் 2013 (UTC)

வணக்கம், Hibayathullah!

100 sculpture.jpg

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:37, 2 அக்டோபர் 2013 (UTC)

வணக்கம், Hibayathullah!

100 sculpture.jpg

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:35, 2 அக்டோபர் 2013 (UTC)


நன்றி...![தொகு]

வணக்கம்! வரவிருக்கும் பொதுத் தேர்தல் குறித்து நீங்கள் செய்யும் இற்றைகள் அருமை! தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 13 மார்ச் 2014 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

வணக்கம், நீங்கள் எழுதும் புதிய கட்டுரைகளுக்கு குறைந்தது ஒரு மேற்கோளாவது சேருங்கள். இல்லாவிடில் நீக்கப்படும் ஆபத்து உள்ளன. விக்கித்தரவில் இணைப்புக் கொடுங்கள். தமிழர்களல்லாத நபர்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதும் போது ஆங்கிலத்தில் (கட்டாயம்), மற்றும் மூல மொழியில் (தெரிந்தால்) அவர்களின் பெயர்களையும் கட்டுரையின் ஆரம்பத்தில் தாருங்கள்.--Kanags \உரையாடுக 00:11, 4 சூன் 2014 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள் என்பதால், என்னால் இயன்றதை செய்துள்ளேன். விக்கித்தரவில் இணைத்துள்ளேன். மேற்கோள்கள் தரப்படல் வேண்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:36, 4 சூன் 2014 (UTC)
தற்போதைய அமைச்சர்கள் என்பதற்குரிய ஆதாரம் இணைத்துள்ளேன். மற்ற தகவல்களுக்கு ஆதாரங்களை சேர்ப்பது நலம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:54, 4 சூன் 2014 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

  1. இங்கு பதில் தர வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:11, 7 நவம்பர் 2014 (UTC)
  2. செம்பொனார்கோயில், செம்பனார்கோயில், செம்பொன்னார் கோவில் - இதில் எது சரி என்பதில் குழப்பம் இருப்பது உண்மை. எனினும் உரையாடிவிட்டு மாற்றுதல் நல்லது; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:15, 7 நவம்பர் 2014 (UTC)

தெளிவு[தொகு]

  1. செம்பனார்கோயில் (Sembanarkoil) என்பதில் தெளிவு வந்துவிட்டது; உரிய திருத்தங்களை செய்துள்ளேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:39, 7 நவம்பர் 2014 (UTC)


உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 15:21, 11 சனவரி 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)


உரையாட விருப்பம்[தொகு]

உங்களுடன் பேசணும். நேரம் இருக்கும் போது அழையுங்கள்--உழவன் (உரை) 08:54, 1 திசம்பர் 2015 (UTC)


தொடர்பு[தொகு]

எப்படி இருக்கிங்க!. தங்களிடம் உரையாடி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகி விட்டது. பெங்களூரில் CIS TTT பயிற்சிப் பிறகு பேசவில்லை. உங்களது அலைப்பேசி எண் என்னிடம் தற்போது இல்லை. ஆவலுடன் காத்திருக்கிறேன். பேசுக! நோன்பு காலத்தில் நீங்கள் கலந்து கொள்வது சிறப்பு. வாழ்க தமிழ் வளம். வணக்கம்--உழவன் (உரை) 12:03, 20 சூன் 2017 (UTC)


சூலை 04 - 06 பயிற்சிகள்[தொகு]

சூலை 04 - 06 நடக்கும் பயிற்சிகளில் நீங்கள் மூன்று நாட்களும் வெவ்வேறு ஊர்களில் கலந்து கொண்டால் மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் எந்த நாளில் எங்கு செல்ல முடியும் என்று பெயர் பதிந்து விடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 12:30, 25 சூன் 2017 (UTC)

உங்களின் கவனத்திற்கு: விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:08, 30 சூன் 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Compass Barnstar Hires.png சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
தற்போது நடந்து முடிந்திருக்கிற தமிழக ஆசிரியர்களுக்கான பயிற்சிகளின் மூன்று சுற்றுகளிலும் ஒன்பது மாவட்டங்களுக்குச் சென்று அயராமல் பயிற்சி அளித்ததற்கு மிக்க நன்றி. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்கள் வழிகாட்டுதல்களை நன்றியோடு நினைவுகூர்கிறார்கள் என்பது சிறப்பு. --இரவி (பேச்சு) 05:56, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?[தொகு]

வணக்கம். உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். சம்மதமா? --இரவி (பேச்சு) 17:43, 7 சனவரி 2019 (UTC) வணக்கம்.@Ravidreams:. சம்மதம் ஹிபாயத்துல்லா |பேச்சு) 17:50, 7 சனவரி 2019 (UTC)

மகிழ்ச்சி. நிர்வாகிகள் தேர்தல் பக்கத்தில் உங்கள் ஏற்பைத் தெரிவிக்க வேண்டுகிறேன். ஆறு பயனர்களுக்கு மேல் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், அடுத்த காலாண்டு வரை காத்திருந்து நிர்வாக அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ள சம்மதமா இல்லை உடனடியாக அணுக்கம் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்குமா என்று தெரிவியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 18:17, 7 சனவரி 2019 (UTC)

கவனிக்க[தொகு]

தாங்கள் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கட்டுரைகளில் (தமிழக அரசியல்வாதிகள்) என்னும் பகுப்பை நீக்குகிறீர்கள், அதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளலாமா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:04, 11 சனவரி 2019 (UTC) -பார்க்கவும் பயனர்_பேச்சு:Hibayathullah/தொகுப்பு_1#கட்சி_அரசியல்வாதிகள்ஹிபாயத்துல்லா 19:16, 11 சனவரி 2019 (UTC)

தமிழக அரசியல்வாதிகள் பகுப்பை நீக்காதீர். தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உரையாடலுக்கு பின் அதைப் பற்றி முடிவெடுக்கலாம். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:53, 12 சனவரி 2019 (UTC)

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்[தொகு]

வணக்கம், ஹிபாயத்துல்லா. இந்தப் புத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் வேட்பு மனு செய்த ஆறு பேருக்கு முன்னுரிமை கொடுக்கும் காரணத்தால், உங்கள் நிருவாகப் பணிக் காலம் ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கும். அது வரை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி வழிகாட்டுதல்களைக் கவனித்து வருவதும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 09:50, 18 சனவரி 2019 (UTC)

என்னை பரிந்துரைத்த தங்களுக்கும் வாக்களித்த சக பயனர்களுக்கும் மிக்க நன்றி இரவி-ஹிபாயத்துல்லா (பேச்சு) 11:46, 18 சனவரி 2019 (UTC)

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 17:08, 18 சனவரி 2019 (UTC)

தங்கள் பயனர் கணக்குக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 16:22, 5 ஏப்ரல் 2019 (UTC)
என்னை பரிந்துரைத்து வாக்களித்த தங்களுக்கும் சக பயனர்களுக்கும் மிக்க நன்றி இரவி தமிழ் விக்கிப்பீடியர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்.ஹிபாயத்துல்லா (பேச்சு) 13:30, 6 ஏப்ரல் 2019 (UTC)

நிர்வாகப் பணி[தொகு]

வணக்கம்; நிர்வாக அணுக்கம் பெற்றதற்கு வாழ்த்துகள்! பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்பதில் உள்ள கட்டுரைகளை சீரமைக்க இயலுமா எனப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சேமிப்பின் பயன் போன்ற 'கலைக்களஞ்சியக் கட்டுரைகள் அல்லாதவற்றை' நீக்குமாறு கோரிக்கை வைக்கலாம். இந்த சீரமைப்புப் பணி தங்களுக்கு நல்லதொரு பயிற்சிக் களமாக அமையும் என நம்புகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:35, 24 சனவரி 2019 (UTC)

- நன்றி செல்வா-இயலும் - ஹிபாயத்துல்லா (பேச்சு) 16:05, 24 சனவரி 2019 (UTC)

பராமரிப்பு வார்ப்புரு நீக்கம்[தொகு]

இலங்கை முஸ்லீம்களின் பூர்வீகம் என்ற கட்டுரையில் தன்னிச்சையாக பராமரிப்பு வார்ப்புரு நீக்கம் செய்துள்ளீர்கள். இனி இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம். தயவுசெய்து விக்கி வழிகாட்டல்களைக் கைக்கொள்ளுங்கள். தெரியாதவிடத்து மற்றவர்களிடம் உதவி கேளுங்கள். --AntanO (பேச்சு) 17:09, 2 ஏப்ரல் 2019 (UTC)

வாழ்த்துக்கள்[தொகு]

தங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்--கி.மூர்த்தி (பேச்சு) 17:06, 6 ஏப்ரல் 2019 (UTC)

நிருவாக அணுக்கம் நீட்டிப்பு[தொகு]

வணக்கம். தங்கள் நிருவாக அணுக்கம் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 11:09, 17 சூலை 2019 (UTC)

Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 15:54, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 17:29, 4 அக்டோபர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

File:Murasolimaran.jpg listed for discussion[தொகு]

Information.svg
A file that you uploaded or altered, File:Murasolimaran.jpg, has been listed at Wikipedia:Files for discussion. Please see the discussion to see why it has been listed (you may have to search for the title of the image to find its entry). Feel free to add your opinion on the matter below the nomination. Thank you. பாலாஜி (பேசலாம் வாங்க!) 23:44, 15 அக்டோபர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Hibayathullah&oldid=2816416" இருந்து மீள்விக்கப்பட்டது